வாழ்த்தியல். 25

(701வது இடுகை) 

வாழ்வியற் குறட்டாழிசை.

வாழ்த்தியல். 25

 

விசுவாசத்தில் வணக்கமாய், இணக்கமாய் கடவுளை
வாழ்த்திட, இன்மொழியாகும் வாழ்வு.

வாழ்த்துங்கள் வாயார, மனதார, நல்லதற்கு!
தாழ்வுறாக் கீர்த்தி வரும்.

வாழ்த்திட, ஆசீர்வதிக்கப் பதினாறு பேறாம்!
வானமான மனமே வேண்டும்!

ரியாதை, மரபு, வழக்கம், வெற்றி,
மதிப்பான பரிசுகளிற்கும் வாழ்த்துவார்!

வாழ்த்துதலால்  இரு பகுதி மனங்களும்
மாழ்வதே  இல்லை – துன்பத்தில்.

தாழ்ந்திடும் போது  ஒருவன் உயர
வாழ்த்துதல் தன்னம்பிக்கைத் துளிகளாகும்.

தாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நன்கு
வாழ்த்துதலில் குறையொன்றுமில்லை.

னிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.
கனியா வுள்ளம் விலகியோடும்.

வாழ்த்துகள் வாழச் செய்யும். வயிறெரிய,
வீழ்ந்திட, வாழ்த்துவது இல்லை.

படுடைய, சலித்த நெஞ்சு வாழ்த்திற்குக்
கபடியாடும் நன்றி கூற.

ளையாத இணக்கமுறா நெஞ்சில் நன்றி
விளையாது – கல் மனமே.
 

 

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-3-2012.

 

                                  

 

 

 

36 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. jaghamani
  மார்ச் 12, 2012 @ 05:24:05

  வாழ்த்திட, ஆசீர்வதிக்கப் பதினாறு பேறாம்!
  வானமான மனமே வேண்டும்!

  வாழ்த்துபா இசைத்த வளமான மனம் கொன்ட தங்களுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 07:18:18

   அன்பின் சகோதரி தங்கள் அன்பான வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக மகிழ்வும், நன்றியும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. Madhu Mathi
  மார்ச் 12, 2012 @ 06:04:42

  “கனிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.
  கனியா வுள்ளம் விலகியோடும்”

  சரியாய்ச் சொன்னீர்கள்..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 07:21:31

   மதுமதி வந்திட்டீங்களா?.. அப்பாடி!…….
   . மகளின் பிறந்த நாள் சிறப்பாக நடந்ததா?
   இங்கு வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக மிக மகிழ்ச்சியும், அன்பான நன்றியும்.
   தெய்வத்துணை கிடைக்கட்டும்.

   மறுமொழி

 3. rajaonlineraja
  மார்ச் 12, 2012 @ 06:20:37

  அருமை ..அருமை ..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 07:58:12

   மிக மகிழ்ச்சி ராஜபாட்டை ராஜா. தங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மிக நன்றி.மகிழ்ச்சியும் கூட.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. rajaonlineraja
  மார்ச் 12, 2012 @ 06:21:05

  மறுமொழி

 5. b.ganesh
  மார்ச் 12, 2012 @ 08:06:21

  அருமையான எளிமையான வரிகளில் வாழ்த்துவதால் குறையொன்றுமில்லை என்று விளக்கியுள்ளீர்கள். பிரமாதம். 701வது இடுகையிடும் தாங்கள் மேலும் பல்லாயிரம் நல் இடுகைகளைத் தர உள்ளன்புடன் வாழ்த்துகின்றேன் யான்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 16:17:59

   சகோதரா காலையிலேயே உங்கள் கருத்துப் பார்த்தேன், பதிலிட முடியவில்லை. மாலையில் வந்து தான் உங்களிற்குக் கீழே கருத்திட்டவர்களிற்குப் பதிலிட முடிகிறது.
   நன்கு மகிழ்வடைந்தேன் தங்கள் வருகையும், கருத்திடலாலும். ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. பழனிவேல்
  மார்ச் 12, 2012 @ 09:39:05

  அருமையான பதிவு…
  அதிலும்

  “தாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், வாழ்ந்தாலும் நன்கு
  வாழ்த்துதலில் குறையொன்றுமில்லை.”

  என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

  மறுமொழி

 7. ராஜி
  மார்ச் 12, 2012 @ 10:37:56

  வாழ்த்துக்களில் இவ்வளவு இருக்கா? பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 8. ramani
  மார்ச் 12, 2012 @ 11:14:34

  வாழ்க வாழ்க வென படித்துப்போகவே
  மிக்க சந்தோஷமாக இருந்தது
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. Senthilarasu
  மார்ச் 12, 2012 @ 11:32:38

  மிக அருமை…குறட்பாக்கள்…தொடர்க உங்கள் தொண்டு

  மறுமொழி

 10. மு.சுவமிநாதன்.
  மார்ச் 12, 2012 @ 15:03:10

  “வாழ்த்திட, ஆசீர்வதிக்கப் பதினாறு பேறாம்!
  வானமான மனமே வேண்டும்!”

  உண்மை..”வானமான மனமே வேண்டும்’அருமையான சொற்கள்..நெஞ்சில் ஆழப்பதியும்…பாராட்டுகள்..நன்றி !

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 19:23:25

   அன்பின் சகோதரா தாங்கள் யாரென்றே எனக்குத் தெரியாத போதும், இதில் கவரப்பட்டு வந்தீர்கள். உங்கள் இனிய வருகைக்கும், கருத்திடலிற்கும் மிக மகிழ்ந்தேன். ஆண்டன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. சென்னை பித்தன்
  மார்ச் 12, 2012 @ 15:15:41

  வாழ்த்துகள் எத்தனை!வாழ்த்துகள் வளை எறிபோல்!திரும்பி வரும்;நல்லதே நடக்கும்.அருமை சகோ!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 12, 2012 @ 20:23:59

   ”’…வாழ்த்துகள் வளை எறிபோல்!திரும்பி வரும்;நல்லதே நடக்கும்…”’ அன்புச் சகோதரா தாங்கள் தான் சரியாகச் சொன்னீர்கள், றிங் போல – வளையெறி போல திரும்பி வரும் வாழ்த்து.

   மிக நன்றி தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். நானும் மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 12. ரெவெரி
  மார்ச் 12, 2012 @ 16:35:15

  வாழ்த்தியல் பாக்கள் மிக அருமை…தொடருங்கள் சகோதரி…

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 12, 2012 @ 20:23:11

  ”’…வாழ்த்துகள் வளை எறிபோல்!திரும்பி வரும்;நல்லதே நடக்கும்…”’ அன்புச் சகோதரா தாங்கள் தான் சரியாகச் சொன்னீர்கள், றிங் போல – வளையெறி போல திரும்பி வரும் வாழ்த்து.

  மிக நன்றி தங்கள் வரவிற்கும், கருத்திடலிற்கும். நானும் மிக மகிழ்ந்தேன். ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

  மறுமொழி

 14. tharshi
  மார்ச் 13, 2012 @ 07:04:07

  வாழ்த்துக்களே வாழச்செய்யும்…. வாழ்த்துங்கள் மனதார..
  ஒவ்வொன்றும் அழகான வரிகள்…
  திரும்பத் திரும்ப படிக்கும் போதும் தெவிட்டாத கருத்துக்களை கொண்டவை தங்களின் குறட்டாழிசைகள்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 13, 2012 @ 07:37:05

   ஓ!…தர்சி எங்கே காணோமே என்று நினைத்தேன் வந்திட்டீர்கள். கருத்திடலிற்கு மிக மிக மகிழ்ச்சியும், நன்றியும்.
   (எனக்கு உங்களை எண்ணும் போது என் மாமா மகள் செல்வி நினைவு வரும், யாழில் லெக்சரராக இருக்கிறா. முகநூலில் உள்ளா. சிவகௌரி சிவகுருநாதன். இவரோடும் பேசுவேன் தர்சி என்று.) ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும் தர்சி.

   மறுமொழி

 15. கோவை கவி
  மார்ச் 13, 2012 @ 17:17:50

  Sasi Krish
  Annamalai University

  Hani Maas
  Zahira College, Kalmunai
  Iyyappan Kutty ——Ganesh Kumar —all likes this.
  Yashotha Kanth, Vishnu Rajan – Nisha Sha likes this.
  Murugavel Swaminathan:- அருமையான வரிகள்..
  பாரட்டுக்கள். ‎//கனிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.
  கனியா வுள்ளம் விலகியோடும்.//

  Vetha wrote:- THANK YOU SO MUCH ALL OF YOU: AND GOD BLESS YOU ALL.

  மறுமொழி

 16. SUJATHA
  மார்ச் 13, 2012 @ 21:12:34

  வாழ்த்தியல் குறள்கள் அருமை. ஒரு மனிதனுடைய வளர்ச்சிக்கு கொடுக்கும் வாழ்த்துக்கள் ஒன்றே போதும். அதிலும் தாழ்ந்திடும்
  போது கூறும் வாழ்த்துரைகள் மனிதனை உயர்வடைய செய்கின்றது. அருமை தொடரட்டும் பணிகள்!!!!

  மறுமொழி

 17. rathnavelnatarajan
  மார்ச் 14, 2012 @ 02:40:56

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 18. கோமதி அரசு
  மார்ச் 14, 2012 @ 11:45:09

  கனிந்த நெஞ்சம் வாழ்த்திட எண்ணும்.
  கனியா வுள்ளம் விலகியோடும்.//

  கனிந்த நெஞ்சத்தால் தான் வாழ்த்தமுடியும் . அருமையாய் சொன்னீர்கள் வேதா.

  நெஞ்சத்தில் வஞ்சத்தை வைத்தவர்களால் நிச்சியம் வாழ்த்த முடியாது.

  வாழ்த்து வாழ்த்துபவர், வாழ்த்து பெறுபவர் இருவரையும் வாழ செய்யும்,

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 19:12:08

   அன்பின் சகோதரி கோமதி அரசு.மிக மிக மகிழ்ச்சி வந்து கருத்திட்டதற்கு. மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கிறேன்.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 19. Dr.M.K.Muruganandan
  மார்ச் 14, 2012 @ 17:27:13

  “..வாழ்த்துகள் வாழச் செய்யும். வயிறெரிய,
  வீழ்ந்திட, வாழ்த்துவது இல்லை..”

  அருமையான கருத்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: