217. போலியுறவெதற்கு!….

 

போலியுறவெதற்கு!….

 

வ்வொரு வார்த்தையிலும் அன்புருக,
ஓவ்வொரு செயலிலும் இன்பமாக,
எண்ணும் தொறும் நிம்மதியுறவு
வண்ணமுடை மனம் நிறையுறவு!

ழகப் பழக நிறையுறவு
பாகாய் இனிக்கும் திறனுயர்வு!
வாகான சம உணர்வின்றேல்
பாகற்காயாகும் குறையுறவு.

ள்ளும் இலாபம் ஏந்தி
அள்ளி யணைத்து நடிக்கும்
உள்ளத்தில் புனிதம் ஏது!
கள்ளமுடை உறவு சூது!

னம் திறந்து பேசாது
தினம் நல்ல உறவென்று
இனம் பிரித்து உறவாடிக்
கனதியாய் வாழுமுறவு எதற்கு!

ரவும் பகலும் மனதில்
உரசி உரசித் தீயேற்கும்
சரசரக்கும் பொறாமைக் காடு
பரவச அன்பைக் குறைக்கும்.

போலி உறவால் வருந்திக்
காலியாவது உயிர்ச் சக்தி!
கலி தொலைய வேலி போடு!
வலி தீர வழிமூடு!

றவு போன்று உருகும்
உறவில்லாதார் உறவு வீண்!
மறக்கற்பாலதென்று அணையிடு!
துறக்கற்பாலது மிக நன்று.
 

 

வி ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-12-2011.

                                  
 

17 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sriskantharajah
  டிசம்பர் 16, 2011 @ 06:46:10

  மிகவும் அற்புதமான படைப்பு!!

  “இரவும் பகலும் மனதில்
  உரசி உரசித் தீயேற்கும்
  சரசரக்கும் பொறாமைக் காடு
  பரவச அன்பைக் குறைக்கும்.”

  அழகான சொற்படிமங்கள்!
  வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

 2. ராஜி
  டிசம்பர் 16, 2011 @ 18:30:59

  உறவு போன்று உருகும்
  உறவில்லாதார் உறவு வீண்!
  >>>
  சரியான கேள்விதான்

  மறுமொழி

 3. SUJATHA
  டிசம்பர் 16, 2011 @ 18:58:02

  போலி உறவால் வருந்திக்
  காலியாவது உயிர்ச் சக்தி!
  கலி தொலைய வேலி போடு!
  வலி தீர வழிமூடு!

  உண்மை அழகாக கவியில் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. உறவுகள் தொடர்கதை.. ஆனால் உள்ளத்தில் இல்லாத பாசவலைகள் ஒரு வலியை கொடுப்பதில் இழப்பது சக்தி. அருமை தொடரட்டும் பணிகள்!!!!!!!!!!!!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 16, 2011 @ 20:41:05

   ”..ஆனால் உள்ளத்தில் இல்லாத பாசவலைகள் ஒரு வலியை கொடுப்பதில் இழப்பது சக்தி. …

   உண்மை தானே! சுஜாதாவின் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றி. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 4. sivakumaran
  டிசம்பர் 16, 2011 @ 19:06:14

  \\\கலி தொலைய வேலி போடு!
  வலி தீர வழிமூடு!///

  வலி தீர வழி திறக்க வேண்டாமோ ?
  … படிமங்கள் நிறைந்த கவிதை. .
  அருமையாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருக்கலாமோ.

  கருத்துரைப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 16, 2011 @ 20:45:14

   உங்கள் கருத்தை ஏற்கிறேன். தெளிவு குறைவு தான். மனதில் படுவதைக் கூற என்ன தயக்கம்! .நானும் வெளிப்படையாகக் கூறுபவள் தான். இதனால் பகை தான் அதிகம். மிக்க நன்றி இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. sivakumaran
  டிசம்பர் 16, 2011 @ 21:19:12

  நன்றி சகோதரி.

  மறுமொழி

 6. மகேந்திரன்
  டிசம்பர் 16, 2011 @ 22:35:39

  ///அள்ளும் இலாபம் ஏந்தி
  அள்ளி யணைத்து நடிக்கும்
  உள்ளத்தில் புனிதம் ஏது!////

  பலமான கைத்தட்டல்கள் சகோதரி.
  ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய
  சொற்களால் புனையப்பட்ட
  வாக்கியங்கள்.
  நமக்கென கிடைக்குமென
  எதிர்பார்த்து பழகும்
  உறவுகளுக்கு சரியானதோர்
  சாட்டையடி கொடுக்கும்
  வாக்கியங்கள்.

  மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 18, 2011 @ 14:21:55

  போலி முகங்களுடன்
  போலி உறவு கொள்வதே பலருக்கு
  ஜாலியான பொழுது போக்கு ஆச்சு.
  நாற வெறுக்க வைப்பது அவர்கள் தம் நட்பு

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 18, 2011 @ 14:59:05

   உண்மைதானய்யா. நடிப்புத் தான் மலிந்து விட்டது. உங்கள் இனிய கருத்திற்கும், வலைக்கு வருகை தநதமைக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. பிரபுவின்
  டிசம்பர் 20, 2011 @ 04:20:09

  “உறவு போன்று உருகும்
  உறவில்லாதார் உறவு வீண்!”

  உலகில் முக்காவாசிப் பேர் இப்படித்தான்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 20, 2011 @ 17:37:21

   அதனாற் தானே இக் கவிதையே வந்தது பிரபு. உமது அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. N.Rathna Vel
  டிசம்பர் 20, 2011 @ 17:05:15

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: