21. சந்தப் பாடல்கள் -1

சந்தப் பாடல்கள் -1

(23-5-2004 ல் இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா வில் ஒலிபரப்பானது)

சந்தப் பாடல்கள் திறமைக்கு ஊக்குவிப்பு.

தொட்டிற் பாடல், தாலாட்டுப்பாடல்கள் இனிய ஓசை நயம், அழகியலும் கொண்டது. இது நல்ல தாள லயத்தோடு பாடப் படும் போது, செவிக்கு இதமாகிக் காதின் இயக்க சக்தியைக் கூர்மையாக்குகிறது.

தால் என்றால் நாக்கு.
ஆட்டுதல்– நாவை அசைத்தல், ஆட்டுதல், தால் ஆட்டுதல்.
ஆராட்டுதல், தாலாட்டுதல் ஒரே கருத்துடைத்து.
ஆதி காலத்தில் (பழங்குடியினர்) நாவை அசைத்து ஆட்டித் தானே முதலில் ஒலி எழுப்பினர்.

எனது அம்மம்மா ஆராட்டுதல் என்றே கூறினார்கள். குழந்தை அழுதால் கொஞ்சம் ஆராட்டுங்களேன் என்பார்.

…ராராரோ…ராராரோ…
ஆராரோ ஆரிவரோ…
அடித்தாரைச் சொல்லி..அழு!”…

 என்று…அந்த அந்த நிலைமைகளை வைத்து இட்டுக் கட்டி, ஆனால் சந்தமுடன் பாடப் படுவதுமாகிறது தாலாட்டு.

 
இப்படிக் கேட்டுப் பழகும் அனுபவம் பிற்காலத்தில் இசை பயில்வதில் குழந்தைகளின் திறமையையும், பாடல் இயற்றும் திறனையும் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

சிரமப் பட்டு மனதில் பதிக்காது, தானாகக் காது வழி புகுந்து, இதயத்தில் இறங்கும் இப் பாடல்களால் பிள்ளைகளின் பிற்காலம் மிகச் செழிப்பாகும் என்று மனவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மூன்று வயது முதல் ஏழு வயதுக்குரிய பிள்ளைகளிற்கு ஓசை நயம் செறிந்த பாடல்கள் மிகச் சுலபமாக மனதுள் இறங்குகின்றன. இந்த எளிய ஓசை நயத்தால், சொற்களுடன் மனம் இலயித்து  ஈடுபடுகிறது. சொல்லின் தொடர்பால் கருத்தோடு மனம் இணைகிறது. அறிந்த பொருட்களின் கருத்துடன், தான் அறியாத பொருளின் கருத்தையும் அறியும் வாய்ப்பைப் பிள்ளைகளிற்குத் தருகிறது.

உதாரணமாக:-
                சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
                சந்தனச் சிலையே சாய்ந்தாடு
                கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
                கண்ணின் மணியே சாய்ந்தாடு.

                குண்டு மணியே   சாய்ந்தாடு
                குயிலே மயிலே சாய்ந்தாடு
                அன்னக் குஞ்சே   சாய்ந்தாடு
                அம்மா மடியில் சாய்ந்தாடு

இது எளிய நடைச் சந்தப் பாடல். குழந்தை இலக்கியமாகும். பல தடைவை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்புத் தராதவை. இது குழந்தைகளின் பிற்கால பாடசாலை இலக்கிய அனுபவத்திற்கு அடிப்படையாகிறது.

(இரண்டாவது அங்கம் அடுத்த முறை தொடரும்.)
ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

                                        

 

Advertisements

21 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  பிப் 06, 2012 @ 06:08:27

  Arumai

  மறுமொழி

 2. Madhu Mathi
  பிப் 06, 2012 @ 06:51:38

  ஆகா..அருமை..சந்தப் பாடல்களைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி..சந்தப் பாடல்களே தமிழை தாலாட்டிக் கொண்டிருக்கிறது. வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. munaivendrinaasureshkumar
  பிப் 06, 2012 @ 07:23:13

  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. sravani
  பிப் 06, 2012 @ 08:22:17

  சந்தப்பாடல்கள் குழந்தைகளுக்கு
  மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் இன்றும் பிடிக்கிறது.
  சிறப்பான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 17:38:08

   சகோதரி! தங்களிற்குப் பதிலிட பதில் என்பதை அழுத்துவதற்குப் பதிலாக தங்கள் பெயரை அழுத்தி விட்டேன். அது உங்கள் வலையில் இறக்கிவிட்டது. அட வந்தது தான் வந்தோமே என்று உருட்டினால், திகைத்து விட்டேன் தாங்கள் என் ” வேதாவின் கவிதைகள்”- வாசிப்பதாக. மிக்க நன்றி சகோதரி.3rd book ” உணர்வுப் பூக்களும்” கவிதைகள் தான். எனதும் கணவரது கவிதைகளும்.
   இந்தக் கருத்திடலிற்கும், வருகைக்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. jaghamani
  பிப் 06, 2012 @ 09:17:23

  சிரமப் பட்டு மனதில் பதிக்காது, தானாகக் காது வழி புகுந்து, இதயத்தில் இறங்கும் இப் பாடல்களால் பிள்ளைகளின் பிற்காலம் மிகச் செழிப்பாகும் என்று மனவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்

  அருமையான பகிர்வு…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 17:44:06

   மிக நன்றியும் மகிழ்ச்சியும் சகோதரி தங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். தெய்வத்தின் துணை கிட்டட்டும்.

   மறுமொழி

 6. seimathi
  பிப் 06, 2012 @ 09:36:13

  அழகான படைப்பு

  மறுமொழி

 7. பழனிவேல்
  பிப் 06, 2012 @ 13:36:15

  “சந்தப் பாடல்கள்”

  சந்ததிகள் மறந்து கொண்டிருக்கும் பாடல்கள்.
  சிறப்பான பகிர்வு…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 17:49:12

   சகோதரா! மிக நன்றியும் மகிழ்ச்சியும் தங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
   உண்மை தான் சந்ததிகள் மறக்கும், அறியாது அழியப் போகும் சங்கதியும் கூட.
   தெய்வத்தின் துணை கிட்டட்டும்.

   மறுமொழி

 8. rathnavelnatarajan
  பிப் 06, 2012 @ 14:59:06

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 06, 2012 @ 17:51:23

   நன்றி ஐயா!! மிக மகிழ்ச்சியும் கூட தங்கள் இனிய வருகைக்கும், பின்னூட்டத்திற்கும்.
   தெய்வத்தின் துணை கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ரெவெரி
  பிப் 07, 2012 @ 19:59:03

  பத்தாண்டுகள் ஆனாலும் …சுவை குன்றவில்லை… வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

 10. கோவை கவி
  பிப் 08, 2012 @ 04:39:36

  மிக்க நன்றி சகோதரா, உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும். யான் மிக மகிழ்வடைகிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 11. கோவை கவி
  பிப் 08, 2012 @ 20:34:59

  Ambalavanar Sriskantharajah wrote:-
  சந்தப் பாடல்கள்… மிகவும் அற்புதமாக இருகிறதே!! தொடருங்கள்!!!
  வாழ்த்துக்கள்!!….

  மறுமொழி

 12. ramani
  பிப் 08, 2012 @ 23:54:49

  சந்தப் பாடல்கள் குறித்த அறிமுகம்
  மிகச் சிறப்பு
  சந்தப் பாடல்களுக்கு ஒரு நல்ல
  வழிகாட்டியாய் உதாரணமாய் தங்கள்
  கவிதைகள் அனைத்தும் இருப்பது
  எங்களைப் போன்றவர்களுக்கு
  ஒரு வரம்
  பகிர்வுக்கு நன்றி
  தொடர வாழ்த்துக்கள்
  (தற்போது லிங்க் நேரடியாகக் கிடைக்கிறது நன்றி )

  மறுமொழி

 13. கோவை கவி
  பிப் 09, 2012 @ 07:50:29

  மிக்க நன்றி சகோதரா தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: