226. கரையேற்றும் கலங்கள்.

 

கரையேற்றும் கலங்கள்.

 

ருவேறு பாதைக்காரர்
ஒருசேரப் பயணிக்கும்
பருவத்தின் பாடலுக்கொரு
உருவமீயும் அரிய
பிருந்தாவனம் இல்லறம்.
பெரும் சாகரமில்லறம்.

ளியும் (வண்டு), பூவுமாய்
விழியும் இமையுமாய்
மொழியும் சுவையுமாய்
வழியும் தோழமை
பொழிவது இல்லற
ஆழிப் படகோட்டம்.

ளம் பெறுமுரையாடல்
வளமான புரிந்துணர்வு
வசந்த ஊருக்கு வழிகாட்டி.
உளமார ஏற்றுக் கொள்ளல்
தளராது விட்டுக் கொடுத்தல்
கலமாகும் இன்பக் கரைசேர.

சின்னஞ் சிறிசு தான்
மன்னிப்பு எனும் கலம்
என்னமாய் உதவிடும்!
தடுமாறலும், தரை நிற்றலும்
எடுக்கும் மனதின் சார்பு.
இடுக்கண் வராத தேர்வு.

டம் புரண்டு சிலர்
தடுமாறும் போதில் நன்கு
தடுத்தாண்டு கரை சேரக்
கை கொடுக்கும் கலங்களாகக்
குடும்ப ஆலோசனை மன்றம்,
நகர பாதுகாவல் நிலையம்.

டல் சிறிதானால் அன்பின்
கூடல் ஊர் ஏகும்.
பாடல், பகிடி, ஆடல்,
நாடும் சுற்றுலா என்பன
தடம் மாறும் இல்லறத்தை
இடம் காட்டும் கரையேற.


 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
2007.

(இக் கவிதை 7-2.2012 செவ்வாய்க் கிழமை மாலை 7.00-8.00 கவிதை பாடுவோம் ரி.ஆர்.ரி தமிழ் ஒலிக் கவிதை  நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)

                                      
 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. வே.நடனசபாபதி
  ஜன 26, 2012 @ 11:58:07

  ‘ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக!’ எனக் கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுதியிருப்பார். ஒருவேளை இப்போது இருந்தால்; ஆண் கவிகளை வென்றுவிட்ட பெண் கவியே வாழ்க என உங்களை வாழ்த்தியிருப்பார். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2012 @ 16:06:10

   அந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடலும் கூட. மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா. உங்கள் ரசனையையிட்டு மகிழ்கிறேன். கருத்திடலிற்கு மிக்க மிக்க நன்றி சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  ஜன 26, 2012 @ 12:52:22

  மீண்டும் மீண்டும் படித்து சந்த அமைதியில்
  பூரித்துப் போனேன்
  நல்ல கருத்துடனும் சமூகப் பொறுப்புடனும்
  இலக்கணத் தேர்ச்சியுடனும்
  தங்களைப் போல் கவியாத்தால்
  அனைவராலும் ஆகக் கூடியதன்று
  ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறீர்கள்
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 26, 2012 @ 16:09:50

   சகோதரா ரமணி அவர்களே! எனக்கு அவ்வளவு திருப்தியளிக்கவில்லை இந்தக் கவி. ஆயினும் இது முன்பு சி.ஐ.ரி.விக்காக எழுதி வாசித்தது. போடலாம் என்று வலையேற்றினேன். உங்கள் கருத்துடை பின்னூட்டம் நிறைவு தருகிறது. மிக மிக நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ரெவெரி
  ஜன 26, 2012 @ 16:34:21

  முன்பு எழுதியதாயினும் என்றும் இதே நிலை தானே…

  மறுமொழி

 4. rathnavelnatarajan
  ஜன 26, 2012 @ 16:43:04

  அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. Angelin
  ஜன 26, 2012 @ 17:37:02

  காலத்துக்கேற்ற கவிதை வரிகளும் அதற்க்கு பொருத்தமான தீர்வும் படங்களும் மிக அருமை அக்கா

  மறுமொழி

 6. Peruntha Pia Ramalingam
  ஜன 26, 2012 @ 23:52:06

  Meget smukt skrevet, aunt. (இது டெனிசில் எழுதப்பட்டது. தமிழாக்கம்.- மிக அழகாக எழுதப்பட்டுள்ளது அன்ரி)

  மறுமொழி

 7. மகேந்திரன்
  ஜன 27, 2012 @ 04:09:08

  விட்டுக்கொடுத்தல், புரிந்துணர்வு, மன்னிக்கும் மனப்பான்மை
  ஆகியவையை வளர்த்துக்கொண்டால் வாழ்வு எனும்
  ஆழ்கடலில் கரையேறும் கலங்கலாக அவைகள் விளங்கும்
  என அழகாக சொல்லி விட்டீர்கள் சகோதரி.
  கவி அழகு..

  மறுமொழி

 8. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  ஜன 27, 2012 @ 05:32:16

  வித்தியாசமான கருவில் அமைந்த கவிதை. அருமை. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 27, 2012 @ 08:00:33

   கவிதையையிட்டு உங்கள் கருத்து வந்தமைக்கு மிக மிக மகிழ்வடைந்தேன் சகோதரா. மிகுந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 9. SUJATHA
  ஜன 27, 2012 @ 06:07:04

  இல்லற வாழ்வில் இரண்டறக்கலந்து கற்றுக்கொள்ள வேண்டியவை அழகாக கவியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளமை அருமை…”கவிதாயினி வேதா”.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 27, 2012 @ 08:10:40

   சுஜாதாவின் கரையேற்றும் கலங்கள் கருத்திடலிற்கு மிக மகிழ்வடைந்தேன். மிகுந்த நன்றி சுஜாதா. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. Tharshi
  ஜன 30, 2012 @ 10:40:39

  தங்களின் கவிதைகளுக்கு கருத்து எழுதும் தகுதி எனக்கு இல்லையென்றே அவ்வப்போது தோன்றும்…
  ஆனாலும் இரசிக்க முடியும்தானே… ஒவ்வொரு கவிதைகளும் அழகானகருத்துக்களையும் அற்புதமான நடைகளையும் கொண்டுள்ளன.
  கரையேற்றும் கலமும் அழகு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: