வேதாவின் மொழிகள். 17.

Art by  Vetha—

நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.

ம்பிக்கை என்றதும் நான் இராணியாக வேண்டும் என்று நம்ப முடியுமா? நம்பிக்கை  கூட எமது வசதி, சூழல், வாழ்வு என்பவற்றோடு கூடி இயங்க வேண்டியது ஆகிறது. ஒவ்வொரு செயலாகச் செய்து வரும் போது நம்பிக்கை கூடியும், குறைந்தும் தன் வட்டத்தைத் தீர்மானிக்கிறது. மனதில் ஒரு குறிக்கோளை எண்ணி, அதனை நோக்கி நடப்பதும் நம்பிக்கையே.

எமது இயக்கம், திறமைக்கு ஏற்ப நம்பிக்கையை வளர்க்கலாம். அளவிற்கு மிஞ்சி நம்பிக்கையை வளர்ப்பது அசிங்கமாகவும் போகலாம்.
நம்பிக்கை நன்கு மனதில் ஊன்றும் போது தயக்கம், நாணம், ஏன் பயம் கூட விலகி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை நம்பிக்கையை நான் ஒரு அளவோடு தான் வளர்க்கிறேன். என்ன அளவு என்று கூறுதல் இயலாது. ஆனால் என்னால் முடியும், இது சரி வரும் என்ற கணிப்பீடுகளோடு நான் பயணிக்கிறேன். பிறரை நம்பி ஏமாந்த கதைகளுமுண்டு. ஆகாயத்தைத் தொட என்று குதிப்பதில்லை.

தெய்வ நம்பிக்கை போல எது துணை நிற்கும்! தெய்வம் கேட்கும், தெய்வம் தண்டிக்கும் என்பதை வாலிப முறுக்கில் ஏளனம் செய்தாலும், வயோதிபத்தில் யாவும் ஆடி முடிந்த பின் ஆயிரம் நவீனங்கள் வந்தாலும் கூட, மனிதர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.  நம் பாட்டா பாட்டி சொன்னவை தானே இறுதியில் சரியாகிறது. நாம் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையான தேயிலை றப்பர் தோட்டத்தில் வசித்தோம் (கணவர் பணி). நிறைய இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அவர்கள் ஆற்றாமையின் போது ஒரு வசனம் கூறுவார்கள். ” அநியாயம் செய்தால் முனியாண்டி கேட்பான் ” என்று. பரம்பொருளின் பஞ்சாயத்தில் எதற்கும் பதமான தீர்ப்பு உண்டு.

வாழ்வு ஒரு வட்டம். ஒரு பக்கம் வெற்றி நந்தவனமாகப் பூத்துக் குலுங்கி மணம் வீசுகிறது ஏற்றமாக. வென்றவனிற்கு அனைத்தும் இலேசாகத் தோன்றுகிறது. மறுபக்கம் தோல்வி ஒரு நரகமாக, இறக்கமாகச் சுட்டெரிக்கிறது. பாலைவனமாகத் தெரிகிறது. தோற்றவனிற்கு யாவும் பிரமாண்டமாகக், கடினமாகத் தெரிகிறது.
சிலர் வெற்றியில் மயங்கி உலகை மறக்கிறார்.பின்னர் தோல்வியைத் தழுவுகிறார்.தோல்வி கண்டவனோ அடக்கமாக முயன்று முயன்று வெற்றியை எட்டுகிறான். இங்கு ஆணவம் செல்லுபடியாகாது. ” நான்” என்று ” வான்” பார்த்தால் மண்  தெரியாது போய் விடும். நடை பாதை சிக்கலாகி விடும். வெற்றியின் தலைக் கனத்தை ஏந்துவது ஆபத்தாகி விடும். தலைக் கனம் தெளிவான பார்வையை மறைத்து விடும். மானம் அவமானம் கூட , கண்ணிற்குத் தெரியாது மயக்கும்.

ல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. மனிதனைத் துலக்கிக் காட்டுகிறது. முழு மனிதனாக்குகிறது.

னப் பலமும் உளச் சுத்தமும் இருந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீயே சிறந்தவனாகிறாய். முயற்சியால் வெற்றிகளைக் குவிக்க முடியும்.

ல்ல எண்ணம், கடும் முயற்சி, நல்ல வார்த்தைகள் போதும் மிகவும் கம்பீரமானவனாக வாழ.

 

க்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-1-2012.

                                 

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sriskantharajah
  ஜன 03, 2012 @ 05:04:09

  “தெய்வ நம்பிக்கை போல எது துணை நிற்கும்! தெய்வம் கேட்கும், தெய்வம் தண்டிக்கும் என்பதை வாலிப முறுக்கில் ஏளனம் செய்தாலும், வயோதிபத்தில் யாவும் ஆடி முடிந்த பின்; ஆயிரம் நவீனங்கள் வந்தாலும் கூட, மனிதர்கள் ஒத்துக் கொள்கிறார்கள.”

  காலையில் மிகவும் அற்புதமான சிந்தனைகள்!!!
  வாழ்த்துக்கள் அம்மா!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2012 @ 07:37:03

   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். வலையேற்றும் வேலைகள் முடிய முதலே உங்கள் கருத்துப் பார்த்தேன். பதிலிட நேரமில்லை. பின் காலைக் கடன்கள் முடித்து மெயில்களிற்குப் பதில் எழுதி விட்டு இங்கு வந்தேன். இனி வரும் கருத்துகளிற்கு மாலையில் தான் பதிலிட முடியும். உங்களிற்கு இனிய நாள் அமையட்டும்.இறை ஆசியும் கிட்டட்டும். நன்றி, நன்றி.

   மறுமொழி

 2. Tharshi
  ஜன 03, 2012 @ 07:32:28

  நல்ல சிந்தனை…சூழலோடு இயைந்தது தான் நம்பிக்கையும்…எமது திறமைக்கு ஏற்ற வகைகளில் தான் நம்பிக்கையும் இருத்தல் வேண்டும் ஒரு வேளை அதீத நம்பிக்கையுயும் தோல்வியில் முடிவடைந்து விடும்…
  அவ்வாறு தான் தெய்வத்தால் ஆகாதது எதுவும் இல்லை….இளவயதில் ஏளனம் செய்தாலும் பின்பு அதனை உணருகின்றோம்..என்ற தங்களின் சிந்தனை உண்மை தான்

  மனப் பலமும் உளச் சுத்தமும் இருந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீயே சிறந்தவனாகிறாய். முயற்சியால் வெற்றிகளைக் குவிக்க முடியும்.அழகான சிந்தனை.
  “தெய்வத்தால் ஆகாதது என்னும் முயற்சி
  தன் மெய்வருந்த கூலிதரும்”-திருக்குறள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2012 @ 07:58:00

   மிக்க நன்றி சகோதரி தர்சி. காலையில் ஒரு நீண்ட கருத்து, இங்கு வந்து தந்துள்ளீர்கள். மிக மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு இனிய நாள் அமையட்டும். இறை அருளும் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. மஞ்சுபாஷிணி
  ஜன 03, 2012 @ 10:17:22

  நெருங்கிப்பேசி தன் வேலைகள் முடித்துக்கொண்டு அதுவரை காலைப்பிடித்து காரியம் முடிந்ததும் கழுத்தைப்பிடித்து புறம் தள்ளும் ஹூம் இருக்கத்தான் செய்றாங்க.. இருந்துட்டு போகட்டும்… அவர்களின் அறியாமை இது என்றே எடுத்துக்கொள்வோம்…

  அரிசியுடன் கல்லும் சேர்ந்தே தான் இருக்கிறது… நாம் கல்லை ஒதுக்கி அரிசியை உணவாக்கவில்லையா? அதுபோல எத்தனைமுறை சுயநலத்துடன் நம்மை அணுகினாலும் நாம் நம் இயல்புப்படி நல்லதே செய்வோமே… நம் நல்லவையே அவர்கள் குற்ற உணர்ச்சியோடு தலைக்குனிய செய்யும் என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக…

  சரியான வார்த்தை… காசு கொடுக்காமல் நமக்கு சும்மா கிடைப்பது உபதேசம் மட்டுமே.. அந்த உபதேசம் நமக்கு நல்லவை தான் செய்கிறது என்பதை ஆழ்ந்து யோசித்தால் கண்டிப்பாக அந்த அறிவுரைகளை எடுத்துக்கொள்வோம் கண்டிப்பாக.. அதை உணராத மனங்கள் தான் உபதேசத்தை வெறுப்பது ஏற்க மறுப்பது… கரெக்ட் நீங்க சொன்னமாதிரி உபதேசம் ஏற்க மறுக்கும்போது கொடுக்க மட்டும் வந்துரலாமா? ஹுஹும் கூடவே கூடாது…

  நம்பிக்கை பற்றி நீங்கள் வரைந்த வரிகள் மிக அற்புதம் வேதாம்மா… நம்பிக்கை என்றாலும் அது கூட அளவாகவே.. இது என்னால் முடியும் எனும்போது அதுவரை மட்டுமே அந்த எல்லையை மீறும் நம்பிக்கைகளை நான் வளர்த்துக்கொள்வதில்லை என்ற உங்கள் இந்த ஆணித்தரமான வரிகள் கண்டிப்பாக எல்லோருமே இதை கடைப்பிடித்தால் கண்டிப்பாக எல்லோருமே எல்லாமே சமம் என்ற நிலைக்கு தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்வார்கள்…

  முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை தான் மிக அழகாக சொல்லி இருக்கீங்க வேதாம்மா.. உடம்பில் இளமையும் திமிரும் சக்தியும் இருக்கிறது என்று என்னவேணாலும் செய்யலாம்.. ஆனால் எல்லாமே பழுக்கும் ஒரு காலத்தில்… உடல் தளர்ந்து முதுமை அடைந்து சக்தி குறையும்போது செய்த தீவினை எல்லாம் முழுமையாக எதிர்நிற்கும்.. அதை எதிர்க்கமுடியாமல் வலுவிழந்து தன் குற்றங்களை நினைத்து அழுவதைத் தவிர வேறு பரிகாரமும் கிடையாது…

  ஆஹா வாழ்வியல் பற்றி அருமையான கருத்துகள் வேதாம்மா..வெற்றிப்பெற்றவனுக்கு வாழ்க்கை எளிதாக, தோல்வி அடைந்தவனுக்கோ இருட்டில் தடுமாறி தடுமாறி எப்படியோ இலக்கை அடைந்துவிடுகிறான். தோல்வி என்ற அனுபவம் அவனுக்கு வெற்றியின் படியை முயற்சிக்கச்சொல்லி வழி காட்டுகிறது.. வெற்றி பெற்றவனோ மமதையில் தன் நிலை மறக்கிறான்…அதுவே அவனை குப்புற தள்ளிவிடவும் வாய்ப்பிருக்கிறது…

  ஆஹா ஆஹா கல்வி, அன்பு, பண்பு, அடக்கம், அமைதி, முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இது போதும் ஒருவனை தலைநிமிர்ந்து நிற்கச்செய்யவும் வெற்றியின் கனியை ருசிக்கவும்…. வாழ்க்கையில் சாதனைகளை நடத்தி முன்னேறவும்…

  அருமையான சிந்தனை பகிர்வு வேதாம்மா… எல்லோரையும் ஒரு நிமிடம் ஆழ்ந்து தன்னை புடம்போடச்செய்யும் உங்கள் இந்த படைப்பு…

  அன்பு நன்றிகள் வேதாம்மா பகிர்வுக்கு…

  மஞ்சு வரலையா இணையத்துக்கு, என்னாச்சு? என்ன உடல்நலம் சரியில்லையா? பிள்ளைக்கு மனசு சரியில்லையா? இப்படி மனம் பதறி துடித்து என் நலம் விசாரித்து எனக்கு மடல் அனுப்பி என் நலம் அறிந்ததுமே ஒரு தாய்மையின் கருணையுடனும் சந்தோஷத்துடனும் மகிழ்ந்த உங்கள் அன்பு மனதை நான் என் நட்பாய் அடைந்தமைக்கு இறைவனுக்கு ஒரு கோடி நன்றிகள் வேதாம்மா..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2012 @ 16:27:01

   அன்பின் மஞசும்மா! நீண்ட உங்கள் பின்னூட்டம் என் கண்களைக் கலங்க வைத்து விட்டது. மிக்க நன்றி, நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Kavialagan
  ஜன 03, 2012 @ 10:56:18

  Supper

  மறுமொழி

 5. jaghamani
  ஜன 03, 2012 @ 13:18:51

  மனப் பலமும் உளச் சுத்தமும் இருந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீயே சிறந்தவனாகிறாய். முயற்சியால் வெற்றிகளைக் குவிக்க முடியும்.

  அனைத்தும் அருமையான பயனுள்ள அனுபவ மொழிகள்..

  பகிர்வுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

  மறுமொழி

 6. ramesh
  ஜன 03, 2012 @ 14:01:12

  ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து தான் சகோதரி

  அருமையான கருத்துக்கள்

  மறுமொழி

 7. ரிஷபன்
  ஜன 03, 2012 @ 15:35:07

  மனசுக்கு இதமாய் அழுத்தமாய் வார்த்தை ஒத்தடங்கள்.
  புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  மறுமொழி

 8. rathnavelnatarajan
  ஜன 03, 2012 @ 16:04:37

  நல்ல கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 9. கலைநிலா
  ஜன 03, 2012 @ 17:55:44

  நல்ல எண்ணம், கடும் முயற்சி, நல்ல வார்த்தைகள் போதும் மிகவும் கம்பீரமானவனாக வாழ.
  உங்கள் சிந்தனை சிதறல் அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2012 @ 20:08:57

   மிக்க நன்றி சகோதரா, மிக்க மகிழ்ச்சி சகோதரா உங்கள் கருத்துடை வருகையாலும் கருத்திடலாலும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. SUJATHA
  ஜன 03, 2012 @ 19:27:12

  கம்பீரமாக வாழ கற்றுக்கொடுத்த உங்கள் சிந்தனை சாரல் அருமை…மனித வாழ்க்கையில் இடையிடையே குறுக்கிடும் வேதனைகள் கூட கற்றுக்கொடுக்கும் பாடங்கள்.எதற்கும் மனப்பலம் வாழ்க்கைக்கு வெற்றி. அழகாக எடுத்துக்கூறினீர்கள் ”கவிதாயினி வேதா”. வளரட்டும் உங்கள் பணி!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2012 @ 20:11:41

   சுஜாதா நன்கு உள்வாங்கி தாங்கள் இடும் கருத்துமிக மகிழ்வானது. கருத்தானது. மகிழ்வடைகிறேன். ஊக்கம் தருகிறீர்கள் நன்றி. நன்றி. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. பிரபுவின்
  ஜன 04, 2012 @ 04:51:54

  உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி.இறைவன் எப்பொழுதும் உங்களுக்கு மகிழ்ச்சியை வழங்கட்டும்.அனைத்து வளமும் பெருக வாழ்த்துகின்றேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 04, 2012 @ 06:05:35

   புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி பிரபு.அதே வாழ்த்தை உமக்கும் தெரிவித்துள்ளேன். இப்போதும் சொல்கிறேன் அனைத்து நலங்களும் செழிக்க வாழ்த்துகிறேன் நன்றி. நன்றி

   மறுமொழி

 12. பிரபுவின்
  ஜன 04, 2012 @ 04:56:12

  “நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் களன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!”

  பாரிய சுயநலவாதிகள்.

  மறுமொழி

 13. மாலதி
  ஜன 04, 2012 @ 09:22:02

  மிகசிறந்த சிந்தை சிதறல் உண்மையில் போற்ற வேண்டியதாகும் .தனக்கென சிந்திக்கிறவர்கள் நடுவே இப்படி மற்றவர்களுக்க சிந்திப்பது போற்றுதலுக்குரியது …

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 04, 2012 @ 16:01:24

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி. உங்கள் கருத்துடை வருகை, வரிகள் என்னை உற்சாகப் படுத்துகிறது. மகிழ்ச்சி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. வே.நடனசபாபதி
  ஜன 05, 2012 @ 02:12:41

  தங்களின் சிந்தனைச்சாரலில் நனைந்தேன், கருத்துகளை பருகி மகிழ்ந்தேன். பதிவின் முடிவில் முத்தாய்ப்பாய் ,
  ‘நல்ல எண்ணம், கடும் முயற்சி, நல்ல வார்த்தைகள் போதும் மிகவும் கம்பீரமானவனாக வாழ.’
  என்ற தங்களின் வைர வரிகள் அழுத்தமானவை. அர்த்தமானவை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 05, 2012 @ 04:42:56

   அன்பான சகோதரரே உங்கள் கருத்தான வருகைக்கும், அர்த்தமுள்ள கருத்துப் பதிவிற்கும் மிக மகிழ்ந்தேன். மிகுந்த நன்றியும் உரித்தாகுக. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. anbudanjayaramn
  ஜன 05, 2012 @ 17:20:07

  நல்ல சிந்தனையை தூண்டும்
  தெளிவான
  அழகான
  படைப்பு ..
  பகிர்விற்கு நன்றி

  மறுமொழி

 16. மகேந்திரன்
  ஜன 06, 2012 @ 10:33:19

  சோர்ந்துபோன உள்ளங்களுக்கு ஊக்கமளிக்கும்
  வார்த்தைகள் சகோதரி..
  நன்றிகள் பல.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 18:15:48

   சகோதரா! தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 17. பழனிவேல்
  ஜன 10, 2012 @ 05:23:20

  “நம்பிக்கை கூட எமது வசதி, சூழல், வாழ்வு என்பவற்றோடு கூடி இயங்க வேண்டியது ஆகிறது.”

  “திறமைக்கு ஏற்ப நம்பிக்கையை வளர்க்கலாம். அளவிற்கு மிஞ்சி நம்பிக்கையை வளர்ப்பது அசிங்கமாகவும் போகலாம்.”

  அனுபவ குறிப்புகள்…
  எங்களை வழிநடத்தும் வழிகாட்டி…
  மிக்க நன்றிகள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: