41. மேதினியிலின்று மின்சாரமும்…..

 

மேதினியிலின்று மின்சாரமும்…..

(2006ல் சி.ஐ தொலைக் காட்சிக்காக என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

(கவிதையின்  ஒரு வரிக்கு சிறு விளக்கம் – சூரிய கிரகணம் வரும் போது நேரே சூரியனைப் பார்க்க முடியாது என்பதால், எங்கள் அப்பா உடைந்த கண்ணாடித் துண்டில் விளக்குப் புகையை நிரப்பித் தர அதனூடாகச் சூரியனைப் பார்த்தோம். முள் முருக்கம் இலையை இடித்து, அதன் சாறு பிழிந்து அதை அகண்ட பாத்திரத்தில் ஊற்றி, நிலத்தில் வைத்து அதற்குள்ளே சூரிய கிரகணம் பார்த்தோம், எமது பெரிய பனை வளவினுள்ளே – கிணற்றுள் நிலா பார்ப்பது போல. இனி கவிதையை வாசியுங்கள்)

டமை தவறாக் கண்ணியவாளன் – பிறர்
கருத்தை ஏற்காத கடும் உழைப்பாளன்.
விருப்புடன் தன் பணி செய்வான்.
வருணனுடணினைந்து வானவில் வளைப்பான்.
எத்தனை பெண்கள் மயங்குவார் இவனில்.
பத்தினிப் பெண்ணாய்ச்  சூரியகாந்தி – அவள்
சித்திரக் கண்ணிற்குள் இவனைப் பொதிப்பாள்.
முத்திரையும் இவன் பெயரோடு பதித்தாள்.

காதலான தாமரைப் பெண்ணாள் இவனைக்
கண்டதும் இதழ்கள் விரித்து மலர்வாள்.
கதிரவனின்றேல் இருட்டுலகம். இங்கவனைக்
காணலாம் முருக்கமிலைச் சாறில் காண்பதுவாக.
கடற்கரைக் காலைக் கதிரவன் வணக்கம்
உடற் பயிற்சியுடன் உரமான ஆரோக்கியம்.
ஆதியில் வணங்கிய முதற் தெய்வமிவனிடம்
மேதினியி லின்று மின்சாரமும் அள்ளுகிறார்.

ரில் கதிரவன் கனற் கதிரை
சீரிய மாதவக் கண்களாற் கூர்ந்து
நேரில் ஒரு மனிதன் பார்த்ததுண்டோ!
அரிய அதிசயம் கண்டேன் இங்கு!
நேரில் சந்திரனைக் காண்பது போல்
சூரியனையும் சுந்தரமாய்க் காணலாம் அதிசயம்!
நேரில் சூரியனை முதலாகக் கண்ட போது
பாரிய வியப்பு! கண்களையே நம்பவில்லை.

தினோராயிரம் நாமங்கள் இவனுக்காம்!
பதிந்த பெயர்களே ஒரு புதுக்கவிதையாகும்.
மாதிரிக்குச் சில துளிகள் கேளுங்கள்! ஓடாதீர்கள்!…
மாலி, மண்டிலம், எரிகதிர், எல்லி,
மிகிரன், வெய்யோன், ஞாயிறு, ஆதபன்,
மிலேச்சன், பாதன், பாமன், பகலோன்,
பிங்கலன், பிரமம், பேனன், இந்திரன்
பிரபாகரன், எயிறிலி, ககேசன், உதயன்.

கலவன், ககேந்திரன், கதிர், கமலபாந்தி
பானு, கஞ்சரன், கனலோன்,  கனலி,
பொன், ஆதவன், இரவி, வேதியன்
பகவன், நிசாரி, எல்லவன், பரிதி,
பாஸ்கரன், பதுமபந்து, பங்கயன், பதங்கன்,
பசதன், துங்கீசன், உச்சிக்கிழான், சதாகதி,
சம்பு, சுயம், சித்திரதன், சுடர்,
சுரன், சுரோத்தமன்….இன்னும்.!..இன்னும்.!..எத்தனையோ.!…

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2006.

 

                                   

                             

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. sravani
  பிப் 18, 2012 @ 06:45:08

  வாவ் , மிக அருமை ….. அமர்க்களம் …..
  சொற்கள் சதிர் ஆடுகின்றன.
  நான் அறிந்தது திவாகரன் , ஆதித்யன் , ஞாயிறு போன்ற
  .பிரபல பெயர்கள் மட்டுமே.
  பதினோராயிரமா என வாய்ப் பிளக்க வைத்து விட்டீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 07:10:06

   சகோதரி பதினோராயிரம் என்று ஒரு வாய்க் கணக்கிற்குக் கூறினேன் , 117 (டெனிஸ் கணக்கு) தரம் உனக்குச் சொன்னாலும் கேட்க மாட்டாயா என்று கேட்பது போல…
   கவனியுங்கள் ‘சு’ வரை வந்தது. ‘ன ‘ னா வரை வர எக்கச் சக்கமாகுமே!
   நானே ஆச்சரியப் பட்டேன். அது தான் எழுதினேன்.
   தங்கள் வரவு, கருத்திடலிற்கு மிக நன்றியும் மகிழ்வும் அடைந்தேன்.
   நன்றி. நன்றி.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. sravani
  பிப் 18, 2012 @ 08:06:24

  சரி. சுடரோன் , சூரியன் , செங்கதிர் என்று நீட்டித்தால்
  ஒருவேளை நீங்கள் உயர்வு நவிற்சியாகக்
  குறிப்பிட்ட எண்ணிக்கையை
  அடைந்தாலும் அடையும்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 08:27:50

   ஆமாம்……..ஓமோம்…….சகோதரி…..இதை வானலையில் வாசிக்கும் போது கேட்டிருக்கும் மக்கள் இவளுக்கென்ன விசரோ என்று எண்ணுவார்களோ என்றும் அன்று தயக்கமும் இருந்து, நிறுத்திக் கொண்டென் இந்தளவில்.
   இல்லாவிடில் இன்னும் நீண்டிருக்கும்.
   மிக்க நன்றி ஸ்ரவாணி.

   மறுமொழி

 3. ராஜி
  பிப் 18, 2012 @ 08:46:27

  அடேங்கப்பா!கதிரவனுக்கு நிறைய பெயர்கள் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இத்தனை என்று தெரியாது.அதுவும் பெயர்களுடன் கதிரவனுக்கென்று ஒரு கவியும்

  //பிறர்
  கருத்தை ஏற்காத கடும் உழைப்பாளன்//

  //பத்தினிப் பெண்ணாய்ச்; சூரியகாந்தி//

  கவர்ந்த வரிகள்.பகிர்விற்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 09:07:17

   பிடித்துள்ளதா!…மகிழ்ச்சி ராஜி. தங்கள் இனிய வரவும், பின்னூட்டமும் மகிழ்வு தருகிறது. இதயபூர்வ நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. kalakumaran
  பிப் 18, 2012 @ 08:57:52

  அழகான வார்த்தை கோர்வைகள் . வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 09:09:39

   வழங்கிய பின்னூட்டம், இனிய தங்கள் வரவு எனக்கு மகிழ்வு தருகிறது சகோதரா. மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. மாலதி
  பிப் 18, 2012 @ 09:35:48

  போற்றத்தக்க சிறப்பான ஆக்கம் வார்த்தை நன்கு விளையாடுகிறது பாராட்டுகள் தொடர்க …

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 18, 2012 @ 10:00:42

  Arul Mozhi wrote:-
  அட இவ்வளவு பெயரா சூரியனுக்கு! அழகு!.
  நன்றி.

  Vetha wrote:-
  மிக்க நன்றி சகோதரி. இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 7. rathnavelnatarajan
  பிப் 18, 2012 @ 11:14:24

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 8. sasikala
  பிப் 18, 2012 @ 12:05:56

  பதினோராயிரம் நாமங்கள் இவனுக்காம்!
  பிரமிப்பா இருக்குங்க அருமையான பகிர்வு .

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 12:19:53

   சகோதரி சசிகலா! நான் ஸ்ரவாணிக்கு எழுதிய பதிலே (அதை வாசியுங்கள்) உங்களிற்கும் பதினோராயிரம் என்பது. ஆனால் வியப்பூட்டும் தகவல் அத்தனை பெயர்களென.
   மிக மிக மகிழ்ச்சி தங்கள் வரவு, பின்னூட்டத்திற்கு.
   மனமார்ந்த நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 9. ஸ்ரீஸ்கந்தராஜா
  பிப் 18, 2012 @ 13:05:47

  கதிரோனின் முகங்கள் கண்டோம்!!
  அற்புதம்!! வாழ்த்துக்கள்!!

  மறுமொழி

 10. ரெவெரி
  பிப் 18, 2012 @ 13:09:38

  கதிரவனுக்கு இத்தனை பெயர்கள் உண்டு என்று தெரியாது…பிரமிப்பா இருக்கு…வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 18, 2012 @ 13:17:30

   ஓ! நான் சரியில்லாத கவிதையோ என்று திருப்தியற்ற மனதோடு வலையேற்றினேன். அது இவ்வளவு ஆச்சரியத்தைத் தருகிறது!…ஆச்சரியமாக உள்ளது!. இது போலவே சந்திரனுக்கும் பல பெயர் நிச்சயம் உள்ளது.
   மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. SUJATHA
  பிப் 18, 2012 @ 19:34:24

  பகலோனினே பெயர்களை அப்படியே அடுக்கி தொடர்ந்த கவி அருமை……ஊரில் கதிரவன் கனற் கதிரை
  சீரிய மாதவக் கண்களாற் கூர்ந்து
  நேரில் ஒரு மனிதன் பார்த்ததுண்டோ!
  அரிய அதிசயம் கண்டேன் இங்கு!
  நேரில் சந்திரனைக் காண்பது போல்
  சூரியனையும் சுந்தரமாய்க் காணலாம் அதிசயம்!
  நேரில் சூரியனை முதலாகக் கண்ட போது
  பாரிய வியப்பு! கண்களையே நம்பவில்லை.

  கவிவரிகள் அருமை……வளர்க பணி!!! ”கவிதாயினி வேதா”

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 18:30:03

   அன்பின் சுஜாதா, தங்கள் இனிய வரிகளிற்கும், வரவிற்கும் மிக மிக நன்றி. மிக மகிழ்ச்சியும். இந்தப் படம் நான் நினைக்கிறேன் தங்கள் செய்தியில் வந்த படமாக இருக்கலாம். ஒரு தடவை நான் சேமித்து வைத்தது நினைவு வருகிறது. மிக்க நன்றி. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  பிப் 19, 2012 @ 11:52:47

  கதிரவனுக்கான தாங்கள் தந்த பல பெயர்கள் எனக்கு புதியவை சகோதரி.
  //ஆதியில் வணங்கிய முதற் தெய்வமிவனிடம்
  மேதினியி லின்று மின்சாரமும் அள்ளுகிறார்.//
  அருமை! அருமை!!

  மறுமொழி

 13. Dr.M.K.Muruganandan
  பிப் 19, 2012 @ 16:41:58

  இத்தனை நாமங்களா
  நம் ஆதவனுக்கா
  அதிசயித்தோம்
  நாமங்களை இணைத்து
  இனிய கவி வடித்த
  கவித்திலகமாம் கோவைக் கவிக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 19, 2012 @ 16:59:40

   மிக்க நன்றி ஐயா. தங்கள் அனபான வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக்க மிக்க மகிழ்வும், நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. dhanasekaran10
  பிப் 23, 2012 @ 14:10:50

  சத்தியமாக எனக்கு இது எதுவும் தெரியாது.இவ்வளவு பெயர்களா?

  அருமை கவிதை வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 07:29:41

   அப்படி ஒவ்வொன்றுக்கும் பல பெயர்கள் இருக்கலாம் தனசேகரன். தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: