வேதாவின் மொழிகள் 18.

வேதாவின்  மொழிகள் 18.

(சிந்தனைச்சாரல் என்பது பெயர் மாறி வேதாவின் மொழிகளாக.)

தவறுகளைத் தவறென்று கூறாமல்
உறவு வளர்க்க ஆசியிடுதல்
திறவுகோலாகும் தலைப் பாரத்திற்கு.
பிறகு வருந்துதல் தேவையற்றது.

சந்தேகம். (14-6.2006.)
சந்தேகப் புற்றுநோயிற்கு புரிந்துணர்வு
மின்சார சிகிச்சை தான் அத்தியாவசியம்.

அசையாத நம்பிக்கையும், ஆழ்ந்த அன்பும்
இருந்தால் சந்தேகம் வாலாட்ட முடியாது

சந்தேகமென்பது மஞ்சள் நிறக் கண்ணாடி
அணிந்து பார்ப்பது போன்ற நிலை தான்.

சில இடங்களில் புரிந்துணர்வு மின்சார சிகிச்சை கொடுத்தாலும்
சந்தேகப் புற்று நோய் மறுபடி வளர வாய்ப்புண்டு.

ஆதவன். (2-5-2006.)
சூரியக் கடமையுணர்வு விடாமுயற்சி
பாரிய நற்பயன்கள் தரும்.

நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.

பிரதி பலன் கருதாத கொடை வள்ளல் ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.

மறைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்
நிறைந்த அன்பைக் கொடு.

எறிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.

நல்லவை ஆதவன் பொற்கதிராகும்
அல்லாதவை கதிர் மறைக்கும் கருமேகம்.

24-8-2008.
ஙொய்!…ஙொய்!…என்று விரட்ட விரட்ட பறந்து உணவில் வந்தமர்ந்து அசிங்கம் சேர்க்கும் இலையானைத் தடுக்க ஒரு கொசு வலையோ ஒரு மூடியோ தேவைப் படுகிறது. அது போல நடக்கும் மனிதனுக்கு, அவன் தானாகத் தேடும் சுயகட்டுப்பாடு தான் ஒரு மூடியாகிறது, ஒரு வலையாகிறது.

தவறுகள் பற்றி:-
அநீதிகள் பற்றி அபிப்பிராயம் கூறுவது பல இடங்களில் அபாயகரமானது. சாதகமான அபிப்பிராயமே எங்கும் கைகளை விரித்து வரவேற்கப் படுகிறது. ஆக ஒரு வகையில் நடிப்பு வரவேற்கப் படுகிறது. இது எத்தனை பேருக்கு உடன்பாடாக உள்ளது!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(இவை இலண்டன் தமிழ் வானொலியிலும், வேறு இடங்களிலும் பாவிக்கப் பட்டவை)

 

                              

2012.

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. cpsenthilkumar
  மார்ச் 05, 2012 @ 05:00:46

  குட் ஒன்

  மறுமொழி

 2. பழனிவேல்
  மார்ச் 05, 2012 @ 05:14:41

  “மனிதன், அவன் தானாகத் தேடும் சுயகட்டுப்பாடு தான் ஒரு மூடியாகிறது, ஒரு வலையாகிறது.”

  100 சதவீ தம் உண்மை…

  “பிரதி பலன் கருதாத கொடை வள்ளல் ஆதவன்.
  பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.”

  அழகு…

  மறுமொழி

 3. rathnavelnatarajan
  மார்ச் 05, 2012 @ 12:45:38

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. SUJATHA
  மார்ச் 06, 2012 @ 14:44:15

  அசையாத நம்பிக்கையும் ஆழ்ந்த அன்பும் இருந்தால் சந்தேகத்தை
  விலக்கிட முடியும். மனிதனுக்கு இது ஒரு கொடிய வியாதி. அருமை—

  நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்.

  பிடித்தமானவை…..மனிதனுக்கு இயற்கை கொடுத்த கொடை. வாழ்த்துக்கள்!!! பணிகள் தொடரட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 06, 2012 @ 18:20:24

   மனிதனுக்கு இயற்கை கொடுத்த கொடையான நோதலற்ற வார்த்தைகள் பற்றி எழுதியிருந்திர்கள் சுஜாதா.உமது அன்பான வருகை , கருத்திடலிற்கு மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிடைக்கட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 06, 2012 @ 18:12:20

  Sivagowri Sivagurunathan
  Lecturer at University of Jaffna

  Unmaik Kural

  Pushpalatha Kanthasamy..

  அல்லைப்பிட்டி மக்கள்..

  Peruntha Pia Ramalingam
  Works at Retten i Hjørring
  ..
  , Rathi Jeyakumar LIKES THIS

  மறுமொழி

 6. ஸாதிகா
  மார்ச் 07, 2012 @ 05:48:13

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 07, 2012 @ 17:39:34

   வந்து என் கருத்தினை இட்டு விட்டேன் மனம் நிறைந்த நன்றி. முகநூலில் எனது சுவரிலும் இதை படத்தோடு இட்டுள்ளேன்.
   இறை ஆசி கிட்டட்டும் சகோதரி.

   மறுமொழி

 7. பிரபுவின்
  மார்ச் 07, 2012 @ 06:48:21

  உங்கள் எழுத்துத்திறன் மிகச்சிறப்பாக உள்ளது.இலங்கை தாண்டியும் புகழ் பரப்பும் உங்கள் ஆளுமை பாராட்டுக்குரியது.நன்றி சகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 07, 2012 @ 16:07:02

   அன்பின் பிரபு உமது வாக்குப் பலிக்கட்டும்.
   வளரி எனும் கவிதை இதழ் கவிதை கேட்டார்கள் அனுப்பினேன். உமது கருத்திடல் , வருகைக்கு மிக மிக மகிழ்ச்சி நன்றி.
   எனக்கு முதன் முதல் கருத்திட்டு இதயத்தில் செந்நீர் ஓட விட்டது பிரபு தான் என்பதை என்றும் மறக்க மாட்டேன்.
   (ஒரே ஒருவர் கருத்திட்டது அது பிரபு).
   பிரபு இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. மாலதி
  மார்ச் 07, 2012 @ 09:38:26

  மிகவும் சிறந்த சிந்தனையை விதையாக்கி உங்களின் தூய உள்ளத்தில் விதைத்து இருக்கிறீர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய சிறந்த படைப்பு பாராட்டுகள் தொடர்க….

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  மார்ச் 07, 2012 @ 16:41:12

  “..நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்…”
  குறளாக மருள் போக்கும்
  அறச் சிந்தனைகளை
  அழகாக விதைக்கும் படைப்பு

  மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 07, 2012 @ 17:35:46

  மிக மிக மகிழ்வும், நன்றியும் ஐயா. தங்கள் இனிய வரவிற்கும், கருத்திடலிற்கும் ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 11. ஸாதிகா
  மார்ச் 09, 2012 @ 07:45:07

  வாழ்த்துக்கள் சகோ வேதா இலங்காதிலகம்.

  //நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்.// முத்து முத்தான் மொழிகள் வரிசைகண்டு மகிழ்ச்சி.நல்ல கருத்தாளமிக்க நன் மொழிகளல்லவா இவை.இம்மொழிகள் படைத்த உங்களுக்கு என் வாழ்த்துகக்ளும் பாராட்டுக்களும்.தொடருங்கள்!

  மறுமொழி

 12. dhanasekaran10
  மார்ச் 10, 2012 @ 06:46:09

  மிக ஆழமான கருத்தோட்டங்கள் கொண்ட பதிவு வாழ்த்துகள்

  மறுமொழி

 13. இரவிச்சந்திரன்
  மார்ச் 10, 2012 @ 16:13:42

  தவறுகள் பற்றி –
  அநீதிகள் பற்றிய‌ ‘பாதகமான அபிப்ராயங்களை’, சொற்களின் திறமையான பயன்பாட்டால், கூற/எழுத முடியும். கொடூர ஆட்சிகாலங்களின் போது கூட தலைவர்களின் சிறந்த பேச்சாற்றல்/எழுத்தாற்றல்க‌ளின் மூலம், நற்சொற்களால் ‘அபிப்ராயங்கள்’ சொல்லப்பட்டுள்ளது. நடிப்பு கீழ்த்தட்டு அல்லது சாதாரண பொதுமக்களுக்கு மட்டுமே உதவும். பெருந்தலைவர்கள் நடிக்காமல் பாதகமான அபிப்ராயங்களை வரவேற்கும்படியாக எடுத்துக்கொள்ளத்தக்கதாக கூறியுள்ளார்கள் – இரவிச்சந்திரன், பெங்களூர்

  மறுமொழி

 14. கோவை கவி
  மார்ச் 10, 2012 @ 16:21:10

  மிக நன்றியும, மகிழ்வும் தங்கள் அன்பான வருகைக்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 15. கோமதி அரசு
  மார்ச் 14, 2012 @ 11:58:14

  நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
  ஆதவனாய்ப் பயன் தரும்.//

  அன்பான வார்த்தையைதான் எல்லோரும் எதிர்பார்க்கிறோம்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 19:23:19

   உண்மை தான் சகோதரி. மிகுந்த நன்றியும், மகிழ்ச்சியும் தாங்கள் வந்து தங்கள் கருத்தைத் தந்ததற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: