24. பாலுக்குப் பதிலாகக் கோலாவை…..

 

பாலுக்குப் பதிலாகக் கோலாவை…..

 

அதிகமாகப் பிள்ளைகள் பாலுக்குப் பதிலாக – கோலாவைக் குடிக்கின்றனர்.

மரக்கறி, மீனுக்குப் பதிலாக – சிப்ஸ், போகெர்ஸ் (burgers   ) உண்கின்றனர்.

வெளி விளையாட்டை, விளையாட்டுத் திடலைப் பாவிக்காது – அமைதியாகக், கல்லுப் போலக் கணனிக்கு முன்பு உட்காருகின்றனர்.

இது நல்ல யோசனையோ, ஆரோக்கியமான நிலையோ அல்ல என்கிறார் உலா கினப்ப(Ulla knappe ) டென்மார்க் எலும்புகள் சம்பந்தமான ஒரு குழுமத்தின் தலைவர்.

இந்த நவீன வாழ்வு முறை. பிற்காலத்தில் பெரிய உடல் ரீதியான பாதிப்பை உருவாக்கப் போகிறது. என்கிறார் இவர்.

நலிவான எலும்புகள் விரைவில் உடையும் தன்மை கொண்டன. முதுகுத் தண்டு வளைந்து கோணலாகி விடும். அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். நடு வயதிலும் முதுமை வயதிலும் நோய்கள் அண்டிக் கொள்ளும். ஆதலால் சிறு பருவத்திலேயே இதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். பிற்காலப் பாதிப்பிற்கு முற்காலத் தடுப்பு நடவடிக்கை சுகாதாரமானது.

எலும்பு மச்சை வளர்ச்சி பெறும் 25 வயது வரை நம் உடம்பிற்குத் தேவையான அளவு கல்சியம் பெறும் படி நாம் கவனிக்க வேண்டும். எலும்பு மச்சைத் தேய்வு ஆணுக்கும், பெண்ணுக்கும் வயதுப் பிரகாரம் 35 வயதில் ஆரம்பமாகிறது. பின்னர் இது வாழ்வு முழுதும் தொடர்கிறது. இதனால் குழந்தைகளும் இளையவர்களும் தமது எலும்பு மச்சைகளை அதன் தேய்வு வயது வரு முன்னரே நன்கு கட்டி எழுப்ப வேண்டும்.

ஒரு பாடசாலைப் பிள்ளை ஒரு நாளிற்கு அரை லிட்டர் பாலும் இரண்டு துண்டு சீசும் சாப்பிட வேண்டும். பதின்ம வயதினர் இன்னும் அதிகம் உண்ண வேண்டும்.

நிறைய சுகாதார உணவு, அதிக கல்சியம், டி உயிர்ச்சத்து இவைகளே பிற்காலப் பிரகாசத்திற்கு மிகச் சிறந்த தீர்வாகிறது.

பிள்ளைகள் தேவையான சத்தைப் பெறுவது பெற்றவர் கடனே.

டென்மார்க்கில் 4 இலட்சம் மக்கள் எலும்பு சம்பந்தமான நோய்களால் அல்லல் உறுகின்றனர்.

நாங்கள் இதை நல்ல கவனத்தில் எடுக்க வேண்டும். 

நலம் பெறுங்கள்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2004.

 

 

                      

31 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Dr.M.K.Muruganandan
  மார்ச் 29, 2012 @ 04:20:07

  விழிப்புணுர்வூட்டும் பயனுள்ள பதிவு.

  மறுமொழி

 2. b.ganesh
  மார்ச் 29, 2012 @ 04:36:49

  அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டிய, கவலைப்பட வேண்டிய விஷயம். பயனுள்ள நற்கருத்துக்கள் படித்ததில் மகிழ்ந்தேன். நன்றி.

  மறுமொழி

 3. Rajarajeswari
  மார்ச் 29, 2012 @ 04:43:16

  இந்த நவீன வாழ்வு முறை. பிற்காலத்தில் பெரிய உடல் ரீதியான பாதிப்பை உருவாக்கப் போகிறது

  கவனத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்.. சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

  மறுமொழி

 4. வசந்தா சந்திரன்.
  மார்ச் 29, 2012 @ 04:59:03

  பயன் தரும் நல்ல ஒரு பகிர்வு நன்றி…))

  மறுமொழி

 5. பழனிவேல்
  மார்ச் 29, 2012 @ 06:21:49

  பயனுள்ள தகவல்… நல்ல பகிர்வுக்கு நன்றி.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 29, 2012 @ 06:31:00

  In Kavithai sangamam..V Ranga Nathan:_

  கோலாவைப் போலவே
  பாலும் நிறம் மாறும்
  காலம் வரும்.

  சிப்ஸ் கணக்குக்கு மரக்கறி மீன் வரும்
  … வெளித்திடல் விளையாட்டுக்கு
  மனம் திடம் பெறும்.

  வளைந்த முதுகு நிமிரும்
  உடைந்த எலும்பும் சேரும்…

  ஆனாலும் எங்கள் தமிழ்நாட்டில் மின்சாரம் மட்டும்
  அம்மா வீட்டுக்கு போன சம்சாரம் போல
  முடங்கிக் கிடக்கு…

  மறுமொழி

 7. வே.நடனசபாபதி
  மார்ச் 29, 2012 @ 07:06:32

  பிள்ளைகள் தேவையான சத்தைப் பெற பெற்றோர்கள் உதவ வேண்டும் என்ற அறிவுரை காலத்தின் கட்டாயம். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 8. rathnavelnatarajan
  மார்ச் 29, 2012 @ 07:37:13

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 9. sasikala
  மார்ச் 29, 2012 @ 10:23:15

  பயனுள்ள பதிவு நன்றிங்க .

  மறுமொழி

 10. ஹைதர் அலி
  மார்ச் 29, 2012 @ 11:34:44

  நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ
  பதிவில் தாய்மையின் அக்கறைஉணர்வை உணர்கிறேன்
  பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  மார்ச் 29, 2012 @ 11:45:44

  குழந்தைகளின் வளர்ச்சி மட்டுமல்ல, எதிர்காலமும் பாதிக்கப்படுகிறது, அவர்களது வாழ்க்கைமுறை மாற்றத்தால். பெற்றவர்கள்தான் கவனமெடுத்துச் சொல்லிப் புரியவைக்கவேண்டும். நல்லதொரு பதிவு. நன்றியும் பாராட்டும்.

  மறுமொழி

 12. duraidaniel
  மார்ச் 29, 2012 @ 16:01:08

  அருமையான மருத்துவக் குறிப்பை பகிர்ந்திருப்பீர்கள். தேவையான பதிவு. வளரும இளம் பருவத்தினரை ஆரோக்கியமாக உருவாக்க எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 16:04:47

   உண்மை தான் சகோதரா. எல்லோரும் அப்படி உணர்ந்தூல் நோய் துன்பம் என்பதேது!
   மிக நன்றியும், மகிழ்வும் தாங்கள் வந்து பின்னூட்டமிட்டதற்கு.
   தெய்வத்தின் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 13. ரெவெரி
  மார்ச் 29, 2012 @ 17:53:33

  நாங்கள் அறவே தொடுவதில்லை…கோலா…
  இந்தக்கால எங்கள் மகளுக்கு மாதம் ஒரு முறை மட்டுமே…பயனுள்ள பதிவு சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 29, 2012 @ 18:19:25

   இங்கு டென்மார்க்கில் வெள்ளிக் கிழமை இனிப்பு நாள என்று அன்று மட்டும் சிலர் பிள்ளைகளிற்கு இனிப்பு வாங்கிக் கொடுப்பார்கள்.
   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   இறையருள் கிட்டடட்டும்.

   மறுமொழி

 14. மகேந்திரன்
  மார்ச் 29, 2012 @ 22:25:25

  “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

  அருமையான விழிப்புணர்வுப் பதிவுக்கு
  நன்றிகள் பல சகோதரி.

  மறுமொழி

 15. மணிக்கன்னையன்
  மார்ச் 30, 2012 @ 07:21:32

  கரு வயிற்றில் வளரும்போதே மருத்துவத்தை நாடும் இந்தக்காலத்திற்கு தேவையான பதிவு. இயற்கையில் எவ்வளவோ வளம் வலம் வருகிறது, ஆனால் யாரும் பின்பற்றுவதில்லையே என்ற என் ஆதங்கத்திற்கு நல்மருந்து.

  மறுமொழி

 16. ramani
  மார்ச் 31, 2012 @ 05:37:06

  அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண் டிய
  செய்தியை அழகாகப் பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நன்றி

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: