26. உண்மையில் மூத்தவர்களிற்கு…..

உண்மையில் மூத்தவர்களிற்கு…..

மரியாதை தரப்படுகிறதா!

 

”மரியாதையைக் கொடுத்து மரியாதையை எடுக்க வேண்டும்” என ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது.

மூத்தவர் ஒரு எடுத்துக் காட்டாளராக, பண்பாளராக இருக்க வேண்டும். அவர் வார்த்தையை அமிர்தமாக கடைப் பிடிக்கலாம் என்பது இன்றைய தலைமுறையினரின் நிலைப்பாடாக இருக்கிறது.

இன்றைய தலைமுறையினர்  மேற்குலக நடைமுறையில் தலை நிமிர்ந்து நடை போடுகின்றனர். இவர்களுக்குப் போலி நடையில்லை. பொய்யில்லை உள்ளதை உள்ளபடி பேசி நடக்கின்றனர்.

நாம் மதிப்பிற்குரியவர்களாக நடந்தால் ஏற்றுக் கொள்கின்றனர்.
மூத்தவரென்றாலும் பொய்யன், பித்தலாட்டக்காரன், சமூகவிரோதி, பிறரை ஆட்டிப் படைப்பவர்களை இன்றைய தலைமுறையினர் தூக்கி எறிவார்கள்.

” மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் ” என்பதை

” பண்பாளர் வார்த்தை அமிர்தம்”

”பண்பாளராக வாழ்தல் அமிர்தம்” என்று மாற்றி நோக்கலாம் என்பது இங்கு சிறப்பாகிறது.

சுயநலம் நிறைந்து, தலைமைத்துவத்திற்காக, கதாநாயக வணக்கத்திற்காக நல்லனவற்றை மிதிக்கும் பலர் பெரியவர்களாக இருக்கும் போது மதிப்புக் கிடைப்பது மிகச் சிரமம்.

நாம் சரியாக நடந்து கொண்டால் மதிப்பைத் தானாக நாம் பெறுகிறோம். நமது பண்பிற்குப் பிறர் என்றும் தலை வணங்குவார்கள்.
மூத்தவர்கள் மூத்தவர்களாகச் சரியாக நடக்க வேண்டும்.

இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.

இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மாhர்க்.
15-10-2004.
(இலண்டன் ரைம் வானொலிக்காக அனுபவக் குறிப்பாக எழுதி வாசிக்கப்பட்டது.)

 

                                       

35 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  மார்ச் 22, 2012 @ 04:44:24

  பண்புடன் நடத்தலே சிறப்புடையது, மற்ற சிறப்புகள் எல்லாவற்றையும் அதுவே பெற்றுத் தரும், அருமையாகச் சொன்னீர்கள் சகோ,

  மறுமொழி

 2. கோமதிஅரசு
  மார்ச் 22, 2012 @ 05:06:56

  //பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.

  இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.//

  என் கருத்தும் இது தான் வேதா.

  என் அம்மா அடிக்கடி சொல்வார்கள் ’முன் ஏர் போகும் வழியில் தான் பின் ஏர் போகும்; என்று நாம் நல்லவர்களாக, மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்ந்து காட்டினால் நம் குழந்தைகளும் அதன் படி நடப்பார்கள்.

  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 07:01:07

   உண்மை சகோதரி பெரியவர்களைப் பார்த்துத் தானே பிள்ளைகள் வளர்கிறார்கள். நாம் தான் உதாரணமாக இருக்க வேண்டும்.
   மிக்க நன்றி நீங்கள் வந்து கருத்துத் தந்தமைக்கு. மிக மகிழ்வடைந்தேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. மகேந்திரன்
  மார்ச் 22, 2012 @ 05:49:05

  அவரவர் நிலைகளை சரியாகப் புரிந்துகொண்டு
  செயல்பட்டால், அவர்களின் மரியாதை
  தானாகக் கிடைக்கும் என்று சொல்லும் உங்கள்
  கருத்து நிச்சயம் ஏற்புடையது சகோதரி..

  மறுமொழி

 4. வே.நடனசபாபதி
  மார்ச் 22, 2012 @ 06:28:08

  //இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.//

  நான் உங்கள் கருத்தோடு உடன்படுகின்றேன். மூத்தவர்கள் இளையவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டும்.
  மரியாதையை கேட்டு வாங்கக்கூடாது.மரியாதை தரும்வகையில் நடந்தால் தானே மரியாதை வரும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 07:13:18

   ”…மரியாதை தரும்வகையில் நடந்தால் தானே மரியாதை வரும்…”

   மிக்க நன்றி சகோதரா நீங்கள் வந்து கருத்துத் தந்தமைக்கு. மிக மகிழ்வடைந்தேன்.
   தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 22, 2012 @ 06:35:56

  Arul Mozhi :-
  /// இன்றைய தலைமுறையினர் மேற்குலக நடைமுறையில் தலை நிமிர்ந்து நடை போடுகின்றனர். இவர்களுக்குப் போலி நடையில்லை. பொய்யில்லை உள்ளதை உள்ளபடி பேசி நடக்கின்றனர்.

  நாம் மதிப்பிற்குரியவர்களாக நடந்தால் ஏற்றுக் கொள்கின்றனர்.
  மூத்தவரென்றாலும் பொய்யன், பித்தலாட்டக்காரன், சமூகவிரோதி, பிறரை ஆட்டிப் படைப்பவர்களை இன்றைய தலைமுறையினர் தூக்கி எறிவார்கள்.///

  உண்மையை அழகாய் சொல்லி உள்ளீர்கள்.
  ·

  .Vetha ELangathilakam:-
  mikka nanry sis.. God bless you…

  மறுமொழி

 6. Lavanniya
  மார்ச் 22, 2012 @ 08:20:24

  Nice one Amma! You wrote this in 2004, now I clearly see that I have reached to this point now. No more false respect! Thank you for explaining to the world! Xxx

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 16:13:39

   மகள்! மிக சந்தோசமடா. திரு நடாமோகனின் இலண்டன் ரைம் ஆக்கங்கள் இருக்கிறது புரட்டிப் பார்த்துப் போடுவது தான். அப்பாவும் நானும் சிரித்தோம் மகள் வாசித்திருக்கிறா என்று. நேற்று அப்பாவிற்கு வாசித்துக் காட்டி விட்டுத் தான் போட்டேன்.
   இப்படி வாசிக்கும் போது உனது தமிழும் மறக்காது இருக்கும். மொழி பெயர்ப்பிற்கும் உதவியாக இருக்கும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.
   நன்றியடா.
   எப்போதும் உனது முன்னேற்றத்தையே கருதும்
   – நிறைந்த அன்புடன் அம்மாவும், அப்பாவும்.

   மறுமொழி

 7. ஸாதிகா
  மார்ச் 22, 2012 @ 10:01:57

  நாம் சரியாக நடந்து கொண்டால் மதிப்பைத் தானாக நாம் பெறுகிறோம். நமது பண்பிற்குப் பிறர் என்றும் தலை வணங்குவார்கள்.
  மூத்தவர்கள் மூத்தவர்களாகச் சரியாக நடக்க வேண்டும்.//

  மிகச் சரியாக சொல்லி இருக்கின்றீர்கள் சகோதரி.

  இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.

  //

  அனைத்தும் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட வேண்டிய வேண்டிய வார்த்தைகள்.

  மறுமொழி

 8. மு.சுவமிநாதன்.
  மார்ச் 22, 2012 @ 10:50:28

  தமிழகத்தில் ஏட்டில் மட்டுமே இருக்கும் இந்த மரியாதை அங்கு இயல்பில் இருப்பது ஆச்சரியப் படத்தான் வைக்கின்றது!!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 16:22:20

   சகோதரா ஓரளவு பண்பாட்டுடன் வாழ பலர் முயற்கிக்கின்றனர். தோல்வியும் உண்டு. மொத்தமாக மறந்து விட வில்லை.

   மிக மகிழ்வும் நன்றியும் சகோதரா தங்கள் கருத்திற்கும், வருகைக்கும்.
   தெய்வத்தின் அருள் கிடைக்கட்டும்.

   மறுமொழி

 9. ramani
  மார்ச் 22, 2012 @ 12:33:47

  தங்கள் கருத்து மிகவும் சரி
  வெறும் வயது மட்டுமே
  மதிப்பதற்குப் போதுமான தகுதியாகி விடாது
  சுருக்கமான பதிவாயினும் நிறைவான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 16:25:07

   ரமணி சார் இது அனுபவக் குறிப்புத் தான். மிக மிக நன்றியும் மகிழ்வும் தாங்கள் வருகையும், கருத்திற்கும்.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  மார்ச் 22, 2012 @ 15:14:27

  ரொம்ப நாளாச்சு வந்து..மன்னிக்கவும் சகோதரி……நலமா?

  குட்டி அலசல்..நன்று…

  இருந்தாலும் வயதிற்கு உரிய மதிப்பு கொடுத்து தான் ஆகவேண்டும் தானே?

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 22, 2012 @ 16:28:40

   அது தான் குறிப்பிட்டேனே! வயது பழைய சம்பிரதாயம் என்றும் பண்பு பெரிய தகுதி என்று கருதுகிறார்கள் என்று.
   ஓ.கே நாங்கள் விவாதிக்கவில்லை.
   வந்து கருத்திட்டமைக்கு மிக மகிழ்வும், நன்றியும்.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 11. Dr.M.K.Muruganandan
  மார்ச் 22, 2012 @ 15:33:27

  ”பண்பாளராக வாழ்தல் அமிர்தம்”
  உண்மையான வார்த்தை.

  மறுமொழி

 12. கலைநிலா
  மார்ச் 23, 2012 @ 04:50:27

  இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.

  உண்மையான வாத்தை இங்கு அழகாய் சொல்லப்பட்டிருக்கிறது..வாழ்த்துக்கள்

  மறுமொழி

 13. கலைநிலா
  மார்ச் 23, 2012 @ 04:52:10

  உண்மையான வார்த்தை அழகாய் சொல்லப்பட்ட நிலை அருமை தொடருங்கள்

  மறுமொழி

 14. SUJATHA
  மார்ச் 23, 2012 @ 05:56:27

  உண்மை மனித உடலிற்கு வயதை அளவிடுவது மனித இயல்பு. பெரியோர்களின் வழி காட்டல் அடுத்த சமுதாயத்திற்கும்
  எடுத்துக்காட்டுகள்.
  எடுத்துக்காட்டிய கருத்துக்கள் நடைமுறையாகட்டும்.
  தொடரட்டும் உங்கள் பணி!!!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 23, 2012 @ 07:45:50

   பெரியோர்களின் நல்ல வழி காட்டல் அடுத்த சமுதாயத்திற்கும்
   எடுத்துக்காட்டுகள்.
   மிக்க நன்றி சுஜாதா வந்து கருத்திட்டமைக்கு. மிக மிக மகிழ்வடைகிறேன்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. Senthilarasu
  மார்ச் 23, 2012 @ 13:20:02

  மிகச் சரியாகச் சொன்னீர்கள் சகோதரி.

  மறுமொழி

 16. sasikala
  மார்ச் 24, 2012 @ 10:46:17

  நாகரீக மாற்றத்தால் மரியாதையும் குறைந்து வருவது உண்மையே . புரிந்து கொள்வார்களா ?

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 14:39:20

   பண்பின்றி பெரியவர் நடக்கும் போது மரியாதை கிடைப்பது எப்படி சகோதரி?.
   அதைத் தானே கூறியுள்ளேன்.
   தங்கள் அன்பான வரவிற்கும், கருத்திடலிற்கும்மிக மிக நன்றியும், மகிழ்வும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும் சசிகலா.

   மறுமொழி

 17. பழனிவேல்
  மார்ச் 26, 2012 @ 04:29:23

  “இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.”

  என் கருத்தும் இது தான். என் தந்தை சொல்வார்
  “நான் நல்லவனாக வாழ்ந்தால் தான்
  நாளை உனக்கும் நல்லவனாக வாழப்பிடிக்கும்.”

  அழகு பதிவு.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 16:30:08

   உங்களிற்கும் நல்ல தந்தை கிடைத்துள்ளார்.
   மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் திருவருள் நிறையட்டும்.

   மறுமொழி

 18. rathnavelnatarajan
  மார்ச் 28, 2012 @ 01:27:01

  அருமை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: