224. தைத் திங்கள்.

 

தைத் திங்கள்.

 

தைத்திங்கள் வையகத்தில் மறுபடியாக
வைத்தது புதிய காலடியாக.
கைராசிச் சங்கதிகள் தொகையாக
கையேந்தி வரட்டும் எளிதாக.

நைந்தாலும் நப்பாசையில் எதிர்பார்க்கும்
தையிது அதிட்டத் திங்களென்றும்
கைவரிசை காட்டி வந்திடட்டும்!
கை குலுக்கட்டும் நம்பிக்கையுடனும்.

ட்டில்லா மகிழ்ச்சித் தைப்பொங்கல்!
எட்டியது புத்தரிசிக்கு – நன்றியுணர்விற்கு!
பட்டிப் பொங்கல் உதவும் ஆவினத்திற்கு
கட்டுக் கரும்புடன் சூரியப்படையலாக!

க்கும் சிறகுடன் சிலோனை நாடி
உறவெனும் தேசிய கீதம் பாடி
சிறக்கப் பொங்குவோம் ஒருநாளில்
சிரிக்கப் பொங்குவோம் நம் அரண்மனைகளில்.

பொங்கலோ பொங்கலென எல்லோருக்கும்
பொங்கட்டும் இன்பங்களும் இல்லத்தில்!
பொங்கல் வாழ்த்துகள் ஏந்துங்கள்!
பொங்கலோ பொங்கலென வாழ்த்துகிறோம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(1-2-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலையில்
14-1-2006ல் இலண்டன் தமிழ் வானொலியில்
என்னால் வாசிக்கப் பட்டது.)

another pongal  poem in anthimaalai web site:- http://anthimaalai.blogspot.com/2012/01/blog-post_3662.html#comment-form

related poem (pongal)
https://kovaikkavi.wordpress.com/2011/01/13/202-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%80%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%ae/

https://kovaikkavi.wordpress.com/2013/01/13/261-%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

>

 

                                   

 

 

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. மகேந்திரன்
  ஜன 14, 2012 @ 06:11:10

  பொங்கிவரும் பொங்கல் போல்
  பொங்கட்டும் புத்துணர்ச்சி
  தங்கட்டும் மனமகிழ்ச்சி.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 10:40:23

   நன்றியுடன் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வருகைக்கு நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  ஜன 14, 2012 @ 07:39:21

  படங்களுடன் தங்கள் பதிவு
  எம்முள் மகிழ்ச்சியினை பொங்கவைத்துப் போகிறது
  பொங்கல் சிறப்புக் கவிதை மிக மிக சிறப்பு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 10:48:59

   சகோதரா நன்றியுடன் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வருகைக்கு நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. மலைமகள்
  ஜன 14, 2012 @ 09:11:28

  மிகவும் அருமையான பொங்கல் கவிதைகலும் ,வாழ்த்துக்களும் சகோதரி..தங்களுடைய படைப்புக்களை அன்று தொடக்கம் இன்று வரை நான் கேட்டும், படித்தும் வருகிறேன்..உங்கள் படைப்புக்கள் தொட இறைவனை வேண்டி வாழ்த்துகின்றேன்..

  துன்பத் துயர் விலகி
  தொடங்கும் இன் நன்நாளில்
  இன்பம் மட்டும் இதயம் மலர
  இச்சிறியவளின் வாழ்த்துக்கள்.
  என்றும் அன்புடன்
  மலைமகள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 09:25:48

   மிக மகிழ்ச்சி சகோதரி. உங்கள் உடன் கருத்திற்கு மனம் மிக மகிழ்வடைந்தேன். நன்றி. பொங்கல் நல் வாழ்த்தகள். உங்கள் கவிதைப் புத்தகம் மின்னூலாக வாசித்து மகிழ்வடைந்னே; மிக சிறப்பாக இருந்ததை இங்கு தெரிவிக்கிறேன் எங்கள்(உங்கள்) நண்பா எனக்கு மின்னூலாக அனுப்பி வைத்தார். ( அவருக்கு மிக்க நன்றி. என்ன ஆச்சரியமா!).இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. rathnavelnatarajan
  ஜன 14, 2012 @ 09:58:50

  எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 10:49:53

   நன்றி ஐயா! நன்றியுடன் தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். வருகைக்கு நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. வித்யாசாகர்
  ஜன 14, 2012 @ 11:56:53

  பெருமைக்குரிய உழைப்பு சுமக்கும் உங்களின் படைப்புக்களிற்கு மிக்க நன்றியும், மனதிற்கு நிறைந்த வாழ்த்தும் அன்பும் உரித்தாகட்டும் சகோதரி. வீட்டில் சகோதரர் அவர்களுக்கும் எம் வாழ்த்தினைச் சொல்லிவிடுங்கள் சகோதரி. வணக்கம் இருவருக்கும் உரித்தாகட்டும்..

  வித்யாசாகர்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 16:39:12

   சகோதரர் வித்தியாசாகர் உங்கள் வரவிற்கும் கருத்திடலிற்கும் வாழ்த்திற்கும் மிக மகிழ்வும், மிக்க நன்றியும். உங்களோடு உங்கள் குடும்பத்தாருக்கும் எமது பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. SUJATHA
  ஜன 14, 2012 @ 12:12:00

  பகலோனை கரம் கூப்பி
  உழவுத்தொழிலுக்கு வந்தனை கொடுத்து
  உழைக்கும் கரங்கள் இவர்களிற்கு கரம் கொடுத்து
  பொங்கலோ பொங்கலிட்டு இல்லறம் பொங்கிவர
  இனிது சுவைத்துண்டு மகிழ்ந்து சிரித்திடுவோம்!!!!!
  இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் ”கவிதாயினி வேதா”
  கவியோடு கவி சுவைத்து காட்சிப்படங்களோடு எடுத்துரைத்த
  கவி அருமை!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 16:41:02

   அன்பின் சுஜாதா! உமது வரவிற்கும் கருத்திடலிற்கும் வாழ்த்திற்கும் மிக மகிழ்வும், மிக்க நன்றியும். பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. umah
  ஜன 14, 2012 @ 13:10:25

  என் அன்பான இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 16:43:27

   உமது கருத்திடலும் வரவும் மிக்க மகிழ்வும், நன்றியும் தருகிறது உமா. உமக்கும் குடும்பத்தாருக்கும் எமது பொங்கல் வாழ்த்துகளும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. ரெவெரி
  ஜன 14, 2012 @ 15:20:45

  நல்லாயிருந்தது…

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 14, 2012 @ 16:47:33

   பொங்கல் வாழ்த்திற்கும் வரவிற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும். நல் வாழ்த்துகள். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 9. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  ஜன 14, 2012 @ 17:36:32

  பொங்கலோ பொங்கலென எல்லோருக்கும்
  பொங்கட்டும் இன்பங்களும் இல்லத்தில்!
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்……………

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 15, 2012 @ 09:45:36

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இன்பப் பொங்கல் அமையட்டும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Sothi Sellathurai
  ஜன 15, 2012 @ 00:16:44

  உங்கள் வரிகள் உங்கள் உள்ளக் கிடக்கையைத் தெள்ளத் தெளிவாகப் படம் பிடிக்கின்றது. இந்த ஆண்டிலாவது எமக்கு விடிவு வருமோ என்ற நப்பாசையுடன் புத்தாண்டையும் புதுப்பொங்கலையும் வரவேற்போம். சிலோன் என்றசொல் உள்நுழைந்தது எவ்வாறு.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 15, 2012 @ 09:50:16

   ”..சிலோன் என்றசொல் உள்நுழைந்தது எவ்வாறு.!..”

   ஆதிப் பெயர் அது தானே! (சிலோன், சைலோன்). பின்னர் காரணப் பெயர்களாக வந்தவை தானே மற்றவை. அதனால் அதைப் பாவித்தேன். மிக நன்றி வரவிற்கும், கருத்திடலிற்கும்.ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. b.ganesh
  ஜன 15, 2012 @ 05:08:49

  கவிதையும் படங்களும் அழகு. துன்பங்கள் விலகி மகிழ்ச்சி மட்டுமே மனதில் நிறைய என் உவப்பான இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 15, 2012 @ 10:06:23

   மிக்க நன்றி சகோதரா உங்கள் இனிய வருகைக்கும் வாழ்த்து வரிகளுக்கும். உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  ஜன 15, 2012 @ 12:17:06

  படங்களும் அருமை. தங்கள் கவிதைகளும் அருமை. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: