220. நேற்றையதிலும் திறமாய் மலர்க!

 

நேற்றையதிலும் திறமாய் மலர்க!

 

வ்வொரு ஆண்டும் தனித்துவ ஆண்டாய்
இவ் வருடமும் புது எண்ணிக்கையாய்
இரண்டாயிரத்துப் பன்னிரண்டாம் ஆண்டு
மிரண்டிட வைக்குமோ! வரண்டிடா வளம்
திரண்டு இன்பம் தர வருமோ!
அணிகலன்களால் நாடு அலங்கரிப்பு!
பனியில்லாத மார்கழிக் குளிர் இருளில்
இனியில்லாத வேகமாய் மலர்கிறது ஆண்டு.

திகார வர்க்கத்து ஆக்கிரமிப்பு நெஞ்சம்
நதியோர மண்ணாகக் கரைய வருக!
சதிசெய்து உயிர்களை விதியென்று பறிக்கும்
அதிமேதாவித்தன ஆயுதக் குவியலை
பொதியாக்கித் தீயிட மதியாக வருக!
அதியுன்னத அன்பை இதிகாசமாக்க வருக!
அமைதி மருவுக! புத்துயர்வு தருக!
அமைவாய், இனியதாய், வசந்தமாய் வருக!

பிறர் மனக் கிளையை எட்டி
பலாத்காரக் கவட்டையால் கொழுவி இழுத்து
பிசாசாக உலுக்கிக் காரியப் பழம்
பிடுங்கும் நிலை மாற வேண்டும்.
தன்னிச்சையான மனிதக் கொள்கையை உலகில்
தங்கு தடையின்றி நிலை நாட்ட
தரமான புது உலகம் வரவேண்டும்!
வரமாகப் புத்தாண்டு மலர வேண்டும்!

னிதநேயக் காவலன் மனிதன்! அதைப்
புனிதம் கெடாது காத்திடட்டும் வருக!
வேரான தமிழ்க் கொல்லை புலத்திலும்
சீராக செழித்திடும் வகையாக்க வருக!
நேராகச் செல்லும் கூரான மதியும்
ஏராக எமுதுகோலும் அமைக்க வருக!
காற்றை மீறி வாழும் தீபமாய்
நேற்றையதிலும் திறமாய் ஆற்றிடு சாதனை!

 

 ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2005.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும், 2008ல் ஐரிஆர் (திரு நயினை விஐயன்) வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

In muthukamalam web site:-     http://www.muthukamalam.com/verse/p834.html

 

                           

 

                                     

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sriskantharajah
  டிசம்பர் 30, 2011 @ 07:55:30

  புத்தாண்டு பிறக்கட்டும்!
  பூவுலகம் போற்றட்டும்!
  பூவானம் துவட்டும்!
  புதுவாழ்வு மலரட்டும்!!

  வாழ்த்துக்கள் அம்மா!!!

  மறுமொழி

 2. மகேந்திரன்
  டிசம்பர் 30, 2011 @ 11:30:38

  மலரட்டும் புத்தாண்டு!
  பதியப்போகும் சுவடுகள்
  மணம் பரப்பட்டும்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 3. oppilan mu.balu
  டிசம்பர் 30, 2011 @ 11:59:53

  அன்புச் சகோதிரியே ..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ..!மறையப்போகும் புத்தாண்டு பல பாடங்களை புகட்டிச் சென்றுள்ளது ..!மலரப் போகும் புத்தாண்டு எல்லோர்க்கும் நன்மை தரக்கூடிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் …வரவேற்போம் ..வளம் பெறுவோம் ..வாழ்க வளமுடன் !

  மறுமொழி

 4. N.Rathna Vel
  டிசம்பர் 30, 2011 @ 16:27:11

  அருமையான கவிதை.
  எங்களது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. ramani
  டிசம்பர் 30, 2011 @ 20:04:56

  நல்லதைச் சொல்லியும் நம்பிக்கையூட்டியும் செல்லும் தங்கள்
  புத்தாண்டு சிறப்புக் கவிதை அருமையிலும் அருமை
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
  நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. SUJATHA
  டிசம்பர் 30, 2011 @ 20:19:10

  பிறக்கும் புத்தாண்டு இனிதே மலர வாழ்த்துகின்றோம்!!!!! காட்சிகளோடு கவியும் கொள்ளை கொள்கின்றது. மலரும் புத்தாண்டு புத்தொளி வீசட்டும்!!!தொடருங்கள் உங்கள் பணியை ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 7. கோவை கவி
  டிசம்பர் 30, 2011 @ 20:37:08

  தங்களுக்கும் உரிய வாழ்த்தை மேலே கூறியுள்ளேன். மிக்க நன்றி சுஜா. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 8. Angelin
  டிசம்பர் 30, 2011 @ 22:00:06

  உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. கலைநிலா
  டிசம்பர் 31, 2011 @ 04:45:07

  புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரியே…
  மனிதநேயக் காவலன் மனிதன்! அதைப்
  புனிதம் கெடாது காத்திடட்டும் வருக!
  இறைவன் துணை புரியபோதுமானவன்…

  மறுமொழி

  • கோவை கவி
   டிசம்பர் 31, 2011 @ 09:20:36

   ”…இறைவன் துணை புரியபோதுமானவன்..”
   …ஆம் சகோதரா! மிக்க நன்றி . உங்களுக்கும் இனிய ஆண்டு மலர்வு உரித்தாகட்டும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. முனைவர் இரா.குணசீலன்
  டிசம்பர் 31, 2011 @ 13:46:19

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 11. ampalavanpuvanenthiran
  ஜன 01, 2012 @ 08:32:39

  நன்றியுடன் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 01, 2012 @ 08:42:19

   மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா வலை வருகைக்கும் வாழ்த்திற்கும். உமக்கும், குடும்பத்தினருக்கும் இதே வாழ்த்து நிறைந்து கிடைப்பதாக. இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. தமிழ் விரும்பி.
  ஜன 01, 2012 @ 15:24:40

  ////காற்றை மீறி வாழும் தீபமாய்
  நேற்றையதிலும் திறமாய் ஆற்றிடு சாதனை!////

  முத்தாய்ப்பான வரிகளுடன் சமைத்த வாழ்த்துக் கவிதை…
  தங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 01, 2012 @ 20:43:28

   மிக மகிழ்ச்சியும், நன்றியும் சகோதரா. உங்கள் இனிய வரவு கருத்துக்களால். எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. பழனிவேல்
  ஜன 02, 2012 @ 07:18:34

  மனிதநேயக் காவலன் மனிதன்! அதைப்
  புனிதம் கெடாது காத்திடட்டும் வருக!
  புத்தாண்டு நல் வாழ்த்துகள்.!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 18:19:47

   சகோதரா! தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: