219. மனுகுல மீட்புக்காய்….

 

மனுகுல மீட்புக்காய்….

 

பெத்தலகேம் நகரில் ஒரு மீட்பர்
இத்தரையில் உதிப்பார் என்று பல
உத்தம அறிகுறிகள் அன்று தோன்றியதாம்.
அத்தியாயத்தின் கதவு அமைதியாய்த் திறந்தது.
நாட்டு வழிப் பாதையில் சூசை
காட்டிய வழியில் கர்ப்பிணி மரியாள்
கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.

திருவான தேவ கருணை இரட்சகர்
அருமை மாளிகை அந்தப்புரம் போல
ஒரு மகிமையான மாட்டுத் தொழுவத்தில்
கருவறை விட்டு பூமியில் உதித்தார்!
காரிருள் குளிர் போர்வை விரிக்க
அரிய மனுகுல மீட்பர்  பிறந்ததாய்
ஊர்த்துன்ப மேகம் கலைந்து மக்கள்
வாரி அள்ளும் துன்பமும் கரையட்டும்.

யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
நாலும்  சிறந்து நாடு சிறக்கட்டும்!

(அனைத்து அன்புள்ளங்களிற்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துள்.)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-12-2007.

(ரி.ஆர்.ரி,  இலண்டன் தமிழ் வானொலி, ஐரிஆர் (கவிதைச்சாரல்) வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது.)

                               

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jayarajanpr
  டிசம்பர் 23, 2011 @ 05:43:21

  //கர்ப்பிணி மரியாள்
  கட்டி முத்தான யேசுபாலன் உதிக்க
  எட்டிய அடிதளர எழுந்தது பிரசவவலி.//

  உங்களின் இந்த அருமையான வரிகளின் ஊடே
  எனது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை பதிவு செய்கின்றேன்..

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 23, 2011 @ 07:38:43

   நல் வரவு யெயராஜ் சகோதரா! மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் எனது கிறிஸ்துமஸ் வாழ்த்தும், புது வருட வாழ்த்தும் உரித்தாகுக. உங்கள் கருத்திடலிற்கும், வரவிற்கும் மறுபடியும் நன்றி நன்றி. இந்த உறவு நீடிக்கட்டும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. sriskantharajah
  டிசம்பர் 23, 2011 @ 06:37:01

  யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
  தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!
  வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
  தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
  பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
  காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!
  பாலம் அமையட்டும் நாட்டு ஒற்றுமைக்காய்!
  நாலும் சிறந்து நாடு சிறக்கட்டும்!

  மிகவும் அருமையான.. உருக்கமான வேண்டுதல்கள்!!
  வாழ்த்துக்கள் அம்மா!!!
  நத்தார் புதுவருட திருநாள் நல்வாழ்த்துக்கள்
  தங்களுக்கும் உரித்தாகட்டும்!!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 23, 2011 @ 07:30:30

   சகோதரா சிறீ! உங்கள் வாழ்த்தை நேற்று முகநூலில் பார்த்தேன், என் கரங்களையும் மனதையும் கட்டிப் போட்டேன் இன்று எனது ஆக்கத்தை வலையேற்றும் வரையில். அங்கு உங்கள் கருத்திற்கும் முகநூல் வாழ்த்துக்குமான பதில் இது தான் இனிய கிறிஸ்துமஸ் புது வருட வாழ்த்துகள். கருத்திடலிற்கும் மனமார்ந்த நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  டிசம்பர் 23, 2011 @ 07:34:06

  தங்களுக்கும் என்னுடைய இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. மகேந்திரன்
  டிசம்பர் 23, 2011 @ 11:46:48

  தேவ மைந்தனிடம்
  உலக அமைதிக்காக வேண்டிய விதம்
  மனதில் நின்றது சகோதரி.
  இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. N.Rathna Vel
  டிசம்பர் 23, 2011 @ 16:16:37

  அருமை.
  எங்களது மனப்பூர்வ கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 23, 2011 @ 16:25:55

   நன்றி ஐயா. உங்கள் வருகையால், வாழ்த்தினால் மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி. உங்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்தகள் உரித்தாகுக. தேவனின் கருணை கிட்டட்டும்.

   மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 23, 2011 @ 17:37:07

  கதை போலக் கவிதை.
  அதில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அருமை
  எனது இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. ramani
  டிசம்பர் 23, 2011 @ 17:39:12

  தேவ குமாரனின் வரவு குறித்த ஒரு
  இனிமையான கவிதையைக் கொடுத்து
  வாழ்த்தும் தெரிவித்த உங்களுக்கு
  எங்கள் மனம் கனிந்த இனிய
  கிறிஸ்மஸ் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. கவி அழகன் --
  டிசம்பர் 23, 2011 @ 22:48:47

  நத்தார் வாழ்த்துக்கள்
  பாடல் அருமை

  மறுமொழி

 9. Madhu Mathi
  டிசம்பர் 24, 2011 @ 08:22:00

  தங்கள் தளத்தில் இருந்தபடியே அனைவருக்கும் கிறித்துவ வாழ்த்துகளை சொல்லிக்கொள்கிறேன்..வாழ்த்துகள்..

  அன்போடு அழைக்கிறேன்..

  மௌனம் விளக்கிச் சொல்லும்

  மறுமொழி

 10. sivakumaran
  டிசம்பர் 25, 2011 @ 11:26:55

  அருமையான கவிதை.
  வேண்டுதல்கள் பலிக்கட்டும்.

  மறுமொழி

 11. VAI. GOPALAKRISHNAN
  டிசம்பர் 25, 2011 @ 13:39:47

  //வாசமுடன் தமிழர் தமிழ் மொழியென
  தேசமெலாம் பெயரேற வாழ்வுயரட்டும்!
  பாலன் பிறந்தார் மனுகுல மீட்புக்காய்!
  காலம் பிறக்கட்டும் இலங்கையர் அமைதிக்காய்!//

  அருமையான வரிகள். அழகழகான படங்கள்.
  இனிய வாழ்த்துக்கள். vgk

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   டிசம்பர் 25, 2011 @ 14:13:23

   மிக்க நன்றி ஐயா கருத்திடலிற்கும், வருகைக்கும். . நான் உங்கள் பக்கம் வந்து பல கருத்துகள் போட்டேன். நீங்கள் மௌனமாக இருந்தீர்கள் நானும் மௌனமாகி விட்டேன் ஐயா. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால் சத்தம் அருமையாகுமே! இனிய நத்தார், புதுவருட வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. பொன்-சிவகௌரி
  டிசம்பர் 27, 2011 @ 01:44:13

  மிகவும் அழகான ஆக்கம். ஆமாம்
  யேசுபாலன் உதயம் போல தமிழருக்கு
  தேசு மிகு உதயம் பிறக்கட்டும்!

  இனிய நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 27, 2011 @ 07:48:14

   மிக்க நன்றி சகோதரி, நீண்ட நாட்களின் பின் உமது கருத்தும், வரவும் மகிழ்ச்சி தந்தது. இனிய நல் வாழ்த்துகளுடன் இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: