228. கண் படும் நட்பு….

 

கண் படும் நட்பு….

இதயத்தில் இணைந்த நட்பும்,
இயைந்து உறவாடும் இன்பம்,
பிணைந்து பரிமாறும் அனுபவம்,
பிரித்தறியாத பிடிப்பும் அருமை.

 ஓரமாக்கும் நீர் அழுக்கை,
ஒதுக்கித் தள்ளும் காற்று.
சாரமுடை நட்பு இவற்றோடு
சேராது நடை தொடரும்.

விரிந்த மலரின் மணமாய்,
சொரிந்த சாரற் சிலிர்ப்பாய்,
புரிந்த உறவு உடலில்,
சிரிக்கப் பரவி உரசும்.

இனிக்கும் பாலின் சுவையாய்,
கனியின் கன்னற் சுவையாய்,
இனிய நட்புரசும் உணர்வு,
புனித சிந்தனை தூண்டும்.

பதுமையெனக் காலத்தில் நழுவல்
எதுவும் பேசாது நடைநீள்தலில்,
நட்பு நகர்தல் அல்ல
நல்லது கெட்டது பகிர்தல்.

கொடிய சுயநலம், ஆற்றாமை
கெடுக்கும் பளிங்கு அன்பை.
கொடுத்து வைக்க வேண்டும்
தொடுக்கும் தூய அன்பிற்காய்.

கண் படும் நட்பு
மண்ணில் கொண்டார் நடப்பு
எண்ணிலா செல்வத்திற் கொப்பு.
திண்ணியவராவார் இவர் சிறப்பு.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-3-2012.

                                       

 

26 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  மார்ச் 16, 2012 @ 05:06:42

  இனிக்கும் பாலின் சுவையாய், கனியின் கன்னற் சுவையாய், இனிய நட்புரசும் உணர்வு, புனித சிந்தனை தூண்டும்.
  -அருமையான வரிகள். அனுபவம் தோய்ந்த வரிகள். நட்பின் பெருமையைப் பாடிய பா மிக நன்று. படைத்து அளித்திட்ட தங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 21, 2012 @ 07:54:00

   அன்பின் சகோதரா இன்று புதன் தான் உங்களுக்கு பதிலிட முடிகிறது. மிக மிக மகிழ்வும் நன்றியும் நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு. நானும் மிக மகிழ்வடைகிறேன்.நன்றி. நன்றி. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  மார்ச் 16, 2012 @ 05:14:55

  //விரிந்த மலரின் மணமாய்,
  சொரிந்த சாரற் சிலிர்ப்பாய்,
  புரிந்த உறவு உடலில்,
  சிரிக்கப் பரவி உரசும்.//

  நான் இரசித்து வியந்த வரிகள். பாராட்டுக்கள்!

  மறுமொழி

 3. பழனிவேல்
  மார்ச் 16, 2012 @ 07:23:45

  “கண் படும் நட்பு
  மண்ணில் கொண்டார் நடப்பு
  எண்ணிலா செல்வத்திற் கொப்பு.
  திண்ணியவராவார் இவர் சிறப்பு.”

  அழகிய வரிகள்…
  மிகவும் ரசித்தேன்…
  ஒவ்வொரு வரிகள் கலைச் செதுக்கம்.

  மறுமொழி

 4. ஸாதிகா
  மார்ச் 16, 2012 @ 09:11:08

  கண் படும் நட்பு
  மண்ணில் கொண்டார் நடப்பு
  எண்ணிலா செல்வத்திற் கொப்பு.
  திண்ணியவராவார் இவர் சிறப்பு.

  ஆஹா என்ன சொல்லாடல்.அருமையான வரிகளைக்கோர்த்து ஒரு அர்புதமான கவிதை பாடி விட்டீர்கள் சிஸ்டர்.வாழ்த்துக்கள்!பாராட்டுக்கள்!

  மறுமொழி

 5. உயிர்த்தோழி.
  மார்ச் 16, 2012 @ 13:22:35

  சகோதரி! எனக்கோரு சந்தேகம். நட்பில் காதல் உண்டாகுமா? காதல் காமத்தில் முடியக்கூடாதா? நட்பில் காதலையும், காமத்தையும் பகிர்ந்து கொள்ளக்கூடாதா?

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 21, 2012 @ 16:31:21

   தாங்கள் – ” உயிர்த் தோழி ” – என்ற பெயரில் வரும் ஒரு ஆண் என்று தான் நான் நான் கணக்கிட்டுள்ளேன். காரணம் முழுக்காமம் கலந்த இணையப் பதிவைக் கண்டேன்.
   இது எனது இடுகையின் கருத்திடும் இடம்.
   மீண்டும் என்னிடுகைக்கு கருத்திட வர நல்வரவு.
   நன்றி.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

   • உயிர்த்தோழி.
    மார்ச் 24, 2012 @ 03:46:55

    ஆண் மட்டும்தான் காமத்தைப் பற்றி எழுதவேண்டுமா என்ன? தங்களின் தவறான புரிதலுக்கு வருந்துகிறேன். எனினும் தங்கள் வலைப்பதிவு எனக்கு பிடித்தமான ஒன்று. இனி வந்தாலும் கருத்திடமாட்டேன். நன்றி சகோதரி!

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 14:57:17

   சகோதரி அன்புத் தோழி விமரிசனங்கள் பல வகையில் வரும். அதைத் தாங்கும் மனப் பலமும் தேவை. உங்கள் பதில் புரிந்துணர்வில் எழுதியதாகத் தெரியவில்லை. சிறு பிள்ளைத் தனமாகவே உள்ளது. அப்படி ஒரு வலைப் பதிவை நடத்த எத்தனை மனப் பலம் தேவை. அங்கு பேசுவனவற்றை விடவா நான் கூறிவிட்டேன். இனி எழுத மாட்டேன் என்று ஏன் கூறவேண்டும்? எனக்குப் புரியவில்லை.

   மறுமொழி

 6. மகேந்திரன்
  மார்ச் 16, 2012 @ 14:10:16

  நட்பின் பரிமாணங்களை அருமையாய் அலசிப்பார்க்கும்
  அழகிய வரிகள்…..

  மறுமொழி

 7. பிரபுவின்
  மார்ச் 17, 2012 @ 03:29:35

  மிகச் சிறப்பான வரிகள்.நட்பு சாதாரணமானதல்ல என்பதை அழுத்திச் சொல்லியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 8. SUJATHA
  மார்ச் 20, 2012 @ 19:19:41

  இனிக்கும் பாலின் சுவையாய்,
  கனியின் கன்னற் சுவையாய்,
  இனிய நட்புரசும் உணர்வு,
  புனித சிந்தனை தூண்டும்.

  அருமை….நட்பின் பிரிவுகள் தரும் வேதனை வாழ்க்கையில் ஒவ்வொரு பாகத்திலும் மனதில் வேதனை.

  மறுமொழி

 9. ஸாதிகா
  மார்ச் 22, 2012 @ 01:59:37

  விரிந்த மலரின் மணமாய்,
  சொரிந்த சாரற் சிலிர்ப்பாய்,
  புரிந்த உறவு உடலில்,
  சிரிக்கப் பரவி உரசும்.//
  ஆஹா..என்ன அழகிய சொற்களில் கவிதை நட்பினைப்பற்றி.அருமை..அருமை..

  மறுமொழி

 10. rishaban
  மார்ச் 24, 2012 @ 09:51:07

  நட்பு நகர்தல் அல்ல
  நல்லது கெட்டது பகிர்தல்.

  Sabash !

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 10:58:57

   பல நட்புகள் சும்மா தானே நகர்கிறது.
   மனம் வெறுத்துப் போய்த் தான் அதை எழுதினேன்.
   நன்றி சகோதரா. தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. sasikala
  மார்ச் 24, 2012 @ 10:44:41

  ஓரமாக்கும் நீர் அழுக்கை,
  ஒதுக்கித் தள்ளும் காற்று.
  சாரமுடை நட்பு இவற்றோடு
  சேராது நடை தொடரும்.//
  நட்பின் வரிகள் அருமை . கணினி கோளாறு காரணமாக தாமதம் மன்னிக்கவும் .

  மறுமொழி

 12. rathnavelnatarajan
  மார்ச் 29, 2012 @ 12:51:34

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 12:33:26

   மிக்க மிக்க மகிழ்வடைந்தேன் ஐயா தங்கள் வருகையும், கருத்திடலிற்கும்.
   மிக மிக நன்றி நன்றி.
   தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: