5. தொலைத்தவை எத்தனையோ!

தொலைத்தவை எத்தனையோ – 5

(இது ஒரு தொடர் பதிவு. )

 இது எனது 670 வது பதிவு.

திறமையறிந்து கதாநாயகன் வேடம் தரப்பட்டதை என் குழந்தை மனம் அறியவில்லை.
இங்கும் அவர்கள் (குவீனி- தாமரை) இணை பிரியாத நண்பர்கள் தானா? நான் தனியாகக் கோவலனா!… என்று என் மனம் இரகசியமாக விசும்பியது, புழுங்கியது. (நான் மௌனமாகத் திரிந்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கியது என் மனதை வெகுவாகப் புண்ணாக்கியுள்ளது – என்பது இப்போது புரிகிறது)


ஒத்திகைகள் நன்கு நடந்தது. எமது வரிகள் எல்லாம் மனப்பாடமும் செய்தாகிவிட்டது. சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது, நான் நாடகத்தில் பங்கு பெறமாட்டேன் என்று மறுக்கத் தொடங்கினேன்.


ஆசிரியை, அவரது தங்கை, பக்கத்து வீட்டு அண்ணை (அவரும் நித்திரை விழிக்க வர இருந்தவர். கெந்திப் பிடித்து விளையாடும் போது சூரப்புலியாகக் கெந்துவார். நீண்ட கால்கள்) எல்லோரும் ” ஏன் என்ன காரணம்?” என்று தூண்டித் துருவி கேட்டனர். நான் பயங்கர மௌனம். முடியாது முடியாது தான் பதில்.

ஆசிரியரின் தங்கை கேட்டா ” உமக்கு நல்ல பாத்திரம் தானே தந்துள்ளோம்” என்று. வரமாட்டேன் வரவில்லை என்பது தான் என் பதில். தாமரையின் அக்கா சுகி தான் தாமரைக்கு நடனம் பழக்கியது. அவ கூட தனது திறமையைக் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ” ஏனாம் பேபி வரமாட்டுதாம்? என்ன காரணம்?;” என்றாவாம்.


சிவராத்திரியும் முடிந்தது.
நித்திரை விழித்தார்களாம், நான் போகவில்லை. நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், (அண்ணனிடம்) நடக்கவில்லையா என்று விசாரித்தேன். ” பேபி முடியாது என்று விட்டதே” அதனால் நாடகம் நடக்கவில்லை என்று பக்கத்து வீட்டு அண்ணை கூறினார். அதைப் பற்றி எனக்கு சாதக, பாதக சிந்தனையே தோன்றவில்லை. செய்தியாகக் கேட்டது போல இருந்தது.
அவ்வளவு தான். இது என் மனக் கணனியில் ஒரு மறந்த சொத்தாகிவிட்டது.

பின்பு ஒரு காலத்தில் இவைகளை எண்ணிய போது ஏன் இப்படி நடந்தேன் என்றால்
என் சின்ன மனம் அவர்களை, கத்தியின்றி, இரத்தமின்றிப் பழி வாங்கியுள்ளது. யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை இது நானாக எடுத்த செயல். யாருடனும் எதுவும் பேசாது மௌனமாக நடத்திய போர். இது வீட்டாருக்கும் தெரிய வரவில்லை. நான் கூறவும் இல்லை. என்னுள் இருந்தவை, இன்று எழுத்தில்.

பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது! எப்படி இயங்குகிறது…..யாருக்குமே… தெரியாது… இது சரியா..பிழையா..எப்படி நடந்தது என்று…..


இன்று வரை இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் நானறிந்த வரை மிகக் கவனமாக அவர்கள் மனதைக் கையாளுகிறேன். பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை என்பதற்கு இது நல்ல உதாரண அனுபவம்.

வன்முறைகள் உலகில் மலிவதற்கும் நல்ல அடிப்படைக் காரணங்கள் உண்டு. காரணங்களைத் தேடிக் களையாது தண்டனையை நிறைவேற்றவே உலகு துடிக்கிறது.

எனது தமிழ் இந்தளவு வளர்ந்ததற்கு பாக்கியம் ஆசிரியர் அடிப்படைக் காரணமாகிறார். பிழை விட்டால் குட்டு, பென்சிலோடு காதைப் பிடித்து பல்லைக் கடித்தபடி திருகுவார். அழுததும் உண்டு.

ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் உங்களுக்கு என்ன மிருகமாகப் பிறக்க ஆசை என்று முழு வகுப்பையும் கேட்டார். திகைப்பு! என்ன பதில் கூறுவது!…மிருகங்களின் ராஜா சிங்கம், எனக்கு சிங்கமாகப் பிறக்க பிடிக்கும் என்றேன். ஏன் இப்படிக் கூறினேன்! எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இன்று கேட்டால் சிங்கம் பற்றிய எந்த எண்ணமும் ஆர்வமுமே இல்லை. மானாகப் பிறக்க ஆசை என்பேன், மான் அழகு என்பதால்.

அக் காலத்தில் வகுப்பில் நான் தான் முதல், இக்காலத்தில் தான் ஸ்கொலசிப் பரீட்சையிலும் சித்தி பெற்றதும், ஸ்ரான்லிக் கல்லூரிக்கு ஆறாம் வகுப்பிற்கு மாறியதும்.

முதுமை வந்து பாக்கியம் ஆசிரியர் காலமாகி விட்டார். நான் மூன்று நூல்கள் செய்தும் அவரிடம் ஒரு முன்னுரை பெற முடியவில்லை என்பது எனக்குப் பெரிய குறை தான்.

தாமரை – செல் விழுந்து இறந்து விட்டார். குவீனிக்கு நல்ல வாழ்வு இல்லை, பிள்ளைகள் இல்லை, உறவுகளோடு வாழ்கிறார். (இவர்கள் பெயரை மாற்றியுள்ளேன். இவர்கள் உறவு எப்போதுமே என்னுடன் இப்படித் தான்.)

படிக்கப் போனவீடு ஊரில் கல் வீடாகிக் காட்சி மாறிவிட்டது.  அன்று போல எதுவுமே இல்லை.

அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…

தொலைத்தவை எத்தனையோ!…..

துன்ப அகராதி துடைத்தழிக்க
நண்பனாக்கிய அழகுத் தமிழ்.

என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-1.2012.

In Anthimaalai web site;-   http://anthimaalai.blogspot.com/2012/01/5_23.html

                                

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வே.நடனசபாபதி
  ஜன 05, 2012 @ 05:59:08

  //தொலைத்தவை எத்தனையோ!….. //
  தொலைப்பது என்பது நடக்கக்கூடாததுதான். ஆனால் அது சில சமயம் நன்மையே தருகிறது. இல்லாவிட்டால் தாங்கள் தமிழை சரணடைந்திருக்கமாட்டீர்கள். நாங்களும் உங்களுடைய தமிழ் ஆளுமையை அறிந்திருக்கமாட்டோம். வாழ்த்துகள் !

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 05, 2012 @ 20:12:23

   சகோதரா முதல் வருகையாக வந்து கருத்திட்டீர்கள் மிக மகிழ்வும் நன்றியும்.தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Kavialagan
  ஜன 05, 2012 @ 12:44:07

  Valkaye tholanchidu

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 05, 2012 @ 20:14:55

   வாழ்வு தொலையவில்லை . அந்த நாள் அனுபவம் தொலைந்தது சகோதரா.வந்து கருத்து வரைந்தமைக்கு மிக ஆனந்தம். மிக நன்றி. எல்லாம் வல்ல பரம் பொருள் அருளட்டும்.

   மறுமொழி

 3. rathnavelnatarajan
  ஜன 06, 2012 @ 02:08:42

  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. வசந்தா சந்திரன்.
  ஜன 06, 2012 @ 07:31:56

  அந்த நேரத்தில் சிந்திக்க முடியாததை இப்போ தன்னும் சிந்திக்க முடிந்ததே அதே ஒரு பெரிய விஷயம் தான் . இன்று எத்தனைபேர் ஏறிய ஏணியை கூட தள்ளி விளுத்திவிட்டார்கள். (நினைக்க மறந்து விட்டார்கள்)
  நன்றி வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 07:52:15

   ஓம்! வசந்தா.இரவு 9 மணி போல மகள் இலண்டனிலிருந்து கதைத்தா. அம்மா உங்களது இந்த 2 பதிவுகளும் வாசித்தேன். உங்களுக்குள் உறைந்த அனுபவத்தை வெளிப்படையாக சிந்தத்துள்ளீர்கள். இது மிகவும் ஆரோக்கியமானது.

   சிலர் இதை வாசிக்கக் கூட விரும்ப மாட்டார்கள்.

   நீங்கள் உங்கள் உணர்வுகளை அங்கீகரித்து அதோடு வேலை செய்துள்ளீர்கள். நான் மிக மகிழ்கிறேன் என்றார்.

   இவர் இந்தப் படிப்பை (psycho dynamic counsiling/theraphy ) அங்கு முடித்துள்ளார். விரைவில் தமிழ் உலகிற்குள்ளும் வேலை செய்வார்.

   மிக்க மகிழ்வும், நன்றியும் வசந்தா உங்கள் கருத்திற்கு. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. மகேந்திரன்
  ஜன 06, 2012 @ 10:30:20

  தொலைக்க விரும்பாத
  தொலைத்தவைகளை நீங்கள் சொல்லும் விதமே
  அழகுதான் சகோதரி….

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 17:03:05

   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரா….உமது வருகைக்கும் கருத்திடலுக்கும். மீண்டும் சந்திப்போம் இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. SUJATHA
  ஜன 06, 2012 @ 20:35:05

  சிறுபிள்ளைத்தனமாக நாம் விடும் குற்றங்கள் காலம் கடந்தும்
  இன்று எமக்கு அது வழிகாட்டியுள்ளது. ஞாபகங்கள் தாலாட்டுபவை. இன்று அதில் ஒரு பாதி எமக்கு வழிகாட்டியுள்ளமை உண்மை. அதிலும் கற்றவை எமக்கு கொடுத்த
  பயன் அளவிடமுடியாதளவு வழி நடத்தியுள்ளன. இன்று நீங்கள்
  உலகம் பரந்து உங்கள் தமிழ்ப்பணியை வளர்த்த பெருமை வாழ்க்கையில் வழிகாட்டியாகவுள்ளது. வளர்க பணி!!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 06, 2012 @ 21:26:23

   அன்பான சுஜாதாவின் வருகையும் கருத்தான கருத்திடலும், ஆனந்தம் தருகிறது. ஊக்கமுடை வரிகளிற்கு மிக நன்றியும் உரித்தாகுக. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 07, 2012 @ 07:27:02

  Vimala Siva wrote ( from sidny)· Friends with வசந்தா சந்திரன் :-

  ‎//துன்ப அகராதி துடைத்தழிக்க
  நண்பனாக்கிய அழகுத் தமிழ்.

  என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
  கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.//

  தமிழும் எழுத்தும் தொலைத்தாலும் தொலையாத சொத்துக்கள்…..!!!..

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 07, 2012 @ 07:30:02

  Veha ELangathilakam ‘s reply :-
  Sister vimala siva! ..I pasted your comment in my blog…Thank you so much..well come to my blog….

  மறுமொழி

 9. பிரபுவின்
  ஜன 07, 2012 @ 07:57:15

  670 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

  “அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…

  தொலைத்தவை எத்தனையோ!…..”

  என்ன சொல்வது என்று தெரியவில்லை.

  வாழ்க்கை எத்தனை விசித்திரங்கள் நிறைந்தது.

  நன்றி சகோதரி உங்கள் பதிவிற்கு.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 07, 2012 @ 08:57:46

   பிரபு ! மக்களையும் புரிந்து கொள்ள முடியவில்லை. சில பதிவு இட்ட அன்றே கருத்துகள் பதியப்பட்டு விடும். சிலவற்றைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்களோ! என்று எண்ண வைக்கிறது.

   மனதில் எண்ணுவதைக் கூறுவது தானே பின்னூட்டம். அதில் நல்லதும், கெட்டதும் கலந்திருக்கும் தானே! சிலருக்கு பாதகமாக எழுதினால் பிடிக்காது.
   மின்னஞ்சலிலேயே வடிகட்டி அழிப்பார்கள்.

   அப்படிப் பட்டவர்களுக்கு எழுதவே தேவையில்லை.

   பிரபு நீர் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. jaghamani
  ஜன 08, 2012 @ 02:23:36

  பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது!

  670 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 08, 2012 @ 09:29:30

   அன்புச் சகோதரி உங்கள் வருகைக்கு, கருத்திடலிற்கு, மிக்க அகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 11. jaghamani
  ஜன 10, 2012 @ 13:02:14

  670 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

  மறுமொழி

 12. jayarajanpr
  ஜன 11, 2012 @ 06:34:39

  // பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை//

  At the outset my best wishes for your 670th post… Keep growing..
  Then what you said is realistic. If one ignores his child for any reason or showing partiality among his other children, the child will become wounded and start to feel inferiority complex.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: