24. வாழ்வியற் குறட்டாழிசை(உதவுதல்)

 

24. வாழ்வியற் குறட்டாழிசை

உதவுதல்.

தவுதல் என்பது கடின நிலையின்
கதவு திறத்தல் எனலாம்.

ணம் பொருளற்றாலும், உடல், உள்ளத்தால்
மனம் நிறைய உதவலாம்.

ழை, முதியோருக்கு உதவுதல் வரட்சியில்
மழை பெயதல் போலாகும்.

னம் விரும்பி உதவுதலானது தூய
இனம் புரியா சாந்தியுடைத்து.

னம் விரும்பினாலும் உதவ முடியாத
கனமிகு சூழல்களும் உருவாகிறது.

போதைகளின் உதவி மனிதனை நிர்வகிப்பதாக
போலி மயக்கம் கொள்கிறார்.

தவி பெற்று உயர்ந்ததும் உதவியவரை
உதாசீனம் செய்பவர் பலர்.

தவினாலும் பலரால் திரும்ப பெரும்
உபத்திரவம் உருவாகிறது வழமை.

தவுவோம் என்று நெருங்குவோர் பலரால்
உலைச்சலும் வரும்! விழித்திரு!

தவு! உதவு! அலட்சியம் செய்வார்.
உயர்வு இறுதியில் உண்மை.

தவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
உதவி செய்ய மறக்கிறோம்.
 

க்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-2-2012.

                                     

13. வியத்தகு Whiteny Houston…

 

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

 துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..
                 ஆம்
(” I will always  love you…u….uu!..” -Body gard song

   http://youtu.be/3JWTaaS7LdU    )

 விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

உறுதியற்ற மனதால், பயந்தாள்.
மறுகினாள் சுயதிறன் போதாதென.
இறுகினாள் போதை துணையென.
அறுதிப் பரிசானது மரணம்.

 யோன் ரூசெல் கூஸ்ரன்- சிசி புதல்வி.
(John Russel Houston – cissy)
நாற்பத் தெட்டில் மறைந்தாள்.
பதினெட்டில் விட்னி மகள்
பதுமை பொபி கிறிஸ்ரினா பிறவுண்.
(Boby kiristina Brown)

 வெள்ளிப் பேழையுள் விட்னியுடல்
துள்ளியதிறுதிச் சடங்கிலவளிசை.
கொள்ளையிட்ட தன்னிசையோடு – மீளாப்
பள்ளி கொள்ள அவளிறுதியூர்வலம்.

தந்தையருகிலவள் தன்னை அழுத்திய
எந்தக் கொம்பனுக்கும் பயமற்றுத்துயிலட்டும்!
பன்னீராக அவளாத்ம சாந்திக்காய்
கண்ணீர் மலர்கள் தூவப்படுகிறது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-2-2012.

 

 

                             

227. திரைமறைவு.

                                திரைமறைவில் என்றும் அது தாராளம்.
                                உரையாடி நாளும் முடியாத பிரலாபம்.
                                     

                                பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
                                ஓகுஸ், டென்மார்க்.
                                 13-3-2006.

( இந்தக் கவிதை ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                                             

24. நிர்வாணம்

 

நிர்வாணம்.

(இலண்டன் தமிழ் வானொலி புதன் இலக்கிய நேரத்திற்காக எழுதி  வாசிக்கப் பட்டது. 11-10-2005ல்)

வாழ்க்கையெனும் மனித நந்தவனத்தில் அன்பு, பாசம், நேசம் என்பவை இதமான தென்றல் போன்றது. மயிலிறகு கொண்டு மனதை வருடி மயங்க வைக்கும் இனிய உணர்வைத் தருகிறது. அன்பு இப்படியானால்…

கோபம் பிரளயமானது, துன்பமானது, வேதனை தருவது.
கோபம் ஒரு செய்தி.
கோபமடையும் போது சொல்வதைக் கேட்கின்றனர். கோபம் உலகத்தின் பெறுமதியையும் அனுபவத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஆனால் கடும் கோபம் என்ற உணர்வு மிகவும் ஆபத்தானது.

சாதாரண கோபத்தினால் உருவாகும் எரிச்சல் பரவும் தன்மையது. அழிக்கும் திறனுடையது. கோபமடையும் போது மனிதர் தம்முடனான தொடர்பை இழக்கின்றனர். தம்மை மறக்கின்றனர். சூழ்நிலையையும் மறக்கின்றனர். கோபம் கொண்ட மனிதரையும் மறக்கின்றனர்.
அன்பு, நேசம், காதல் மட்டும் உணர்வு பூர்வமான இணைப்பை உலகில் தருவதன்று.
கோபமும் ஒரு தொடர்பு வழி ஆர்வமே. கோபமும் மனிதரை ஒருவருடன் ஒருவரை இணைக்கிறது.

ஒரு குறிக்கோள் கொண்டு தான் கோபம் உருவாகிறது.
நமக்குத் தெரிகிறது, ஏன் எவர் மீது  கோபமடைகிறோம் என்று.
ஒருவருடன் நமக்குக் கோபம் வருவதில்லையானால், அவரது இன்ப துன்பங்களில் பங்கு போட நாம் விரும்பவில்லையெனலாம், அல்லது  அவைகளில் பங்கு பெறும் அக்கறை நமக்கு இல்லை யென்றாகிறது.

மகிழ்ச்சி, அன்பு, ஆதரவு, தேறுதல், புகழ் என்பவையுடன் மட்டுமே நாம் வளர்க்கப் பட்டிருந்தால், நாம் நிதானமற்றவராக, இரக்கமற்றவராக இருப்போம்.
ஒரு எண்ணத்தை பிறர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்டு வரவைக்கும் முயற்சி கோபமாகிறது.
மனக் கட்டுப் பாடுடைய கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.

கோபம் நம்மைக் காட்டிக் கொடுக்கிறது. நமது எல்லையை அடையாளம் காட்டுகிறது. மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இவ்வுணர்வை நாம் காட்டாவிடில், திருப்தியின்றி, மனக் கசப்புடன் நாம் நிற்போம். இது மிகச் சிரமமானது. 

 கோபத்தை வெளிப் படுத்த வேண்டும்.
அது கசப்புணர்வாகி,உடலில் முடிச்சுகளாகிப், பெரிதாக வெடித்து கரடு முரடாக முதல், அதை வெளிப் படுத்துதல் ஆறுதலாகிறது.

ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.

மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.

கோபம் கொள்ளல் மகிழ்வுத்
தீபம் அழிக்கும், பிறர்
சாபம் நிறைத்து- மன
சாந்தி அளிக்கும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-10-2005.

  

 

                                       

32. ஒரு காதலர் தினமேன்…

இது அந்திமாலை இணையத்தளம் (Anthimaalai.blogspot.com) காலர்தினத்தன்று பிரசுரித்த எனது கவிதை . அவர்களது (சகோதரி பிருந்தாவின்) அலங்காரத்துடன் அப்படியே இங்கு போட்டுள்ளேன். இதன் மூலம் அவர்களிற்கு நன்றியைக் கூறுகிறேன்.

20-2-2012.

 

                               

41. மேதினியிலின்று மின்சாரமும்…..

 

மேதினியிலின்று மின்சாரமும்…..

(2006ல் சி.ஐ தொலைக் காட்சிக்காக என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

(கவிதையின்  ஒரு வரிக்கு சிறு விளக்கம் – சூரிய கிரகணம் வரும் போது நேரே சூரியனைப் பார்க்க முடியாது என்பதால், எங்கள் அப்பா உடைந்த கண்ணாடித் துண்டில் விளக்குப் புகையை நிரப்பித் தர அதனூடாகச் சூரியனைப் பார்த்தோம். முள் முருக்கம் இலையை இடித்து, அதன் சாறு பிழிந்து அதை அகண்ட பாத்திரத்தில் ஊற்றி, நிலத்தில் வைத்து அதற்குள்ளே சூரிய கிரகணம் பார்த்தோம், எமது பெரிய பனை வளவினுள்ளே – கிணற்றுள் நிலா பார்ப்பது போல. இனி கவிதையை வாசியுங்கள்)

டமை தவறாக் கண்ணியவாளன் – பிறர்
கருத்தை ஏற்காத கடும் உழைப்பாளன்.
விருப்புடன் தன் பணி செய்வான்.
வருணனுடணினைந்து வானவில் வளைப்பான்.
எத்தனை பெண்கள் மயங்குவார் இவனில்.
பத்தினிப் பெண்ணாய்ச்  சூரியகாந்தி – அவள்
சித்திரக் கண்ணிற்குள் இவனைப் பொதிப்பாள்.
முத்திரையும் இவன் பெயரோடு பதித்தாள்.

காதலான தாமரைப் பெண்ணாள் இவனைக்
கண்டதும் இதழ்கள் விரித்து மலர்வாள்.
கதிரவனின்றேல் இருட்டுலகம். இங்கவனைக்
காணலாம் முருக்கமிலைச் சாறில் காண்பதுவாக.
கடற்கரைக் காலைக் கதிரவன் வணக்கம்
உடற் பயிற்சியுடன் உரமான ஆரோக்கியம்.
ஆதியில் வணங்கிய முதற் தெய்வமிவனிடம்
மேதினியி லின்று மின்சாரமும் அள்ளுகிறார்.

ரில் கதிரவன் கனற் கதிரை
சீரிய மாதவக் கண்களாற் கூர்ந்து
நேரில் ஒரு மனிதன் பார்த்ததுண்டோ!
அரிய அதிசயம் கண்டேன் இங்கு!
நேரில் சந்திரனைக் காண்பது போல்
சூரியனையும் சுந்தரமாய்க் காணலாம் அதிசயம்!
நேரில் சூரியனை முதலாகக் கண்ட போது
பாரிய வியப்பு! கண்களையே நம்பவில்லை.

தினோராயிரம் நாமங்கள் இவனுக்காம்!
பதிந்த பெயர்களே ஒரு புதுக்கவிதையாகும்.
மாதிரிக்குச் சில துளிகள் கேளுங்கள்! ஓடாதீர்கள்!…
மாலி, மண்டிலம், எரிகதிர், எல்லி,
மிகிரன், வெய்யோன், ஞாயிறு, ஆதபன்,
மிலேச்சன், பாதன், பாமன், பகலோன்,
பிங்கலன், பிரமம், பேனன், இந்திரன்
பிரபாகரன், எயிறிலி, ககேசன், உதயன்.

கலவன், ககேந்திரன், கதிர், கமலபாந்தி
பானு, கஞ்சரன், கனலோன்,  கனலி,
பொன், ஆதவன், இரவி, வேதியன்
பகவன், நிசாரி, எல்லவன், பரிதி,
பாஸ்கரன், பதுமபந்து, பங்கயன், பதங்கன்,
பசதன், துங்கீசன், உச்சிக்கிழான், சதாகதி,
சம்பு, சுயம், சித்திரதன், சுடர்,
சுரன், சுரோத்தமன்….இன்னும்.!..இன்னும்.!..எத்தனையோ.!…

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2006.

 

                                   

                             

 

தொலைத்தவை எத்தனையோ. 6

  6

ஒவ்வொருவரும் தமது ஆரம்ப, அரிச்சுவடி ஆசிரியர்களைப் பற்றி விரிவாகக் கூறும் போதும், அவர்கள் பாசம், நேசம் என்று  விமரிசிக்கும் போதும் நான் ஏக்கமடைவேன், கவலையடைவேன்.

ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை அது. அன்று சுண்ணாம்பு, சீமெந்துச் சுவராலான கட்டிடம். கிடுகு ஓலையால் வேயப்பட்ட கூரையும் கொண்டது. நிலம் மண்ணாலானது. நாங்கள் இருந்து படித்தது வாங்கும் மேசையும் தான். சிலேட் இல்லாதவர்கள் மண்ணை அள்ளி மேசையில் போட்டு ‘அ’ னா எழுத வேண்டும்.

இன்று மகிந்த ராஐபக்ச வந்து சமீபத்தில் திறந்து வைத்த புதுக் கட்டிடத்தோடு கொண்ட பாடசாலை. பழைய கட்டிடம் இருக்கிறதோ தெரியாது. (ஆனால் சுவாமிநாதர் மண்டபம் இருக்கிறதாம்.)

ஐந்து வயதில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர்ப்பார்கள். எங்கள் பெரியம்மா எங்களைச் (பெரியப்பா வீட்டுப் பிள்ளைகளையும் சேர்த்து) சேர்க்கும் போது  எனக்கு 4 வயதை ஐந்து என்று கூறிச் சேர்த்தார்கள். சேர்த்த பின்பு தங்கள் வீட்டில் வந்து இதைக் கூறிப் பெரியம்மா சிரித்தார்கள். ( அது வேறு விடயம்)

எனது அரிவரி வகுப்பு வாத்தியார் ஊர்ப் பெண்மணி, நன்கு தெரிந்தவர் தான். அவரை நினைத்தால்….

”…ஏய்! இங்கே வா!…உனக்கு எத்தனை தரம் கூறுவது?
    நீ  என்ன செய்கிறாய்?…..”

போன்ற ஒருமை வார்த்தைகளே நினைவிற்கு வரும்.
இதில் தவறில்லை, நல்ல தமிழ் தானே  என்கிறீர்களா?….. சரி தான்.

நாங்கள் பிறந்ததிலிருந்து வாருங்கள், போங்கள், நீங்கள், நாங்கள் என்று மரியாதையாகப் பேசிப் பழகினோம். தெருவில் போகும் தெரியாதவர்களையும் அப்படித் தான் அழைத்துப் பேசுவோம். நாம் அப்படிப் பேசினால் அவர்கள் எம்மை ஒருமாதிரிப் பார்ப்பார்கள், அது வேறு விடயம்.

இங்கு பாடசாலையில் அரிவரி வாத்தியார் இப்படிப் பேசியதே ஒரு வெறுப்புப் போல தெரிந்தது. எனக்குப் பிடிக்கவே இல்லை.
நீ என்ன செய்கிறாய் என்று என்னைக் கேட்டால் இவ என்ன என்னை நீ என்கிறா என்பது போல பார்ப்பேன். இப்போ நினைத்தாலும் அது தான் நினைவில் வருகிறது. (நீ, வா, போ என்பது தான்.).

நெருக்கமான ஒரு தொடர்பு இருந்ததாக சிறிதும் நினைவே இல்லை.

ஒரு நாள் பாடசாலையில் அழுதபடி நின்றேன். அப்பப்பா(முருகேசு சுவாமிநாதர்) பாடசாலை நிர்வாகி (மானேஐர்) என்பதால் 10மணியளவில் மேற்பார்வைக்காக வந்து காரியாலய (பெரிய வாத்தியார்) அறையில் கையெழுத்துகள் இடுவார்.

பின்பு வகுப்பறைகளைச் சுற்றிப் பார்க்க வரும் போது நான் அழுதபடி நின்றதைக் கண்டார். ஏன் அழுகிறா என்ற போது ” என்னவோ தெரியாது அழுதபடி இருக்கிறா” என்றார் வாத்தியார். ”நான் கூட்டிப் போகிறேன்”  என்று கை பிடித்துக் கூட்டி வந்தார் வீட்டிற்கு.

அப்பப்பா (கண்ணாடியப்பா) கை பிடித்துத் தெருவிலே துள்ளித் துள்ளி நடந்து வந்ததும், என் அழுகை போன இடம் தெரியாததும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது நாலு, நாலரை வயதிருக்கும்.

இன்று அதே போல நான் பிள்ளைகளோடு 14 வருடங்கள் வேலை செய்தேன். அவர்களை ஆதரவாக அணைப்பதும், மடியில் இருத்தி பேசுவதும் என்று எவ்வளவு இனிமையான அனுபவங்கள்.

எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர.

தொலைத்தவை தான்.

காரை பெயர்ந்த நாவலர் கட்டிடச் சிறு பகுதி காண்கிறீர்கள்.

ஓட்டுக் கூரையிருக்கிறது, முன்பு கிடுகு ஓலை வேய்ந்திருந்தது. இது பக்கத் தோற்றம். பின்னர் கட்டப்பட்ட நாவலர் சிலை இது.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-2.2012.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2012/02/6_17.html

 

                             

 

31. காதலர் தினம் போதாது!..

காதலர் தினம் போதாது!..

 

இன்பமான அமுதென
இனிக்கின்ற தேனென
கனியாய்த்  தினமென
மனதுள் இனிப்பவனே.

தென்றல் குலவுவதாய்
யன்னல் நிலவாகிறாய்
மழைச் சாரலாய்
மனதுள் நுழைகிறாய்.

புவிமீதில் தமிழாடி
கவியோடு உறவாடி
குவித்திட்டாய் காதலாடி.
கூவியெனை அழைக்காது

தமிழ்சக்திக் காந்தத்தின்
உமிழ்சக்தியாற் கவிழ்ந்தேன்!!
மின்சக்தி அன்பினால்
என்சக்தி ஏற்றினாய்!

நெற்றியில் புரளும்
கற்றை முடிச்சுருளாலும்
முற்றாக என்னையும்
முழுதாகச் சுருட்டியவனே!

உன் கண்ணிலொளிரும்
கிண்ண மதுரசம்
மண்ணில் வாழும்
எண்ணம் எழுதிடும்!

உன்னைச் சரணடைந்தே
நன்று நன்றெனவே
கன்னல் வாழ்வினையே
என்னாளும் பெறுவோமே!

காதலர் தினமொரு நாள்
தோதல்ல!  போதாது!…
காதல் நாதமிசைப்போம்
காலமெல்லாம் வா!வா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-2-2012.

In Alaikal.com web site;-    http://www.alaikal.com/news/?p=96909

http://www.muthukamalam.com/verse/p863.html

இக்கவிதை 14-2-2012 செவ்வாய்க் கிழமை கவிதை பாடுவோம் நிகழ்வில் மாலை 19.00-20.00 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப் பட்டது.

 
 

27. வாழ்த்து.

jaghamani
Feb 11, 2012 @ 15:18:47

மறுபடியும் லிப்ஸ்ரர்- லைப்ஸ்ரர் விருதை சகோதரி இராஐராஜேஸ்வரி எனக்கு நேற்று  11-2- 2012 ல் அறிவித்தார்இப்படி:- 

”…விருது ஒன்று மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கிறது எமது பதிவில் தங்களுக்காக..

http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_11.html…”

எத்தனை விதமாக பரிசைச் செய்துள்ளார்.   பாருங்களேன்!!!….

     

இப்படிப் பல.  திறமைக்கு வாழ்த்துகள்.  இறை ஆசி கிட்டட்டும். சகோதரி யெகமணி அலையஸ் இராஐராஜேஸ்வரி

23. இது இரண்டாவது விருது. ( Liebster Blog).

    

இது  இரண்டாவது விருது.

 

ஒன்றும் புரியவில்லை!  யார் யாருக்கு விருது கொடுப்பது?

மகிழ்ச்சியா! மகிழ முடியவில்லை.

சங்கடமா! ஆம்!

சிறு பிள்ளைகள் விளையாட்டுப் போல இணையத் தளத்தில் விருது வழங்கல் நடக்கிறது.
அது எனக்கும் தரப்பட்டுள்ளது. நானும் யாருக்காவது கொடுக்க வேண்டுமாம்.

இது மிகச் சங்கடமானது. (இது இந்த இரண்டாவது விருது உணர்வு.

முதலாவதாக  முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது.  அதில் மிக மகிழ்வடைந்தேன். (2012.feb)

இது முதலாவது விருது.

சகோதரர் மதுமதியின் விருதுப் பட்டியலில் திரு. வே.நடனசபாபதி இடம் பெற்றார். இவர்

”..விருதின் விதிகளின் படி, நான் விருது தரும் அந்த மூன்று
வலைப்பதிவாளர்கள்.

1.    நாம் பேச நினைப்பதையெல்லாம் தான் பேசி, தினம்
பல்சுவை விருந்து படைக்கும் திரு சென்னை பித்தன்
அவர்கள்.

2.   நாட்டு நடப்பை சமூக கண்ணோட்டத்தோடு தரும்
திரு க.வாசுதேவன் அவர்கள்.

3.   தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய
தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.

விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!…”

லிப்ஸ்ரர் அல்லது லைப்ஸ்ரர் நாட்டுக்கு நாடு உச்சரிப்பு அவர்களது மொழிகளின் படி வேறுபடுகிறது. (Liebster  )என்றால்  –

அதற்கு ஜெர்மன் மொழியில்
பிரியமான அல்லது விருப்பமான எனப் பொருளாம்.

சகோதரர் மதுமதியின் வலையிலும்,  
http://writermadhumathi.blogspot.com/2012/02/blog-post.html

திரு.வே. நடனசபாபதியின் வலையிலும் http://puthur-vns.blogspot.com/விவரங்களை அறிய முடியும்.
இணைப்புகள் தந்துள்ளேன்.

எனது தெரிவாக 3 பேர்கள்….அவர்கள்..

1.திருமதி. மனோ. சாமிநாதன் :- (முத்துச் சிதறல் – http://www.muthusidharal.blogspot.com/)கலைகளும் சிந்தனையுமாய் பல்சுவை முத்துகள் படைக்கும் இவர் என்னைக் கவர்ந்தவர்.

2.மாலதி. :- (மாலதியின் சிந்தனைகள் – http://thmalathi.blogspot.com/)
மிக எளிமையான ஆக்கங்கள் படைத்து என்னைக் கவர்ந்தவர்.

3. சகோதரி கோமதி அரசு.:-  (திருமதி பக்கங்கள்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/)   இவரது  திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.

இனி இவர்கள் தங்கள் தெரிவில் 5 பேரோ, 3 பேருக்கு இதைக் கொடுக்கலாமாம்.

இவர்கள் மேலும் சிறப்படைந்து  திறமையில் புகழில் உயர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

விருது தந்தமைக்காக சகோதரர் திரு.வே. நடன சபாபதிக்கு மீண்டும் நன்றியைக் கூறுகிறேன். தங்களிடமிருந்து விருது பெற்றமைக்கு மகிழ்வடைகிறேன். 

 வளர்க!, வாழிய! நீடு

 

                                                                                

 

 

 

 

 

 

Previous Older Entries