229. உணர்வு மரத்திடும் பரிதாபம்!…

 

 

உணர்வு மரத்திடும் பரிதாபம்!…

 

க்களை அமைதியாய் வாழ
மக்களே அனுமதிக்கமாட்டார்கள்.
கட்சி கட்டிக் கருத்துரைத்து
கடுமையாய் வேட்டியை வரிந்து
கட்டிச் சிலம்பம் ஆடுவார்.

த்தனை கோடுகளும் மனிதன்
அநியாயமாய்ப் போடுவதே – அன்பை
அழித்துச் சாத்தானை மனதுள்
அமர்த்தித் தன் அமைதியையும்
அழித்துச் சூழலையும் குளப்புகிறான்.

பார்த்து ரசிப்பவரும், நன்றாகப்
பந்தம் பிடிப்பவரும், திரிக்கு
பாந்தமாய் எண்ணெய் விடுவோரும்,
பவ்வியமாய் நடிப்போருமாய் எத்தனை
பாவங்கள்! உறவுக்குள் நாடகம்!

லையில் உலகைத் தாங்குவதாகவும்,
தலைப்பாகை வேண்டுவோரும் – பிறருக்குத்
தகுதியே இல்லாத மாதிரியும்
தலைக்கனம் மிகுந்து ஆடும்
தரணி வாழ்வு எதுவரை!

ரசியலிலிருந்து அந்தப்புரம் வரை
ஒரு பக்க நியாயம் நிறுவிட
பெரும்பாடு, பொய்யையும் பிணைத்து.
படுபாதாளத்தில் நீதி என்பது!
நடுநிலையானது கனவு நிலையே!

யிர் போகும் போது
உடன் வருவது எது!
உணர்வு மரத்து உடல்
உரு ஆடும் போது
உணர்வதேது! பரிதாபமே!
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-3-2012

  

 

                                    

30 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kavialagan
  மார்ச் 27, 2012 @ 05:04:35

  U

  மறுமொழி

 2. பழனிவேல்
  மார்ச் 27, 2012 @ 05:13:15

  “உயிர் போகும் போது
  உடன் வருவது எது!”

  உடுத்திய உடையையும் உருவிவிட்டுத்தான் உறக்கப்படுதுகிறார்கள்.
  ஆக்கம் அருமை.

  உணர்வுகளை உணர்வோம்.
  மனிதனாய் வளர்வோம்.

  மறுமொழி

 3. ramani
  மார்ச் 27, 2012 @ 06:00:50

  பொய்க்கு உள்ள மதிப்பும் மரியாதையும்
  உண்மைக்கு இல்லை
  அனைத்தும் முடிகையில் உண்மை அறிகையில்
  அதற்கு துளியும் பயன் இல்லை
  மனம் கவர்ந்த அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 27, 2012 @ 18:01:57

   ”…பொய்க்கு உள்ள மதிப்பும் மரியாதையும்
   உண்மைக்கு இல்லை…”
   அதுவும் பாவனைகள் கூடிய நடிப்போடு இருக்கும் பொய்யிற்க்கு மிக மிக மதிப்பு.
   மிக மிக நன்றி சகோதரா. தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 27, 2012 @ 07:21:01

  Lavi Langa wrote:-
  Very well said. Good one Amma! Xxx

  Vetha ELangathilakam:- Thank you dear daughter. Have a wonderful day…God bless you…

  Lavi Langa:- Thank you mum and you have a nice day too xxx

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 27, 2012 @ 07:47:00

  அன்புடன் நான் wrote:-
  அரசியலிலிருந்து அந்தப்புரம் வரை
  ஒரு பக்க நியாயம் நிறுவிட
  பெரும்பாடு, பொய்யையும் பிணைத்து.
  படுபாதாளத்தில் நீதி என்பது!
  நடுநிலையானது கனவு நிலையே!///arumai
  48 seconds ago · Like-9.46am–27-3-12

  மறுமொழி

 6. Rajarajeswari
  மார்ச் 27, 2012 @ 12:39:44

  அன்பை
  அழித்துச் சாத்தானை மனதுள்
  அமர்த்தித் தன் அமைதியையும்

  அருமையான பதிவு
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 7. ரெவெரி
  மார்ச் 27, 2012 @ 16:52:13

  உயிர் போகும் போது
  உடன் வருவது எது….//

  I asked my wife to join me…She respectfully refused….:)

  Well penned Sis….

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 27, 2012 @ 18:06:57

   நல்ல பகிடி!…யார் சார் வருவாங்க உயிர் போகும் போது.!…..பந்தம் பிடிக்கிறவன் , எண்ணெய் ஊத்துபவன் ஒருவரும் வரமாட்டினம் மனைவி உட்பட…ஆகா!…….கா!….
   மிக்க நன்றியும், மகிழ்வும் கருத்திடலிற்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 27, 2012 @ 18:24:38

  Sakthi Sakthithasan :-
  அன்பின் சகோதரி வேதா,
  அருமையான பா. உண்மையான வரிகள். உணர்ச்சிபூர்வமான கருத்துக்கள்.
  அன்புடன்
  சக்தி

  Vetha ELangathilakam:-
  Mikka nanry sakothara. God bless you

  மறுமொழி

 9. மகேந்திரன்
  மார்ச் 27, 2012 @ 18:40:24

  ”’தலையில் உலகைத் தாங்குவதாகவும்,
  தலைப்பாகை வேண்டுவோரும் – பிறருக்குத்
  தகுதியே இல்லாத மாதிரியும்
  தலைக்கனம் மிகுந்து ஆடும்
  தரணி வாழ்வு எதுவரை!”’

  மனம் கவர்ந்த வரிகள்..
  இருக்கும் வரை நான் நீ என்று அடித்துக் கொண்டு
  முதல்மரியாதைக்காக அடித்துக் கொள்பவர்கள் பலர்..
  இறந்து சடலமான பின் இடுப்பில் இருக்கும் உடைகூட
  நமக்குத் தெரியாது என்று அறியாதவர்கள்..

  இன்று ஜப்பான் நாட்டில் அன்றாட செலவுகளைவிட இறந்தவர்களை அடக்கம் செய்யும்
  தகனக் குழிக்கு தான் அதிகப்படியான பணம் செலவு செய்கிறார்களாம்..

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 27, 2012 @ 21:12:20

   திடீரென வந்த உணர்வில் பத்து நிமிடத்தில் எழுதிய கவிதை இது மகேந்திரன். மிக நீண்ட கருத்திற்கு மனமார்ந்த நன்றியும், மகிழ்ச்சியும்.
   தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 10. கோவை கவி
  மார்ச் 27, 2012 @ 20:48:25

  Kana Ravin and வசந்தா சந்திரன் like this..
  அன்பு தோழி Chennai, Tamil Nadu like this
  ..அன்புடன் நான் Chennai, Tamil Nadu like this
  ..Jassim Farris Annamalai University like this
  ..Dinesh Paneer Das Works at Freelance Web & Graphic Designer like this
  ..Vishnu Rajan likes this..// Vignesh Sv Works at None,
  Nayaki Krishna likes this

  மறுமொழி

 11. rathnavelnatarajan
  மார்ச் 28, 2012 @ 00:37:33

  அருமை.

  மறுமொழி

 12. b.ganesh
  மார்ச் 28, 2012 @ 01:58:02

  தலைக்கனம் மிகுந்து ஆடும் தரணி வாழ்வு எதுவரை!
  -நல்ல கேள்வி. இதற்கான பதிலை மனதிற்குள் தேடிக் கண்டடைந்து விட்டால் மனிதர்கள் பண்பாளர்களாகிறார்கள். நல்ல சிந்தனை விதையை விதைத்த ‘பா’ மிக அருமை! படைத்து எமக்கு அளித்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றிகள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 28, 2012 @ 07:45:38

   மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா. உங்கள் கருத்து மிக அருத்தமுடையது.
   வாழ்வின் அனுபவங்கள் தானே கவிதையாக வருகிறது.
   நன்றி. நன்றி.
   இறை அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 16:39:52

   மிக மிக மகிழ்வும், நன்றியும் சகோதரா கணேஷ் நீங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. வே.நடனசபாபதி
  மார்ச் 28, 2012 @ 06:58:11

  //உயிர் போகும் போது
  உடன் வருவது எது!//

  எதுவுமில்லை என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள்.நன்று!

  மறுமொழி

 14. SUJATHA
  மார்ச் 28, 2012 @ 19:27:13

  உயிர் போகும் போது
  உடன் வருவது எது!
  உணர்வு மரத்து உடல்
  உரு ஆடும் போது
  உணர்வதேது! பரிதாபமே!
  உண்மை…..உடன் கட்டை ஏறுவது யாருமல்ல. தனியே வந்து விடைபெறுகின்றோம். இது மனித வாழ்க்கை அருமை…..கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 16:37:05

   ”…உண்மை…..உடன் கட்டை ஏறுவது யாருமல்ல. தனியே வந்து விடைபெறுகின்றோம். இது மனித வாழ்க்கை…”
   மிக மிக மகிழ்வும், நன்றியும் சுஜாதா வந்து கருத்திட்டமைக்கு. ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 15. கீதமஞ்சரி
  மார்ச் 29, 2012 @ 11:35:55

  உணர்வுகள் மரத்து ஜடமாய் வாழும் மனித மனங்களை இன்னென்னவென்று அற்புதமாய் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இருக்கும்வரை சக மனிதரோடு இணக்கமாய் வாழ்வதில்தான் இருக்கிறது வாழ்க்கையின் அர்த்தம். மனம் தொட்ட கவிதை. பாராட்டுகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 15:17:23

   பொய்யாய் பேசி, பொய்யைப் பேசி மனதில் இராட்சதத் தனமாக வாழ்வோரை என்ன செய்வது. பழைய காலக் குணங்களை மாற்றவே முடியாது.
   மிக்க நன்றியும், மகிழ்வும் சகோதரி வந்து கருத்திட்டமைக்கு. இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 16. கோவை கவி
  மார்ச் 29, 2012 @ 15:12:49

  Arul Mozhi :-
  அத்தனை கோடுகளும் மனிதன்
  அநியாயமாய்ப் போடுவதே – அன்பை
  அழித்துச் சாத்தானை மனதுள்
  அமர்த்தித் தன் அமைதியையும்
  அழித்துச் சூழலையும் குளப்புகிறான்.///உண்மை தோழி.

  .Vetha ELangathilakam:-
  Nanry arulmozhi.God bless you…

  மறுமொழி

 17. pathmasri
  ஏப் 08, 2012 @ 14:55:23

  உயிர் போகும் போது
  உடன் வருவது எது!
  உணர்வு மரத்து உடல்
  உரு ஆடும் போது
  உணர்வதேது! பரிதாபமே!

  மறுக்கமுடியாத உண்மைகள்..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: