15. சாதித்திடு பெண்ணே!

 

சாதித்திடு பெண்ணே!

 

பெண் தன்னை நம்புதல்
தன் காலிலே ஊன்றுதல்
திண்ணம் ஒரு நெம்புகோல்.
பெண் பெருமைக்கு ஊன்றுகோல்!

சித்திரப்பூ விழிகளின் அறியாமை
நித்திரை  உடனே கலையட்டும்!
எத்திரையும் கிழித்து உலகில்
முத்திரை பதிக்கட்டும் நித்திலப் பெண்மை.

திக்கம் பெண்ணை அழுத்தி
சோதித்துச் சக்தியைப் பறித்து,
பாதித்து மிதிக்க விடாது
வாதித்துச் சாதித்திடு பெண்ணே!

சோகங்களைச் சுகமாக்கி இன்பப்
பாகம் இணைத்திடு! துன்ப
நாகம் துரத்திடு! ஆனந்த
மேகமுன்னைக் கூடும் பெண்ணே!

திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
இரண்டாம் தலைமுறை உயரட்டும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-1-2005.

(இக் கவிதை யெர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது. ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                                

 

43 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. rathnavelnatarajan
  மார்ச் 08, 2012 @ 00:39:46

  வாழ்த்துகள் அம்மா.
  உங்கள் கவிதையை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  மகளிர் தின வாழ்த்துகள்.
  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 07:52:14

   ”..உங்கள் கவிதையை எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
   மகளிர் தின வாழ்த்துகள்….”
   மிக்க மகிழ்வும், நன்றியும் ஐயா தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், என், இடுகையைப் பகிர்ந்தமைக்கும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. பழனிவேல்
  மார்ச் 08, 2012 @ 03:35:38

  “திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
  வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
  மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
  இரண்டாம் தலைமுறை உயரட்டும்!”

  அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 07:54:49

   மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா உமது கருத்திற்கும், வருகைக்கும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 3. ramani
  மார்ச் 08, 2012 @ 05:46:17

  மகளிர் தின சிறப்புப் பதிவு மிக மிக அருமை
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 07:56:42

   மிக மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், ஆண்டவன் அருள் கிட்டட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

   மறுமொழி

 4. Durai Daniel
  மார்ச் 08, 2012 @ 06:05:01

  அருமையான வரிகள். அழகான பா. மகளிர் தின வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 07:59:05

   நன்றி..நன்றி. மிக மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா தங்கள் கருத்திற்கும், வருகைக்கும், ஆண்டவன் அருள் கிட்டட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

   மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 08, 2012 @ 07:27:18

  Nisha Sha wrote:-
  மகளிர் தின வாழ்த்துகள்…

  அன்பு தோழி likes this..

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 08, 2012 @ 08:10:22

  Vishnu Rajan wrote:-
  அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்…நல்ல பகிர்வு அன்பு சகோதரி

  Vetha wrote:-
  மிக்க நன்றி விஷ்ணு. இறை ஆசி கிட்டட்டும்…

  Vishnu Rajan ‎Vetha ELangathilakam மிக்க மகிழ்ச்சி அன்பு சகோதரி ..உங்கள் நலனுக்கும் மகிழ்வுக்கும் இறைவனை வேண்டுகிறேன் ..

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 08, 2012 @ 08:47:07

  Arul Mozhi wrote:-
  பெண் தன்னை நம்பவேண்டும்.தானே சாதிக்கிகும் எண்ணம் கொள்ள வேண்டும்,அற்புதம் சொன்ன விதம் அழகு.

  vetha wrote:-
  மிக்க நன்றி சகோதரி அருள்மொழி. தங்களிற்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.

  Hameed Dvk wrote:-
  இனிய மகளிர் தின வாழ்த்துகள்…

  Vetha wrote:-
  மிக்க நன்றி சகோதரா. தங்களிற்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 8. sravani
  மார்ச் 08, 2012 @ 09:21:55

  எழுச்சியும் ஊக்கமும் நிறைந்த அழகான கவிதை .
  மகளிர் தின வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 9. மகேந்திரன்
  மார்ச் 08, 2012 @ 11:05:36

  தலைமுறை உயர
  பெண்ணின் புகழ் உயர
  மகளிர் தின நல வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 16:09:42

   எங்கே சகோதரா தங்களைக் காணவே இல்லையே!
   மிக மிக சந்தோசமும், மனம் நிறைந்த நன்றியும் வந்து கருத்திட்டமைக்கு.
   தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. சா இராமாநுசம்
  மார்ச் 08, 2012 @ 12:29:41

  ஆதிக்கம் பெண்ணை அழுத்தி
  சோதித்துச் சக்தியைப் பறித்து,
  பாதித்து மிதிக்க விடாது
  வாதித்துச் சாதித்திடு பெண்ணே!

  அறிவுரை! நல்ல அறவுரை!
  நன்று!

  சா இராமாநுசம்

  மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  மார்ச் 08, 2012 @ 13:50:29

  பெண்கள் தினத்திற்கு அருமையான கவிதை

  “சோகங்களைச் சுகமாக்கி இன்பப்
  பாகம் இணைத்திடு! துன்ப நாகம்”

  துரத்துவதும் என்னை மிகவும் கவர்ந்தன.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 16:13:16

   ஓ! மிக்க நன்றியும் சந்தோசமும் ஐயா நீங்கள் வந்து கரத்திட்டமைக்கு. மிக்க மிக்க நன்றியைக் கூறுகிறேன். ஆண்டவன் ஆசீர்வாதமும் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 12. ரெவெரி
  மார்ச் 08, 2012 @ 14:05:43

  மகளிர் தின சிறப்பு கவிதை அருமை… அருமை சகோதரி…

  மகளிர் தின நல்வாழ்த்துகள்…

  மறுமொழி

 13. abul kalam
  மார்ச் 08, 2012 @ 15:52:10

  பெண்ணைப் பற்றி
  பெண்ணின் ஆக்கம்
  பெண்களுக்கு ஓர் ஊக்கம்

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 08, 2012 @ 16:16:09

   ஓ! முதலில் இது யார் புது வரவு என்று நினைத்தேன் இப்போது பதில் எழுத வரத்தான் – இது நம்ம கலாம் ஐயா என்று புரிகிறது. மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 14. முனைவர் இரா.குணசீலன்
  மார்ச் 08, 2012 @ 15:54:38

  அருமை
  அருமை
  இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 15. கோவை கவி
  மார்ச் 08, 2012 @ 16:30:31

  All likes this.:-

  Sujatha Anton.-Bawany Balakrishnan
  Sivagowri Sivagurunathan.—-அன்புடன் நான், Chennai,
  Ithaya Sakeelan Harrow..- —-Singa Kutti,Coimbatore, Tamil Nadu
  Kokilanathan Rasiah, Odder —-Subashiny Suba
  Peruntha Pia Ramalingam, Works at Retten i Hjørring.
  N.Rathna Vel, G.S.H.H.SCHOOL, SRIVILLIPUTTUR.
  FriendsMari Muthu C, Works at Govt of Tamilnadu
  Naguleswarar Satha, Christian College Kopay(my brother)
  Vino Pathmanathan, Girls high school pandeteruppu
  Rathy Jeyakumar.—–Ganesh Kumar..—Rama Balaji
  வசந்தா சந்திரன், J/union college tellippalai
  அன்பு தோழி, Chennai, Tamil Nadu
  கலை நிலா, Kumbakonam
  Kana Ravin.
  ம. வேணுதன்.
  நீலமேகம் நீலா
  Kanagasundram Sundrakumar
  Sindhya Ragunathan
  Senthil Raj likes this..
  ..
  ..

  மறுமொழி

 16. சத்ரியன்
  மார்ச் 09, 2012 @ 06:54:50

  //திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
  வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
  மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
  இரண்டாம் தலைமுறை உயரட்டும்!//

  அழகு! அழகு!!

  மனதிற்கு உரமூட்டும் வரிகள்! இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்துகிறது.

  மறுமொழி

 17. ஸாதிகா
  மார்ச் 09, 2012 @ 14:47:44

  பெண்களின் பெருமைப்படுத்தக்கூடிய அழகு கவிதை சகோதரி வேதா இலங்காதிலகம்.

  வானொலியில் உங்களால் வாசிக்க பட்டமைக்கு வாழ்த்துககள்.அந்த லிங்கை இங்கு பகிர்ந்திருந்தால் நாங்களும் கேட்டு மகிழ்ந்திருப்போமல்லவா?
  இயன்றால் செய்யுங்களேன் சகோதரி?

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 09, 2012 @ 16:05:57

   நான் பதிவு செய்வதில்லைச் சகோதரி. என் குரலில் ” கவிதை கேளுங்கள்” தலைப்பில் இந்த வலையில் ல் 3 கவிதைகள் உண்டு கேட்டுப் பாருங்கள். எதிர் காலத்தில் முயற்சிக்கிறேன்.
   வந்து கருத்திட்டமைக்கு மிக மிக நன்றியும், மகிழ்வும்.
   இறை ஆசி கிட்டட்டம்.

   மறுமொழி

 18. ananthu
  மார்ச் 09, 2012 @ 16:30:11

  நல்ல கவிதை… வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 19. dhanasekaran10
  மார்ச் 10, 2012 @ 06:44:45

  அருமைக்கவிதை சகோதரி வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 10, 2012 @ 13:45:24

   அன்பின் சகோதரா மிக மிக மகிழ்வு கொண்டேன். நன்றியும் கூட தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும். இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 20. Senthilarasu
  மார்ச் 10, 2012 @ 12:04:05

  அருமையான கவிதை. தொடர்க உங்கள் பணி

  மறுமொழி

 21. pathmasri
  மார்ச் 12, 2012 @ 18:51:09

  “திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
  வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
  மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
  இரண்டாம் தலைமுறை உயரட்டும்!”

  வரிகளில் மீண்டும் பாரதியின் புதுமைப்பெண்ணைத் தட்டியெழுப்புகிறீர்கள் கவிஞரே….நல்ல வரிகள்…
  ப்ரியமுடன்…
  -சிரபுரத்தான்-

  மறுமொழி

 22. tharshi
  மார்ச் 13, 2012 @ 07:18:36

  சாதித்திடு பெண்ணே…அழகு

  மறுமொழி

 23. கோவை கவி
  மார்ச் 13, 2012 @ 16:58:31

  அன்பின் தர்சி மிக்க நன்றி உமது கருத்திற்கும், அன்பான வருகைக்கும். மிக மகிழ்ந்தேன்.
  இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 24. கோவை கவி
  மார்ச் 13, 2012 @ 17:21:32

  Sujatha Anton :-
  மாந்தரின் வலிமை பேசும் மானிடம் மனம் வலித்து பேசுவதும் மடமையன்றோ. மகளிர்க்கு ஒரு தினம் பெருமை தனை பேசிடுவீர் இப்பொன்னாளில்.இணைந்து கூடி வாழ்த்துவோம்!!!!

  Vetha :-
  அன்பின் சுஜாதா மிக்க நன்றி உமது கருத்திற்கும், மிக மகிழ்ந்தேன். இறை ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 25. கோமதி அரசு
  மார்ச் 14, 2012 @ 11:52:28

  திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
  வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
  மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
  இரண்டாம் தலைமுறை உயரட்டும்!//

  இரண்டாம் தலைமுறை உயர்வுக்கு ஏற்ற கவிதை.

  சாதிக்க துடிக்கும் பெண்கள் இந்த வரிகளை மனதில் வைத்துக் கொண்டால் நிச்சயம் சாதிக்கலாம்.
  நன்றி வேதா அருமையான கவிதைக்கு.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: