218. இலக்கணம் மாறினால்..

 

இலக்கணம் மாறினால்..

 

நீல வான் வெளியில் நிர்மலமாய்
கோலமுடன் பறக்கும் நித்தமுமாய்.
சிறகு விரிக்கும் சுதந்திரமாய்
உறவு கொண்டாடும் உன்னதமாய்.

த்தனை தூரம் பறந்திடினும்
வித்தகமாய்த் தன்னிடம் திரும்பும்.
வஞ்சகமற்ற அழகு உருவம்
வடியாத சுறுசுறுப்பு நடையாம்.

செல்லப்(வீட்டுப்) பறவை இது
நல்ல அமைதிச் சின்னம்.
காதலுறவிற்கு உதாரணமாய்
கவிபாடுமொரு கருப் பொருளாம்.

கவல் பரிமாற்றம் செய்யும்
காதல் விடுதூதாம் சரித்திரத்தில்.
பிணையிழந்த பிரிவுத் துயரம்
இணையில்லா இவ்வினச் சிறப்பியல்பு

(இந்தப் படத்தைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்! அவையள் தலையாட்டிச் சுகிக்கினம்)

ளிபொங்குமதன் காதல் வாழ்வின்
வழித் துணையை ஒன்றிழந்தால்,
இயற்கைக்காதல் இலக்கணம் மாறினால்
இசைந்து உயிரிழக்குமாம் இணைப்புறா.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2005.

                            
 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  டிசம்பர் 21, 2011 @ 04:53:23

  vetha.Langathilakam:- In Muthukamalam:-
  http://www.muthukamalam.com/verse/p1454.html
  ___________________

  அருமையான கவிதை…
  தலைப்பு மிகவும் அழகாக உள்ளது…

  “எத்தனை தூரம் பறந்திடினும்
  வித்தகமாய்த் தன்னிடம் திரும்பும்.”

  வரிகள் மிகவும் அருமை.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 21, 2011 @ 05:25:37

   அதன் சொண்டு அமைப்பு இரும்புத் தாது பொருந்திய கட்டமைப்பு உடையதாம். பூமியின் மின்காந்த அலைகளால் எங்கு பறந்தாலும் வடக்கு நோக்கியே இரும்பு மூலக் கூறுகள் திரும்புமாம்… என்று வாசித்தேன்.
   அதனால்தான் தன்னிடம் திரும்பும் திறன் உள்ளது. மிக்க நன்றி சகோதரா உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சத்ரியன்
  டிசம்பர் 21, 2011 @ 05:09:42

  ஆறறிவு ஜந்துகளுக்கு காதலின் உன்னதம் உணர்த்தும் பறவையைப் பற்றிய கவிதையாக்கம் அருமை.

  மறுமொழி

 3. sriskantharajah
  டிசம்பர் 21, 2011 @ 05:12:17

  துணை பிரிந்தால் உயிர் துறக்குமாம் இணைப்புறா!!
  மனிதன் கற்றுக் கொள்ளவேண்டியது இன்னும் இருக்கின்றதே!!

  வாழ்த்துக்கள் அம்மா!!! அற்புதமான படைப்பு!!!

  மறுமொழி

 4. oppilan mu.balu
  டிசம்பர் 21, 2011 @ 06:00:43

  தூது செல்லும் புறா …நம் சுதந்திரத்துக்கு இப்பறவைகளும் உறுதுணையாக இருந்தனவாம் ..!அருமை! …புறா தனியாக பறந்ததை நான் பார்த்தது இல்லை ..இணையாகவே எப்போதும் …மனிதன் கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது ..இவைகளிடம் .. ! வாழ்த்துக்கள் சகோதரி !

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 21, 2011 @ 07:15:04

   உங்கள் இனிய பிறந்த நாளில் இங்கு வந்து எனக்குக் கருத்திட்டமைக்கு மிக மிக மகிழ்ச்சி. அத்துடன் எனது நன்றியும். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. N.Rathna Vel
  டிசம்பர் 21, 2011 @ 09:26:26

  அருமையான கவிதை.
  அருமையான படத் தேர்வுகள்.
  வாழ்த்துகள் அம்மா.

  மறுமொழி

 6. SUJATHA
  டிசம்பர் 21, 2011 @ 13:33:40

  இலக்கணம் மாறினால்….காதல் உருவுக்கு அடையாளம். உண்மையில் எடுத்துக் காட்டுகளுடன் எமக்கு உணர வைத்துள்ளது.ஃ ஒரு பிரிவின் துயரம் இணைந்த இன்னொரு பிரிவையும் துயரத்தில் ஆழ்த்தி விடும். அற்புதம் கவி……தொடருங்கள் பணியை ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 21, 2011 @ 17:02:19

   மடம்! இன்று வெள்ளென வந்துள்ளீர்கள்! மிக்க மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் அடைந்தேன் உமது வரவாலும், கருத்திடலாலும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  டிசம்பர் 21, 2011 @ 18:10:23

  பறவைகளின் பண்பாட்டைப் பாருங்கள்..
  உள்ளம் சிலிர்க்கிறது சகோதரி.
  வாழ்வின் இலக்கணம் மாறினால் உயிரிழக்குமாம்..
  மனிதராய் நாம் தெரிந்தும்
  புரிந்தும் கொள்ள வேண்டிய விஷயம் இது.
  அழகான ஆழமான கவிதை சகோதரி.

  மறுமொழி

 8. vinothiny pathmanathan
  டிசம்பர் 22, 2011 @ 06:53:49

  அற்புதமான படைப்பு.வாழ்த்துகள்

  மறுமொழி

 9. கலைநிலா
  டிசம்பர் 22, 2011 @ 17:32:34

  களிபொங்குமதன் காதல் வாழ்வின்
  வழித் துணையை ஒன்றிழந்தால்,
  இயற்கைக்காதல் இலக்கணம் மாறினால்
  இசைந்து உயிரிழக்குமாம் இணைப்புறா.

  கருவோடு கொண்ட உறவு அழகு
  படமும் வரிகளும் போட்டிப்போடுகிறது…
  வாழ்த்துக்கள்! தொடருங்கள்…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 22, 2011 @ 18:17:17

   அன்பின் சகோதரா மிக்க மிக்க நன்றியும், மிகுந்த மகிழ்ச்சியும் உங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். மீண்டும் வாருங்கள் , கருத்தைத் தாருங்கள். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jaghamani
  டிசம்பர் 22, 2011 @ 18:21:39

  எத்தனை தூரம் பறந்திடினும்
  வித்தகமாய்த் தன்னிடம் திரும்பும்.
  வஞ்சகமற்ற அழகு உருவம்
  வடியாத சுறுசுறுப்பு நடையாம்.

  வரிகளும் அழகு, படமும் அற்புதம் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 11. രാജീവ് മേല്‍പ്പത്തൂര്‍
  டிசம்பர் 22, 2011 @ 21:46:00

  “களிபொங்குமதன் காதல் வாழ்வின்
  வழித் துணையை ஒன்றிழந்தால்,
  இயற்கைக்காதல் இலக்கணம் மாறினால்
  இசைந்து உயிரிழக்குமாம் இணைப்புற

  மிக அற்புதமான படைப்பு.வாழ்த்துகள்..:))))

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: