20. வேண்டிய நேரம் கொடுங்கள்.

வேண்டிய நேரம் கொடுங்கள்.

(30-4.2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

பிள்ளைகள் பல விதம். உணவு விடயத்தில் சில பிள்ளைகள் அடம் பிடிப்பவராகவோ, வித்தியாசமானவராகவோ, பிடிவாதமானவராகவோ இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா!
அப்படி அல்ல. அவர்களுக்கு வித்தியாசமான உணவைப் பழக்கிக் கொள்ள நல்ல நேரம் தேவை.

நாம் ஓரிரு தடவைகள் புது உணவைக் காட்டி விட்டு, பிள்ளைக்கு இது பிடிக்கவில்லை என்கிறோம் மிக எளிதாக.

ஒரு அமெரிக்க ஆய்வின்படி  ஒரு புது உணவை ஒரு குழந்தைக்கு பத்துத் தடவைகள் அறிமுகப் படுத்த வேண்டுமெனக் கண்டுள்ளனர்.

118 குடும்பங்களை ஒரு வருடமாக அவதானித்துக் கண்டது யாதெனில், இவர்கள் புது உணவை ஆக இரண்டரைத் தடைவை மட்டுமே அறிமுகப் படுத்துகிறார்களாம். இரண்டரைத் தடைவ மட்டுமே பரிமாறுகிறார்களாம்.

ஆகையால் பத்துத் தடவையளவில் புது உணவைப் பரிமாறுங்களேன்! வெற்றியடைவீர்களா என்று பாருங்களேன். உங்களுக்கு நல்லதிஷ்டம் கிடைக்கட்டும்.

 

(கீழ் வரும் ஆக்கம் 11-10-2005ல் ஒலிபரப்பானது.)

 

சுத்தமாக.. மெத்தமும்… புதிதாக்கலாம்

சித்தம் புத்துயிர்க்க
நித்தம் சுத்தம்
உத்தம சொத்தாகும்.
சுத்தம் சுகம் தரும்

தத்தம் பிள்ளைகள் மொத்த விளையாட்டுப் பொருட்களையும் வாயால் சுவைப்பார்கள், அன்புடன் முத்தமிடுவார்கள். சொத்தான அவர்கள் ஆசைப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கம் உங்களிற்கு இருக்கிறதா?

இரு வாரத்திற்கு ஒரு முறையோ, அன்றி அடிக்கடி இவைகளைச் சுத்தம் செய்தல் அவசியமானதாகிறது. நோயுற்ற போது, கிருமிகள் படிந்து, அவை மீண்டும் மீண்டும் தொல்லைகள் தராது இருக்கவும், மொத்தமான சுகாதாரத்திற்கும் இவற்றைக் கழுவுதல் மிகப்பயனுடைத்து.

லீகோ கட்டைகளைப் பாத்திரங்கள் கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம். பூனை நாய்க் குட்டிப் பஞ்சுப் பொதிப் பொம்மைகளைத் துணி கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம்.

தண்ணீரில் விளையாட எந்தப் பிள்ளைக்கும் கொள்ளை ஆசை தான். தண்ணீரில் விளையாட ஆசையுள்ள பிள்ளைகளைப் பெரிய வாயகன்ற கிண்ணத்தில் சிறிது சவர்க்காரமிட்ட நீரில் விளையாட்டுப் பொருட்களைப் போட்டு விருப்பப் பிரகாரம் அவைகளைக் கழுவி விளையாட விடலாம்.

விளையாடி முடிய நிலத்தையும், பிள்ளையையும் துடைத்து விடலாம். விரும்பினால் பொருட்களை நீங்களும் இறுதியில் கழுவலாம், அல்லது பிள்ளைகளிடமே தண்ணீரை மாற்றி உதவி செய்து அவர்களையே துடைக்கவும் விடலாம்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள்.
குழந்தைகளுக்கு இது விளையாட்டாகவும், பொருட்கள் சுத்தமானதாகவும் ஆகிறது.
முயன்று பாருங்களேன்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2005.

                                

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jaghamani
  ஜன 12, 2012 @ 11:25:16

  சுத்தமாக.. மெத்தமும்… புதிதாக்கலாம்
  சித்தம் புத்துயிர்க்க
  நித்தம் சுத்தம்
  உத்தம சொத்தாகும்.
  சுத்தம் சுகம் தரும்

  அருமையான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 12, 2012 @ 17:53:45

   மிக்க நன்றி சகோதரி. உங்கள் இனிய வரவு, கருத்திடல் என்னைக் கவருகிறது. அன்பு நன்றிகள். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Dr.M.K.Muruganandan
  ஜன 12, 2012 @ 16:47:14

  நல்ல விடயம்.
  குழந்தைகளுக்கு புதிதாக ஒரு உணவை அறிமுகப்படுத்தும்போது ஒரு சில தடவைகள் பிள்ளை துப்பினாலும் மீண்டும் வேறுதருணங்களில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதை தாய்மாருக்கு பலகாலமாக அறிவுறுத்துகிறோம்.

  மறுமொழி

 3. rathnavelnatarajan
  ஜன 13, 2012 @ 00:40:59

  நல்ல பதிவு.
  அருமையான கவிதை.
  எங்களது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 13, 2012 @ 17:17:13

   உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள். மிக்க நன்றி ஐயா உங்கள் கருத்திடலிற்கும், வருகைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. மகேந்திரன்
  ஜன 13, 2012 @ 06:12:37

  விளையாட்டையும்
  சுத்தத்தையும்
  உடல் ஆரோக்கியத்தையும் ஒருங்கே இணைத்து
  அழகாய் ஒரு பதிவு சகோதரி.
  அறிவுறுத்தலுக்கு நன்றிகள் பல.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 13, 2012 @ 08:20:43

   அன்புச் சகோதரா உமது நல்ல வருகை நல்ல மகிழ்ச்சி தந்தது. உமது கருத்து அதை விட மகிழ்வு. மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. வே.நடனசபாபதி
  ஜன 13, 2012 @ 08:28:57

  உண்மைதான் சகோதரி. விளையாட்டாக பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் நல்ல பழக்கங்கள் ‘பசுமரத்தாணி’ அவர்களின் மனதில் பதிந்து பின்னால் அதையே கடைப்பிடிப்பார்கள். நல்ல பதிவு. பொங்கல் வாழ்த்துக்களுடன்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 13, 2012 @ 17:18:47

   சகோதரா! உங்களுக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துகள். மிக்க நன்றி சகோதரா உங்கள் கருத்திடலிற்கும், வருகைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramani
  ஜன 13, 2012 @ 21:10:33

  அனைவரும் அவசியம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய
  கடைபிடிக்கவேண்டிய அருமையான கருத்தைச் சொல்லிப் போகும்
  அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  ம்னம் கனிந்த பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 7. பழனிவேல்
  ஜன 19, 2012 @ 06:42:15

  “பிள்ளைகளிடமே தண்ணீரை மாற்றி உதவி செய்து அவர்களையே துடைக்கவும் விடலாம். குழந்தைகளுக்கு இது விளையாட்டாகவும், பொருட்கள் சுத்தமானதாகவும் ஆகிறது.”

  நல்ல யோசனை…
  சுத்தம் சுகம் தரும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: