20. துன்பம்.

வாழ்வியற் குறட்டாழிசை 20.

துன்பம்.

 

துணிந்த மனதாளன், முயற்சியாளனுக்கு வரும்
துன்பம் தூசிக்கு நிகர்.

ன்பம், துன்பத்தைச் சமமாக ஏற்பவர்
இகத்திலே  யோகி ஆகிறார்.

ன்பம் வரவெனும் ஏற்றம் என்றால்
துன்பம் செலவெனும் இறக்கம்.

வாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்தால்
தாழ்வு துன்பத்தால் இல்லை.

ந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்
நொந்த மனதிற்கு ஆறுதலாகும்.

றுமை, நோய், பணம், நிம்மதியின்மை
பொறுமையைப் பறிக்கும் துன்பம்.

ன்பத்தை முழுதாக வரவேற்கும் நாம்
துன்பத்தையும் ஏற்கப் பழகலாம்.

பாராளும் அரசனையும் துன்பம் துரத்தும்
போராளியாகவே வேண்டும் நிச்சயமாக.

ல்லவன், கெட்டவன் பேதம் இன்றி
எல்லோரிடமும் துன்பம் மோதும்.

துன்பத்தைத் தத்துவம், பொழுது போக்கு
இன்னரும் கலைகளால் வெல்லலாம்.

டர்களை எதிராடும் குணமற்றவர் நொந்து
தொடர்வது தற்கொலை முயற்சியுமாகும்.

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-12-2011.

  

                                  
 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பிரபுவின்
  டிசம்பர் 14, 2011 @ 05:26:21

  “வாழ்வு நிலையற்றது என்பதைப் புரிந்தால்
  தாழ்வு துன்பத்தால் இல்லை”

  துன்பத்தை எதிர் கொண்டு பழகுபவனே பக்குவப் படுவான்.எத்தனை சோதனையும் அவனுக்கு /அவளுக்கு செல்லாக் காசாகத் தெரியும்.துன்பத்தை அனுபவிக்காவிட்டால் அவன்/ அவள் ஜடம்.பனங் காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

  நன்றி சகோதரி.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 14, 2011 @ 07:17:21

   மிக நன்றியும், மகிழ்ச்சியும் பிரபு. அதிகாலை இங்கு, (என்னைப் போல). நண்பகலுக்குக் கிட்ட அங்கு. மிக்க நன்றி பிரபு கருத்திற்கும், வரவிற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  டிசம்பர் 14, 2011 @ 06:36:43

  “வந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்
  நொந்த மனதிற்கு ஆறுதலாகும்.”

  துன்பத்திற்கு மருந்தை தெளிவாய் சொல்லிஉள்ளிர்கள்.
  அருமை…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 14, 2011 @ 07:20:36

   வந்த துன்பத்தை மூடி மறைத்து இராணுவ இரகசியம் காப்பது போலத் தானே பலர் நடந்து பின் அறுவை சிகிச்சைக்கு ஆளாகிறார்கள்.(இது உங்களுக்குப் புரியும் என்று எண்ணுகிறேன்). உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. இறை ஆருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. GANESH
  டிசம்பர் 14, 2011 @ 07:18:04

  வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை -என ஒரு கவிஞன் சொல்லிய வரிகள் மனதில் பசுமையாய். நாம் இன்ப துன்பத்தை சமமாய் ஏற்கப் பழகுவோம். அதுவே வாழ்வினை சுவாரஸ்யமாக்கும். அருமையான வரிகளில் அழகான கவிதை. நன்று!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 14, 2011 @ 07:23:25

   சகோதரா! காலையில் மிக மகிழ்ச்சி உறவே. (இங்கு8.21காலை) உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. இறை ஆருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கவி அழகன் --
  டிசம்பர் 14, 2011 @ 09:03:44

  நல்ல தத்துவம்

  மறுமொழி

 5. soundarapandiann
  டிசம்பர் 14, 2011 @ 10:01:13

  வாழ்க்கைக்கு தேவையான வார்த்தைகள்…
  தன்னம்பிக்கையோடு தொடர்ந்தால் வாழ்க்கை நீளும்…

  மறுமொழி

 6. SUJATHA
  டிசம்பர் 14, 2011 @ 18:57:14

  துன்பம் தரும் குறள்கள் அருமை…வரும் துன்பங்கள் எதிர்பார்த்து வருவதில்லை. வரும் போது அடுத்தவரோடு பரிமாறுவது நிறைந்த இன்பம் தொடரட்டும் உங்கள் பணி!!!!!!!

  மறுமொழி

 7. மகேந்திரன்
  டிசம்பர் 14, 2011 @ 19:10:27

  ////பாராளும் அரசனையும் துன்பம் துரத்தும்
  போராளியாகவே வேண்டும் நிச்சயமாக.////

  மனிதனின் நிலை பொருட்டல்ல,
  அவன் வாழ்விற்கான எல்லாம் கிடைக்கும் வரை.
  ஏதேனும் ஒன்று அவனுக்கு மறுக்கப்படும் பொது
  போராடி அதை பெற்றுக்கொள்ள முனைகிறான்.

  அருமையா சொல்லியிருகீங்க சகோதரி

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 14, 2011 @ 20:21:13

   அன்பின் மகேந்திரன் உமது இனிய வருகையாலும, கருத்திடலாலும் மிக மகிழ்;;;;;;;;;;;;;வு கொண்டேன். இனிய நன்றியும் கூட ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Madhu Mathi
  டிசம்பர் 15, 2011 @ 05:52:18

  அருமையான வரிகள் கொண்ட கவிதை வாசித்தேன்..மகிழ்ச்சி..

  மறுமொழி

 9. வசந்தா சந்திரன்.
  டிசம்பர் 15, 2011 @ 06:09:28

  அருமையான குறள், வாழ்த்துக்கள்

  மறுமொழி

 10. jaghamani
  டிசம்பர் 15, 2011 @ 15:16:01

  வந்த துன்பத்தைப் பரிமாறிக் கலந்துரையாடுதல்
  நொந்த மனதிற்கு ஆறுதலாகும்.

  அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 11. ramani
  டிசம்பர் 15, 2011 @ 17:58:18

  இன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்வு
  இதனை ஏற்றுக் கொண்டோருக்கு துன்பம் இல்லை
  இதனை ஏற்க மறுப்போருக்கு இன்பம் இல்லை என்கிற அரிய கருத்தை
  மிக அழகாக அறிவுறுத்திப்போகும் கவிதைகள்
  அருமையிலும் அருமை தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. Tharshi
  டிசம்பர் 19, 2011 @ 09:29:58

  இன்பமும் துன்பமும் மனிதவாழ்விலே தவிர்க்கமுடியாதவை,இன்பத்தை சந்தோசமாக வரவேற்கும் நான் துன்பத்தை அதேமாதிரி ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான் துன்பம் பற்றிய தங்களின் குறள்கள் சிந்திக்கவைக்கின்றது..அருமையான படைப்பு

  மறுமொழி

 13. Tharshi
  டிசம்பர் 19, 2011 @ 09:30:59

  இன்பமும் துன்பமும் மனிதவாழ்விலே தவிர்க்கமுடியாதவைஇஇன்பத்தை சந்தோசமாக வரவேற்கும் நாம் துன்பத்தை அதேமாதிரி ஏற்றுக்கொள்வதில்லை என்பது உண்மைதான் துன்பம் பற்றிய
  தங்களின் குறள்கள் சிந்திக்கவைக்கின்றது..அருமையான படைப்பு

  மறுமொழி

 14. N.Rathna Vel
  டிசம்பர் 21, 2011 @ 09:56:08

  அருமை அம்மா.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: