21. சிறு துரும்பும்..

 

சிறு துரும்பும்..

(13-8-2005ல் இலண்டன் தமிழ் வானெலியின் புதன் இலக்கிய நேரத்திற்காக எழுதி ஒலிபரப்பாகியது)

 (இது எனது 675 வது ஆக்கம்.)

 

” சிறு துரும்பும் பல் குத்த உதவும்” இவ்வார்த்தைத் தொடர் அஃறிணையான  உயிரற்ற பொருட்களுக்காகச் சொல்லப்பட்டது போன்று  மயக்கம் தந்தாலும், உயர் திணையான மனித சமுதாயத்திற்கும் பொருத்தமான வாக்கியமாகும்.

சிறு ஆணி, மூடி, கயிற்றுத் துண்டைக் கூடப் பத்திரப் படுத்தினால் ஏதோ ஒரு அவசர தேவைக்கு மிக அபூர்வமாக அது உதவுகிறது. இதனால் பாவனைக்குரிய எப் பொருளையும் வீசாது பத்திரப் படுத்த வேண்டும் எனும் கருத்துடன் கூறப்பட்ட வசனம் இதுவென்றும் கருதலாம்.

உலகில் ஒருவரை யொருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும். அலட்சியம் செய்தலெனும் அருவருப்பான குணத்தை விலக்கி வாழ்ந்திட வேண்டும்.

மனிதர்கள் துண்டு துண்டாகப் பிளவு பட்டுத் தனித் தனித் தீவுகளாக வாழ்ந்திடல் கொடுமையானது. சேர்ந்து வாழ்ந்திடல் பல வகையில் நன்மையாகிறது.

 

இதற்கு எல்லோரும் பெரிதாக விரும்புகின்ற கூட்டுறவு செழித்து வளர்ந்திட வேண்டும். இந்தப் பொது நன்மை உலகில் செழித்து வளர்ந்திட, மனிதம் வாழ்ந்திட நல்ல சிந்தனை ஊற்றாக, காயம் படாத சிந்தனையூற்றாக, ஊறுபடாத எண்ணக் கருத்தாக முன்னோர் மிகவும் ஆழமாகச் சிந்தித்துக் கூறிய வாக்கியமே

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

இவ்வார்த்தையை மதித்து வாழ்ந்திட்டால் மனிதர்கள் பல நன்மைகள் பெற்றிடலாம்.இதை மதிக்காதவர்கள் இவ் வார்த்தையைத் தூக்கி வீசலாம். ஒதுக்கியும் கொள்ளலாம்.

இன்றைய நவீன வாழ் முறைப்படி நன்மை தீமைகளை விளக்கிக் கூறும் போது, தெரிவு என்பதை சுயமாக எடுத்தல் வாழ்வாகிறது.

நான் உயர்திணை. மனிதப் பெறுமதியை இதன் மூலம் கையாண்டு கொண்டேன்.

 

அருவருப்பான அலட்சியம் விலக்க
பெருவிருப்பான கூட்டுறவு செழிக்க
கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
ஊறுபடாத சிந்தனை ஊற்றாய்
வேறுபாடின்றி விதைத்த வார்த்தை
சிறு துரும்பும் பல குத்த உதவும்.
அதைக் குறுக்காக கிழித்தும் வீசலாம்
கிறுக்குடன் தீயும் வைக்கலாம்.

பிடித்தவர்கள் முன்னதையும், பிடிக்காதவர்கள் பின்னதையும் கொள்ளலாம்.

தெரிவு என்பது அவரவர் சுயப் பிரிவு.

விதித்து வந்த பிறவியோ
உதித்தாய் உயர் மனிதனாக
மிதித்து வாழாது மனிதம்
மதித்து வாழ்! தர்மம்
பதித்து வாழ் நெஞ்சில்!
துதிக்கும் உலகு உன்னை.
 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-8-2005.

 

                                    
 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  ஜன 17, 2012 @ 06:31:21

  மதித்து வாழ்-தர்மம் நெஞ்சில் பதித்து வாழ். அருமைங்க வேதா. நல்ல கட்டுரை. மிக ரசித்தேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 17, 2012 @ 17:15:21

   உங்கள் வருகையும், கருத்திடலுக்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரர் கணேஷ் அவர்களே. முதல் வரியைத் தந்துள்ளீர்கள். மிக நன்றி நன்றி இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ரெவெரி
  ஜன 17, 2012 @ 13:58:01

  பிடித்தவர்கள் முன்னதையும், பிடிக்காதவர்கள் பின்னதையும் கொள்ளலாம்….//

  மிதித்து வாழாது மனிதம்
  மதித்து வாழ்//

  சரியாக சொன்னீர்கள் சகோதரி…

  தர்மம்
  பதித்து வாழ் நெஞ்சில்!
  துதிக்கும் உலகு உன்னை//

  எல்லாருக்கும் பொருந்தும் வரிகள்…மறந்து போனவற்றை நினைவு படுத்துவதே உங்கள் வாடிக்கை…தொடருங்கள்…என் வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 17, 2012 @ 17:18:23

   அன்பின் சகோதரர் ரெவெரி உங்கள் வருகையும், கருத்திடலுக்கும் மிக நன்றியும் மகிழ்ச்சியும். மிக நீண்ட கருத்துத் தந்துள்ளீர்கள். நன்றி நன்றி இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. mathisutha
  ஜன 17, 2012 @ 15:10:56

  ஒற்றுமையின் அவசியத்தை திறம்பட உரைத்துள்ளீர்கள் நன்றி அம்மா..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 17, 2012 @ 17:20:28

   மதிசுதா உங்கள் வலைப்பக்கம் நீண்ட நாட்களாக வரவேயில்லை. குற்ற உணர்வாக உள்ளது. தாங்கள் இங்கு வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்வும், நன்றியும்.. ஆண்டவன்ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Karthik
  ஜன 17, 2012 @ 15:59:00

  good one

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 17, 2012 @ 18:12:12

  ம. வேணுதன் wrote:-
  வாசித்தேன்,
  காலத்திற்கவசியமான பதிவு. பகிர்வுக்கு நன்றி.
  (இதுபோன்று தங்களின் குரலில் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சிகளை ஒலிவடிவிலும் ஏன் இணைக்க கூடாது..?? )

  .Vetha ELangathilakam replied:-
  மிக்க மகிழ்வும் நன்றியும் வேணுதன். கவிதை கேளுங்கள் எனும் தவைப்பில 3 ஆக்கங்கள் மட்டும் வலையில் எனது குரலில் உள்ளது….

  மறுமொழி

 6. கலைநிலா
  ஜன 17, 2012 @ 19:01:51

  அருவருப்பான அலட்சியம் விலக்க
  பெருவிருப்பான கூட்டுறவு செழிக்க
  கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
  அழகான வாத்தைகள்…675 உங்கள் பதிப்பு பாராட்டவேண்டிய ஒன்று தொடருங்கள் இன்னும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 17, 2012 @ 20:00:04

   கலைநிலா நீங்கள் இங்கு வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றியும், மகிழ்ச்சியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

  • amu
   ஜன 27, 2012 @ 15:07:52

   nice keep it up…….

   மறுமொழி

   • கோவை கவி
    ஜன 27, 2012 @ 16:52:43

    அன்புறவே (amu)
    தாங்கள் யாரென்று புரியவில்லையே. மின்னஞ்சல் தருண் என்று உள்ளது. யாராக இருந்தாலும் வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றி. ஆண்டவள் ஆசி கிட்டட்டும்.

 7. rathnavelnatarajan
  ஜன 18, 2012 @ 10:40:18

  அருமையான கருத்துகள்.
  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. சக்தி சக்திதாசன்
  ஜன 18, 2012 @ 15:34:09

  அன்பின் சகோதரி வேதா,
  அருமையான க்ருத்துக்களை அழகுறத் தமிழில் பா கொண்டு விளக்கி பாங்குறத் தந்துள்ளீர்கள். அன்பான வாழ்த்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 9. Tharshi
  ஜன 19, 2012 @ 05:58:09

  அழகாக கருத்து …
  எப்போதும் போலவே அழகிய வரிகள்.
  வாழ்த்துகள்

  மறுமொழி

 10. பழனிவேல்
  ஜன 19, 2012 @ 06:36:55

  “மனிதம் மதித்து வாழ்!”

  அழகிய வரிகள்…
  மனிதம் போற்றும் மானிடராய் வாழ்வோம்

  மறுமொழி

 11. Angelin
  ஜன 24, 2012 @ 21:42:33

  //சிறு துரும்பும் பல குத்த உதவும்.
  அதைக் குறுக்காக கிழித்தும் வீசலாம்
  கிறுக்குடன் தீயும் வைக்கலாம்.//

  மிக சரியாக சொன்னீர்கள் அக்கா.

  மனிதம் போற்றி நடப்போரே மானிடர் .

  அருமையான பகிர்வு

  மறுமொழி

 12. ranjani135
  ஜன 17, 2013 @ 05:29:36

  சகோதரி வேதா,
  உங்களின் இந்தப் பதிவு இன்றைய வலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கிறது. ‘மரகதமா’க நீங்கள் அறிமுகம் ஆகியிருக்கிறீர்கள். எனக்குத் தெரிந்தவர், இனிமையானவர் என்ற வகையில் பெருமிதம் கொள்ளுகிறேன்.
  வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 17, 2013 @ 07:44:08

   சகோதரி! தகவல் தந்ததற்கும்,, கருத்திடலிற்கும். மிக்க மிக்க மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. Maniraj
  ஜன 17, 2013 @ 07:17:06

  தெரிவு என்பது அவரவர் சுயப் பிரிவு. அருமையான ஆக்கம் ..பாராட்டுக்கள்..

  வலைச்ச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

  மறுமொழி

 14. கோவை கவி
  ஜன 31, 2016 @ 12:42:04

  Subajini Sriranjan :- அழகான படைப்பு
  ஒற்றுமையே பலம்
  கூடி வாழ்வதே சிறப்பு
  Unlike · Reply · 1 · January 17 at 4:47pm 2015

  Ramesh Manivasagam .- நல்லறம் நன்று தாயே
  Unlike · Reply · 1 · January 18 at 5:48pm

  Vetha Langathilakam :- மிக நன்றி சுபா – ரமேஷ் மணிவாசகம்.
  மிக்க மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  Like · Reply · 1 · January 18 at 6:44pm 2015

  Sujatha Anton :- கூறுபடாது மனிதம் வாழ்ந்திட
  ஊறுபடாத சிந்தனை ஊற்றாய்
  வேறுபாடின்றி விதைத்த வார்த்தை
  சிறு துரும்பும் பல குத்த உதவும்.
  எத்தனை சிந்தனையில் வெளிவந்த கவிநயம். அழகு தமிழில் நன்றாகவே புரிய வைத்திருக்கின்றீர்கள். அருமை.
  Like · Reply · January 20 at 8:41pm

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சுஜாதா கருத்திடலிற்கு.
  Like · Reply · January 20 at 11:07pm 2015

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: