22. ஆக வேண்டியது இது தான்…

ஆக வேண்டியது இது தான்…

 

வாழ்வில் மனிதர் தேகப்பயிற்சி செய்வதால் மனதில் உற்சாகத்தையும், அதனால் வாழ்வில் மகிழ்ச்சியையும் பெறுகிறார்கள்.

ஆனால் தேகப்பயிற்சி செய்வதால் மனிதன் களைப்பு அடைகிறான் என்று சிலர் எண்ணுவது தவறாகும். இதற்கு எதிர் மாறாகவே செயற்பாடுகள் நடைபெறுகிறது. தேகாப்பியாசத்தால் நல்ல உடல்நிலை, தசைகளின் நல்ல செயற்பாடு, நாளாந்த வேலைகளைக் குறைந்த உடற் சக்தியில் செய்வது, குறைந்த களைப்பு எனும் நன்மைகளே உருவாகிறது.

குறைந்தது முப்பது நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்வது நல்லது என்பது சுகாதாரப் பகுதியின் ஆலோசனையாகிறது. முப்பது நிமிட நேரத்திற்கும்  குறைந்த நேரப் பயிற்சி நல்ல உடற் பயிற்சிக்கு ஆதாயமாக இருக்காது. ஆனால் அறுபது நிமிடப் பயிற்சி, இரத்தக் குழாய் அடைப்பைக் குறைத்து, அதனால் இறப்பு வருவதை அறுபது விகிதம் தடுக்கிறது என்கிறார்கள்.
நாங்கள் அசையும் போது எமது தசைகளைப் பாவிக்கிறோம். தசைகள் பாவிப்பதற்காகவே உருவாக்கப் பட்டது. இது ஒருவகைச் சுரப்பி போன்றது.

பாவித்தாற் தான் பயன் பாவிக்காவிடில் பாழ்.

தசைகளை இயக்குவதால்  இன்சுலின் எரிந்து சீனிச் சத்தாகி, இரத்தத்தினூடு பாவனையில் கலக்கிறது. தசைகளைப் பாவித்தலால், அதாவது உடற் பயிற்சியால் ஈரல், இதயம் நன்றாக இயக்கப் படுகிறது.

மருந்துகள் செய்ய முடியாததை உடற்பயிற்சி (தேகாப்பியாசம்) தருகிறது.
உடலை அசைப்பது வாழ்வில் ஒரு ஒளிப் பாதையைக் காட்டுகிறது.

உடலிற்கு அமைதியை, மனதிற்கு மகிழ்வையும் உடற்பயிற்சி தருகிறது. மேலும் பய உணர்வை, மனக் குளப்பங்களைத் தீர்க்கிறது. படபடப்புக் குணம் குறைந்து, மனதிற்கு நிதானம் கிடைக்கிறது.

நானொன்றும் புதிதாக இவைகளைக் கூறிவிடவில்லை. எத்தனையோ அன்புச் சகோதர, சகோதரிகள் இவை பற்றியும், செயல்முறைகள், செயற் கருவிகள் என்று பல விளக்கத்துடன் வலையில் பதிவிடுகிறார்கள். அதனால் பயன் பெறுவதே சிறப்பு.

சோகம் வேண்டாம் வாழ்வில்.
சாக வேண்டாம் நோயால்.
யாகம் போலிதைச் செய்வதால்
தேகப்பயிற்சி வாழ்வில்
ஏகபோக பலம்(ன்) தரும்.
வேகமான பலன் பெறலாம்.
 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-1-2006.

(யேர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது.
இலண்டன் தமிழ் வானொலி அனுபவக் குறிப்பாகவும் ஒலிபரப்பானது.)

 

                                      
 

19 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  ஜன 27, 2012 @ 23:50:41

  யாகம் போலும் செய்வோம் இதை! -அழகாகச் சொன்னீர்கள். பெரும் பணம் சேர்த்து வாழ்பவனை விட, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்பவனே சிறந்த செல்வந்தன்னு முன்னோர்கள் சொல்லிருக்காங்க. அழகான கட்டுரையா வடிச்சுத் தந்திருக்கீங்க. பிரமாதம்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 28, 2012 @ 14:12:32

   யாகம் போல செய்தாலே பலன் உண்டல்லவா. மனம் இலயித்துச் செய்வது அதன் பொருளாகிறது. மிக மிக மகிழ்வடைந்தேன் தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு. மளம் நிறைந்த நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. rathnavelnatarajan
  ஜன 28, 2012 @ 09:24:23

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 28, 2012 @ 14:04:07

   அன்புள்ள ஐயா தங்கள் இனிய வருகைக்கு, கருத்திடலிற்கு மிக மிக மன நிறைவும், மகிழ்ச்சியும். நன்றி. நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Lingathasan Ramalingam Sornalingam
  ஜன 28, 2012 @ 11:05:32

  அருமையான பதிவு. எல்லாமே பெறுமதியான வரிகள் ஆனால் ஒரு சில வரிகள் ‘பொன்னின் குடத்திற்குப் பொட்டிட்டது போல்’ உள்ளன.
  “பாவித்தாற் தான் பயன் பாவிக்காவிடில் பாழ்”. “மருந்துகள் செய்ய முடியாததை உடற்பயிற்சி (தேகாப்பியாசம்) தருகிறது”.
  “உடலை அசைப்பது வாழ்வில் ஒரு ஒளிப் பாதையைக் காட்டுகிறது”.
  சமுதாயத்திற்கு நல்ல பணி செய்கிறீர்கள். பாராட்டுக்கள்.
  பிரபஞ்ச சக்திகளின் அருள் உங்களுக்கு நிறைவாகக் கிட்டட்டும்.
  அன்புடன்
  இ.சொ.லிங்கதாசன்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 28, 2012 @ 14:00:08

   தங்கள வருகை, பின்னூட்டம் என்னை மகிழ்வித்து உற்சாகப் படுத்துகிறது. மிக்க மிக்க நன்றி. அந்த 3 வரிகளும் தங்க வரிகள் தான். இன்னும் திறமையாக எழுத ஆண்டன் அருளை வேண்டி நிற்கிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  ஜன 28, 2012 @ 21:25:14

  அன்பு தோழி likes this..

  மறுமொழி

 5. Madhu Mathi
  ஜன 29, 2012 @ 03:11:20

  உடற்பயிற்சியை முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன் உங்கள் பதிவும் அதைத்தான் சொல்கிறது..இன்றைய காலகட்டத்தில் தேகப்பயிற்சி அவசியமானதொன்று..பகிர்வுக்கு நன்றி..உங்களை தொடர முடியவில்லை.follower widget வைக்கலாமே..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 29, 2012 @ 09:34:41

   அன்பின் சகோதரா உங்கள் வருகை, கருத்திற்கு மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.
   //உங்களை தொடர முடியவில்லை.follower widget வைக்கலாமே..//
   (பின்தொடருதலுக்காக வேர்ட்பிரசில் அமைப்பு இல்லை)

   மறுமொழி

 6. SUJATHA
  ஜன 29, 2012 @ 11:42:27

  உடற்பயிற்சியில் உள்ளம் தரும் உவகையுடன் புகைப்படங்களும் இணைந்து கொடுக்கும் உற்சாகத்துடன் உடலுக்கு உறுதி கொடுக்கும் ஆக்கமும் அருமை…..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 29, 2012 @ 12:01:18

   உமது அன்பான வருகைக்கும், பின்னூட்டமிடலிற்கும் மிக நன்றியும், மகிழ்ச்சியும் சுஜாதா. இவைகள் என்னை ஊக்குவிக்கும் வினையூக்கி, கிரியா ஊக்கியாகும். நன்றி…நன்றி. மகிழ்ச்சி, மகிழ்ச்சி. இறை ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 7. jaghamaniRajeswari
  ஜன 30, 2012 @ 06:21:29

  மருந்துகள் செய்ய முடியாததை உடற்பயிற்சி (தேகாப்பியாசம்) தருகிறது.
  உடலை அசைப்பது வாழ்வில் ஒரு ஒளிப் பாதையைக் காட்டுகிறது.

  வழிகாட்டி ஒளி தரும் அருமையான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 08:47:19

   மிக மகிழ்ச்சி சகோதரி. தங்கள் இனிய வருகை, கருத்து என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. Tharshi
  ஜன 30, 2012 @ 10:43:28

  அழகான கருத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள் நன்றியும், வாழ்த்துக்களும்

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 21:40:30

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி உமது இனிய வருகைக்கும், இனிய கருத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

 9. மகேந்திரன்
  பிப் 01, 2012 @ 00:32:20

  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்
  என்பது ஆன்றோர் வாக்கு….
  நீடித்த நன்மை பயக்கும் உடல் நலத்திற்கு
  தேகப் பயிற்சி எவ்வளவு முக்கியம் என்பதை
  அழகாக சொல்லியிருகீங்க சகோதரி…

  மறுமொழி

 10. Yarl Manju
  மார்ச் 09, 2012 @ 03:43:13

  நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 10, 2012 @ 16:16:03

  முயற்சித்தேன். எந்தளவில் வெற்றியாகுது என தெரியவில்லை. மிக்க நன்றி சகோதரா. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: