25. மனம் போல வாழ்வு.

 

மனம் போல வாழ்வு.

 

” எண்ணம் போல் வாழ்வு”

” மனம் போல் வாழ்வு ”

என மொழி வழக்குகள் கூறவார்கள். ஆச்சிமார், பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஒரு வகையில் இதுவும் சரி தானோ என்று கேள்வி எழுப்புவது கூடாது. மிக மிகச் சரியான கூற்று இது.

மனதில் எந்த நேரமும் துன்ப நினைவில் மூழ்கும் ஒருவர், பிரச்சனையைப் பிசையும் ஒருவர், பேசும் வார்த்தையிலும், அவர் குரலிலும் பிரச்சனை, துன்ப வாடையே வீசும். அவரது மகிழ்வுக் குரல் கூட அழுகுரலாகப் பிரதிபலிக்கும். அவர் பார்வையில் சோகம் வழியும்.

மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார்.  இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக –   காலையில் முதன் முதலாக ஒருவரைக் காணும் போது அவர் மலர்ந்த முகமாக இருந்தால் நாமும் மகிழ்கிறோம். அவர் உம்மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு போனால் பார்க்கும் எமக்கும் ஏதோ போன்று இருக்குமல்லவா!

பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.

கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான்.

இந்தத் துன்பங்களிற்கு நாமே துன்பம் உண்டாக்கி விரட்ட வேண்டும் அல்லவா?

எமது மனம் பிரச்சனையை  உள் வாங்கும் தன்மைப் படியே வெளியே பிரதிபலிக்கின்றது. சோகத்தில் நீந்துபவனுக்குச் சோகம் ஒரு பொருட்டல்ல. அதனுள்ளே ஊறி ஊறி அதுவாகவே அவன் ஆகிறான்.

இதை விட்டு மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.

உங்கள் சோகத்தை வெளியே விசிறி பிறருக்கும் தொற்ற வைத்துச் சூழலையே சோக மயமாக ஆக்குவதை நீங்கள் உணருங்கள்.  இப்படி ஆக்குவதிலும் பார்க்க

பிறரது மகிழ்வில் கலந்து நீங்களும் மகிழ்வேந்துபவராக ஆகுங்களேன்!…….இங்கு சிறிது உற்சாகமும், மாற்றுச் சிந்தனை ஓட்டமுமே தேவைப் படுகிறது….. இதை உங்கள் கைப்பையில் எடுத்துக் கொள்கிறீர்களா?…..

துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா?  கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…

எந்த நேரமும் கண் கலங்கிப் புலம்பி…….சிச்சிச்சீ!…

இந்தாங்கோ!….கைக்குட்டை!……துடையுங்கோ!….

பிள்ளைகளுக்குமெல்லே…தொத்தப் போகிறது!………

உன் பங்கைத் தரமாய் எடு
என்பதில் உறுதிப்படு!
இன்பத்தைப் பண்பாயத் தொடு!
துன்பத்திற்குத் துன்பங் கொடு!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2006.

(யேர்மனி இந்து மகேஷ்ன் – பூவரசு சஞ்சிகைக்காக ”துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி” –  என்ற தலைப்பில் எழுதியது.)

 

 

                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

41 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. பழனிவேல்
  மார்ச் 14, 2012 @ 05:16:23

  “பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.”

  “கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான். ”

  கண்ணியமான வரிகள்…

  ஆம் உண்மைதான் “மனம் போல் வாழ்வு”.

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 14, 2012 @ 05:50:31

  அன்பு தோழி:-
  துன்பத்திற்குத் துன்பங் கொடு!!!அருமை வாழ்த்துக்கள்.

  Vetha:- mikka nanry. God bless you.

  அன்பு தோழி, Chandra Kuddy likes this..

  கிட்னாப் சிங் likes this../ வசந்தா சந்திரன் like this..

  மறுமொழி

 3. rathnavelnatarajan
  மார்ச் 14, 2012 @ 07:01:38

  அருமையான கட்டுரை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. இ.சொ.லிங்கதாசன்.
  மார்ச் 14, 2012 @ 07:24:24

  நல்லதொரு பதிவு. இத்தகைய பதிவுகள் அடிக்கடி இடம்பெறுவது காலத்தின் கட்டாயம். தெரிந்தோ தெரியாமலோ ‘The Fire’ திரைப்படத்தில் வரும் நாயகிகளின் படத்தை இணைத்துள்ளீர்கள். இந்த இருவரில் ‘நந்திதா தாஸ்’ அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மேலே குறிப்பிட்ட திரைப்படம் வெளியானபோது கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பவர்கள்??? இந்தியாவின் பல நகரங்களில் திரை அரங்கைத் தீயிட்டுக் கொழுத்தினார்கள். தமிழில் பார்த்திபனுடன் இவர் நடித்த, இயக்குனர் தங்கர் பச்சானின் ‘அழகி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது எனும் தகவலையும் இவ்விடத்தில் பதிவு செய்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 07:54:29

   ஆம் நந்திதாஸ், எனக்கும் மிகப் பிடித்தவர், அழகியும். பஃயர் பற்றித் தெரியாது. தங்கள் வருகை, கருத்து, மிக மகிழ்வு, மிக மிக நன்றி. இறை அருள் கிட்டட்டம்.

   மறுமொழி

 5. Vishnu Rajan
  மார்ச் 14, 2012 @ 07:43:37

  உன் பங்கைத் தரமாய் எடு
  என்பதில் உறுதிப்படு!
  இன்பத்தைப் பண்பாயத் தொடு!
  துன்பத்திற்குத் துன்பங் கொடு! // அற்புதமான பதிவு அன்பு சகோ ..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 07:51:03

   மிக நன்றியும், மகிழ்வும் விஷ்ணு உமது அனபான வருகைக்கும், கருத்திடலிற்கும். ஆண்டவன் அருள் கிட்டட்டும்….மீண்டும், மீண்டும் வரவும்…வரவும்..விஷ்ணு.

   மறுமொழி

 6. Senthilarasu
  மார்ச் 14, 2012 @ 09:24:30

  ம் என்ன செய்வது….என்ன தான் அதிர்வலையாக இருந்தாலும் நம் அதிர்வலையும் இருக்கும் தானே…

  மறுமொழி

 7. கலைநிலா
  மார்ச் 14, 2012 @ 10:23:57

  அருமையா இருக்கு .தொடருங்கள் வாழ்த்துக்கள்

  மறுமொழி

 8. sasikala
  மார்ச் 14, 2012 @ 11:31:19

  கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான். // உண்மைதான் .

  மறுமொழி

 9. கோமதி அரசு
  மார்ச் 14, 2012 @ 11:40:07

  உன் பங்கைத் தரமாய் எடு
  என்பதில் உறுதிப்படு!
  இன்பத்தைப் பண்பாயத் தொடு!
  துன்பத்திற்குத் துன்பங் கொடு!//

  அருமையான கவிதை வேதா.
  துன்பத்திற்கு துன்பம் கொடுத்தால் அது நம்மை விட்டு ஓடி போய் விடும் நிச்சியம்.

  மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.//

  மகிழ்வுலகிற்கு வந்து மகிழ்வோம்.

  நன்றி வேதா நல்ல பகிர்வுக்கு.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 16:53:57

   ஆமாம் சகோதரி எப்போதும் மகிழ்வோம். மிக நீண்ட கருத்துத் தந்துள்ளீர்கள். மிக மிக நன்றியும், மகிழ்ச்சியும். இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  மார்ச் 14, 2012 @ 12:30:39

  படம் மற்றும் தலைப்பு பார்த்து சற்றே பயந்து விட்டேன் சகோதரி….
  படத்திற்கும் தலைப்புக்கும் சம்பந்தமில்லை என்று அறிந்ததும் நிம்மதி….
  மனம் போல வாழ்வு…நல்ல ஆக்கம் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 16:51:08

   சகோதரா படம் வந்து சிரியுங்கோ என்பதற்குத் தான். தலைப்பிற்குப் படம் எடுப்பது சிரமம் அல்லவா! மிக மிக நன்றியும், மகிழ்வும் நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  மார்ச் 14, 2012 @ 13:20:56

  தொற்றுவது சளியும் காச்சலும் மட்டுமல்ல
  சோகமும் கண்ணீரும்தான்.
  உண்மைக் கருத்தை
  மெருகூட்டிச் சொன்னீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 14, 2012 @ 16:47:00

   ”…தொற்றுவது சளியும் காச்சலும் மட்டுமல்ல
   சோகமும் கண்ணீரும்தான்…..”
   அருமையாகக் கூறினீர்கள் சகோதரரே. சரியாகத் தொற்றும். இரு பகுதியும் கவனமாக இருக்க வேண்டும். நல்ல கருத்தை வந்து கூறினீர்கள் மிக மகிழ்ச்சியும், நன்றியும்.
   தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 12. b.ganesh
  மார்ச் 14, 2012 @ 15:45:22

  மகிழ்ச்சியலைகள் பரவினால் இரு மடங்காகிறது. வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமன்றோ! சோகம் விடுத்து சந்தோஷமாய்ச் சிரிப்போம் நாம்! அருமையான கருத்தை அழகுற உரைத்தீர்கள் சிஸ்டர்!

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 14, 2012 @ 18:16:34

  Thargini Shan :-
  உன் பங்கைத் தரமாய் எடு
  என்பதில் உறுதிப்படு!
  இன்பத்தைப் பண்பாயத் தொடு!
  துன்பத்திற்குத் துன்பங் கொடு!
  ·
  1.Thargini Shan :- alakana varikallllllllll

  Vetha ELangathilakam :-
  mikka nanry sis. God bless you…

  மறுமொழி

 14. ஸாதிகா
  மார்ச் 15, 2012 @ 02:44:21

  மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார். இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.//

  உண்மைதான் சகோ.கலகலப்பான ஒரு இடத்தில் போய் நாம் மட்டும் உம் என்று இருந்தால் அந்த இடத்தின் சந்தோஷம் பறி போய் விடுகிறது.கலகலப்பாக பேசி சிரித்துக்கொண்டிருப்பவர்கள் உம்மணாமூஞ்சியைப்பார்க்கும் பொழுது சட்டென்று ஸ்விட்ச் போட்டாற் போல் கலகலப்பு நிலை மாறிப்போய் விடுகிறது.

  மறுமொழி

 15. ராஜி
  மார்ச் 15, 2012 @ 06:26:28

  துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா? கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…
  >>>
  தன்னம்பிக்கை தரும் வரிகள். துக்கம் வரும்போது அதை கண்ணீராய் வெளிப்படுத்தாம அத்துக்கத்திலிருந்து மீளும் வழிகை கண்டுபிடிக்க வேணும். பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 16. seenivasan ramakrishnan
  மார்ச் 15, 2012 @ 07:08:04

  பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.

  சிறப்பான ஆக்கம்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 17. Rajarajeswari
  மார்ச் 15, 2012 @ 07:12:46

  உன் பங்கைத் தரமாய் எடு
  என்பதில் உறுதிப்படு!
  இன்பத்தைப் பண்பாயத் தொடு!
  துன்பத்திற்குத் துன்பங் கொடு

  மனம் போல் மாங்கல்யம் -சிறப்பான சீரிய ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 15, 2012 @ 08:06:36

   நீங்கள் எழுதியது போல மனம் போல மாங்கல்யம் என்ற சொல் வழக்கையும் நான் சோர்த்திருக்கலாமோ! மிக்க நன்றியும், மகிழ்வாகவும் உள்ளது சகோதரி நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 18. மாலதி
  மார்ச் 15, 2012 @ 09:05:56

  சிறந்த சிந்தனை இந்த உலகில் மகிழ்வுடன் இருப்பதற்கு நிறைய உள்ளது கண்நீரைத்தவிர என்ற உயரிய சிந்தனை உண்மையில் பாராட்டக் கூடியது தொடர்க .

  மறுமொழி

 19. வே.நடனசபாபதி
  மார்ச் 16, 2012 @ 02:14:56

  // துன்பத்திற்குத் துன்பங் கொடு!//
  சரியான சொல்லாட்சி. துன்பமில்லாதவர்கள் உலகில் இல்லை என்ற உங்கள் கருத்து சரியே. துன்பத்தை மறந்து, வாழ்க்கையை அனுபவிப்போம் என்ற உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன்.

  மறுமொழி

 20. உயிர்த்தோழி.
  மார்ச் 16, 2012 @ 13:25:28

  அழகி எனக்கும் பிடித்தமானவர்!

  மறுமொழி

 21. kalakumaran
  மார்ச் 19, 2012 @ 09:07:00

  நம்மை சுற்றி மகிழ்ச்சி அலை எப்போதும் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும். முத்தாய்ப்பான ” மனம் போல வாழ்வு “

  மறுமொழி

 22. சத்ரியன்
  மார்ச் 20, 2012 @ 02:58:53

  //மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. //

  உண்மை தான். கண்ணீருக்கே உரியது அல்ல வாழ்வு.

  பயன்மிக்க கட்டுரை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: