இல்லறத் துணை. 23

வாழ்வியற் குறட்டாழிசை. 23

இல்லறத் துணை

ல்லறத் துணை பெண் மட்டுமன்று!
இருவருமே ஒருவருக்கொருவராவர்.

ல்ல பண்புடை கணவன்  மனைவியே
இல் வாழ்வின் ஆபரணம்.

ற்புடைமையை ஆணும் பெண்ணும் கட்டாயம்
ஏற்றமுடன் காக்க வேண்டும்.

ற்புடைய கணவன் மனைவிக்கு வாய்ப்பது
வெற்றியுடை அழுக்கற்ற வாழ்வு.

சிக்கனம், புகழ் காத்தலில் இருவருமே
தக்கபடி செயலுறுதல் தேவை.

றையற்ற கணவன் மனைவி என்றும்
நிறைவோடு தலையுயர்த்தி வாழலாம்.

ல்ல மனைவி இருந்தும் கணவன்
நல்லவனல்லால் வாழ்வு ஒளிராது.

ல்ல கணவனிற்கு வாய்க்கும் மனைவி
பொல்லாதவளானால் வாழ்வு  பாழ்.

வீரமும் காதலும் கை கோர்த்தால்
தீரமுடை வாழ்விற்குத் துணை.

ருவரை ஒருவர் தொழ வேண்டாம்
இருவரும் உண்மையாக வாழ்ந்தால்

வாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண
வாழ்வு பிள்ளைகளிற்கு முன்மாதிரி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-2-2012.

  

                                  

 

22 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  பிப் 01, 2012 @ 09:17:25

  எளிய,. இனிய புதுக் குறள்கள் அருமை. மிக ரசித்தேன். புகழ்சேர வாழி நீவிர் என வாழ்த்துகிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 01, 2012 @ 15:47:07

   அன்புச் சகோதரா தங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி.ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. kalakumaran
  பிப் 01, 2012 @ 10:06:15

  இல்லாள் எனும் ஒருபதம் ஒருங்கே சேர்த்திருக்கலாம்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 01, 2012 @ 15:44:19

   Here you goes again….வள்ளுவர் வாழ்க்கைத்துணை என்றால் மனைவி என்று தான் குறிப்பிட்டார். அது அந்தக் காலம். நான் கூறுவது பெண்ணுக்கும் ஆண் துணை தானே.. ஆகையால் இருவருமே ஒவ்வொருவருக்குத் துணை என்று எழுதினேன். இல்லாள் என்றால், இல்லவன் – இல்லான் என்றும் கூற வேண்டும். நன்றி அன்புள்ளமே. வந்து கருத்திட்டமைக்கு மகிழ்ச்சி. இறை அருள் கிட்டட்டும்.கருத்திடலிற்கு நன்றி.

   மறுமொழி

 3. ரெவெரி
  பிப் 01, 2012 @ 16:23:32

  இருவருமே ஒவ்வொருவருக்குத் துணை…உண்மை தான்…அது எந்தக்காலத்துக்கும் சரியானது தானே…

  மறுமொழி

 4. rathnavelnatarajan
  பிப் 01, 2012 @ 17:11:19

  நல்ல கருத்துகள்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 5. sravani
  பிப் 02, 2012 @ 04:09:09

  நல்ல , அருமையான ஈற்றடிகள் .
  பகிர்விற்கு நன்றி .

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 02, 2012 @ 07:27:24

   அன்பின் சகோதரி மிக்க மகிழ்வும், நன்றியும் தங்கள் இனிய வரவிற்கும், கருத்துப் பகிர்விற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. ramani
  பிப் 02, 2012 @ 16:28:27

  அருமையான பதிவு
  கணவன் மனைவி என இருவருக்குமாக
  சொல்லிப் போனவிதம் அருமை
  தங்கள் பின்னூட்ட லிங்க் மூலம்
  நேர்டியாக தங்கள் பதிவுக்கு வர இயலவில்லை
  திரட்டிக்குத்தான் போகிறது
  முடிந்தால் சரிசெய்யவும்
  பின்னுட்டமிடுவோருக்கு அது வசதியாய் இருக்கும்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2012 @ 07:08:05

   எனக்கு சில வெளை வேட்பிரஸ் மக்கர் பண்ணும். அதனால் தான் மாறியும் வருவதுண்டு. எனக்கும் ஆசை பெயரைச் சொடுக்க வலை வரவேண்டும் என்று. கருத்திட படமே வராது. ஒரு ஆச்சரியக் குறி வரும்.(வேட்பிரஸ், என்பதால். இது எனக்கு மட்டும் அல்ல . வேறு ஆட்களையும் கவனித்துள்ளேன்.) அதனால் தான் எனது வலை முகவரியைத் தவறாது எழுதுவது. கூகிளில் ஒட்டியாவது வரட்டும் என்று. வசதியீனத்திற்கு வருந்துகிறேன். நிற்க.
   தங்கள் வருகைக்கும், வரியிடலிற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 7. வசந்தா சந்திரன்.
  பிப் 02, 2012 @ 22:41:42

  ஒரு கணவன் மனைவி எப்படியும் வாழலாம் என்றில்லாமல், இப்படி வாழ்ந்தால் எம் சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டு.

  வாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண
  வாழ்வு பிள்ளைகளிற்கு முன்மாதிரி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2012 @ 07:14:17

   ஆமாம் சகோதரி திருவள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம் என்று மனைவி பற்றியே எழுதியுள்ளார். இன்றைய காலத்திற்கு இது பொருந்தவே பொருந்தாது. என் கணவரோடு இது பற்றிப் பேச ”ஆணாதிக்கம்” தான் என்று கூறினார். உண்மை தானே. நிற்க.

   தங்கள் வரவு ஆச்சரியம் தந்தது. மிக மகிழ்ச்சி. மிக்க நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. மகேந்திரன்
  பிப் 04, 2012 @ 01:52:56

  /////ஒருவரை ஒருவர் தொழ வேண்டாம்
  இருவரும் உண்மையாக வாழ்ந்தால்////

  எனக்குப்பிடித்த குறள் இது…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 15:55:32

   உன்னைத் தெய்வமாகத் தொழுகிறேன் என்றெல்லாம் முன்பு கூறினோம் தானே , அதை நினைத்தேன். இக்காலத்தில் அது எல்லாம் சரிவராது. வள்ளுவரே வாழ்க்கைத் துணைநலம் என்று மனைவி பற்றியே கூறியுள்ளார். அதெல்லாம் ஆணாதிக்கம் தான் என்பது என் கருத்து. நன்றி சகோதரா உங்கள் கருத்திற்கு.மிக மிக மகிழ்ச்சி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 9. kogilan
  பிப் 05, 2012 @ 13:35:37

  Nice for you all artical

  மறுமொழி

 10. கோவை கவி
  பிப் 05, 2012 @ 15:11:05

  Thank you so much for your presence and your words. Happy to read this Kogilan. . God bless you all.

  மறுமொழி

 11. பழனிவேல்
  பிப் 06, 2012 @ 13:42:21

  “வாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண
  வாழ்வு பிள்ளைகளிற்கு முன்மாதிரி.”

  நிதர்சமான உண்மை.
  இருமனங்கள் இணைவதே திருமணம்.

  மறுமொழி

 12. abul kalam
  பிப் 08, 2012 @ 20:35:31

  மனைவியென்னும் மாதரசி நாடும் அன்பை
  மகிழ்வுடனே மதித்திடுவோம் அவளின் பங்கை
  நினைவிலென்றும் நீங்காது நெஞ்சில் மேவும்
  நித்தமவள் வழங்கிவரு மின்பம் யாவும்
  சுனைநீராய் வற்றாமல் தியாகம் செய்வாள்;
  சுரக்குமன்பால் மறவாமல் நியாயம் செய்வோம்!
  பனைமரமாய் நற்பலன்கள் தருவாள் என்றும்
  பகுத்தறிவைப் பயன்படுத்திச் செய்வோம் நன்றி

  சலவையையும் சளைக்காமல் செய்வாள்;ஊணும்
  சமைத்திடுவாள்; இல்லத்தில் தூய்மை காணும்
  நிலவினைப்போல் வெளிச்சமாக்கி வைத்துக் காத்து
  நிற்குமவள் செயலுக்குச் சொல்வோம் வாழ்த்து
  புலமையுடன் கூரறிவும் பெற்ற இல்லாள்
  புத்தியுடன் கணவனுக்கு வழியும் சொல்வாள்
  கலவரமாய் முகத்தினில் ரேகைப் பார்த்து
  கவலைகளும் போக்கிடுவாள் அன்பை ஈந்து

  இல்லாளை மதிப்போர்க்கு வாழ்க்கை இன்பம்
  இல்லாத சந்தேகம் கொண்டால் துன்பம்
  பொல்லாதப் பழிகளையும் நம்ப வேண்டா
  பொய்சொல்லி ஆபத்தில் சிக்க வேண்டா
  நல்லோராய்க் குழந்தைகள் வளர வேண்டி
  நாடோறும் கஷ்டங்கள் யாவும் தாண்டி
  சொல்லொண்ணாப் பொறுமையினை நெகிழ்ந்து யோசி
  சொர்க்கமெனக் கொண்டாடி மகிழ்ந்து நேசி

  “கவியன்பன்” கலாம், அதிராம்படினம்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 21:23:52

   மிக நன்றி சகோதரா. தங்கள் அன்பான வருகைக்கும், நீண்ட அருத்தமுடை கருத்திடலிற்கும் மிக மகிழ்வும், நன்றியும்.இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: