222. அதிசயம்!…அபூர்வம்!…

 

திம்!…பூர்ம்!…

 

அறிவினுயர்வில் அன்பெனும்                     (பிறப்பு)
அணுகுமுறை அணியிடும்
அதிசய மானுட உயரமைப்பு
அதிசயம்! அபூர்வம்!

அமரத்துவ நிறைவளிக்கும்                          (உறவு)
அகங்காரமில்லாச் செறிவு
அமைதி தருமுறவு
அதிசயம்! அபூர்வம்!

அவனியில் கொய்யும்                                       (அனுபவம்)
அனுபவங்களால் நெய்யும்
அன்பு வலையின் அதிசய
அர்த்த மாயைகள் அபூர்வம்!

அகவிதழ் விரிக்கும்                                             (அன்புச் சுகந்தம்)
அன்பு மகரந்தத் துகள்கள்
அனுப்பும் இனிய  சுகந்தம்
அன்னியம் விலக்கல் அபூர்வம்!

அன்பொரு வியாபாரமாய்                              (போலி அன்பு)
அர்த்தமற்ற அணுப்பொருளாய்
அர்த்தம் காண்பதிலில்லை
அதிசயம்! அபூர்வம்!

அன்பை அருவியாய்க் கொட்டி                 (நட்சத்திரமாகுதல்)
அகிலத்தோர் வரிசையில்
அடிச்சுவடாய், நட்சத்திரமாதல்
அதிசயம்! அபூர்வம்!

இத்தனையும் உணர்ந்து                                  (வாழ்தல்)
உத்தமமாய் வாழ்தல்
இகத்தினிலே இனிய
அதிசயம்! அபூர்வம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2005.

(இக் கவிதை இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது)

 

                                     

 

 

Advertisements

28 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வே.நடனசபாபதி
  ஜன 08, 2012 @ 11:19:24

  //இத்தனையும் உணர்ந்து
  உத்தமமாய் வாழ்தல்
  இகத்தினிலே இனிய
  அதிசயம்! அபூர்வம்!//

  அருமையான கருத்து வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 08, 2012 @ 14:40:47

   உங்கள் அன்பான வருகையும் கருத்தான கருத்தும் என்னை மகிழ்வித்தது. மிகுந்த நன்றி சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. jaghamani
  ஜன 08, 2012 @ 11:25:26

  அகவிதழ் விரிக்கும்
  அன்பு மகரந்தத் துகள்கள்
  அனுப்பும் இனிய சுகந்தம்
  அன்னியம் விலக்கல் அபூர்வம்!

  அன்புச் சுகந்தம் விகசிக்கும் அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 08, 2012 @ 14:47:19

   கருத்தான அணுகுமுறையில் உங்கள் மன இதழ் விரிந்து கருத்து மகரந்தம் வீசி என் கருத்தைக் கவர்ந்தீர்கள். மிக்க ஆனந்தம். மனம் நிறைந்த நன்றியைத் தூவுகிறேன். இறை அருள் சித்திக்கட்டும்.

   மறுமொழி

 3. Peruntha Pia Ramalingam
  ஜன 08, 2012 @ 11:38:23

  aahaa.. your poem is so good

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 08, 2012 @ 15:06:25

   OH! so god (ஓ! மிக நல்லது.)
   Du kan lide den.(இது உங்களுக்குப் பிடித்துள்ளது)
   Jeg er glad (நான் மிக மகிழ்வடைகிறேன்)..
   manga tak. (நன்றிகள் பல)
   God bless you

   மறுமொழி

 4. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஜன 08, 2012 @ 12:26:21

  அழகான கவிதை ஒன்று!!!
  மிகவும் அற்புதமாக இருக்கிறதே!!!

  வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 08, 2012 @ 14:49:23

   ஆச்சிரியப் படுகிறீர்களா!…மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், வரியிடலிற்கும். தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. rathnavelnatarajan
  ஜன 08, 2012 @ 13:28:53

  அபூர்வமான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. ramani
  ஜன 08, 2012 @ 15:31:27

  இப்படி அருமையாக கவிதை எழுத முனைவதும்
  முயன்றாலும் அது அமைவதும் அபூர்வமே
  மனம் கவர்ந்த பதிவு
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 09, 2012 @ 08:04:56

   உண்மை சகோதரா! எல்லாக் கவிதைகளும் பலர் மெச்ச அமைவதில்லைத் தான் அதுவும் அதிசயம், அபூர்வமே. உங்கள் அன்பு வருகைக்கும் கருத்திடலிற்கும் மிக மகிழ்வும் நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 7. SUJATHA
  ஜன 08, 2012 @ 16:51:38

  அதிசயம்…அபூர்வம் கவியோடு இணைந்த காட்சிகளும் அருமை..
  அன்பை அருவியாய்க் கொட்டி
  அகிலத்தோர் வரிசையில்
  அடிச்சுவடாய், நட்சத்திரமாதல்
  அதிசயம்! அபூர்வம்!

  அழகான வரிகள் இவை. என்னவாய் மலர்ந்த கவி. தொடரட்டும் பணிகள்!!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 09, 2012 @ 08:08:43

   சில ஆக்கங்களிற்கு நேயர்களின் கருத்துகள் குவிவதும், சிலவற்றை அவர்கள் திரும்பிக் கூட பார்க்காமல் இருப்பதும் கூட அதிசயம், அபூர்வமே! இல்லையா சுஜாதா! மிக மகிழ்ச்சி சுஜாதா உமது இனிய வருகைக்கும், வரிகளிற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. subburathinam
  ஜன 09, 2012 @ 03:15:03

  அன்பில் ஒரு துளியெடுத்து
  ஆர்வத்துடனே நிறம் கலந்து
  இனிக்கும் சொற்கள் நடுவினிலே
  இதமாய் படைக்கும் ஈசா நின்
  உலகம் எத்துணை சிறப்புடைத்து !!

  கவிதா உங்கள் கவிதைக்கு
  கணத்தில் மதிப்பு இதுவென்றால்

  ஒரு மார்க அல்ல, இரு மார்க் அல்ல, !!
  டென் மார்க் அளித்தே மன மகிழ்வோம்.

  சுப்பு ரத்தினம்.
  http;//vazhvuneri blogspot.com

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 09, 2012 @ 08:17:31

   அன்பின் ஐயா(சகோதரா) அருமையாக, கவித்துவமாக வரியிட்டுள்ளீர்கள். அதற்கு முன்னர் உங்கள வலைக்குச் சென்றேன் பாடல்கள், கீர்த்தனங்களாக உள்ளது. நிச்சயம் மாலையில் இதைக் கேட்பேன். இப்போது நேரமின்றி உள்ளது. மிக மகிழ்வடைந்தேன் .இறை ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும். அதற்கு முன் உங்கள் வலை இணைப்பை எனது முகநூலில் இட்டு விட்டுச் செல்கிறேன். நன்றி நன்றி.

   மறுமொழி

 9. Tharshi
  ஜன 09, 2012 @ 06:40:54

  பிறப்பு, உறவு, அனுபவம்,அந்நியம் விலக்கல்…நட்சத்திரமாதல்

  அதிசயம் தான் அபூர்வம்தான்

  அகவிதழ் விரிக்கும்
  அன்பு மகரந்தத் துகள்கள்
  அனுப்பும் இனிய சுகந்தம்
  அன்னியம் விலக்கல் அபூர்வம்

  அழகு வரிகள், அழகான கவிதை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 09, 2012 @ 08:24:17

   இந்த அதிசயங்கள், அபூர்வங்களை நாம் உணராது வாழ்வை வீணாக்குகிறோம் அல்லவா! போட்டி , பொறாமை இன்னும் பல…மிக்க மகிழ்ச்சி தர்சி. உமது கருத்தும், வருகையும் மகிழ்வுடைத்து. இறை அருள் கிட்டட்டும். நன்றி…நன்றி….

   மறுமொழி

 10. RAVI
  ஜன 09, 2012 @ 22:34:24

  அருமை! அருமை! மிக அருமை!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 10, 2012 @ 08:12:40

   சகோதரா! புரியவில்லை சிவரவி…(யார் என்று).மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் தங்கள் வருகைக்கு. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. பழனிவேல்
  ஜன 10, 2012 @ 05:13:39

  அருமை… அதிலும் கோலம் போடும் புகைப்படம் மிக அருமை.

  “அன்பொரு வியாபாரமாய்
  அர்த்தமற்ற அணுப்பொருளாய்
  அர்த்தம் காண்பதிலில்லை
  அதிசயம்! அபூர்வம்!”

  உண்மை தான்…
  இன்று அன்பு-பொருளாய் மாற்றப்பட்டு வியாபாரமாய் விற்க்கப்படுகிறது…
  அந்தோ பரிதாபம்…

  மறுமொழி

 12. கலைநிலா
  ஜன 11, 2012 @ 08:20:19

  அன்பொரு வியாபாரமாய்
  அர்த்தமற்ற அணுப்பொருளாய்
  அர்த்தம் காண்பதிலில்லை
  அர்த்தமான வரிகள் .பாராட்டுக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 11:22:04

   மிக்க நன்றி சகோதரா தங்கள் இனிய வருகை கண்டு. தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. மகேந்திரன்
  ஜன 11, 2012 @ 09:00:59

  //அன்பொரு வியாபாரமாய்
  அர்த்தமற்ற அணுப்பொருளாய்
  அர்த்தம் காண்பதிலில்லை
  அதிசயம்! அபூர்வம்!////

  எவ்வளவு அழகாய் சொல்லிடீங்க சகோதரி..
  அன்பென்ன வியாபாரப் பொருளா…
  நீ கொடுத்தால் நான் திரும்பக் கொடுப்பேன் எனக்
  கூறுவதற்கு…

  இந்த வரிகளை திரும்பப் திரும்ப வாசித்தேன்.
  என் மனதில் சிக்கென்று ஒட்டிக்கொண்டது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 11:23:41

   சகோதரா மிக்க நன்றி. தங்கள் இனிய வருகை, ரசனை கண்டு. தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. பிரபுவின்
  ஜன 11, 2012 @ 09:18:17

  “அகவிதழ் விரிக்கும் (அன்புச் சுகந்தம்)
  அன்பு மகரந்தத் துகள்கள்
  அனுப்பும் இனிய சுகந்தம்
  அன்னியம் விலக்கல் அபூர்வம்!

  அன்பொரு வியாபாரமாய் (போலி அன்பு)
  அர்த்தமற்ற அணுப்பொருளாய்
  அர்த்தம் காண்பதிலில்லை
  அதிசயம்! அபூர்வம்!”

  அழகான கவிதை.அருமையான வரிகள்.படங்களும் மிகவும் அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 11:26:40

   பிரபு மிக்க மிக்க மகிழ்ச்சி உமது இனிய வருகை, ரசனை கண்டு. உமது கருத்திடலிற்கு மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: