குறட்டாழிசை 22. அறம்.

வாழ்வியற் குறட்டாழிசை 22.

அறம்.

ன்சொல், கோபம், பொறாமை என்பவை
இன்றி ஆசையறுத்தல் அறமாம்.

ழுக்கம் சார்ந்த நன்னடத்தை, நீதி
வழுவாத தன்மையும் அறமே.

ற்பண்பை உணர்த்தும் தர்மம், ஒழுங்குடை
நல்வழி வாழ்வியல் அறமாகும்.

றம் பேணுதல் மனித வாழ்வில்
மறம் பல தரும்.
(மறம் – வலிமை,வீரம், வெற்றி என்ற கருத்தில்)

றமுடை  வாழ்வைப் புறம் தள்ளல்
நிறமற்ற வாழ்வுப் பாதையாகும்.

நெறியுடைய அறவாழ்வு பெரும் குடி
வெறியனிற்கு ஒத்து வராது.

றமெனும் பல்லக்கில் ஏறுவோனின் வாழ்வரசு
திறமான செங்கோல் உடையது.

றமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்
அறமீறலில் இன்று அத்திவாரமிடுகிறான்.

லட்சியக் கோலோச்சும் அற வரலாறு.
அலட்சிய வரலாறு அறமீறல்.

பால பருவத்திலிருந்து அறம் போதிப்பு
சீலமுடை வாழ்விற்கு அரண்.

றறிவு  மனிதரென்பதற்கு  அறம்   பொருத்தமானது.
கீழறிவாளராய்  மாறுவதே விந்தை!

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-1-2012. 

  

                                    

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 21, 2012 @ 11:11:57

  Srikandarajah கங்கைமகன்wrote:-
  வணக்கம். குறட்டாழிசை என்பது என்ன கருத்து என்பதை கிரகிக்கமுடியவில்லை. ;ஆக்கம் நன்று. வாழ்த்துக்கள்

  Vetha ELangathilakam wrote:-
  ‎..இராஜ. தியாகராஜன்:- வெண்பா அல்லாதவற்றை வெண்பாவென சொல்வதை என் ஆசான்கள், எனை ஆக்கிய சான்றோர்கள் எவருமே ஏற்பதில்லை. ஏனெனில் வெண்பாவின் இலக்கணம் மிகவும் நெறியானது. ஆதலால் தான் 2500 ஆண்டுகளுக்குப் பின்னரும் மலர்ந்தோங்கி மிளிருகின்றன. உங்கள் கு…றள் வரிகளை குறட்டாழிசை என்றோ, வெண்டுறை என்றோ, வெண்டாழிசை என்றோ ஓரளவு வகைப் படுத்தலாமேயன்றி வெண்பாவகையிலான குறட்பா என்று கூற இயலாது.
  .
  vetha wrote:-.(To இராஜ. தியாகராஜன்):_
  வாழ்வியல் குறட்டாழிசை என கூறவா?
  குறள் + தாழிசை குறட்டாழிசை என்று விளக்கம் கொடுக்கலாம்.
  ..
  September 11, 2011இராஜ. தியாகராஜன்wrote:_
  இன்று தான் திவான் பகதூர் பவாந்தப் பிள்ளையின் யாப்பருங்கல விருத்தி உரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அவர் உரையினை அப்படியே தருகிறேன் கீழே:
  ..
  September 11, 2011இராஜ. தியாகராஜன்
  இரண்டடியாய் ஈற்றடி குறைந்த இஃது குறட்டாழிசை என்பர்.

  தண்ணந் தூநீ ராடச் சேந்த
  வண்ண வோதி கண்.

  கோடன்மன்னு பூங்கானற் குயிற்கண்மன்னு நீள்சோலை
  நாடலரிதா மினியா நயந்து.

  வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்
  பண்டைய ளல்லள் படி….
  .
  Vetha ELangathilakam wrote:-
  சகோதரா…மிக்க நன்றி உங்கள் வரிகளிற்கு. பெரிய விளக்கம் தரும் விற்பன்னி அல்ல நான்..இதிலிருந்து புரிகிறதாவென்று பாருங்கள்….
  .
  Srikandarajah கங்கைமகன்wrote:-
  மிகவும் நன்றி. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

  Vetha ELangathilakam wrote:-
  sure……

  மறுமொழி

 2. mathisutha
  ஜன 21, 2012 @ 12:51:34

  ஃஃஃஅறமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்
  அறமீறலில் இன்று அத்திவாரமிடுகிறான்.ஃஃஃஃ

  இன்று இருக்கும் மனிதனை அன்றே விதந்துரைத்த விதம் அருமைங்க…

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா
  வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 21, 2012 @ 14:18:27

   சகோதரா! தங்கள் 150வது பதிவிற்குக் கிட்டத்தட்ட முதலாவதாக வாழ்த்துக் கூறியுள்ளேன். நன்றியும், மிக மகிழ்ச்சியும் சகோதரா இங்கு வந்து கருத்துரையிட்டதற்கு. இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Sivasiva Denmark
  ஜன 21, 2012 @ 19:42:50

  அறம் செய்ய விரும்பு சொன்ன அவ்வையின் மறு அவதாரம் நீங்கள். அறமியற்றி வாழும் உங்கள் வாழ்வின் அனுபவ முத்திரைகள் உங்கள் வரிகள். வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 22, 2012 @ 11:05:17

   ”…அறம் செய்ய விரும்பு சொன்ன அவ்வையின் மறு அவதாரம் நீங்கள்…” சகோதரா இது மிக அதிகம். என் பெற்றவர் காட்டிய வழியில் செல்கிறேன். நன்றி முழுக்க அவர்களுக்கே. உண்மை நான் எழுதுபவை அனுபவங்களே. தங்கள் வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. gunathamizhk
  ஜன 22, 2012 @ 05:16:08

  தேவையான பதிவு..

  அருமை.

  மறுமொழி

 5. SUJATHA
  ஜன 22, 2012 @ 09:10:48

  அறமுடை வாழ்வைப் புறம் தள்ளல்
  நிறமற்ற வாழ்வுப் பாதையாகும்.

  நெறியுடைய அறவாழ்வு பெரும் குடி
  வெறியனிற்கு ஒத்து வராது.

  அருமை….வாழ்வியலிற்கு எடுத்துக் காட்டிய குறள்கள் நல்ல வழி காட்டல்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 22, 2012 @ 11:09:59

   அன்பின் சுஜாதா தங்கள் வருகைக்கும், வரிகளுக்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  ஜன 22, 2012 @ 10:46:14

  // அறம் பேணுதல் மனித வாழ்வில்
  மறம் பல தரும்.//
  உண்மை.
  பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. Kowsy
  ஜன 22, 2012 @ 12:39:00

  அறமெனும் விருட்சத்து வேராளன் மனிதன்
  அறமீறலில் இன்று அத்திவாரமிடுகிறான்.

  அருமை .

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஜன 23, 2012 @ 16:19:40

   தங்கள் வருகை ஆச்சரியமாக உள்ளது. ஏழாம் அறிவிற்கு (தங்கள் வலையில் சினிமா விமரிசனம்) கருத்துப் போட்டிருந்தேன் இலங்கை மக்கள் அமைதியாக வாழ்கிறார்களா என்ற கருத்தில் கேள்வியாக. – அது பிடிக்கவில்லைப் போலும்…
   சரி அது போகட்டும்..
   இங்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
   god bless you all.

   மறுமொழி

 8. Tharshi
  ஜன 23, 2012 @ 05:46:27

  அறம் பற்றிய குறள்கள் ஒவ்வொன்றும் அருமையாக உள்ளன…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஜன 23, 2012 @ 16:22:16

   தர்சி மிக மகிழ்ச்சியாக உள்ளது தங்கள் வருகை சகோதரி. கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்ச்சி.ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  ஜன 23, 2012 @ 14:21:04

  தங்க அறப்பணி தொடரட்டும் சகோதரி…

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஜன 23, 2012 @ 16:25:07

   அன்பின் ரெவெரி மிக மகிழ்ச்சியும் நன்றியும் இங்கு வருகைக்கும், கருத்திடலிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  ஏப் 16, 2012 @ 19:48:42

  Viduthalai R. Regina likes this..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: