21. புலாலுண்ணல் (அசைவம்)

 

21. புலாலுண்ணல் (அசைவம்)

 

த்தனை மரக்கறிகள் உலகிலுண்டு, எதற்காக
பித்தாகிறார் மானிடர் புலாலுண்ண!

வெறும் தசையை சுவையூட்டி உண்ண
அறுத்தல் கொலை!  பாவம்!

சையை வளர்க்கத் தசையா! மனம்
இசைவது சீவ இம்சைக்கே!

மீனை நீரிலிருந்து எடுத்தல் கொடுமை!
ஊனையுரித்தல் அதிலும் கொடுமை!

சைவம் எனும் பதமே புனிதமாகும்.
அசைவமாகிப் புனிதம் இழக்காதீர்!

மிருகங்களிலும் மேலானவன் மனிதனென்றால் ஏன்
மிருகங்களையே கூறாக்கி உண்கிறார்!

ருளுடைமை, ஆன்மீகம், தெய்வீகம் என்பவன்
அருளழித்துப் புலாலுண்ணல் தவிர்க்கலாம்.

னத் தூய்மை  உடற் தூய்மையாக்கும்.
இவையும் சைவத்துள் அடங்கும்.

கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.

சைவம் என்பது சவம் உண்பது.
சைவனாகிச் சிவனடி சேரலாம்.

(அறிவு ரப்பர் போன்றதாம்! புலால் உண்பதின் நன்மையையும் நன்கு கூறுகின்றனர், வாசித்தேன். எனது தலைப்பிற்கு எனது வரிகள் இது. வாதாட அல்ல!…)

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-12-2011.

 

                                    

 

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வே.நடனசபாபதி
  டிசம்பர் 26, 2011 @ 06:20:49

  //தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள்.
  கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
  எல்லா உயிருந் தொழும்.?//

  என்று புலான் மறுத்தல் பற்றி அய்யன் வள்ளுவன் கூறிய கருத்தைப்போல் தாங்களும் பத்து பாக்களில் எளிய நடையில் சொன்னமைக்கு நன்றிகள் பல!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2011 @ 07:34:34

   மிக்க நன்றி சகோதரா. உங்கள் இனிய வருகை, பின்னூட்டத்தால் மிக மிக மகிழ்வடைந்தேன். மறுபடியும். மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. sriskantharajah
  டிசம்பர் 26, 2011 @ 07:19:33

  நல்ல கருத்துக்கள்!!! மிகவும் நன்றி அம்மா!!!

  மறுமொழி

 3. oppilan mu.balu
  டிசம்பர் 26, 2011 @ 10:21:43

  பழக்கமாகி விட்டது //கோவிலில் வைத்து ஆடுகளை வெட்டி விருந்து வைத்து சாப்பிடுகிறார்கள் ..இப்போது திருமணச் சடங்குகளில் நகரத்தில் எப்படியோ….கிராமங்களில் கறி இல்லாத விசேஷமே இல்லை என்றாகி விட்டது .! சைவம் எல்லாவற்றுக்கும் சிறந்தது …!நல்ல கருத்துக்களை முன் வைத்துள்ளீர்கள் …சகோதரி !

  மறுமொழி

 4. கோமாளி
  டிசம்பர் 26, 2011 @ 11:02:24

  புலால் வேண்டாமே என்பதை யார் மனமும்
  நோகாமல் தங்கள் கவிதை மிகவும் மென்மையாய்
  மனதை வருடுகிறது.

  “கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
  மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.
  அசைவம் என்பது சவம் உண்பது.
  சைவனாகிச் சிவனடி சேரலாம்.”

  மிக மிக சரியான சுவையான வரிகள்.
  தங்கள் எழுத்து பயணம் தொடர்ந்து செல்ல
  பின்னால் நாங்களும் வந்து இணைகிறோம்.

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 5. கோமாளி
  டிசம்பர் 26, 2011 @ 12:00:49

  அசைவம் வேண்டாம் என்பதை யார் மனமும்
  நோகாமல் செதுக்கிய கவிதை மனதை
  மென்மையாய் வருடுகிறது.

  “கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
  மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.

  அசைவம் என்பது சவம் உண்பது.
  சைவனாகிச் சிவனடி சேரலாம்.”

  மிக மிக சிறப்பான சுவையான
  வரிகள்.
  தங்கள் கவிதை பயணங்களை தொடர்ந்து
  நாங்களும் வருவோம். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2011 @ 18:13:03

   ”தங்கள் கவிதை பயணங்களை தொடர்ந்து
   நாங்களும் வருவோம். வாழ்த்துக்கள்.”.. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரரே….உமது இனிய வருகைக்கும், வரிகளுக்கும். மீண்டும் மீண்டும் வாங்கோ வாங்கோ. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. Dr.M.K.Muruganandan
  டிசம்பர் 26, 2011 @ 15:44:06

  அருமையாக இருக்கிறது.

  மருத்துவத்தில் நாங்கள் தாவர உணவுகளை கூடுதலாகச் சேர்க்கும்படி கூறினாலும் யார் கேடடகிறார்கள்? கொழுத்து உடல் பருத்து கொலஸ்டரோலைத் தேடிக்கொள்கிறார்கள்.

  “சைவனாகிச் சிவனடி சேரலாம்” என்பதற்காக அல்ல, பிடிக்காததால் நான் அவ்வாறு.

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 26, 2011 @ 18:17:31

   நானும் சைவம் தான். பிறப்பிலேயே தாவர பட்சணி தான். அதனால் பாலில்லாமல் தேனீர் குடிக்க மாட்டேன். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் ஐயா! உங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. jaghamani
  டிசம்பர் 27, 2011 @ 19:39:25

  கோரைப் பற்கள் புலாலிற்கு ஏற்றவை.
  மனிதப் பற்கள் தாவரங்களுக்கானவை.

  அருமையான தெளிவான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 8. ramani
  டிசம்பர் 28, 2011 @ 00:51:26

  கோரைப்பற்கள் விரும்புகிறவர்கள் யாரும் இல்லை
  பின் ஏன் அசைவம் விரும்புகின்றனர்
  உவமைகளை பயன் படுத்திய விதம் பிரமிப்பூட்டுகிறது
  அருமையான பதிவு வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. N.Rathna Vel
  டிசம்பர் 28, 2011 @ 16:54:27

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 04, 2012 @ 20:30:05

  பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
  Posted நவம்பர் 9, 2011 by எழுச்சிக் கவிஞர் கங்கை மணிமாறன் in Uncategorized. 1 மறுமொழி

  புலால் உண்பது பொறிகளை அழிக்கும்!
  புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக
  புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்!
  தாவர உணவே சாத்வீக உணவு!
  அதுவே இயற்கையாய் அமைந்த உணவு !
  ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு!
  ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால்
  தழைத்து வளரும் தாவரங்க ளான
  மரமும் – நெல்லும் – மாடுண்ணும் புல்லும்
  உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே !
  தாவர உயிர்கள் தம்மை அழித்து
  நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும்
  அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய்
  ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..?
  ஜீவ காருண்யம் என்று பார்த்தால்
  தாவ ரங்களை அழிப்பதும் பாவம்!
  தாவ ரங்களை உண்பதும் பாவம் !
  என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா!
  இல்லை என்கிறார் எம்பெரு மானார்!
  ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும்
  ஜீவ விளக்கம் உண்டென் றாலும்
  பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள்
  தழைகள் கீரைகள் வித்துகள் யாவும்
  உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி
  அவைகளே உயிராய்க் காண்பது இல்லை!
  அவற்றில் தனியாய் உயிரும் இல்லை!
  மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே
  உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால்
  அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை
  ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்ணற்க!
  கைவிரல் நகத்தை வெட்டும் போதும்
  காணும் முடியைச் சிரைக்கும் போதும்
  ஏதும் துன்பம் ஏற்படு வதுண்டோ..?
  மீண்டும் அவைதான் முளைக்குமே அன்றி
  யாண்டும் துயரம் விளைவதே இல்லை!
  அதுபோல் தாவர உயிர்களைப் பறித்தால்
  அவையும் துன்பம் அடைவதே இல்லை!
  அதுமட்டும் அன்று ! அவற்றின் வித்தை
  நன்னிலம் ஒன்றில் நாமே விதைத்து
  மேலும் மேலும் உற்பத்தி செய்யலாம்!
  கோழி கழுத்தை வெட்டினால் முளைக்குமா!
  ஆடு மாடுகள் அறுத்தால் தழைக்குமா!
  பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
  ஆகவே..தாவர உணவே சிறந்தது!
  அதனால் உயிர்க் கொலை மட்டுமே கொடியது!
  அறிவீர் என்கிறார் அருள்நிறை வள்ளலார்!
  அறிவோம் உலகீர்! அணிதிரள் வீ ரே!
  புரியோம் உயிர்க்கொலை! புரிவோம் சன்மார்க்கம்!
  நெறியில் நிற்போம்! நிலத்தில் வாழும்
  அரிய கலைகள் அருட்பெருஞ் சோதி
  ஆண்டவ ரிடத்தில் அனைவரும் கற்போம்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: