24. தரணியில் தமிழ் காத்திடுவோம்.

 

vector_flower_patterns_background_6003

 

தரணியில் தமிழ் காத்திடுவோம்.

காலத்தினை வென்று சுடரான தமிழ்.
ஞாலத்திற்; புகழ்க் கொடியீட்டிய தமிழ்.
ஏலமிட எவராலும் முடியாத தமிழ்.
ஆலம் விழுதாக ஊன்றிய தமிழ்.
பழம் தமிழ்மொழிப் புகழை நாம்
இழந்திடல் என்பது எதற்காக என்கிறோம்!
பழைய காலத்தில் உலகாண்ட மொழியிங்கு
புழங்காது சுலபமாய் இழத்தல் தவறு.

முழுதுமாய் முனைந்து முழு மூச்சாக
உழுது தமிழ்விதை தூவி விட்டால்
விழுதிடத் தமிழ் வேரூன்றித் தழைக்கும்!
எழுதிடத் தேவையில்லைத் தமிழ் அழியுதென்று!
பண்டு புகழுடைத் தமிழ் நங்கை
செண்டுகள் ஏந்தினாள் பழைய ஏட்டிலே.
கண்டிட்டாள் பல தமிழ்ச் சங்கங்கள்.
நொண்டக் கூடாது புலம்பெயர் நாட்டிலே.

தாய்மொழியை வெறுப்போர், பிற மொழியை
வாய் மொழியாக்குவார், வளம் என்பார்.
சேய் மொழி தமிழாய்ப் புழங்கிட நாம்
வாய்மொழி தாய்மொழி ஆக்கிடல் நலம்.
மொழிப் பற்று அனைவரும் கொண்டால்
விழிப்புற்றுத் தமிழ் மொழியை ஊக்குவார்.
களிப்புற்றுக் கலைவழியும் தமிழ் செய்வார்.
விழிப்புணர்வு கொள்ளலாம் தாய் மொழியினால்.  

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-11-2006.

(இக் கவிதை ரி.ஆர்.ரி வானொலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                    

 

Advertisements

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  மார்ச் 02, 2012 @ 04:52:31

  விழிப்புணர்வு கொள்ளலாம் தாய் மொழியினால்.//

  உண்மை! தாய் மொழியால் நலம் அடைவோம்.
  கவிதை இலண்டன் வானொலியில் நீங்கள் வாசித்தமை அறிந்து மகிழ்ச்சி வேதா.

  மறுமொழி

 2. b.ganesh
  மார்ச் 02, 2012 @ 05:10:05

  நல்ல கருத்துள்ள பா. மிகவே ரசித்தேன். தொடரட்டும் இதுபோன்ற நல்ல கருத்துள்ள கவிதைகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2012 @ 07:34:52

   நிறைய கவிதைகள் உண்டு வலையேற்றத் தான் நேரமின்றித் தவிக்கிறேன். மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் அன்பான வருகைக்தும், கருத்திடலிற்கும். தெய்வ ஆசிகள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. VAI. GOPALAKRISHNAN
  மார்ச் 02, 2012 @ 07:39:56

  சிறந்த பதிவு. அன்பான வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2012 @ 16:45:23

   மிக்க நன்றி ஐயா. தங்கள் அன்பான வரவிற்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. sasikala
  மார்ச் 02, 2012 @ 08:34:51

  களிப்புற்றுக் கலைவழியும் தமிழ் செய்வார்.
  விழிப்புணர்வு கொள்ளலாம் தாய் மொழியினால்.
  உண்மை , உண்மை அருமையாக சொன்னீர்கள் .

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2012 @ 16:51:03

   மிக்க நன்றி நன்றி சகோதரி.. உமது அன்பான வரவு கருத்திடலிற்கும் மிக மிக மகிழ்ந்தேன். மனம் நிறைந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.. ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. பழனிவேல்
  மார்ச் 02, 2012 @ 08:58:31

  மொழி என்பது வெறும் வார்த்தைகளின் வாய்ப்பாடு அல்ல
  எனது வாழ்வின் வெளிப்பாடு.

  அழகிய அமுதம்.
  அருமையான ஆக்கம்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2012 @ 16:54:30

   பழனிவேல் தாங்கள் இன்று வலைச்சரத்தில் அறிமுகமானது எனக்கு மிக மகிழ்வு.
   பலர் இலைமறை காயாக இருப்பது வெளிவருவது மகிழ்வு தானே.
   என்னிடம் வந்து கருத்திட்டு மகிழ்வு தந்ததற்கு மிக மிக நன்றி. இறை ஆசி கிட்டட்டும் சகோதரா.

   மறுமொழி

 6. jaghamani
  மார்ச் 02, 2012 @ 12:11:35

  ஆலம் விழுதாக ஊன்றிய தமிழ். பெருமைகொண்டது தங்களின் அருமையான கவிதையால்..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 02, 2012 @ 16:56:31

   மிக மிக நன்றி சகோதரி.தங்கள் இனிய வரவு மிக மிக மகிழ்வு தருகிறது. தங்கள் கருத்திடலிற்கு மிக நன்றி. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. Dr.M.K.Muruganandan
  மார்ச் 02, 2012 @ 17:04:34

  எம் மொழி மீதான பற்றை விதைக்கிற நல்ல படைப்பு.

  மறுமொழி

 8. ரெவெரி
  மார்ச் 02, 2012 @ 19:36:45

  தரணியில் தமிழ் காத்திடுவோம்…தமிழ் பற்றை விதைக்கிற அருமையான ஆக்கம் சகோதரி…

  மறுமொழி

 9. வே.நடனசபாபதி
  மார்ச் 03, 2012 @ 05:55:57

  //வாய்மொழி தாய்மொழி ஆக்கிடல் நலம்.//
  நாம் எல்லோரும் இதை பின்பற்றினால் தாய்மொழி என்றும் வாய்மொழியாயும் இருக்கும். நல்ல கருத்துள்ள கவிதை. வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 03, 2012 @ 08:03:05

   அன்பின் சகோதரா தேடி வந்து இடுகையிட்டீர்கள். நன்கு மகிழ்வடைந்தேன். மனம் நிறைந்த நன்றி உரித்தாகுக. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. rathnavelnatarajan
  மார்ச் 04, 2012 @ 11:07:31

  அழகு கவிதை. வாழ்த்துகள்.

  மறுமொழி

 11. கோவை கவி
  மார்ச் 10, 2012 @ 10:15:34

  Arul Mozhi and Adithya Vishakha like this..

  மறுமொழி

 12. சக்தி சக்திதாசன்
  மார்ச் 10, 2012 @ 15:23:44

  அன்பினிய சகோதரி வேதா,
  அன்னை மொழியின் அற்புதம் சொன்னீர்
  அதைக் காக்க வேண்டிய கடமையும் சொன்னீர்
  ஆதி மொழியின் அழகினைச் சொன்னீர்
  அன்பு மொழியின் அக்னிவையும் சொன்னீர்
  அகரம் தொடங்கி எம் மொழி
  அகேனம் வரை இனிமை தந்திடும்
  அதன் இன்சுவை தந்த எமது
  அன்புநிறை சகோதரி வேதா அவர்களுக்கு
  அன்னை மொழியின் அன்பு வணக்கங்கள்
  அன்புடன்
  சக்தி

  மறுமொழி

 13. tharshi
  மார்ச் 13, 2012 @ 07:26:34

  தமிழ் பற்றிய தங்களின் கவிதைக்கு எனது வாழ்த்துக்கள்..அழகான பதிவு

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: