29. வித்துவத்துவம்.(photo&poem)

 

வித்துவத்துவம்.

அறிவிற் சிறியோரை
குறிப்பாக மதித்து
சிறிதேனும் பேணாதோர்
நெறியான வித்தகரல்லர்.

சொத்தாகப் புகழும்
சித்திக்க எண்ணும்
பித்தான மனமும்
வித்துவம் அல்ல.

வித்துவப் புலவரென
சத்தமாய் மொழியாதீர்! (மொத்தமாய்க் கணிக்கும்)
பாத்தியதை பிறரால்
ஒத்திட வேண்டும்.

 பத்தும் தெரியுமென
மொத்தமாய்ப் புலம்பும்
வித்தகச் செருக்கும்
உத்தமம் அல்ல.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-2-2012.

வித்தவம் பிறரை
சத்கமாய்ச் சீவுதலின்றி
அத்தக(அழகு பொருந்த) அறிவுடன்
உத்தமமாய் இறங்கலாம்.

வித்துவம் பிறருக்கும்
அத்தராய் மணக்கும்
எத்தனம் எடுக்கலாம்.
சித்திப்பது நன்மையாகும்.

பத்தும் தெரியுமென்ற
வித்தகச் செருக்கும்
மெத்தனமான தலைப்பாரமும்
உத்தமமற்ற இயக்கம்.

 

                           

Advertisements

29 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  பிப் 03, 2012 @ 06:08:04

  பத்தும்தெரியுமென மொத்தமாய் புலம்பும் வித்தகச் செருக்கும் உத்தமம் அல்ல… அருமையாகச் சொன்னீர்கள். இந்தக் கவி இனித்தது. ரசிக்க வைத்தது.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2012 @ 07:41:51

   சகோதரா ராஜேஷ்குமாரின் இடுகை வாசித்த நினைவு ஓடிக் கொண்டிருக்கும் போது உங்கள் பின்னூட்டம் வந்துள்ளது. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   (சிலர் பீத்துவது தெரிகிறது. தன்னைப் பற்றித் தானே புழுகக் கூடாது . மற்றவர்கள் கூற வேண்டும். அது தானே உண்மை.)

   மறுமொழி

 2. Kowsy
  பிப் 03, 2012 @ 07:31:32

  படிக்கப் படிக்க பண்பும் வளரும். பணிவும் வளரும். வித்தகரென புலம்பித் திரிவோர் குறைகுடம் எனப் புரிந்து கொள்ளுங்கள் . தமக்குத் தெரிந்ததை கூறுபவர்களை தலை சாய்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும் . நாமே எம்மைப் பற்றிப் பூரணமாகப் புரிந்து கொள்ளாமல் புலம்பித் திரிபவர்களைப் பாவம் என்று சொல்லி விட்டுவிட்டு நமது வேலையை நாமே பார்க்க வேண்டியதுதான் . உரைக்கச் சொல்லிய கவிதை

  மறுமொழி

 3. பிரபுவின்
  பிப் 03, 2012 @ 11:25:34

  “வித்துவப் புலவரென
  சத்தமாய் மொழியாதீர்!
  பாத்தியதை பிறரால்
  ஒத்துக்கொள்ள வேண்டும்”

  நிஜமான உண்மை சகோதரி.அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  மறுமொழி

 4. ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
  பிப் 03, 2012 @ 11:39:35

  பத்தும் தெரியுமென
  மொத்தமாய்ப் புலம்பும்
  வித்தகச் செருக்கும்
  உத்தமம் அல்ல.

  அற்புதமான ஒரு பாடுபொருள்!!
  வாழ்த்துக்கள் அம்மா!!!

  இது எனக்கும் கொஞ்சம் இருக்கு.. இனிமேல் குறைத்துக் கொள்ளுகிறேன்!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 03, 2012 @ 15:57:13

   ஓ! தங்களிற்கும் இருக்கா!..நான் வேறு இடத்தில் கண்டேன். அதன் பலனே இக்கவிதை. ஏன் இப்படி புலம்புவார்களோ தெரியாது. மிக்க நன்றி தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ரெவெரி
  பிப் 03, 2012 @ 14:38:16

  பத்தும் தெரியுமென மொத்தமாய் புலம்பும் வித்தகச் செருக்கும் உத்தமம் அல்ல… //

  அருமையாகச் சொன்னீர்கள் சகோதரி….

  மறுமொழி

 6. oppilan mu.balu
  பிப் 03, 2012 @ 15:52:00

  உண்மைதான் ..’தான் ‘ என்ற அகந்தையில் ….தனக்கே எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு வீணாய் அலைபவர்கள் அதிகம் ..! சரியாகச் சொன்னீர்கள் ..சகோதரி ..!

  மறுமொழி

 7. மகேந்திரன்
  பிப் 04, 2012 @ 01:48:47

  நாளும் தெரிந்தவரெல்லாம் நான்முகன் அல்ல…
  பத்தும் தெரிந்தவன் பரமசிவன் அல்ல…

  நெஞ்சில் செருக்கு குடியேறிவிட்டால்.
  உண்ணறிவு மடமையாகும்..

  நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல
  சொல்லியுள்ளீர்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 04, 2012 @ 07:48:29

   சகோதரா மகேந்திரன் உங்கள் அன்பான வரவு மகிழ்ச்சி தந்தது. கருத்து இன்னும் மகிழ்ச்சி தந்தது. என் மனமார்ந்த நன்றி தங்களிற்கு உரித்தாகுக. ஆண்டவன் அருனும் தங்களிற்குக் கிடைப்பதாக.

   மறுமொழி

 8. ananthu
  பிப் 05, 2012 @ 13:48:48

  அருமை !

  மறுமொழி

 9. rathnavelnatarajan
  பிப் 05, 2012 @ 16:58:40

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. jaghamani
  பிப் 05, 2012 @ 18:16:05

  பத்தும் தெரியுமென
  மொத்தமாய்ப் புலம்பும்
  வித்தகச் செருக்கும்
  உத்தமம் அல்ல.

  கற்றது கைம்மண்ணளவு தானே!
  செருக்கெதற்கு வந்தது???

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 05, 2012 @ 19:03:57

   ”…கற்றது கைம்மண்ணளவு தானே!
   செருக்கெதற்கு வந்தது???…”
   ஆனால் வருகிறதே! என்ன செய்வது!….

   சகோதரியின் வருகையும், கருத்துப் பரிமாறலும் மிக மகிழ்வுடைத்து. மிக்க நன்றி உரித்தாகுக. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. Kavialagan
  பிப் 06, 2012 @ 06:09:09

  Supper

  மறுமொழி

 12. seimathi
  பிப் 06, 2012 @ 09:44:56

  பத்தும் தெரியுமென
  மொத்தமாய்ப் புலம்பும்
  வித்தகச் செருக்கும்
  உத்தமம் அல்ல…

  அறிவிற் சிறியோரை
  குறிப்பாக மதித்து
  சிறிதேனும் பேணாதோர்
  நெறியான வித்தகரல்லர்

  அழகான கருத்தை மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள்
  விதம் விதமாய் சிந்தித்து
  வித்துவத்தையும் அழகாய் தந்துள்ளீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 18:30:13

   நான் நன்றாகக் குளம்பிவிட்டேன் இது ஆணா, பெண்ணா என்று ஏனவே பொதுவாக அன்புள்ளம் என்று எழுதினேன். வேடிக்கை தானே தர்சி! இரண்டு கருத்துப் பதில் தேவையில்லைத் தானே. மிக் நன்றியும் மகிழ்ச்சியும் இந்தக் கூத்திற்கு. யோக் தான்.

   மறுமொழி

 13. Tharshi
  பிப் 06, 2012 @ 09:49:56

  பத்தும் தெரியுமென
  மொத்தமாய்ப் புலம்பும்
  வித்தகச் செருக்கும்
  உத்தமம் அல்ல…

  அறிவிற் சிறியோரை
  குறிப்பாக மதித்து
  சிறிதேனும் பேணாதோர்
  நெறியான வித்தகரல்லர்

  அழகான கருத்தை மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள்
  விதம் விதமாய் சிந்தித்து
  வித்துவத்தையும் அழகாய் தந்துள்ளீர்கள்

  செய்மதி என்பதும் என்னோட பெயர்தான்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   பிப் 06, 2012 @ 18:00:35

   ஹேய்! கள்ளி தர்சி! நான் நினைத்தேன் மின்னஞ்சலிடும் போது. ஆயினும் இதென்னடாப்பா ஆணா, பெண்ணா எதற்கும் பொதுவாக அன்புள்ளம் என்று அழைப்போமே என்று எழுதினேன்.
   மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் கருத்திற்கும், வருகைக்கும். இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. பழனிவேல்
  பிப் 06, 2012 @ 13:32:04

  அருமையான விடயத்தை அழகாய் சொன்னிர்கள்…

  “பத்தும் தெரியுமென
  மொத்தமாய்ப் புலம்பும்
  வித்தகச் செருக்கும்
  உத்தமம் அல்ல.”

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   பிப் 06, 2012 @ 18:02:31

   சகோதரா பிஸியா? அடிக்கடி காணோமே. சும்மா கேட்டேன். மிக மகிழ்வும், நன்றியும் வந்து கருத்திட்டதற்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. dhanasekaran10
  பிப் 07, 2012 @ 13:52:48

  தலையில் கொட்டுவது போல் ஒரு கவிதை வாழ்த்துகள் தோழி

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 07, 2012 @ 15:52:26

   மிக்க நன்றி சகோதரா. தங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்ச்சி. மிக்க நன்றியும் கூட. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: