4. தொலைத்தவை எத்தனையோ!

– 4

(இது ஒரு தொடர் இடுகை)

அப்போது எனக்கு எட்டரை- ஒன்பது வயதிருக்கும்.
நாவலர் பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்தேன். பாடசாலை ஓரு மணியளவில் விடும். வீடு வந்து ஆடை மாற்றி உணவு உண்ட பின் ஒரு ஆயிரம் மீட்டருக்கு உள்ளாக இருக்கும் பாக்கியம் ஆசிரியை வீட்டிற்கு, தம்பி, தங்கைகளுடன் படிக்கப் போவோம்.

நாங்கள், பெரியப்பா வீட்டுப் பிள்ளைகள், இன்னும் பாக்கியம் ஆசிரியையின்  பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் என்று, வயது, வகுப்பிற்கு ஏற்றபடி சேர்ந்து படிப்போம். பாக்கியம் ஆசிரியை எமது நாவலர் பாடசாலையில் ஆசிரியை, எமக்கு உறவினரும் கூட.

(Photo:- Nanry my brother satha.)

(Photo:- Nanry    கோப்பாய் குட்டி திவியன்)

 பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள், வேறாகவும் படிப்போம். விளையாடுவோம். மாலை ஐந்து, ஆறு மணி வரை நின்று வீடு வருவோம்.

நானும் குவீனும், தாமரையும் ஒன்றாகப் படிப்போம். படிக்கும் நேரம் தவிர எப்போதும் குவீனும், தாமரையும் சேர்ந்து குசுகுசுப்பார்கள். சேர்ந்து விளையாடுவார்கள்.  ஏனோ என்னை ஒதுக்கி விடுவார்கள். (நான் அவர்களிலும்  ஒரு வயது சிறியவள்.)

 

நான் போராடும் குணம் கொண்டவளில்லை. என் பாட்டில் சுற்றியுள்ள மல்லிகைப் பந்தலை,  முற்றத்துப் பூக்கன்றுகளை ரசிப்பேன். மற்ற பிள்ளைகளுடன் பாக்கியம் ஆசிரியை வீட்டுக் கோழிக் குஞ்சுகள் நிறமடித்திருப்பதை ரசித்து பருந்து தூக்க வர, கூச்சலிட்டு விரட்டுவோம். அடி பெருத்த தென்னை மரங்களில் ஏறி விளையாடுவோம். இப்படிப் பொழுது போகும்.

பாக்கியம் ஆசிரியையும், அவரது தங்கையும் இதைக் கவனித்து, சேர்ந்து படிப்பவர்கள் சேர்ந்து விளையாடவும் வேண்டும் என்று, குவீனையும், தாமரையையும் நன்கு ஏசினார்கள் ” நீங்கள் இப்படி பேபியை ஒதுக்கக் கூடாது” என்று.  (எனது வீட்டுப் பெயர், பிறந்ததிலிருந்து பெற்றவர், ஊரார் அறிந்திருப்பது Baby  தான்.)

எனக்கு அது மகிழ்வாக இருந்தது. மாற்றம் வருமென எதிர்பார்த்தேன், காத்திருந்தேன். ஆனால் அது தொடர் கதையாகவே இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் முறைப்பாடு செய்யவில்லை. ஆனால் நிச்சயம் அம்மாவிடம் இலேசாகக் கூறியிருப்பேன்.  அம்மா,அப்பா ” சமாளித்து நட!”  என்றிருப்பார்கள். (இது எனக்குச் சரியாக நினைவில்லை)

ஒரு சிவராத்திரி வந்தது. அதற்கு நித்திரை விழிப்பது சிவ புண்ணியம் என்பர். அங்கு வரும் பிள்ளைகள் நாங்கள் அதைக் குதூகலமாகக் களிக்க, பாட்டு நாடகம் என்று தயாரிக்கப் பட்டது.
பாக்கியம் ஆசிரியை கோவலன் கண்ணகி நாடகம் போட எங்களைத் தயாரித்தார். எனக்கு கோவலன் வேடம் தரப்பட்டது.

தாமரை மாதவியாக (சபையில் நடனமாட வேண்டும்). குவீனி மாதவிக்கு சாமரம் வீசும் சேடிப் பெண்ணாக. (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)

மிகுதி அடுத்த அங்கத்தில் தொடரும்)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
28-12-20011

                                        

 
 

 

 

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jayarajanpr
  டிசம்பர் 28, 2011 @ 06:31:01

  //என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.//

  தொடர்ந்து சொல்லுங்கள்.. வாசிப்போம்..

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 28, 2011 @ 08:44:58

   நீண்ட காலத்தின் பின்பே உள்ளத்தில் இதன் கருத்து வந்தது. நன்றி சகோதரா இனிமையாக வந்து கருத்திட்டதற்கு. மிக்க மகிழ்ச்சி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. வசந்தா சந்திரன்.
  டிசம்பர் 28, 2011 @ 06:44:34

  நன்றிகள், தொடருங்கள் படிக்க ஆவல்

  மறுமொழி

 3. jaghamani
  டிசம்பர் 28, 2011 @ 07:32:22

  (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.) //

  Nice childhood..

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 28, 2011 @ 16:06:53

   நன்றி சகோதரி உங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். நொந்த மனத்தின் நடவடிக்கையை அடுத்த தடவை பாருங்களேன். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 4. ராஜி
  டிசம்பர் 28, 2011 @ 07:46:00

  (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)

  >>
  வாழ்வின் தத்துவமும் இதுதானே. அவரவர் தகுதிக்க்ற்பதானே இறைவன் வேடம் அளித்துள்ளான்.

  மறுமொழி

 5. ராஜி
  டிசம்பர் 28, 2011 @ 07:49:36

  (அவரவர் தரமறிந்து வேடங்கள் தரப்பட்டுள்ளதை என் குழந்தை மனம் அறியவில்லைப் போலும்.)
  >>
  இறைவனும் அப்படியே. அவரவர் தகுதிக்கேற்பதான் வேடங்களை அளித்துள்ளான்

  மறுமொழி

 6. sriskantharajah
  டிசம்பர் 28, 2011 @ 08:07:18

  பாடசாலையில் மட்டுமல்ல… வாழ்க்கையிலும் ஒவ்வொருவரின் தரம் அறிந்து தான் இறைவனால் வேடங்கள் தரப்படுகின்றன.. மிகவும் அற்புதமான இளமைக் காலப் பதிவு!!! வாழ்த்துக்கள் அம்மா!!! தொடர்ந்து எழுதுங்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 28, 2011 @ 18:24:03

   ”..பாடசாலையில் மட்டுமல்ல… வாழ்க்கையிலும் ஒவ்வொருவரின் தரம் அறிந்து தான் இறைவனால் வேடங்கள் தரப்படுகின்றன.. ”
   உண்மையாகச் சொன்னீர்கள் சகோதரா. காலையிலேயே உங்கள் பின்னூட்டம் கண்டேன். உடன் பதிலிட முடியவில்லை. இப்போது மாலை 19.16க்குத்தான் பதிலிட முடிகிறது. காலையிலேயே மிக மகிழ்வடைந்தேன் உங்கள் கருத்திடலிற்கு. மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. மகேந்திரன்
  டிசம்பர் 28, 2011 @ 08:42:06

  ரசிக்கும் திறன் சிறுபிராயத்தில் இருந்து
  தங்களுக்கு இருந்திருக்கிறது போலும்.
  தொட்டில் பழக்கம் தொன்று தொட்டு வருகிறது..
  சிறுவயது சம்பத்தை அழகாக தொடுக்கிறீர்கள் சகோதரி.
  அடுத்த பகுதிக்காக காத்திருக்கேன்.

  மறுமொழி

 8. ramani
  டிசம்பர் 28, 2011 @ 13:12:47

  ஆழப் பதிந்தவைகள் அனைத்தும்
  நிச்சயம் மதிப்பு வாய்ந்த பொருட்களே
  தங்கம் வைரம் மட்டுமா
  நம் நினைவுகள் கூடத்தான்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 28, 2011 @ 18:30:35

   சகோரா ரமணி! நீங்கள் கூறியவை சரி தான் இவைகள் (எம் எண்ணங்கள்) தானே எம்மை ஆள்கிறது. மிக்க மகிழ்வும், நன்றியும் உங்கள் இனிய கருத்திடலிற்கும், வருகைக்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. mannai senthil
  டிசம்பர் 28, 2011 @ 13:25:00

  தங்களின் எழுத்தின் ஆழம் அன்றே தொடங்கியது உள்வாங்கும் கலை மூலமாய், அருமையம்மா தொடருங்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 28, 2011 @ 16:03:46

   ஓ!…ஒரு கணம் யோசித்தேன்…இது யார் என்று. இப்போது புரிகிறது யாரென்று. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோதரா உங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். முன்பு போல எழுதுவதில்லையே! .இறை அருள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. N.Rathna Vel
  டிசம்பர் 28, 2011 @ 16:28:05

  அருமை.
  தொடருங்கள்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 11. SUJATHA
  டிசம்பர் 28, 2011 @ 19:42:51

  இத்தனை திறமைகளும் உங்கள் எழுத்துத் திறமையில் இப்போது
  வெளிப்படுத்தி இருக்கின்றீர்கள். படங்களுடன் தொலைத்தவை ஞாபகத்திற்கு கொண்டுவரும் போது ரசிக்கக்கூடியதாவுள்ளது. தொடருங்கள் பணியை!!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 12. கோவை கவி
  டிசம்பர் 28, 2011 @ 20:06:09

  உமது இனிய வருகையும், கருத்திடலும் மிக்க மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தருகிறது சுஜா. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 13. Naguleswarar Satha
  டிசம்பர் 29, 2011 @ 16:14:11

  Yaar antha Thaamarium Kuveenum ena ennukiren.

  மறுமொழி

 14. s sakthivel
  ஜன 10, 2012 @ 08:51:33

  கோப்பாய்க் கிறிஸ்டியன் கல்லூரி ஞாபகத்தில் உள்ளது. (பருத்தித்துறை வீதியில்). நாவலர் பாடசாலையும் அதே வீதியில்தானா? A/L காலத்தில் கிட்டத்தட்ட ஒவ்வொருநாளும் போனவீதி -பருத்தித்துறை வீதி இப்ப யோசித்தால் அழுகைதான் வருகிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 12, 2012 @ 21:55:13

   ஓம் பருத்தித் துறை வீதியில் தான் கோப்பாய் வாகிகசாலைக்கு அருகில் நாவலர் பாடசாலை. வந்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. .இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. Puvana Sivakumar
  பிப் 03, 2012 @ 11:33:41

  great memories, good old times, just wonderful, looking forward to read more…

  மறுமொழி

 16. கோவை கவி
  பிப் 22, 2012 @ 21:27:25

  Thank you so much Puvana. I am glad that you came here and gave your words,
  God bless you all.

  மறுமொழி

 17. கீதமஞ்சரி
  ஜன 24, 2014 @ 23:48:40

  வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_25.html

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2014 @ 07:41:31

   மிக மகிழ்ச்சி.
   மிக நன்றி கீதமஞ்சரி தாங்கள் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு.
   இத்துடன் அனைத்து அறிமுகவாளர்களிற்கும் இனிய நல்வாழ்த்துகள்.
   தங்களிற்கும் இனிய வாழ்த்து.

   மறுமொழி

 18. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  ஜன 24, 2014 @ 23:54:02

  வணக்கம்
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_25.html?showComment=1390607435662#c947129308205581039
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: