42. முகிலோ!..வானமங்கையின்..துகிலோ!…

 

முகிலோ!..வானமங்கையின்..துகிலோ!…

 

வெள்ளிப் பறவை கிழித்தது முகில்
தள்ளி அமர்ந்தேன் சாளரம் அருகில்.
கொள்ளை அழகு வானம்! ஆகா!
வெள்ளிப் பனிமலையோ! வானில் என்
வெள்ளைக் கோழி இறகுப் போர்வையை
அள்ளிப் பிரித்து வெளியே தூவியதார்?

வாயுக்காதலன் வானமங்கைச் சேலையொளிக்கும்
மாயச் சிருங்கார லீலையோ முகில்!
வாயுதேவன் மாளிகைத் திரைச் சேலைகளை
ஓய்வு வேளையில் இழுத்துச் சுருக்குகிறானோ!
தண்ணீர்த்தவம் யென்ம சாபல்யம் பெற்று
விண்ணில் விரிக்கும் வெண் குடையோ முகில்!

சூரியனில் பொறாமை கொண்ட வேளையில்
சூரியக் கதிரைச் சூறையாடிச் சுருட்டும்
சூரியப் பெரும் எதிரியோ கருமுகில்?
முகிலும் முகிலும் முட்டி மத்தாளம் கொட்டி
வைர ஊசியாய் மின்னலொளி பாய்ச்சி
வகிர்ந்திட நினைப்பது எதை?

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-5-2006

(லண்டன் தமிழ் வானொலி புதன் யோகேஸ் தேவா நிகழ்வில் இயற்கை தலைப்பில் ஒலிபரப்பானது.
2006-9ம் மாத சிறு சஞ்சிகை நந்தவனம் இதழில் பிரசுரமானது.)

இதோடு ஒட்டிய வேறு இரு இணைப்புகள்:- 

<a

https://kovaikkavi.wordpress.com/2010/08/31/42-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

https://kovaikkavi.wordpress.com/2010/10/24/124-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

                                               

 

23 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ஸாதிகா
  மார்ச் 24, 2012 @ 09:10:51

  அடடா//இயற்கை எழில் கொஞ்சும் பேரழகை கண் முன் கொணர்ந்து கவிதை வரிகளில் நிறுத்திவிட்டீர்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 10:55:51

   ஸாதிகா! உங்கள் கருத்து ஸ்பாம் உள்ளே மாட்டியிருந்தது. எற்று வெளியே இழுத்துள்ளேன்.
   மிக மிக நன்றியும் மகிழ்வும் கருத்திடலிற்கும், வருகைக்கும்.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 2. rishaban
  மார்ச் 24, 2012 @ 09:49:13

  தண்ணீர்த்தவம் யென்ம சாபல்யம் பெற்று
  விண்ணில் விரிக்கும் வெண் குடையோ முகில்

  மிக அருமை.. விண்ணில் பறந்த உணர்வு.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 10:49:32

   மிக மகிழ்ச்சி சகோதரா தங்கள் வருகைக்கும், கருத்திடலிற்கும். உங்கள் ரசனை புரிகிறது. நிறைந்த நன்றி. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. sasikala
  மார்ச் 24, 2012 @ 10:42:46

  பதிவும் கீழே ஓடும் மேகங்களும் அனைவரது எண்ண ஓட்டத்தை பகிர்ந்து போகிறது அருமை சகோ .

  மறுமொழி

 4. மாலதி
  மார்ச் 24, 2012 @ 11:12:16

  சூரியனில் பொறாமை கொண்ட வேளையில்
  சூரியக் கதிரைச் சூறையாடிச் சுருட்டும்
  சூரியப் பெரும் எதிரியோ கருமுகில // மிக அருமை

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 11:16:01

   மிக்க மிக்க மகிழ்ச்சி மாலதி தங்கள் வருகைக்கும், கருத்திற்கும். வீட்டில் நிற்பதால் உடன் கருத்திடுகிறேன் .
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. rathnavelnatarajan
  மார்ச் 24, 2012 @ 12:02:11

  ஆஹா. அழகு கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. b.ganesh
  மார்ச் 24, 2012 @ 14:41:47

  அழகான தமிழில் இயற்கையை கண்முன் நிறுத்தியது அருமை. கவிதையைப் படித்ததும் வாழ்வில் ஒரு முறையேனும் ஜன்னலோர விமானப் பயண அனுபவத்தைப் பெற்றிட வேண்டுமென்று மனம் துடிக்கிறது…!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 15:39:14

   ஒவ்வொரு முறையும் அனுபவிப்பேன். கடந்த வாரம் மாலை ஏழரை மணிக்கு இலண்டன் மேல் – சூரிய மறைவு ஆரஞ்சுக் கடலாக ஒரு காட்சி. என் கணவரும் விழியகல ரசித்தார் என்னோடு சேர்ந்து.
   ஒரு தடவை இலங்கைப் பயணத்தில் தேசப்படக் கோடுகளாக சிலாபம், மன்னார் பாலை தீவு என்று இன்னும் மறக்காத காட்சிகள் சகோதரா.
   மிக்க நன்றி தங்கள் வரவு, பின்னூட்டத்திற்கு
   ஆண்டன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. SUJATHA
  மார்ச் 24, 2012 @ 15:45:46

  வெள்ளிப் பறவை கிழித்தது முகில்
  தள்ளி அமர்ந்தேன் சாளரம் அருகில்.
  கொள்ளை அழகு வானம்! ஆகா!
  அழகான கவிவரிகள். சிலவார்த்தைகள் கவிக்கு பொருத்தமாக அமையும் போது தமிழில் பற்று மிக அதிகமாகின்றது. அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!!!!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 24, 2012 @ 17:20:11

   உண்மை தான் சுஜாதா!
   சில வேளை நானே – இது நானா எழுதினேன்! எப்போது! என்று! வியப்பதும் உண்டு.
   முன்பெல்லாம் நிறைய கவிதைகள் வாசிப்பேன்.
   இப்போதெல்லாம் கொஞ்சம் குறைவு தான்.
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சுஜாதா நீர் வந்து கருத்திட்டமைக்கு. தெய்வத்தின் கிருபை கிடைக்கட்டும்.

   மறுமொழி

 8. வே.நடனசபாபதி
  மார்ச் 25, 2012 @ 09:42:25

  //வெள்ளிப் பனிமலையோ! வானில் என்
  வெள்ளைக் கோழி இறகுப் போர்வையை
  அள்ளிப் பிரித்து வெளியே தூவியதார்?//

  வானூர்தியில் பயணிக்கும்போது, அந்த வெண் பஞ்சுப் பொதிகளைப் பார்த்து ஆச்சரியபட்டதுண்டு. ஆனால் உங்களைப் போல் கற்பனை செய்ததில்லை. அழகான கற்பனை. அருமையான கருத்து வெளிப்பாடு. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 9. பழனிவேல்
  மார்ச் 26, 2012 @ 04:21:27

  “வெள்ளிப் பறவை கிழித்தது முகில்
  தள்ளி அமர்ந்தேன் சாளரம் அருகில்.”

  முதல் வரிகளிலே முத்திரை பதித்துவிட்டிர்கள்.
  விமான பயணத்தை விழிமுன் நிருத்திவிட்டிர்கள்.

  அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 26, 2012 @ 06:54:45

   ஆமாம் மிக பிடித்தமானது.. அரிய காட்சியும் காணுவீர்கள்.
   மேலே விமரிசனத்தில் எழுதியுள்ளேன்.
   மிக்க நன்றி சகோதரா வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  மார்ச் 26, 2012 @ 21:57:54

  நலமா சகோதரி?
  அடிக்கடி விமானத்தில் இந்த பஞ்சு மிட்டாய்களை மனம் சுவைத்து நிறைய தோணும்..நீங்கள் அதற்கு வடிவு கொடுத்து விட்டீர்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 16:25:41

   நல்ல சொல்லு பஞ்சு மிட்டாய் என்று. வெள்ளைப் பஞ்சு மிட்டாய். மிக்க மகிழ்வும், நன்றியும் சகோதரா தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் திருவருள் நிறையட்டும்.

   மறுமொழி

 11. பிரபுவின்
  மார்ச் 27, 2012 @ 02:46:35

  வெள்ளிப்பறவை! அருமையான சொல். விமானத்துக்கு பதிலான சொல்லாக இதைப்பயன்படுத்தலாம் போல இருக்கே!

  உங்கள் ஆக்கங்களை புத்தக வடிவில் வெளியிடலாமே சகோதரி.

  மறுமொழி

 12. கோவை கவி
  மார்ச் 27, 2012 @ 19:57:25

  .Friendsவசந்தா சந்திரன்
  J/union college tellippalai
  ..FriendsVasanthakumari Thanapalan..// FriendsSujatha Anton.//.FriendsRajen Michael Rajanayagam
  Business School, Denmark
  Umah Thevi likes this..// Sasi Krish Annamalai University
  ..Hani Maas Zahira College, Kalmunai
  Aatika Ashreen Bharadhidasan University
  ..SentSree Dhandapani PSG Arts College….likes this.
  Yashotha Kanth அன்பு சகோதிரியே அழகு ..
  Thileepan Umarani Velan likes this..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s