12. காந்தி – காந்தியம்.

 

காந்தி – காந்தியம்.

(காந்தி மறைவின் தினத்தையொட்டி எழுதியது.)

சத்தியமே வழிகாட்டு மொளி.
சத்தியமே பாதுகாக்கும் கேடயம்.
சத்தியமே மார்புக் கவசம்
சத்தியசொரூபி கடவுளென்றார்.

சத்தியமே கடவுள் – மௌனமும்
சத்தியவாளரின் அனுமானக் கட்டுப்பாட்டிலொன்று.
உருசியென்பது  எண்ணம், நாவிலில்லை.
உத்தம  கையெழுத்து பிள்ளைகளுக்காகட்டும்.

பொருட்களைப் பார்த்து முதலில்
பிள்ளைகள் வரையக் கற்கட்டும்
பின்னர் எழுதிடக் கற்கட்டுமென்று
புதுப்பணி ஆசிரியத்தையன்றே மொழிந்தார்.

சத்தியத்தை நாடும் ஒருவனே
சரியான விதியைப் பின்பற்றுவான்.
வரவு, செலவிற்குக் கணக்கிடு!
ஒழுக்கமேயொருவனைக்  கனவானாக்குமென்றார்.

பயம் போக்கும் மருந்து
பக்தியான இராமநாமமென்று
பணிப்பெண் ரம்பா ஆலோசனையில்
பணிவாகச் செபம் கற்றார்.

மகாத்மா பட்டம் பரவசமளிக்கவில்லை.
மகாத்மா பட்டத்தை மதியாதவர்.
மகாத்மா பட்டத்தில் வேதனையானவர்.
மகாத்மாவின் கூற்று இது.

உத்தமராய் உலகு போற்றும்
தித்திப்போ, கசப்போ – காந்தியின்
சத்தியசோதனை வாழ்வு
பத்தியமாகும் உலக மக்களிற்கு.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-1-2012.

(இக் கவிதை 31-1-2012 செவ்வாய்க் கிழமை மாலை 7.00-8.00 கவிதை பாடுவோம் ரி.ஆர்.ரி தமிழ் ஒலிக் கவிதை  நேரத்தில் என்னால் வாசிக்கப் பட்டது.)

 

                               
 

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jaghamaniRajeswari
  ஜன 30, 2012 @ 06:18:15

  சத்தியமே வழிகாட்டு மொளி.

  வழிகாட்டும் மொழியாய் சத்தியம்..

  சிறப்பான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 08:45:14

   மிக மகிழ்ச்சி சகோதரி. தங்கள் இனிய வருகை, கருத்து என்னை மகிழ்விக்கிறது. மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. munaivendrinaasureshkumar
  ஜன 30, 2012 @ 07:13:07

  அருமை.

  மறுமொழி

 3. munaivendrinaasureshkumar
  ஜன 30, 2012 @ 07:13:30

  அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 07:43:57

   சகோதரா தமிழில் சத்தியசோதனை வாசிக்க வேண்டும் என்று என் தீராத ஆசை எப்போது நிறைவேறும் என்று காத்திருந்தேன்.

   கார்த்திகை மாதத்தில் காலடியில் சிக்குப் பட்டது போல என் கரத்தில் தவழ்ந்தது. மிக மிக மகிழ்ந்தேன்.

   சத்தியசோதனை. 605 பக்கங்கள் உள்ள புத்தகம். 184வது பக்கத்தில் உள்ளேன்.

   அதிலிருந்து நான் கிரகித்தவை கவிதையாக வந்தது. நன்றி சகோதரா வருகைக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. b.ganesh
  ஜன 30, 2012 @ 07:24:35

  மகாத்மாவின் நினைவைப் பகிர்ந்த கவிதை அருமை. மிக ரசித்தேன்- புகைப்படங்களையும்தான்! ஆனால் எனக்கென்னமோ எல்லோரும் காந்‘தீய’ வாதி, காந்‘தீய’ம் என்று எழுதுவது உறுத்தலாக இருக்கிறது. காந்தியம், காந்திய வாதி என்று சொல்வதே சாலச் சிறந்தது என்பது என் கருத்து. தவறிருப்பின் மன்னிக்கவும் வேதா!

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 07:35:36

   சகோதரா உங்கள் சிந்தனை எனக்கும் சரியாகப் படுகிறது.
   இப்போதே மாற்றப் போகிறேன்.
   நான் இந்தக் கோணத்தில் சிந்திக்கவே இல்லை . மிக்க நன்றி.
   அதே நேரம் தங்கள் வருகை, கருத்திடல் மிக மகிழ்வு தருகிறது.
   மிக்க நன்றி. மிக்க நன்றி.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. rathnavelnatarajan
  ஜன 30, 2012 @ 10:23:07

  அருமையான கவிதை.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 30, 2012 @ 15:52:35

   நன்றி ஐயா. உங்கள் இனிய வருகை, கருத்து, முகசுநூல் பதிவு அனைத்திற்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ரெவெரி
  ஜன 30, 2012 @ 16:59:52

  மகாத்மாவின் நினைவைப் பகிர்ந்த கவிதை அருமை…

  Inspired by The GREAT Mahatma…

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜன 31, 2012 @ 07:45:03

  Gowry Sivapalan wrote:-
  காந்தீயத்தின் அதிபதி .பெருமை உரைக்கும் கவிதை . சத்தியத்தைச் சுட்டிக் காட்டிய கவிதை . அருமை வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஜன 31, 2012 @ 07:53:56

  அன்பு தோழி, வசந்தா சந்திரன், Sujatha Anton and 8 others like this..1 share
  1 share—(-Radha Krishnan
  இன்று காந்தி நினைவு தினம்)
  8 others.- அன்பு தோழி, vasantha chandran, Guna thamizh, Mahilini kanthan, Sakthi sakthithasan, Janany Sakthibalan

  Sujatha Anton wrote:-
  சத்தியத்தின் வழிகாட்டலில் தன் வலிமையில் ஒரு சுதந்திர போராட்ட வரலாற்றை எடுத்துக்காட்டிய மாமனிதர். மனிதத்தை
  மட்டும் எடுத்துக்காட்டிய வழிகாட்டலில் காந்தியம் எடுத்துக்காட்டிய கவி அருமை. காந்தி மரணித்தி நாளை தளத்தில் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

 9. கோவை கவி
  ஜன 31, 2012 @ 07:55:37

  Sakthi Sakthithasan wrote:-
  அன்பின் சகோதரி வேதா அண்ணல் காந்தியின் நினைவுநா
  ளில் அவரின் பெருமைகளை உங்களை விட யாரால் அழகாக வடித்திட முடியும்? வாழ்த்துக்கள்.

  Vetha ELangathilakam wrote:-
  ஏன் சகோதரா நீங்களும் நன்றாக எழுதி நான் கருத்திட்டேனே!…எல்லோராலும் முடியும்..நன்றி. ..sakothara…

  மறுமொழி

 10. கோவை கவி
  ஜன 31, 2012 @ 16:40:53

  Sivasiva Denmark wrote:-
  காந்தீயத்தைக் காண்பித்து வேதங்கள் ஆகமங்கள் இதிகாசங்கள் எல்லாமும் கலைஞானமும் சத்தியத்தையே பேசுமென்று தத்துவமுரைக்கும் உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 11. கோவை கவி
  ஜன 31, 2012 @ 16:41:47

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா wrote:-
  காந்தீயம் பற்றிய கொள்கைகள் விரிவாக ஆராயப் படவேண்டும்!! சத்திய சோதனை பல பாகங்களை கொண்டிருக்கிறது. இதனை மீள பதிப்புகள் செய்து சாதாரண மக்களிடமும் கொண்டு செல்லப் படவேண்டும்!!தேசபிதா, காருண்யக் கொலையை ஏற்றுக்கொண்டவர், ஏகபத்தினி விரதர்,…. இன்னும் பல இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியுள்ளன.. அழகிய கவிதை… எளிமையான சொற்கள்… வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 12. மகேந்திரன்
  பிப் 01, 2012 @ 00:36:28

  அத்தனையும் இருந்தும்
  அரையாடைக் கோலத்தை
  அன்றே தரித்தவரின்
  இயல்பு வாழ்வை
  அழகு கவிதை
  ஆக்கியமை
  மேலும் அழகு சகோதரி…..

  மறுமொழி

 13. கோவை கவி
  பிப் 01, 2012 @ 16:18:56

  வசந்தா சந்திரன் wrote:-
  சத்தியத்தை நாடும் ஒருவனே
  சரியான விதியைப் பின்பற்றுவான்.
  வரவு, செலவிற்குக் கணக்கிடு!
  ஒழுக்கமேயொருவனைக் கனவானாக்குமென்றார்…))

  மறுமொழி

 14. இராஜ. தியாகராஜன்
  பிப் 06, 2012 @ 05:13:42

  அண்ணலின் கொள்கை பற்றிய அழகான வரிகள் . வாழ்த்துகள். மேலும் ஒரு வாழ்த்து; பலரும் காந்தீயம், தேசீயம், நாகரீகம் என்று ஒரு ஈகாரத்தைப் போட்டு எழுதும் போதில், நீங்கள் மட்டும் காந்தியம் என்று இகரத்துடன் எழுதியமைக்காக. இந்தத் தொடக்கத் தமிழ் இலக்கணம் பற்றிய விளக்கங்களைத் தொடராக முகநூல் குறிப்புகளை வைத்திருக்கிறேன். விரைவில் அவற்றை சொல்லச்சு தளத்திலும் வலையேற்ற ஆவன செய்கிறேன்.
  அன்பன்
  இராஜ.தியாகராஜன்
  http://www.tyagas.wordpress.com

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 20:48:35

   இந்த கிறெடிற் கணேஷ் என்ற ஒரு சகோதரரிற்கு உரியது. வலையில் தன் முதற் பதிவையிட்டு அதை ஏற்றுக் கொண்டு நான் திருத்தியது. விரும்பினாற் சென்று பார்க்கலாம். இணைப்பு மேலே உள்ளது. இங்குள்ள (face book) கருத்துகளும் அங்கு ஒட்டப் பட்டுள்ளது. மிக்க நன்றி….

   மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 20:50:20

   சகோதரா வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. பழனிவேல்
  பிப் 06, 2012 @ 13:45:00

  அரிய புகைபடங்களுடன் அழகான கவிதை…
  அருமை…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: