தொலைத்தவை எத்தனையோ. 6

  6

ஒவ்வொருவரும் தமது ஆரம்ப, அரிச்சுவடி ஆசிரியர்களைப் பற்றி விரிவாகக் கூறும் போதும், அவர்கள் பாசம், நேசம் என்று  விமரிசிக்கும் போதும் நான் ஏக்கமடைவேன், கவலையடைவேன்.

ஆறுமுக நாவலர் ஆரம்பித்த பாடசாலை அது. அன்று சுண்ணாம்பு, சீமெந்துச் சுவராலான கட்டிடம். கிடுகு ஓலையால் வேயப்பட்ட கூரையும் கொண்டது. நிலம் மண்ணாலானது. நாங்கள் இருந்து படித்தது வாங்கும் மேசையும் தான். சிலேட் இல்லாதவர்கள் மண்ணை அள்ளி மேசையில் போட்டு ‘அ’ னா எழுத வேண்டும்.

இன்று மகிந்த ராஐபக்ச வந்து சமீபத்தில் திறந்து வைத்த புதுக் கட்டிடத்தோடு கொண்ட பாடசாலை. பழைய கட்டிடம் இருக்கிறதோ தெரியாது. (ஆனால் சுவாமிநாதர் மண்டபம் இருக்கிறதாம்.)

ஐந்து வயதில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர்ப்பார்கள். எங்கள் பெரியம்மா எங்களைச் (பெரியப்பா வீட்டுப் பிள்ளைகளையும் சேர்த்து) சேர்க்கும் போது  எனக்கு 4 வயதை ஐந்து என்று கூறிச் சேர்த்தார்கள். சேர்த்த பின்பு தங்கள் வீட்டில் வந்து இதைக் கூறிப் பெரியம்மா சிரித்தார்கள். ( அது வேறு விடயம்)

எனது அரிவரி வகுப்பு வாத்தியார் ஊர்ப் பெண்மணி, நன்கு தெரிந்தவர் தான். அவரை நினைத்தால்….

”…ஏய்! இங்கே வா!…உனக்கு எத்தனை தரம் கூறுவது?
    நீ  என்ன செய்கிறாய்?…..”

போன்ற ஒருமை வார்த்தைகளே நினைவிற்கு வரும்.
இதில் தவறில்லை, நல்ல தமிழ் தானே  என்கிறீர்களா?….. சரி தான்.

நாங்கள் பிறந்ததிலிருந்து வாருங்கள், போங்கள், நீங்கள், நாங்கள் என்று மரியாதையாகப் பேசிப் பழகினோம். தெருவில் போகும் தெரியாதவர்களையும் அப்படித் தான் அழைத்துப் பேசுவோம். நாம் அப்படிப் பேசினால் அவர்கள் எம்மை ஒருமாதிரிப் பார்ப்பார்கள், அது வேறு விடயம்.

இங்கு பாடசாலையில் அரிவரி வாத்தியார் இப்படிப் பேசியதே ஒரு வெறுப்புப் போல தெரிந்தது. எனக்குப் பிடிக்கவே இல்லை.
நீ என்ன செய்கிறாய் என்று என்னைக் கேட்டால் இவ என்ன என்னை நீ என்கிறா என்பது போல பார்ப்பேன். இப்போ நினைத்தாலும் அது தான் நினைவில் வருகிறது. (நீ, வா, போ என்பது தான்.).

நெருக்கமான ஒரு தொடர்பு இருந்ததாக சிறிதும் நினைவே இல்லை.

ஒரு நாள் பாடசாலையில் அழுதபடி நின்றேன். அப்பப்பா(முருகேசு சுவாமிநாதர்) பாடசாலை நிர்வாகி (மானேஐர்) என்பதால் 10மணியளவில் மேற்பார்வைக்காக வந்து காரியாலய (பெரிய வாத்தியார்) அறையில் கையெழுத்துகள் இடுவார்.

பின்பு வகுப்பறைகளைச் சுற்றிப் பார்க்க வரும் போது நான் அழுதபடி நின்றதைக் கண்டார். ஏன் அழுகிறா என்ற போது ” என்னவோ தெரியாது அழுதபடி இருக்கிறா” என்றார் வாத்தியார். ”நான் கூட்டிப் போகிறேன்”  என்று கை பிடித்துக் கூட்டி வந்தார் வீட்டிற்கு.

அப்பப்பா (கண்ணாடியப்பா) கை பிடித்துத் தெருவிலே துள்ளித் துள்ளி நடந்து வந்ததும், என் அழுகை போன இடம் தெரியாததும் இப்போதும் நினைவில் உள்ளது. அப்போது நாலு, நாலரை வயதிருக்கும்.

இன்று அதே போல நான் பிள்ளைகளோடு 14 வருடங்கள் வேலை செய்தேன். அவர்களை ஆதரவாக அணைப்பதும், மடியில் இருத்தி பேசுவதும் என்று எவ்வளவு இனிமையான அனுபவங்கள்.

எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர.

தொலைத்தவை தான்.

காரை பெயர்ந்த நாவலர் கட்டிடச் சிறு பகுதி காண்கிறீர்கள்.

ஓட்டுக் கூரையிருக்கிறது, முன்பு கிடுகு ஓலை வேய்ந்திருந்தது. இது பக்கத் தோற்றம். பின்னர் கட்டப்பட்ட நாவலர் சிலை இது.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-2.2012.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2012/02/6_17.html

 

                             

 

20 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Angelin
  பிப் 16, 2012 @ 10:57:59

  ல் //அரிவரி வாத்தியார் இப்படிப் பேசியதே ஒரு வெறுப்புப் போல தெரிந்தது. எனக்குப் பிடிக்கவே இல்லை. //

  எனக்கும் இவ்வாறான அனுபவம் உண்டு அக்கா பதினோரு வயதில் சென்னைக்கு வந்தோம் சேர்ந்த முதல் நாளே ஆறாம் வகுப்பு ஆசிரியை சில பிள்ளைகளை //ஏய் எருமை வீட்டு பாடம் ஏன் செய்யவில்லை என்று கேட்டதை பார்த்து அதிர்ந்தே போனேன்// ..
  பின்பு ரேங்க்க் வரிசைப்படி பிள்ளைகளை அமர வைத்தார்கள் .அதன்படி சரியா படிக்காத பிள்ளை கடைசி பெஞ்சில் அமரும் .இதெல்லாம் கூட பிள்ளைகளின் மனதை பாதிக்குமே .இப்ப நிலைமை எப்படின்னு தெரியல .மாறியிருக்கும்னு நம்புகிறேன் .சிறு வயதில் அழியா கோலமாக சில விஷயங்கள் பதிந்து விடும் .

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2012 @ 20:28:05

   நானும் இங்கு நர்சரியிலும், முதலாம் இரண்டாம் மூன்றாம் வகுப்புப் பிள்ளைகள் பாடசாலை முடிய வரும் ஓய்வு நேரப் பாடசாலைகளிலும் (இங்கு கூடுதலாக கலை ஆக்க வேலைகளே செய்வோம்) வேலை செய்துள்ளேன். யாவருமே பிள்ளைகளுடன் அன்பாகவே பழகுவார்கள்.
   3ம் உலக நாடுகளில் தான் அந்தப் பிரச்சனைகளோ?
   எதுவோ தீக்குச்சி பற்றியது போல உங்களிற்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட்டுள்ளது.
   நான் நடு றோட்டிலே பிள்ளைகளைக் கண்டாலும், சுப்பா மாக்கெட்டில் கண்டாலும் கன்னத்தை நிமிண்டி ”ஹாய்!” கூறாமல் விடமாட்டேன்.
   குழந்தைகளைப் பார்த்தாலே மனம் பூவாக விரியுமே!
   உங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலாலும் மிக மகிழ்ந்தேன் மிக்க நன்றி.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. ramani
  பிப் 16, 2012 @ 14:30:28

  எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர.//

  படங்களுடன் பதிவு மிக மிக அருமை
  தங்களின் அன்பு மனத்தை சரியாகப்
  புரிந்து கொள்ள முடிகிறது
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2012 @ 20:49:44

   அன்பின் சகோதரா ரமணி! எங்களால் கொடுக்க முடிந்தது. அன்பு ஒன்று தானே! அதைக் கொடுக்க ஏன் கஞ்சத் தனம்!
   தங்கள் கருத்தும், வரவும் மகிழ்வு தந்தது.
   மிகுந்து நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ரெவெரி
  பிப் 16, 2012 @ 15:41:55

  அழகான படங்கள்… மலரும் நினைவுகள்…அனுபவம் தொடரட்டும்…வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2012 @ 20:54:26

   அன்புச் சகோதரா ரெவெரி! தங்கள் கருத்தும், வரவும் மிக மகிழ்ச்சி தந்தது. மிகுந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோமதிஅரசு
  பிப் 16, 2012 @ 16:42:10

  இன்று அதே போல நான் பிள்ளைகளோடு 14 வருடங்கள் வேலை செய்தேன். அவர்களை ஆதரவாக அணைப்பதும், மடியில் இருத்தி பேசுவதும் என்று எவ்வளவு இனிமையான அனுபவங்கள்.

  எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர.//

  வகுப்பு ஆசிரியர் எப்படி நடக்க வேண்டும் என்று இந்த காலத்துக்கு ஏற்ற பதிவு,.

  பெற்றோர்களுக்கு அடுத்த படி அன்பை செலுத்துபவர்கள் ஆசிரியர்கள் தான்.

  இலங்கை சென்ற போது ஆறுமுக நாவலர் நினைவு வந்தது.. திருக்கேதீஸ்வரம் போன போது நாவலர் ஐயா அவர்களின் பணி எவ்வளவு மகத்தானது என்பதை அறிந்து கொண்டோம்.
  அவரின் படப் பகிர்வுக்கு நன்றி வேதா.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 16, 2012 @ 21:31:38

   1872ல் ஆறுமுக நாவலர் கோப்பாயில் ஆண்களிற்குத் தான் பாடசாலை ஆரம்பித்து நடத்தி வந்தார்.
   எனது அப்பப்பா (முருகேசு சுவாமிநாதர்) மலேசியா பகாங் என்னுமிடத்தில் ஒரு ஆங்கிலப் பாடசாலையை உருவாக்கி நடத்தி ஆசிரியராக இருந்தார். 1909ல் அந்த ஆங்கிலப்பாடசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்து 1910ல் இலங்கை திரும்பினார்.

   நாவலர் பாடசாலை ஆண்கள் பாடசாலையாக இருக்கக் கண்டு, அதன் அருகிலேயே ஒரு பெண்கள் பாடசாலையை ஆரம்பித்து நடத்தி வந்தார்- சைவப் பிரகாச வித்தியாசாலை என்ற பெயரில்.

   பின்னர் ஊர் பெரியவர்கள் ஒன்று சோந்து இரு பாடசாலையையும் நாவலர் இந்து கலவன் மத்திய கல்லூரி என்று ஆகியது. அரசாங்கம் பொறுப்பேற்கும் வரையிலும் அப்பப்பா தான் நிர்வகித்தார்.
   இது ஒரு சிறு அறிமுகம் சகோதரி.
   தங்கள் கருத்திற்கும், வரவிற்கும் மிக மகிழ்வும், நன்றியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. SUJATHA
  பிப் 16, 2012 @ 20:31:58

  சிறுபிள்ளைகளை அன்பால் கட்டுப்படுத்தமுடியும்.அடிப்பதால் வன்மத்தை தான் வளர்க்கமுடியும். இங்கு நீங்கள் பெற்ற அனுபவத்தை கற்றுக்கொண்டதில் கற்றுகொடுத்தீர்கள் அடுத்த சந்ததிக்கு. வாழ்த்துக்கள் பணிகள் தொடரட்டும்!!!!!

  மறுமொழி

 6. மகேந்திரன்
  பிப் 17, 2012 @ 02:20:06

  நெஞ்சில் செதுக்கி வைத்த சிற்ப
  நினைவுகளை அழகாக
  பகிர்ந்திருக்கிறீர்கள் சகோதரி..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 17, 2012 @ 08:14:01

   அன்பின் மகேந்திரன் தங்கள் இனிய வரவிற்கும் இனிய கருத்திடலிற்கும் மனமார்ந்த நன்றியையும் என் மகிழ்வையும் கூறுகிறேன். தெய்வத்தின் திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. jaghamani
  பிப் 17, 2012 @ 04:31:45

  எதை நான் அன்று இழந்தேனோ அதை இங்கு அவர்களிற்கு அள்ளி அள்ளிக் கொடுத்தேன் ஆசை தீர./

  நிறைவாக உணரவைக்கிறது.. வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 17, 2012 @ 08:15:03

   அன்பின் சகோதரி யெகமணி தங்கள் இனிய வரவிற்கும் இனிய கருத்திடலிற்கும் மனமார்ந்த நன்றியையும் என் மகிழ்வையும் கூறுகிறேன். தெய்வத்தின் திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. ஸ்ரீஸ்கந்தராஜா
  பிப் 17, 2012 @ 06:57:08

  அம்மாவின் பதிவுகள் மனதைத் தொடுகின்றன..
  தொடருங்கள்!!! தங்கள் திருப்பணியை!!
  என்றும் எனது வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

 9. ஒப்பிலான் மு.பாலு
  பிப் 18, 2012 @ 09:34:06

  அன்புச் சகோதரிக்கு இனிய வணக்கம் ! என்னை நாற்பது வருடம் பின்னோக்கி இழுத்துச் சென்று விட்டிர்கள் ! அந்தப் பள்ளி நினைவுகளை மட்டும்தானா இழந்தோம் ? இழந்தவை எண்ணிலடங்கா ….!ஆனால் ,நினைவுகள் நமக்கு சத்துணவு மாதிரி …!அருமை சகோதரி ..வாழ்த்துக்கள !வாழ்க வளமுடன் !

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 10:47:43

   அன்புச் சகோதரா…தொலைத்தவை எத்தனையோ என்று தனித் தலைப்பு இட்டு இது 6வது எழுதியுள்ளேன்.
   என் சொந்த அனுபவங்கள் வேறு பலருக்குப் பாடமாகலாம் அல்லவா!.
   மிக நன்றி. மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
   எப்போதும். நீங்களாகவே வரலாம் வலைக்கு. கருத்துகள் தரலாம். எப்போதும் நல் வரவு சகோதரா!
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்
  பிப் 19, 2013 @ 15:38:28

  வணக்கம்
  வேதா,இலங்காதிலகம்

  வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள் உங்களின் எழுத்து எட்டுத்திக்கும் புகழ் பரவ என்றும் இறைவன் துணை இருக்கும் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: