24. நிர்வாணம்

 

நிர்வாணம்.

(இலண்டன் தமிழ் வானொலி புதன் இலக்கிய நேரத்திற்காக எழுதி  வாசிக்கப் பட்டது. 11-10-2005ல்)

வாழ்க்கையெனும் மனித நந்தவனத்தில் அன்பு, பாசம், நேசம் என்பவை இதமான தென்றல் போன்றது. மயிலிறகு கொண்டு மனதை வருடி மயங்க வைக்கும் இனிய உணர்வைத் தருகிறது. அன்பு இப்படியானால்…

கோபம் பிரளயமானது, துன்பமானது, வேதனை தருவது.
கோபம் ஒரு செய்தி.
கோபமடையும் போது சொல்வதைக் கேட்கின்றனர். கோபம் உலகத்தின் பெறுமதியையும் அனுபவத்தையும் எடுத்துக் கூறுகிறது. ஆனால் கடும் கோபம் என்ற உணர்வு மிகவும் ஆபத்தானது.

சாதாரண கோபத்தினால் உருவாகும் எரிச்சல் பரவும் தன்மையது. அழிக்கும் திறனுடையது. கோபமடையும் போது மனிதர் தம்முடனான தொடர்பை இழக்கின்றனர். தம்மை மறக்கின்றனர். சூழ்நிலையையும் மறக்கின்றனர். கோபம் கொண்ட மனிதரையும் மறக்கின்றனர்.
அன்பு, நேசம், காதல் மட்டும் உணர்வு பூர்வமான இணைப்பை உலகில் தருவதன்று.
கோபமும் ஒரு தொடர்பு வழி ஆர்வமே. கோபமும் மனிதரை ஒருவருடன் ஒருவரை இணைக்கிறது.

ஒரு குறிக்கோள் கொண்டு தான் கோபம் உருவாகிறது.
நமக்குத் தெரிகிறது, ஏன் எவர் மீது  கோபமடைகிறோம் என்று.
ஒருவருடன் நமக்குக் கோபம் வருவதில்லையானால், அவரது இன்ப துன்பங்களில் பங்கு போட நாம் விரும்பவில்லையெனலாம், அல்லது  அவைகளில் பங்கு பெறும் அக்கறை நமக்கு இல்லை யென்றாகிறது.

மகிழ்ச்சி, அன்பு, ஆதரவு, தேறுதல், புகழ் என்பவையுடன் மட்டுமே நாம் வளர்க்கப் பட்டிருந்தால், நாம் நிதானமற்றவராக, இரக்கமற்றவராக இருப்போம்.
ஒரு எண்ணத்தை பிறர் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைக் கொண்டு வரவைக்கும் முயற்சி கோபமாகிறது.
மனக் கட்டுப் பாடுடைய கோபம் நீண்ட நேரம் நிலைப்பதில்லை.

கோபம் நம்மைக் காட்டிக் கொடுக்கிறது. நமது எல்லையை அடையாளம் காட்டுகிறது. மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இவ்வுணர்வை நாம் காட்டாவிடில், திருப்தியின்றி, மனக் கசப்புடன் நாம் நிற்போம். இது மிகச் சிரமமானது. 

 கோபத்தை வெளிப் படுத்த வேண்டும்.
அது கசப்புணர்வாகி,உடலில் முடிச்சுகளாகிப், பெரிதாக வெடித்து கரடு முரடாக முதல், அதை வெளிப் படுத்துதல் ஆறுதலாகிறது.

ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.

மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.

கோபம் கொள்ளல் மகிழ்வுத்
தீபம் அழிக்கும், பிறர்
சாபம் நிறைத்து- மன
சாந்தி அளிக்கும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-10-2005.

  

 

                                       

39 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. soundarapandiann
  பிப் 22, 2012 @ 07:23:22

  உண்மை…

  கோவம் மணிதனை நிர்வாணமாக்கிவிடும்…

  கோவம் மட்டும்தான் எதிராவனர்களையும் சேர்த்து கோவம் கொண்டவரையும் எரிக்கும் சக்தி கொண்டது…

  கோவம் நியாயமானதாக இருக்கட்டும் அப்போதுதான் இருவருக்கும் அது நல்லது..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 08:33:05

   ”…கோவம் நியாயமானதாக இருக்கட்டும் அப்போதுதான் இருவருக்கும் அது நல்லது….”

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் வருகைக்கும், அருத்தமுடை கருத்துப் பதிவிற்கும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 22, 2012 @ 07:56:24

  அன்பு தோழி wrote:-
  கோபம் கொள்ளல் மகிழ்வுத்
  தீபம் அழிக்கும், பிறர்
  சாபம் நிறைத்து- மன
  சாந்தி அளிக்கும்.அருமை! …..வாழ்த்துக்கள்!

  Adithya Vishakha likes this..

  மறுமொழி

 3. மகேந்திரன்
  பிப் 22, 2012 @ 08:24:39

  ஆத்திரம் சூத்திரம் அறியாது
  என்பது எவ்வளவு உண்மை.. என
  விளங்கவைக்கும் அழகான பதிவு சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 08:34:55

   அன்பின் மகேந்திரன் மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் உமது வருகைக்கும், அருத்தமுடை கருத்துப் பதிவிற்கும். இறை அருள் என்றும் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. பழனிவேல்
  பிப் 22, 2012 @ 11:40:26

  “கோபம் நம்மைக் காட்டிக் கொடுக்கிறது.
  நமது எல்லையை அடையாளம் காட்டுகிறது.”

  அழகு…

  மறுமொழி

 5. Madhu Mathi
  பிப் 22, 2012 @ 14:42:49

  கோபம் கொள்ளல் மகிழ்வுத்
  தீபம் அழிக்கும், பிறர்
  சாபம் நிறைத்து- மன
  சாந்தி அளிக்கும்.

  சரிதான்..வாசித்து விட்டு யோசித்துப்பார்த்தேன்..பகிர்வுக்கு நன்றி..

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 17:34:39

   மிக்க நன்றி சகோதரா மதுமதி. அன்பான தங்கள் வரவு, கருத்திடலால் மகிழ்ச்சியடைந்தேன். மறுபடியும் நன்றி இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. sasikala
  பிப் 22, 2012 @ 15:04:24

  கோபம் எனும்
  மாயப் பிசாசு மனிதர்களையும் மதி இழக்க செய்கிறது . அருமையான வரிகள் .

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 17:50:19

   மிக்க நன்றி சகோதரி சசிகலா. அன்பான தங்கள் வரவும், பின்னூட்டத்தாலும் மகிழ்ச்சியடைந்தேன். மனமார்ந்த நன்றி மறுபடியும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. வே.நடனசபாபதி
  பிப் 22, 2012 @ 15:21:38

  //ஒரு குறிக்கோள் கொண்டு தான் கோபம் உருவாகிறது.//
  நல்ல சிந்தனை. வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 22, 2012 @ 17:56:19

   அன்பான சகோதரா தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மனம் மிக மகிழ்ந்தேன். என்மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. உயிர்த்தோழி.
  பிப் 22, 2012 @ 15:44:16

  //கோபமும், காமமும் சமமானது. மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.//

  நூறு சதவீதம் உண்மை!

  மறுமொழி

 9. JOKER
  பிப் 22, 2012 @ 16:51:39

  ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.
  மனிதரை அது நிர்வாணமாக்குகிறது.
  அற்புதமான வரிகள்.அளவு மிகாமல் இருந்தால்
  மனிதகுலம் அமைதிபெறும்.அவமானமடையாது.
  நன்றி தமிழ்த்தாயே.மேலும் தொடருங்கள் நாங்கள்
  உங்கள் பின்னே தொடருகிறோம்.

  மறுமொழி

 10. கோவை கவி
  பிப் 22, 2012 @ 17:40:09

  ம. வேணுதன்
  Kilinochchi

  Pushpalatha Kanthasamy..

  Vino Pathmanathan
  Girls high school pandeteruppu
  .
  Chandran Kandiah
  Nørre-Snede Municipality

  அந்திமாலை. likes this.

  மறுமொழி

 11. Vetrimagal
  பிப் 23, 2012 @ 01:56:18

  அடேங்கப்பா. மிகவும் வித்யாசமான சிந்தனை.

  அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 23, 2012 @ 19:27:20

   அன்பின் சகோதரி தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். தங்கள் வலைக்கு வந்தேன் ஆங்கிலத்தில் அல்லவா இருக்கிறது. தமிழில் இல்லையா? ஆங்கிலம் ஓரளவு தெரியும் ஆனால் வலை செய்யுமளவுக்கு என்னால முடியாதப்பா. நன்றி சகோதரி.

   மறுமொழி

 12. sravani
  பிப் 23, 2012 @ 03:43:26

  ஆம் நம் மனதில் உள்ளதை உரித்துக் காட்டுவது
  கோபமே .
  அருமை சகோ.

  மறுமொழி

 13. jaghamani
  பிப் 23, 2012 @ 05:48:03

  மயிலிறகு கொண்டு மனதை வருடி மயங்க வைக்கும் இனிய உணர்வைத் தருகிறது. அன்பு …

  அழகான வரிகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 23, 2012 @ 08:13:04

   அன்பின் சகோதரி மிக மகிழ்ச்சியும, நன்றியும் சகோதரி தங்கள் அனபான வரவிற்கும் வரிகளிற்கும். ஆண்டவன் அருள் கிடைப்பதாக!

   மறுமொழி

 14. கோவை மு சரளா
  பிப் 23, 2012 @ 09:17:16

  அருமை சகோதரி கோபம் அவனின் அகத்தே தேங்கி நிற்கும் கழிவை வெளியே கொட்ட வைக்கிறது அருமையான விசயத்தை பதிவு செய்திருகிறீர்கள் . மேலும் ஒரு பெண் என்ற நிலையில் உங்களின் தனித்துவம் தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது நிறைய எழுதுங்கள்.
  என்னுடைய வலை பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றிகள் தொடர்ந்து ஊக்கம் கொடுங்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 23, 2012 @ 20:15:19

   சகோதரி நீங்கள் என்னைப் பின் தொடருவதாக வேட்பிரஸ் தகவல் தந்தது. நானும் வந்து அதைச் செய்து கருத்துமிட்டு வந்தேன். உங்கள் வருகை கருத்திடலிற்கு மிக மகிழ்ந்தேன், மிக நன்றியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 15. dhanasekaran10
  பிப் 23, 2012 @ 14:06:26

  ஒரு வகையில் கோபமும், காமமும் சமமானது.

  நேர்பட பேசும் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.அருமை பதிவு வாழ்த்துகள்

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 23, 2012 @ 20:27:06

   அன்புத் தனசேகரன் உமது அன்பான கருத்திடலிற்கும் இனிய வரவிற்கும் மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 16. rathnavelnatarajan
  பிப் 23, 2012 @ 16:55:58

  நல்ல பதிவு.
  நன்றி அம்மா.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 23, 2012 @ 20:28:21

   அன்பு ஐயா! உங்கள் அன்பான கருத்திடலிற்கும் இனிய வரவிற்கும் மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றியும் கூட. ஆண்டவன் அருள் கிட்டட்டும் ஐயா.

   மறுமொழி

 17. VAI. GOPALAKRISHNAN
  பிப் 23, 2012 @ 22:12:22

  அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு
  என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  அன்புடன் vgk 24.02.2012.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 24, 2012 @ 16:50:27

   அன்புள்ள ஐயா மிக மிக நன்றியும் மகிழ்ச்சியும் தங்கள் வருகைக்கும், கருத்துத் தந்தமைக்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 18. கோமதிஅரசு
  பிப் 24, 2012 @ 10:23:10

  கோபம் கொள்ளல் மகிழ்வுத்
  தீபம் அழிக்கும், பிறர்
  சாபம் நிறைத்து- மன
  சாந்தி அளிக்கும்.//

  கோபம் ஒரு சத்ரு என்று முன்னோர்கள் கூற்வார்கள்..
  சினம் தவிர்த்தல் உடல் நலம், நட்புநலம், குடும்ப நலம், உலக நலம் காக்கும் என ஞானிகள் கூறுகிறார்கள்.
  அருமையான பதிவு.

  மறுமொழி

 19. SUJATHA
  பிப் 25, 2012 @ 12:45:06

  கோபம், ஆத்திரம் செய்யும் கோலங்களில் மனிதன் என்னவாக மாறி விடுகின்றான்… அருமை….உண்மை வெளிப்பட்டுள்ளது நிர்வாணமாக. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 25, 2012 @ 13:42:15

   மிக்க நன்றி சுஜாதா, உமது அன்பான வருகைக்கும், வரிகளுக்கும் மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 20. thenkasi tamil paingili
  மார்ச் 01, 2012 @ 17:36:27

  வணக்கம் நண்பரே தங்களது பதிவினை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்.நன்றி
  http://blogintamil.blogspot.in/2012/03/blog-post.html

  மறுமொழி

 21. கோவை கவி
  பிப் 22, 2018 @ 20:10:36

  Mohan Nantha :- கோபத்தால் மனிதனொருவன் பக்குவம் அடைகின்றான். அதனால் அவன்(மனது) நிர்வானமாக்கப்படுகின்றது. மீண்டுமொரு புதியமனிதனாக உருவெடுக்கின்றான். உண்மையான வரிகள். மிகச்சிறப்பாக இருக்கின்றன. வாழ்த்துக்கள் சகோதரி.

  Vetha Langathilakam :- மிக நன்றி சகோதரா..
  மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திடலிற்கு.

  Ramesh Manivasagam :- கோபம் ஒரு குணக்கேடு – உரித்து உடையவர்களின் மேன்மைக்கு வேண்டி உண்டாகும் கோபம் உண்மை நிர்வாணம் அதை அடக்கினால் அக்கறை இல்லை என்றே பொருள். கோபம் மூன்று வகை அவை முறையே நீர்க்கோபம் , பொற்கோபம் , கற்கோபம் . அடியேன் கொள்ளும் கோபம் நீர்க்கோபம் . 2017

  Vetha Langathilakam :- நல்ல விளக்கம் சகோதரா.
  மிக மகிழ்வும் நன்றியும்…தங்கள் கருத்திடலிற்கு.

  Ratha Mariyaratnam :- கோபம் அழிவுக்கு வழிவகுக்கும்
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: