23. இது இரண்டாவது விருது. ( Liebster Blog).

    

இது  இரண்டாவது விருது.

 

ஒன்றும் புரியவில்லை!  யார் யாருக்கு விருது கொடுப்பது?

மகிழ்ச்சியா! மகிழ முடியவில்லை.

சங்கடமா! ஆம்!

சிறு பிள்ளைகள் விளையாட்டுப் போல இணையத் தளத்தில் விருது வழங்கல் நடக்கிறது.
அது எனக்கும் தரப்பட்டுள்ளது. நானும் யாருக்காவது கொடுக்க வேண்டுமாம்.

இது மிகச் சங்கடமானது. (இது இந்த இரண்டாவது விருது உணர்வு.

முதலாவதாக  முனைவர் இரா. குணசீலன் அவர்கள் தந்த சிந்னைச் சிற்பி விருது.  அதில் மிக மகிழ்வடைந்தேன். (2012.feb)

இது முதலாவது விருது.

சகோதரர் மதுமதியின் விருதுப் பட்டியலில் திரு. வே.நடனசபாபதி இடம் பெற்றார். இவர்

”..விருதின் விதிகளின் படி, நான் விருது தரும் அந்த மூன்று
வலைப்பதிவாளர்கள்.

1.    நாம் பேச நினைப்பதையெல்லாம் தான் பேசி, தினம்
பல்சுவை விருந்து படைக்கும் திரு சென்னை பித்தன்
அவர்கள்.

2.   நாட்டு நடப்பை சமூக கண்ணோட்டத்தோடு தரும்
திரு க.வாசுதேவன் அவர்கள்.

3.   தினம் எளிய நடையில் கவிதையையும், புதிய
தகவல்களையும் தரும் திருமதி வேதா.இலங்காதிலகம்
அவர்கள்.

விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!…”

லிப்ஸ்ரர் அல்லது லைப்ஸ்ரர் நாட்டுக்கு நாடு உச்சரிப்பு அவர்களது மொழிகளின் படி வேறுபடுகிறது. (Liebster  )என்றால்  –

அதற்கு ஜெர்மன் மொழியில்
பிரியமான அல்லது விருப்பமான எனப் பொருளாம்.

சகோதரர் மதுமதியின் வலையிலும்,  
http://writermadhumathi.blogspot.com/2012/02/blog-post.html

திரு.வே. நடனசபாபதியின் வலையிலும் http://puthur-vns.blogspot.com/விவரங்களை அறிய முடியும்.
இணைப்புகள் தந்துள்ளேன்.

எனது தெரிவாக 3 பேர்கள்….அவர்கள்..

1.திருமதி. மனோ. சாமிநாதன் :- (முத்துச் சிதறல் – http://www.muthusidharal.blogspot.com/)கலைகளும் சிந்தனையுமாய் பல்சுவை முத்துகள் படைக்கும் இவர் என்னைக் கவர்ந்தவர்.

2.மாலதி. :- (மாலதியின் சிந்தனைகள் – http://thmalathi.blogspot.com/)
மிக எளிமையான ஆக்கங்கள் படைத்து என்னைக் கவர்ந்தவர்.

3. சகோதரி கோமதி அரசு.:-  (திருமதி பக்கங்கள்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/)   இவரது  திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.

இனி இவர்கள் தங்கள் தெரிவில் 5 பேரோ, 3 பேருக்கு இதைக் கொடுக்கலாமாம்.

இவர்கள் மேலும் சிறப்படைந்து  திறமையில் புகழில் உயர என் மனமார்ந்த வாழ்த்துகள்.

விருது தந்தமைக்காக சகோதரர் திரு.வே. நடன சபாபதிக்கு மீண்டும் நன்றியைக் கூறுகிறேன். தங்களிடமிருந்து விருது பெற்றமைக்கு மகிழ்வடைகிறேன். 

 வளர்க!, வாழிய! நீடு

 

                                                                                

 

 

 

 

 

 

40 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sravani
  பிப் 11, 2012 @ 10:14:18

  வாழ்த்துக்கள் சகோ !
  எப்படியோ விருது படம் அனைவரின் ப்ளாக் இலும் ஒளிர்கிறது.
  நல்லது தான். அழகு தான் விடுங்கள். பெற்றும் , தந்தும் மகிழுங்கள் !

  மறுமொழி

 2. b.ganesh
  பிப் 11, 2012 @ 10:27:17

  ஓ… விழா நடத்தி கொடுத்தால் தான் விருது இல்லையா? சரி, இந்த சிறுபிள்ளைகள் விளையாட்டில் நீங்களும் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. தகுதியான நபர்களுக்கு விருது கொடுத்ததற்கும் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 11:07:02

   இல்லை சகோதரா, 3 புத்தகங்கள வெளியிட்டும் விழா செய்யவில்லையே! அந்தப் பைத்தியம் இல்லை. எனது உணர்வை உள்ளது உள்ளபடி, நடப்பின் படி கூறினேன். தங்கள் கருத்து, வரவிற்கு மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. gomathy
  பிப் 11, 2012 @ 10:41:53

  அன்பு வேதா எனக்கு விருது கொடுத்தற்கு மகிழ்ச்சி.

  உங்கள் போஸ்ட் படிக்கமுடியாமல் இருந்தது. ஊரில் இருக்கும் போது.
  இப்போது கோவை வந்து இருக்கிறேன் இங்கு உங்கள் பதிவை திறக்க முடிகிறது. திறந்தவுடன் எனக்கு விருது எதிர்பபார்க்கவில்லை.!
  மகிழ்ச்சி உங்கள் அன்பு உள்ளத்திற்கு.
  நன்றி வேதா.

  விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 14:03:00

   எனக்கு விருது கிடைத்ததிற்கு நான் அதிகம் மகிழவில்லை. நீங்கள் அதை ஏற்று பதிலிட்டதையிட்டு நான் மிக மகிழ்கிறேன். இது தான் எடுப்பதிலும், கொடுப்பது மகிழ்வு என்பது.

   நீங்கள் எல்லாம் பழையவர்கள், நான் முந்தாநாள் பெய்த மழைக்கு நேற்று முளைத்த காளான். .(2010 யூலையில் வலை தொடங்கியது.)

   வலைச்சரத்தில் தான் தாங்கள் ஒரு பெண் என்று உணர்ந்தேன், அதற்கு முன்னர் இது ஒரு ஆணின் பெயரோ என்று சந்தேகத்தில் இருந்தேன். எதுவாக இருந்தாலும் வாழ்க! வளர்க!. நன்றி பதிலிற்கு.. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. ஸ்ரீஸ்கந்தராஜா
  பிப் 11, 2012 @ 10:54:42

  வாழ்த்துக்கள் அம்மா!!!

  தங்களின் தளம் மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென வாழ்த்துகிறேன்!!

  மறுமொழி

 5. b.ganesh
  பிப் 11, 2012 @ 11:20:30

  ஸாரி வேதா… விருது கொடுப்பவரின் அன்பு அதற்குப் பின் ஒளிந்திருக்கிறது என்பதை உணர்வீர்கள் தானே. அதனால் அப்படிச் சொன்னேன். தங்களை குறைத்து மதிப்பிட்டு அல்ல. தங்களை வருத்தப்படுத்தியிருப்பின் மன்னிக்க..,

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 13:09:15

   அன்பின் சகோதரா நான் குறையாக எதுவும் எண்ணவே இல்லை. என் நிலை விளக்கம் தான். எடுத்தவுடன் கோவிக்கும் வயது கடந்து விட்டது சகோதரா. குளப்பம் வேண்டாம். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  பிப் 11, 2012 @ 11:53:23

  விருதைப் பெற்றுக்கொண்டதற்கு நன்றி
  சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

  மறுமொழி

 7. thayanithy.t
  பிப் 11, 2012 @ 12:19:39

  பட்டங்கள்.மனிதனை கௌரவப் படுத்தாது. மனிதன் தான் தன்னுடைய பட்டங்களுக்கு கௌரவம் அளிக்கின்றான்..விருதுகள் படைப்பாளிகளுக்கு ஊட்டச் சத்தாக அமைகின்றது. சகோதரி வேதாவிற்கு வழ்த்துக்கள்…..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 13:46:22

   சகோதரா! இன்று காலை தங்களைப் பற்றி நினைத்தேன்.ஏனென்று நினைக்கிறீர்களா! யோகலக்சுமி(யோகி)வரதனுக்கு திருமணம் முடிந்தது கடந்த 21.கொழும்பில். இது தங்களிற்குத் தெரிய வராது தானே என்று மனதுள் நினைத்தேன்.
   தங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   நான் நினைக்கிறேன் தங்கள் வீடியோ ஒன்று (கவிதை வாசிப்பது)என் முகநூல் சுவரில் உள்ளது. இன்னும் பர்க்கவில்லை. பார்த்துக் கேட்பேன்.

   மறுமொழி

 8. ramani
  பிப் 11, 2012 @ 12:22:05

  விருது பெற்றமைக்கும்
  சிறந்த பதிவர்களை தேர்ந்தெடுத்து
  விருதினை பகிர்ந்து கொண்டமைக்கும்
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. rathnavelnatarajan
  பிப் 11, 2012 @ 12:28:27

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 10. jaghamani
  பிப் 11, 2012 @ 15:18:47

  விருது ஒன்று மகிழ்ச்சியுடன் மலர்ந்திருக்கிறது எமது பதிவில் தங்களுக்காக..

  http://jaghamani.blogspot.in/2012/02/blog-post_11.html

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 17:23:49

   சகோதரி மிக்க மிக்க நன்றி. ஏற்கெனவே சகோதரர் திரு. வே.நடன சபாபதி இந்த விருதை எனக்குத் தந்து, நானும் அதை 3 பேருக்குக் கொடுத்துள்ளேன். பாருங்களேன். மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டுக!

   மறுமொழி

 11. SUJATHA
  பிப் 11, 2012 @ 19:27:56

  தமிழ்ப்பணி மேன்மேலும் தொடரவேண்டும். தமிழிற்காக உழைக்கும் பணி மகத்தானது. வாழ்க!!! வளர்க!!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 11, 2012 @ 21:24:44

   மிக்க நன்றி சுஜாதா உமது அன்பான இந்த வலை விஐயத்திற்கு. கருத்திடலிற்கோ மனமார்ந்த நன்றி நன்றி ..நன்றி.
   மிகுந்த மகிழ்ச்சியையும் தெரிவிக்கின்றேன். ஆண்டவன் ஆசி எப்போதும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 12. மகேந்திரன்
  பிப் 12, 2012 @ 02:20:02

  விருது பெற்ற உங்களுக்கும்
  உங்கள் கையால் விருது கிடைக்கப்பெற்ற
  அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 08:26:12

   மகேந்திரன் மிக மிக மகிழ்வும், நன்றியும் தங்கள் அன்பான வருகைக்கு, கருத்துத் தெளித்தலிற்கு.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. malathi
  பிப் 12, 2012 @ 05:33:29

  எனக்கு விருது கொடுத்தற்கு மகிழ்ச்சி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 08:24:08

   மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் மாலதி. உங்களுக்கு அறிவிக்கப் பிந்தி விட்டது. மறுபடி போய் பார்க்கும் போது எனது இடுகையைக் காணோம், அதாவது தங்களிற்குத் தகவல் தந்ததாக இல்லை. உடனே எழுதிவிட்டு முழுசிக் கொண்டு இருந்தேன்.

   ஆண்டவனிற்கு நன்றி. இப்போது மிக மிக மகிழ்ச்சி.
   மேலும், மேலும் உயர்ந்து புகழடைய இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 14. thirumathi. Mano Saminathan
  பிப் 12, 2012 @ 06:18:33

  அன்பு வேதா!

  எனக்கு விருது அளித்தமைக்கு அன்பு நன்றி! இதை ஒரு அன்பின் அடையாள‌‌மாக பெற்றுக்கொள்வதில் நான் மகிழ்வுறுகிறேன்!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 08:16:19

   நிச்சயமாகச் சகோதரி. நான் பெற்றதிலும், கொடுத்ததில் மிக மகிழ்ச்சியடைகிறேன். அப்பாடா 3 பேரின் பதிலும் கிடைத்து விட்டது.
   மிக நிம்மதி.
   இதை வந்து கூறியதற்கு இன்னும் மிகவும் மகிழ்ச்சியும், நன்றியும்.
   மேலும் மேலும் புகழடைந்து உயர இறை வழி காட்டட்டும்.

   மறுமொழி

 15. Lingathasan Ramalingam Sornalingam
  பிப் 12, 2012 @ 10:45:59

  அன்பான சகோதரிக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள். இந்த உலகம் எமக்குரிய கௌரவத்தை மிகவும் தாமதித்தே வழங்கும். அவ்வளவு பொல்லாத உலகம். ஆகவே அதுவரை காத்திருக்காமல் இத்தகைய முயற்சிகளில் இறங்குவோரையும் பாராட்டுவோம். அவர்களின் விருதையும் ஏற்றுக் கொள்வோம். ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் அல்லவா
  “ஒருவன் ஓடினால் கேட்டு ஓடு,
  ஊரே ஓடினால் ஒத்து ஓடு”

  பல வலைப்பதிவர்களையும் கவர்ந்திருக்கிறீர்கள், அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  “ஒன்றுபட்டு உயர்வோம்”
  மிக்க அன்புடன்
  ஆசிரியர்
  அந்திமாலை
  http://www.anthimaalai.dk

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 12, 2012 @ 11:18:49

   ஆம் சகோதரா தங்கள் கருத்தை நானும் ஏற்றுக் கொள்கிறேன். மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் தங்கள் அன்பான வரிகளிற்கு. ஒன்றுபட்டு உயர்வோம். நன்றி..நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. T.N.MURALIDHARAN
  பிப் 13, 2012 @ 02:16:59

  விருது பெற்றதற்கும் அளித்ததற்கும் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 17. seimathi
  பிப் 13, 2012 @ 04:59:04

  தங்களிற்கு விருது கிடைத்தமையையிட்டு வாழ்த்துக்கள். இதையிட்டு நீங்கள் அதிகம் மகிழவில்லை என குறிப்பிடடுள்ளீர்கள் ஆனால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..தங்கள் பணி தொடர வாழ்த்துக்களும்……….

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 13, 2012 @ 17:51:36

   சகோதரி மகிழ்ச்சி, நன்றி சகோதரி. நல்லது. (ஏனோ எனக்கு அப்படி ஒரு உணர்வே ஏற்பட்டது. இப்போ கருத்துகளைப் பார்க்கும் போது ஓ.கே ஏற்கலாம் என்று உள்ளது. ஆனாலும் பெரிய மகிழ்வு இல்லை.
   தருபவர்களைக் கௌரவிக்க வேண்டியது கடமையல்லவா!)
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 18. பொன்-சிவகௌரி
  பிப் 13, 2012 @ 11:21:04

  பாராட்டுக்கள் எழுத்தாளர் வேதா இலங்காதிலகம் அவர்களே! திறமைகள் எப்பவும் பாராட்டுப்பட வேண்டியவையே. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 13, 2012 @ 17:53:11

   சிவகௌரி மிக்க மிக்க நன்றி சகோதரி. தங்கள் வரவு, கருத்தினையிட்டு மிக மகிழ்ச்சியும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 19. atchaya
  பிப் 13, 2012 @ 13:22:08

  அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 13, 2012 @ 17:54:45

   அன்பிற்கு இல்லை அடைக்கும் தாள். மிக்க மிக்க நன்றி சகோதரி. தங்கள் வரவு, கருத்தினையிட்டு மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 20. அ. பசுபதி
  பிப் 13, 2016 @ 14:28:54

  பாராட்டுகள் 🙂

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: