22. சந்தப்பாடல்கள் – 2

 

சந்தப்பாடல்கள் – 2

(இது இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா நிகழ்வில் 23-5-2004 ல் ஒலி பரப்பானது.)

சந்தப்பாடலான தாலாட்டின் அடிப்படை பிற்காலப் பாடசாலையின் இலக்கிய அனுபவத்திற்கு அத்திவாரமாகிறது.

சந்தப் பாடல், கும்மிப் பாடல், சிந்துப் பாடல் என்று இசைப் பாடல்கள் மூன்று வகையாகிறது. சந்தப் பாடலில் சந்த ஓசையே முக்கியமாகிறது. (இதனுள் கீர்த்தனம் என்பதையும் இணைக்கின்றனர். இது ஒரு பெரிய ஆய்வுக் களமாகும்.) 

”..குழந்தைகள் தாய்மாரின் தாலாட்டில் கண்ணயர்ந்து துயில்கின்றன. இவ்வகைப் பண்பட்ட இன்னோசையின் அமைதியைத் தமிழிலக்கணத்தில் ‘வண்ணம்’ என்பர். தமிழில் நூறு வகை வண்ணம் உண்டு;. ஓவ்வொன்றும் செவிக்குணவு  தருவன.” என்று யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கூறுகிறார்.
(அருணகிரிநாதர் திருப்புகழும் வண்ணச் சந்தமுடையது.)
மூன்றிலிருந்து ஏழு வயதுக் குழந்தைகளுக்கு நகை, வியப்பு, அன்புச் சுவை மலிந்த பாடல்கள் மிக வாய்ப்பானவை என்றும் இவர் கூறியுள்ளார்.

 

இவ்வகைச் சந்தப் பாடல்களைக் குழந்தைகளுக்கு அனைவரும் பாடி பல திறமைகளுக்கு தூண்டுதலைக் கொடுப்போமாக.

எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்குரிய பிள்ளைகளுக்கு விவரணப்பாடல்கள், வண்ணப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்களையும் கொடுக்கலாம். இதை அவர்கள் விரும்புவார்கள்.

பதின்நான்கு முதல் பதினெட்டு வயதுப் பிள்ளைகள் காதல், வீரச் சுவையை மிக விரும்புவார்கள். அன்பு, சத்தியம், நேர்மை, அடக்கம், பொறுமை, ஒற்றுமை முதலிய பண்புகள் வளரும் பருவம் இதுவாகும்.

நீதிப் பாடலுள் அநீதிகள் பொதிந்த பால்களையும், கதை நிகழ்ச்சிப் பாடல்களையும் கற்றுக் கொடுத்தல் நன்மை தரும். பாடல்களை மனப்பாடம் செய்வதற்கும் பொருளறிந்து பாடி மகிழவும் இந்தக் காலம் ஏற்ற பருவமாகும்.

முற்றும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

 

                                        

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Tharshi
  பிப் 08, 2012 @ 08:05:59

  எத்தனைதடவை படித்தாலும் அலுக்காத படைப்புகள் தங்களுடையவை…அழகான படத் தெரிவுகளுடன் சந்தப்பாடல்கள் 2 நன்றாக உள்ளது.

  மறுமொழி

 2. rathnavelnatarajan
  பிப் 08, 2012 @ 14:05:42

  நல்ல பதிவு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 3. jaghamani
  பிப் 08, 2012 @ 14:28:38

  (அருணகிரிநாதர் திருப்புகழும் வண்ணச் சந்தமுடையது.)

  சந்தகவி என்றே புகழ் பெற்றவர் அருணகிரி…

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 08, 2012 @ 17:10:48

   கண்ணன் பாடலும் அப்படி இருக்கலாம். சரியாகத் தெரியாது கூறுவது சரியல்ல . மிக மகிழ்ச்சி சகோதரி தங்கள் வரவிற்கும், பின்னூட்டத்திற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. Madhu Mathi
  பிப் 08, 2012 @ 17:02:01

  சந்தப்பாடல்களைப் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து வருகிறேன்..
  பகிர்வுக்கு நன்றி….

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 08, 2012 @ 17:12:23

   நேர நெருக்கடியிலும் இங்கும் வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும் சகோதரா..

   மறுமொழி

 5. சக்தி சக்திதாசன்
  பிப் 08, 2012 @ 20:41:52

  அன்பினிய சகோதரி,
  அருமையான பதிவு, அனுபவமிக்க படைப்பு. தொடரட்டும் உங்கள் உன்னதமான பணி.
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 6. atchaya
  பிப் 09, 2012 @ 13:58:45

  தங்களின் ஆக்கம் அருமையாக உள்ளது.
  தளத்திற்கு தொடர்ந்து வருகை தர வைக்கும் வண்ணம் பதிவுகள் அமைந்திருப்பது சிறப்பு. நன்றி! தொடருங்கள் தொடர்கின்றோம்.!
  http://atchaya-krishnalaya.blogspot.com

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 08:11:50

   சகோதரி மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் உமது வருகைக்கும், கருத்திடலிற்கும். நெடுகலும் வாருங்கள் நானும் தங்களிடம் வருவேன். ஒருவரையொருவர் ஊக்குவிக்கலாம். ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 7. மகேந்திரன்
  பிப் 10, 2012 @ 11:17:45

  சந்தம் தவறா தாலாட்டின் சுவை
  சந்தம் தவறாது உங்கள் பதிவிலும்…

  மறுமொழி

 8. கோமதிஅரசு
  பிப் 11, 2012 @ 10:57:01

  நீதிப் பாடலுள் அநீதிகள் பொதிந்த பால்களையும், கதை நிகழ்ச்சிப் பாடல்களையும் கற்றுக் கொடுத்தல் நன்மை தரும். பாடல்களை மனப்பாடம் செய்வதற்கும் பொருளறிந்து பாடி மகிழவும் இந்தக் காலம் ஏற்ற பருவமாகும்.//

  பொருளறிந்து பாடுவது நல்லது.
  அருமையா சொல்லி இருக்கிறீர்கள்.
  நன்றி சகோதரி.

  மறுமொழி

 9. முகில் தினகரன்
  நவ் 03, 2012 @ 07:25:35

  இன்றுதான் இந்த வலைத் தளத்தில் வாசித்தேன் …பிரமித்தேன்.அற்புதம்..

  மறுமொழி

  • கோவை கவி
   நவ் 03, 2012 @ 14:59:47

   மிக நன்றி சகோதரா. தங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலிற்கும்.
   மிக மகிழ்வும், நன்றியும்.
   இன்னும் வாருங்கள் கருத்துத் தாருங்கள்.
   கிழமையில் இரண்டு -3 ஆக்கங்கள் போடுவேன்.
   பயணக்கதைகளும்(விவரணம்) 4. உள்ளது.
   வாசித்துப் பாருங்கள் சுவையானது.
   இறை ஆசி கிட்டட்டும்

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: