225. வாழ்த்து விரயமாகாது!…

 

வாழ்த்து விரயமாகாது!…

 

முன்காலை வேளையில்
முதல்வரியாய் மனதிலே
முழு ஊக்கம் தருகிறாய்!
கழுவிடுதே சோம்பல்

வாழ்த்து வரி தூவுகிறாய்!
வீழ்த்திடா உரமேற்றுகிறாய்!
தாழ்த்திடா உன் செயலினால்
வீழ்த்துகிறாய் ஆனந்தத் தூறல்!

சுடச்சுடத் தருகின்ற உன்
சுந்தர வரிகள் அழகு!
மந்திரக் கருத்துகள் ஆகி
மயக்கிடுதே தினமென்னை

வாழ்த்திடும் நல்ல மனம்
வாழ்வதில்லைப் பலரிடம்.
காழ்ப்பில்லா மனம் மகிழ்வகம்
வாழ்த்து நூலகம் நீ!

ன்மை நெஞ்சின் வரிகள்
நாவார, மனசார உதிரும்.
வாழ்த்து விரயம் ஆகாது
வாழும் விருட்சம் ஆக்கும்!

வாங்கி அடுக்கும் வாழ்த்துகளை
தேங்கிட வைக்கலாம் கோபுரமாய்!
பூங்காவாய்ப் பூக்கும் மனசு
பாங்காய்த் திருப்பிக் கொடுக்கும்!

ரே சொல்லில் பேரலையாய்
ஊரே போற்றும் கருத்துகள்
நேரே உயர்த்தும் ஏணியாய்
பாரே பார்க்கச் செய்யும்!

வாழ்த்திடாப் பல உள்ளங்களும்
வாழ்ந்து சுகிக்கும் பூவுலகு.
வாழ்த்துமொரு மனமெனக்கு
வளமாய் வரமாய் வேண்டும்!


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
19-1-2012.

 

                                      
 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Tharshi
  ஜன 19, 2012 @ 05:54:30

  வாழ்த்துக்கள் விரயமாகாது…அழகானதொரு கவிதை
  எவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் சிந்திக்கிறீர்கள்!..தங்களின் எல்லாக் கவிகளுமே எனக்கு மிகவும் பிடிக்கும்…இதுவும் அவ்வாறு தான் ஒவ்வொரு வரிகளும் அற்புதமான உள்ளன…பாராட்டுக்குரியவை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 06:19:35

   முன்காலை வேளையில்
   முதல்வரியாய் மனதிலே
   முழு ஊக்கம் தருகிறாய்!
   கழுவிடுதே சோம்பல்

   வாழ்த்து வரி தூவுகிறாய்!
   வீழ்த்திடா உரமேற்றுகிறாய்!
   தாழ்த்திடா உன் செயலினால்
   வீழ்த்துகிறாய் ஆனந்தத் தூறல்!

   சுடச்சுடத் தருகின்ற உன்
   சுந்தர வரிகள் அழகு!
   மந்திரக் கருத்துகள் ஆகி
   மயக்கிடுதே தினமென்னை

   வாழ்த்திடும் நல்ல மனம்
   வாழ்வதில்லைப் பலரிடம்.

   இனிய வருகைக்கும் இனிய வரிகளிற்கும் மிக்க நன்றி தர்சி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Anbuthozhi
  ஜன 19, 2012 @ 06:27:49

  அருமை …. மிகவும் அருமையான ரசனை வாழ்த்துக்கள்

  மறுமொழி

 3. பழனிவேல்
  ஜன 19, 2012 @ 06:30:48

  அருமை…
  “கழுவிடுதே சோம்பல்”

  “காழ்ப்பில்லா மனம் மகிழ்வகம்
  வாழ்த்து நூலகம் நீ!”

  அழகான சிந்தனை…

  அதிலும் தலைப்பு மிக அருமை.
  தலைப்பே நல்லதொரு கவிதை…

  மறுமொழி

 4. cpsenthilkumar
  ஜன 19, 2012 @ 06:57:25

  டைட்டிலே கலக்கல்

  மறுமொழி

 5. புலவர் சா இராமாநுசம்
  ஜன 19, 2012 @ 07:48:00

  நன்மை நெஞ்சின் வரிகள்
  நாவார, மனசார உதிரும்.
  வாழ்த்து விரயம் ஆகாது
  வாழும் விருட்சம் ஆக்கும்!

  அருமை!
  நெஞ்சில் நிலைக்கும் வரிகள்
  வாழ்க கவியுளம் வளர்க கவிவளம்
  புலவர் சா இராமாநுசம்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 20:53:19

   மிக்க மிக்க மகிழ்வு ஐயா. தங்கள் வரவை எதிர்பார்த்தேன். கருத்தினால் மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 6. வசந்தா சந்திரன்.
  ஜன 19, 2012 @ 09:35:45

  சுடச் சுட வழங்கிய உங்கள் தேநீர் மிகவும் சுவையாக இருந்தது. நன்றிகள்

  vasantha chandran

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 20:55:12

   மிக்க மிக்க மகிழ்வு சகோதரி.. எதிர் பாராத தருணத்தில் வந்து கருத்திட்டதினால் மகிழ்வடைந்தேன். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 7. SUJATHA
  ஜன 19, 2012 @ 12:01:45

  வாங்கி அடுக்கும் வாழ்த்துகளை
  தேங்கிட வைக்கலாம் கோபுரமாய்!
  பூங்காவாய்ப் பூக்கும் மனசு
  பாங்காய்த் திருப்பிக் கொடுக்கும்!

  அருமை……வாழ்த்துக்கள் மனதை பூரிக்கவைக்கின்றது. புலரும் காலைப்பொழுதில் இது கொடுக்கும் மகிழ்ச்சி ஒரு ஆரோக்ய வாழ்க்கையின் ஒரு பாதியாக உறுதி கொடுக்கின்றது. வாழ்த்துக்கள் ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 20:58:19

   மிக்க மிக்க மகிழ்வு சுஜாதா… மனதில் உதிக்கும் கருத்துகள் தான் கவியாக வந்தது. இங்கு வந்து கருத்திட்டதினால் மகிழ்வடைந்தேன். மிகுந்த நன்றியும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. rathnavelnatarajan
  ஜன 19, 2012 @ 16:33:55

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 20:59:55

   மிக்க மிக்க மகிழ்வு ஐயா. .. நீங்கள் வந்து கருத்திட்டதினால் மகிழ்வடைந்தேன். மிகுந்த நன்றியும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  ஜன 19, 2012 @ 19:22:10

  வாழ்த்துக்கள் விரயமாகாது…பிடியுங்கள் வாழ்த்துக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 19, 2012 @ 21:01:50

   தாங்கோ தாங்கோ மிக்க மிக்க மகிழ்ச்சி சகோதரா.. தங்கள் கருத்தினால் மகிழ்வடைந்தேன். மிகுந்த நன்றியும் உரித்தாகுக. ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 19, 2012 @ 20:33:43

  Mahilini Kaanthan wrote:-
  உண்மைதான்

  Vetha Wrote:-
  மிக்க நன்றி மகிழினி. இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 11. sravani
  ஜன 20, 2012 @ 07:01:52

  வேதா மேம் ,
  கதிரவன் , மழை , தேநீர் , இலையுதிர்காலம்
  என்று இயற்கை நம்மை வாழ்த்துவதைக்
  கண்டு நமக்கும் அம்மனம் வேண்டும் என்பதும்
  வாழ்த்து வீணாகாது என்று சொல்லி இருப்பதும் மிக அருமை.

  மறுமொழி

 12. ramani
  ஜன 20, 2012 @ 15:31:13

  வள்ளலாய் கொடுத்து வாழ்பவரைப் போல
  பிறரை வாழ்த்தி மகிழ்வதற்கும்
  பரந்த உயர்ந்த உள்ளம் வேண்டும்
  அதன் பெருமையை அருமையை மிக அழகாக
  வலியுறுத்திப்போகும் தங்கள் பதிவு
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 13. கோவை கவி
  ஜன 20, 2012 @ 16:42:48

  உண்மை தானே சகோதரா.
  ”….பிறரை வாழ்த்தி மகிழ்வதற்கும்
  பரந்த உயர்ந்த உள்ளம் வேண்டும்!…”
  எனது அனுபவமே இது. வரிகள் இடுகிறேன். எனக்கு வரிகள் வருவது குறைவு. இது தான் வாங்கி அடுக்கலாம், திருப்பித் தரவும் ஒரு மனசு வேண்டும் என்று கூறினேன்.
  மேலும் எழுதினால் சிலர் மனம் புண்படலாம். கவிதை போதும்.

  தங்கள் வரவிற்கும் அர்த்தமுடை கருத்திற்கும் மிக மகிழ்வும் நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 14. கலைநிலா
  ஜன 20, 2012 @ 22:55:42

  ஒரே சொல்லில் பேரலையாய்
  ஊரே போற்றும் கருத்துகள்
  நேரே உயர்த்தும் ஏணியாய்
  பாரே பார்க்கச் செய்யும்!

  வாழ்த்திடாப் பல உள்ளங்களும்
  வாழ்ந்து சுகிக்கும் பூவுலகு.
  வாழ்த்துமொரு மனமெனக்கு
  வளமாய் வரமாய் வேண்டும்!

  வித்தியாசமான கரு .
  பாராட்டுக்கள்..தொடருங்கள்
  உங்கள் பயணத்தை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: