31. காதலர் தினம் போதாது!..

காதலர் தினம் போதாது!..

 

இன்பமான அமுதென
இனிக்கின்ற தேனென
கனியாய்த்  தினமென
மனதுள் இனிப்பவனே.

தென்றல் குலவுவதாய்
யன்னல் நிலவாகிறாய்
மழைச் சாரலாய்
மனதுள் நுழைகிறாய்.

புவிமீதில் தமிழாடி
கவியோடு உறவாடி
குவித்திட்டாய் காதலாடி.
கூவியெனை அழைக்காது

தமிழ்சக்திக் காந்தத்தின்
உமிழ்சக்தியாற் கவிழ்ந்தேன்!!
மின்சக்தி அன்பினால்
என்சக்தி ஏற்றினாய்!

நெற்றியில் புரளும்
கற்றை முடிச்சுருளாலும்
முற்றாக என்னையும்
முழுதாகச் சுருட்டியவனே!

உன் கண்ணிலொளிரும்
கிண்ண மதுரசம்
மண்ணில் வாழும்
எண்ணம் எழுதிடும்!

உன்னைச் சரணடைந்தே
நன்று நன்றெனவே
கன்னல் வாழ்வினையே
என்னாளும் பெறுவோமே!

காதலர் தினமொரு நாள்
தோதல்ல!  போதாது!…
காதல் நாதமிசைப்போம்
காலமெல்லாம் வா!வா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-2-2012.

In Alaikal.com web site;-    http://www.alaikal.com/news/?p=96909

http://www.muthukamalam.com/verse/p863.html

இக்கவிதை 14-2-2012 செவ்வாய்க் கிழமை கவிதை பாடுவோம் நிகழ்வில் மாலை 19.00-20.00 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப் பட்டது.

 
 

32 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sravani
  பிப் 14, 2012 @ 05:45:59

  அழகான வர்ணனை ! ரசனை !
  காலமெல்லாம் என்று அழைத்திருப்பது
  முதுமையிலும் அன்பு மறவாது வாழத்தானே …
  நன்று சகோ!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 14, 2012 @ 07:31:13

   ”…காலமெல்லாம் என்று அழைத்திருப்பது
   முதுமையிலும் அன்பு மறவாது வாழத்தானே!….”
   sure sis…உண்மை தான் !…இப்பவே முதுமை தானே.!.(november middle photo this face book profile photo..).
   முதல் வருகை. கருத்து உற்சாக
   முதல் எனக்கு .
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும். …

   மறுமொழி

 2. சென்னை பித்தன்
  பிப் 14, 2012 @ 05:54:33

  //காதல் நாதமிசைப்போம்
  காலமெல்லாம் வா!வா!//
  உறவில் புரிதல்,விட்டுக்கொடுத்தல்,உணர்வொன்றல் ஆகியன இருப்பின் காலமெல்லாம் காதல்தானே!
  கவிதை அருமை சகோ.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 14, 2012 @ 07:42:03

   ”’…உறவில் புரிதல்,விட்டுக்கொடுத்தல்,உணர்வொன்றல் ஆகியன இருப்பின் காலமெல்லாம் காதல் தானே!..”
   உண்மை தானே சகோதரா!. மிக்க நன்றி தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும். மிக மகிழ்வடைந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. பழனிவேல்
  பிப் 14, 2012 @ 06:05:48

  “நெற்றியில் புரளும்
  கற்றை முடிச்சுருளாலும்
  முற்றாக என்னையும்
  முழுதாகச் சுருட்டியவனே!”

  “வழுக்கை தலையனாலும், அதுதான் உனக்கு வசீகரம்” என்று சொன்ன வர்ணனை மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 14, 2012 @ 07:36:08

   சகோதரா ! பெலத்துச் சிரித்து விட்டேன் உங்கள் வரியை வாசித்து விட்டு. ஆகா! என்னமாய் ஒரு நைசான பகிடி!..காலையிலே உற்சாகம். சிரிப்பு! நல்லது!
   வருகைக்கும், கருத்திற்கும் மிக மகிழ்வும், நன்றியும்.
   இனிய காதலர் தின வாழ்த்துகள்!
   ஆண்டவன் அருள் கிட்டட்டும். …

   மறுமொழி

 4. தமிழ்த்தோட்டம்
  பிப் 14, 2012 @ 06:18:49

  வாழ்த்துகள்

  தமிழ்த்தோட்டம்
  http://www.tamilthottam.in

  மறுமொழி

 5. Naguleswarar Satha
  பிப் 14, 2012 @ 07:05:38

  Nettiyil puralum kattai mudichchurulaalum – gnapakam varukirathu.

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 14, 2012 @ 07:20:44

  yes! I used to ask him to do such like that….Aha!….ha.!…..ha!.dear thamby……sirippu varukuthu…..Thank you for your comment.. God bless you all. and say hallo to Ruthra….

  மறுமொழி

 7. b.ganesh
  பிப் 14, 2012 @ 11:30:09

  இன்றைய தினத்திற்கேற்ற பொருத்தமான கவிதை. மின்சக்தி அன்பினால் என் சக்தி ஏற்றினாய்… அருமையான வரிகள்.மிக ரசித்தேன்.

  மறுமொழி

 8. Madhu Mathi
  பிப் 14, 2012 @ 14:06:42

  rasikka vaithathu kavithai.solladal sirappu.vaazhthukal..

  மறுமொழி

 9. ரெவெரி
  பிப் 14, 2012 @ 14:33:10

  ரசித்தேன் சகோதரி…வாழ்த்துக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 14, 2012 @ 20:33:59

   உங்கள் அன்பான வரவிற்கு மிக்க மகிழ்வடைந்தேன். கருத்தினால் மகிழ்ச்சியடைந்தேன். அன்பான நன்றியைக் கூறுகிறேன்.இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ramani
  பிப் 15, 2012 @ 00:50:53

  காதலர் தினமொரு நாள்
  தோதல்ல! போதாது!…
  காதல் நாதமிசைப்போம்
  காலமெல்லாம் வா!வா!

  காதலர் தின சிறப்புக் கவிதை அருமையிலும் அருமை
  தங்கள் கவிதைக் காதலும் தினமும் தொடரவும்
  இதுபோல் அருமையான கவிதைகளை அள்ளித்தரவும்
  அன்புடன் வேண்டுகிறேன்
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 15, 2012 @ 07:50:38

   மிக மகிழ்ச்சி சகோதரா ரமணி. தங்கள் இனிய வரவும், கருத்துடை பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. ஆண்டவன் அருள் கிடைப்பதாக.

   மறுமொழி

 11. rajaonline
  பிப் 15, 2012 @ 06:32:00

  அருமையான கவிதை …

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2012 @ 20:44:53

   அன்பின் சகோதரா ராஜா! அன்பான தங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும் மிக்க மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  பிப் 15, 2012 @ 06:45:25

  // காதலர் தினமொரு நாள்
  தோதல்ல! போதாது!…
  காதல் நாதமிசைப்போம்
  காலமெல்லாம் வா!வா!//

  உண்மைதான். உண்மையான காதலுக்கு ஒரு குறிப்பிட்ட நாள் மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் காதலர் தினம்தான்.

  மறுமொழி

 13. முனைவென்றி நா சுரேஷ்குமார்
  பிப் 15, 2012 @ 07:04:07

  அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 15, 2012 @ 07:54:18

   சகோதரா சுரேஷ் மிக்க மிக்க மகிழ்ச்சி. தங்கள் அன்பான வரவும், கருத்திடலிற்கும் மிக்க நன்றி. ஆண்டவன் ஆசி கிடைப்பதாக.

   மறுமொழி

 14. சக்தி சக்திதாசன்
  பிப் 16, 2012 @ 06:31:48

  அன்பினிய சகோதரி வேதா,
  அருமையான கவிதை தந்து இனிமையாக இத்தினத்தை வர்ணித்துள்ளீர்கள். வரிகளில் பூசிய தமிழ் வர்ணங்கள் வர்ணனைகளை வானவில் போல அழகாக மிளிரச் செய்கின்றன.
  அன்பான வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 15. rathnavelnatarajan
  பிப் 16, 2012 @ 11:56:42

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 16. dhavappudhalvan
  பிப் 19, 2012 @ 14:42:08

  காதலின் பரிமாணத்தை அருமையாய் வடித்து இருக்கிறீர்கள் சகோதரி கவிதையாய். அன்பினால் பிணைத்திருப்போம் இதயங்களை என்னாளுமே.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 19, 2012 @ 16:50:52

   ஆமாம் சகோதரா.. கவிதையால் அன்பால பிணைந்திருப்போம். தங்கள் அனபான வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக்க மிக்க மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 17. கோமதிஅரசு
  பிப் 24, 2012 @ 06:57:21

  ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் வாசிக்கப் பட்டது.//

  கவிதை நன்றாக இருக்கிறது.
  ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் வாசிக்கபட்டதற்கு வாழ்த்துக்கள் வேதா.

  மறுமொழி

 18. கோவை கவி
  பிப் 25, 2012 @ 07:33:56

  ரி.ஆர்.ரி வானொலியில் இன்னும் செவ்வாய் கிழமைகளில் கவிதை வாசிக்கிறேன் சகோதரி. இலண்டன் தமிழ் வானொலிக்கு போவதைத்தான் நிறுத்திவிட்டேன்.
  தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: