13. வியத்தகு Whiteny Houston…

 

வியத்தகு விட்னி கூஸ்ரன்…

 துடிக்கும் ஜீவன் ததும்புமிசை.
நொடியும் மறக்கவியலா இசை
அடி!..அந்த .”யூ…ஊ…உ..ஊ..”
பொடி காட் பாடல்..
                 ஆம்
(” I will always  love you…u….uu!..” -Body gard song

   http://youtu.be/3JWTaaS7LdU    )

 விட்னிகூஸ்ரன்  தன் குரலால்
கட்டினாள் மனங்களை! – தனக்குக்
கிட்டிய சுயதிறன் நம்பாது
கட்டப்பட்டாள் பய உணர்வால்.

உறுதியற்ற மனதால், பயந்தாள்.
மறுகினாள் சுயதிறன் போதாதென.
இறுகினாள் போதை துணையென.
அறுதிப் பரிசானது மரணம்.

 யோன் ரூசெல் கூஸ்ரன்- சிசி புதல்வி.
(John Russel Houston – cissy)
நாற்பத் தெட்டில் மறைந்தாள்.
பதினெட்டில் விட்னி மகள்
பதுமை பொபி கிறிஸ்ரினா பிறவுண்.
(Boby kiristina Brown)

 வெள்ளிப் பேழையுள் விட்னியுடல்
துள்ளியதிறுதிச் சடங்கிலவளிசை.
கொள்ளையிட்ட தன்னிசையோடு – மீளாப்
பள்ளி கொள்ள அவளிறுதியூர்வலம்.

தந்தையருகிலவள் தன்னை அழுத்திய
எந்தக் கொம்பனுக்கும் பயமற்றுத்துயிலட்டும்!
பன்னீராக அவளாத்ம சாந்திக்காய்
கண்ணீர் மலர்கள் தூவப்படுகிறது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-2-2012.

 

 

                             

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  பிப் 26, 2012 @ 08:45:17

  அருமையான அஞ்சலி.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 26, 2012 @ 09:55:41

   அன்பான ஐயா! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்வடைந்தேன்.
   மிக்க மிக்க நன்றி.
   ஆண்டவன் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 2. b.ganesh
  பிப் 26, 2012 @ 08:57:26

  விட்னி ஹுஸ்டன் பற்றி கேள்விப்பட்டதுண்டு. உங்களின் அஞ்சலிக் கவிதையைப் படிக்கையில் மனதில் ஏற்பட்டது நெகிழ்வு!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 26, 2012 @ 09:54:07

   2கோடி பெறுமதியான தங்க, வைரநகைகள், தங்கக் காலணியென அவருக்குப் பிடித்த கருஞ்சிவப்பு ஆடையுடன் அடக்கும் செய்யப் பட்டாராம்.
   புதைத்த இடத்திற்குப் பலத்த பாதுகாவலாம்.
   இது எப்படியிருக்கு!.
   சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மகிழ்வடைந்தேன். மிக்க நன்றி.
   தெய்வ அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. ramani
  பிப் 26, 2012 @ 16:14:46

  காலனுக்கும் அந்தக் குயிலின் பாடலைக்
  கேட்க வேண்டும் என்கிற வெறி வந்து விட்டதோ ?
  ஆம் நிச்ச்யம் வெறி தான் வெறி தான் வந்திருக்க வேண்டும்
  படங்களுடன் தங்கள் கவிதாஞ்சலி
  மனம் கனக்கச் செய்து போகுது
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 26, 2012 @ 18:50:40

   நேரே மரணச் சடங்கைப் பார்த்தேன் ரிவியில்.
   மனம் மிகக் கனத்தது. அதன் தாக்கம் தான் இக்கவிதை.
   அவர் வளர்ப்பு மகனாக ஒருவரை வளர்த்தாராம், (22வயது).
   இது பொபிக்கும் தெரியுமாம்.
   இன்னும் தன்னினச் சேர்க்கையானவர் என்றும் வாசித்தேன். இதெல்லாம் விட்டால்,
   அந்தக் குரல் யாருக்கு வரும்.!
   மிக நன்றி சகோதரா தங்கள் கருத்திற்கு. மிக மகிழ்வும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 27, 2012 @ 21:02:59

  ம. வேணுதன் Wrote:-
  ”….தந்தையருகிலவள் தன்னை அழுத்திய
  எந்தக் கொம்பனுக்கும் பயமற்றுத்துயிலட்டும்!
  பன்னீராக அவளாத்ம சாந்திக்காய்
  கண்ணீர் மலர்கள் தூவப்படுகிறது…”

  மறுமொழி

 5. SUJATHA
  பிப் 28, 2012 @ 00:21:22

  குரலால் தன் இசையால் உலகத்தையே தன்பால் ஈர்த்த பாடகியின் மரணம் சோகத்தில் ஆழ்த்தியது உண்மை. ஆத்ம சாந்தியில் பங்கெடுத்து நினைவுகூர்ந்து வடித்த கவியும் அருமை..!!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 28, 2012 @ 07:58:43

   அன்பின் சுஜாதா மிக மிக நன்றி வலைக்கு வந்து கருத்திட்டமைக்கு. மிக மிக மகிழ்வடைந்தேன். தெய்வ கிருபை கிடைக்கட்டும்.

   மறுமொழி

 6. ஒப்பிலான் மு.பாலு
  பிப் 28, 2012 @ 15:02:45

  சகோதரிக்கு வணக்கம் …!இவரின் பாடலை கேட்டதில்லை ..ஆனால் உங்கள் கூற்றுப் படி சிறந்த பாடகி என்பது தெளிவாகிறது …..பகிர்வுக்கு நன்றி சகோதரி ..!.

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 06, 2012 @ 18:31:05

  Dr.Muttiah Kathiravetpillai Muruganandan likes this..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: