24. வாழ்வியற் குறட்டாழிசை(உதவுதல்)

 

24. வாழ்வியற் குறட்டாழிசை

உதவுதல்.

தவுதல் என்பது கடின நிலையின்
கதவு திறத்தல் எனலாம்.

ணம் பொருளற்றாலும், உடல், உள்ளத்தால்
மனம் நிறைய உதவலாம்.

ழை, முதியோருக்கு உதவுதல் வரட்சியில்
மழை பெயதல் போலாகும்.

னம் விரும்பி உதவுதலானது தூய
இனம் புரியா சாந்தியுடைத்து.

னம் விரும்பினாலும் உதவ முடியாத
கனமிகு சூழல்களும் உருவாகிறது.

போதைகளின் உதவி மனிதனை நிர்வகிப்பதாக
போலி மயக்கம் கொள்கிறார்.

தவி பெற்று உயர்ந்ததும் உதவியவரை
உதாசீனம் செய்பவர் பலர்.

தவினாலும் பலரால் திரும்ப பெரும்
உபத்திரவம் உருவாகிறது வழமை.

தவுவோம் என்று நெருங்குவோர் பலரால்
உலைச்சலும் வரும்! விழித்திரு!

தவு! உதவு! அலட்சியம் செய்வார்.
உயர்வு இறுதியில் உண்மை.

தவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
உதவி செய்ய மறக்கிறோம்.
 

க்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-2-2012.

                                     

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  பிப் 29, 2012 @ 05:49:21

  ‘உதவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
  உதவி செய்ய மறக்கிறோம்.’

  மறுக்க முடியாத உண்மை…
  நல்ல பதிவு.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 29, 2012 @ 07:25:48

   சகோதரா! மறக்க முடியாத உண்மை!
   நான் அனுபவிக்கிறேன். என் அனுபவமே இவைகள்…
   சில நேரம் உதவியே செய்யக் கூடாது என்றும் எண்ணம் வருகிறது….
   .சகோதரா இங்கு வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்ச்சி,
   நன்றி.
   ஆண்வன் துணை கிட்டட்டும்.

   மறுமொழி

 2. கோமதிஅரசு
  பிப் 29, 2012 @ 05:58:09

  உதவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
  உதவி செய்ய மறக்கிறோம்.//

  சில சமயங்களில் தகுதியானவர்களுக்கு உதவி செய்யாமல் தகுதி இல்லாதவர்களுக்கு செய்து விட்டு அவதி படுவது உண்டுதான்.

  உங்கள் ஆக்கம் நன்றாக இருக்கிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 29, 2012 @ 07:37:34

   அவதிப்படுகிறேனே!…ஆயினும் பாருங்கள் சகோதரி…கடந்த கிழமையும் நடந்தது.
   கணவரிடம் போய் கூறினேன்..” இங்கே பாருங்கோப்பா இன்று இன்னொருவருக்கு உதவி செய்தேன். எனக்குத் தெரியும் நான் எட்டி உதைக்கப் படுவேன் என்று. சரி பிழைத்துப் போகட்டும்….” என்றேன்.
   அவர் வேணுமென்றால் எனக்குக் கூறலாம் – இது தேவையற்ற வேலை ..சும்மா இரேன் என்று – ஆயினும் இரண்டு பேரும் சிரித்திட்டு இருந்தோம்.
   நன்றி சகோதரி நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு .இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. Dr.M.K.Muruganandan
  பிப் 29, 2012 @ 11:33:08

  உதவுதற்குக் காத்திருக்கும் நன் மனது
  உதவலாமா வேண்டாமா என தயங்குவது அரை மனது.
  நீங்கள் சொல்லது போல
  “உதவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
  உதவி செய்ய …” மறுப்பது துன்மனது

  மறுமொழி

 4. SUJATHA
  பிப் 29, 2012 @ 16:48:48

  வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு செய்யும் உதவி நமது கடமை போன்றது. அதிலும் முதியோர்க்கு நாம் செய்யும் கடமை அதைவிட மேலானது.வரட்சியில் பெய்யும் மழை பொன்றது. அருமை பணிகள் தொடரட்டும்.!!!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   பிப் 29, 2012 @ 17:47:55

   ஹாய் சுஜாதா! மிக விரைவாக வந்தது கருத்திட மிக மகிழ்ச்சி. மிக நன்றியும் உரித்தாகுக. வேறு எதை எழுத என்று தெரியவில்லை. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. rathnavelnatarajan
  பிப் 29, 2012 @ 23:45:51

  அருமையான கருத்துகள்.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 01, 2012 @ 07:56:59

  ம. வேணுதன்
  Kilinochchi
  ..
  Thevaki Pulendran
  Mahajana College, Tellippalai, Sri Lanka

  Pushpalath Kandasamy

  Likes this
  ….

  மறுமொழி

 7. ரெவெரி
  மார்ச் 01, 2012 @ 13:26:05

  சாலையோர பிச்சை கேட்பவர் ஒருவருக்கு என் வீட்டில் ஒரு நாள் வேலை கொடுத்து சம்பளம் கொடுத்த போது கிடைத்த மனதிருப்தி
  மற்றவர் அதை குறை சொல்கையில் பறந்து போகிறதே சகோதரி…

  நல்ல ஆக்கம்…படையல் தொடரட்டும்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 01, 2012 @ 16:13:28

   அதையெல்லாம் பொருட்படுத்தாத மனம் வேண்டும். உங்கள் நோக்கம் நிறைவேறிய திருப்தி வேண்டும். மிக்க நன்றி சகோதரா.. தங்கள் இனிய வரவு, கருத்திடலிற்கு மிக்க மிக்க நன்றி. இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. jaghamani
  மார்ச் 02, 2012 @ 12:13:19

  உதவு! உதவு! அலட்சியம் செய்வார்.
  உயர்வு இறுதியில் உண்மை.

  உதவுவதற்குத் தகுதியானவரா என்று ஆராய்ந்து
  உதவி செய்ய மறக்கிறோம்.

  உண்மையான கருத்துகள்…

  மறுமொழி

 9. கோவை கவி
  மார்ச் 10, 2012 @ 16:28:14

  அன்பின் சகோதரி தங்கள் இனிய வரவு, கருத்து மகிழ்வு தருகிறது. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: