221. வெற்றியுடன் வருவாய்!….

 

வெற்றியுடன் வருவாய்!….

(இரவு பிறந்த புது வருட மினுமினுப்பும் கலகலப்பும் குறையவில்லையே!.. 2006 சுனாமி – துன்பத்தோடு வந்த போது எழுதிய ஒரு கவிதையைச் சுவையுங்களேன்!…2012 என்று கருதியபடி…..)

சுற்றிச் சுழன்று தினங்கள் வளர்ந்து
முற்றுப் பெற்றது ஒரு ஆண்டு.
மற்றுமொரு ஆண்டு இரண்டாயிரத்து ஆறென
மறு வேடத்தோடு புதிதாக எம்மருகில்.
இரண்டாயிரத்து ஐந்தே நன்றி உனக்கு!
இரண்டாயிரத்து ஆறே வளமோடு வருக!
திரண்ட அமைதியும் திருவும் தருவாய்!
வரண்ட மனங்களில் செழிப்புத் தாருவாய்!

பூமியின் சுழற்சியிற்  புது ஆண்டு
நாமினி நல்லதை எதிர் கொண்டு
நிமிர்ந்து வரவேற்போம் நினைத்தது நடந்திட,
நிலையான ஆனந்தம் நிரந்தரமாய் நிலைத்திட.
அப்படி அமையுமா! இப்படி அமையுமா!
எப்படி அமையும் இந்த ஆண்டு!
ஊர் கெடுப்பாயா! பேர் தருவாயா!
ஓர் இடம் கால ஏட்டிலே எடுப்பாயா!

னமதைக் காத்திட இளம் தென்றலாய்
மனதில் திடமதை ஏந்திக் கொண்டு
கனமில்லா வாழ்வு புதுச் சுவடாக
கணக்குடன் வருவாயா புதுத் திட்டமோடு!
நெற்றியடியாய்  நம் அனைவருக்கும்
நேற்றைய ஆண்டு தந்த பரிசு
சுற்றிச் சுழன்ற சுனாமி இழப்பு
வெற்றியைப் பறித்து வேதனையாக்கியது.

சுற்றி விழுந்த உடலங்களால் தூர்
வற்றி விடுகிறது நம்பிக்கை நீர்.
பற்றி எரிகிறது மனமாயினும் புத்தாண்டே!
வெற்றியுடன் தொடர்ந்து வருவாய் என்போம்.
சாதகமாய் வரவேற்கிறோம் சாதனைகளை நோக்கி
பாதகம் செய்திடாதே சுனாமியால் தாக்கி!
தீதகு எண்ணமின்றித் தொடர்கிறோம் நன்மையாய்
தோதான ஆண்டாய் வெற்றியுடன் தொடர்வாய்!
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-1-2006.

In Anthimaalai web site:-  http://anthimaalai.blogspot.com/2012/01/blog-post_02.html

                                

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sriskantharajah
  ஜன 01, 2012 @ 05:38:32

  புத்தாண்டே வெற்றியுடன் வருக!!!
  வாழ்த்துக்கள் அம்மா!!!
  வளமுடன் வாழ்க!!

  மறுமொழி

 2. கோவை கவி
  ஜன 01, 2012 @ 06:23:34

  இனிய புத்தாண்டு உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் அமையட்டும். மிக்க நன்றியும், மகிழ்வும் உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும். ஆண்டன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 3. மகேந்திரன்
  ஜன 01, 2012 @ 07:57:49

  ////இனமதைக் காத்திட இளம் தென்றலாய்
  மனதில் திடமதை ஏந்திக் கொண்டு
  கனமில்லா வாழ்வு புதுச் சுவடாக
  கணக்குடன் வருவாயா புதுத் திட்டமோடு!/////

  இதுவே நான் வேண்டுவதும் சகோதரி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 01, 2012 @ 08:44:16

   மறூடியும் புத்தாண்டு வாழ்த்துகளுடன், மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா வலை வருகைக்கும் வாழ்த்திற்கும். உமக்கும், குடும்பத்தினருக்கும் இதே வாழ்த்து நிறைந்து கிடைப்பதாக. இறை ஆசியும் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. அன்புடன் மலிக்கா
  ஜன 01, 2012 @ 09:05:30

  உலகிலுள்ள அனைத்து நெஞ்சங்களும். எந்நாளும். எந்நேரமும் நிம்மதியென்னும் நீரில் நீந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுகிறேன்..

  மறுமொழி

 5. SUJATHA
  ஜன 01, 2012 @ 09:06:43

  சுற்றி விழுந்த உடலங்களால் தூர்
  வற்றி விடுகிறது நம்பிக்கை நீர்.

  அருமை ”கவிதாயினி வேதா” வாழ்க்கை ஒட்டம் ஒரு நம்பிக்கை.
  பிறக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய நம்பிக்கையில் ஒளிபிறக்கட்டும்.அற்புதக்காட்சிகளுடன் புதிய ஆண்டு வருகை அழகாகவே உள்ளது. புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 01, 2012 @ 09:22:55

   நன்றி நன்றி..முதல் நாள் என்று பழசு ஒன்று இடம் பிடித்தது. ஒரு கோப்பு நிறைய கவிதைகள் பழையன இருக்கிறதே! மறுபடியும் வாழ்த்துகளுடன் , தங்கள் புத்தாண்டுப் படங்களும் சிறப்பாக உள்ளது, முகநூலில்! வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. N.Rathna Vel
  ஜன 01, 2012 @ 09:26:57

  அழகு கவிதை.
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  மறுமொழி

 7. ramesh
  ஜன 01, 2012 @ 13:49:30

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்ததுக்கள் சகோ

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 01, 2012 @ 14:54:01

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும். உமக்கும் அப்படியே வாழ்த்துகள் உரித்தாகுக. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. பழனிவேல்
  ஜன 02, 2012 @ 07:17:05

  புத்தாண்டு நல்வாழ்ததுக்கள்…
  வாழ்க வளமுடன் !

  மறுமொழி

 9. sivakumaran
  ஜன 03, 2012 @ 02:07:07

  வெற்றிகள் விளைந்திட
  தடைகள் களைந்திட

  நல்வரவாகட்டும்
  புத்தாண்டு.

  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 18:21:53

   சகோதரா! தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jaghamani
  ஜன 03, 2012 @ 13:21:39

  புத்தாண்டே!
  வெற்றியுடன் தொடர்ந்து வருவாய் என்போம்.
  சாதகமாய் வரவேற்கிறோம் சாதனைகளை நோக்கி

  அருமையான படங்களுடன் அற்புதமான படைப்பு.. பாராட்டுக்கள்.
  மனம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 18:23:25

   சகோதரி! தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்.புத்தாண்டு வாழ்த்துகள். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: