28. டென்மார்க் மேகவியின் அரங்கேற்றம்.

டென்மார்க் நித்திய சதங்கை நர்த்தனாலயா ஆசிரியை பரதக் கலைமணி ஸ்ரீமதி யாழினி பா. பாலேந்திரன் அவர்களின் மாணவி.. செல்வி மேகவி பத்மசேகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்.

 

இடம் : Holstebro Musikteater

காலம் : 31.03.2012

நேரம் : 16.00

ஆசிரியை யாழினிக்கும், மாணவிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-3-2012.

Alaikal news :-    http://www.alaikal.com/news/?p=101415

மேகவியின் நடன அரங்கேற்றம்.

பரதத்தை மேகவி பத்மசேகரன்
விரதம் போலப் பழகியுள்ளாள்.
இரதம் அலங்கரித்ததாய் இறைவன்
வரதமுடன் நடனம் அரங்கேற்றுகிறாள்
நித்ய சதங்கை நர்த்தனாலயா
நியமித்த திகதி 31-3-2012ல்.
கண்ணாலும் பேசும் பரதம்.
எண்ணங்கள் உணர்வு பொதிந்து
எண்ணப் பரிமாற்றம் செய்யும்.
வண்ணக் கதைகளும் கூறும்.
கதைகூறி சாமியாடி, சடங்கு
கொண்டாட்டத்தில் வெளியானது நடனம்.
சிந்து வெளி நாகரீக காலம் தொட்டு
பந்தி விரித்து முன்னேறியது.
கண்ணிறைந்த உயிருடை அசைவுடைத்து.
பின்னுகிறாரின்று உடற்பயிற்சி, நீச்சலுமாக.
பார்வையாளரிற்கு நிகழ்த்திக் காட்டும்
நேர்த்தியான கலைநுணுக்கம் பரதம்.
ஆர்வமுடன் இசை, தாளத்தோடு
ஈர்க்கின்றவொரு தொடர்பு முறையானது.
செல்வி- பத்மசேகரன் புதல்வி
மேகலையுயர்ந்து நடன தாரகையாகட்டும்!
வாழ்க! வளர்க! சுரதமுடை(இனிமையான)
மேகவியின் அரங்கப் பிரவேசம்.

வாழ்த்துவோர்.- திரு. திருமதி இலங்காதிலகம், வேதா. குடும்பத்தினர்.
ஓகுஸ், டென்மார்க். 31-3-2012.

In Alaikal .com  Web site:- http://www.alaikal.com/news/?p=101557

 

                               

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. HOTLINKSIN திரட்டி
  மார்ச் 31, 2012 @ 09:22:50

  வாழ்த்துகள்…

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 31, 2012 @ 10:06:01

   மிகுந்த நன்றி தங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும். இறை அருள் கிடைக்கட்டும்.
   இது மேகவிக்கு உரியது.
   (மிகக் கஷ்டப்பட்டேன். அரை மணி நேரம் எடுத்தது வேட் வேறிபிஃக்கேசனிற்கு – அதாவது எனது இடுகையை அங்கு சமர்ப்பிக்க. எரிச்சலும் வந்தது, ஆயினும் பொறுமையாக முயற்சித்தேன்.)

   மறுமொழி

 2. வே.நடனசபாபதி
  மார்ச் 31, 2012 @ 11:22:29

  நடன ஆசிரியை திருமதி யாழினி பா.பாலேந்திரன் அவர்களுக்கும், அவர்களின் மாணவி செல்வி மேகவி பத்மசேகரன் அவர்களுக்கும், வாழ்த்துப்பா பாடிய தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 31, 2012 @ 11:47:04

   தங்கள் இனிய வாழ்த்திட வருகை தந்தமைக்கும், வாழ்த்திற்கும் மிக மிக மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும் உரித்தாகுக. தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 3. rathnavelnatarajan
  மார்ச் 31, 2012 @ 15:01:35

  எங்கள் மனப்பூர்வ வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. தமிழ்க்கிறுக்கன் நடாசிவா
  மார்ச் 31, 2012 @ 15:24:50

  அரங்கேற்றங்கள், தமிழ் கலையின் அழகையும் பண்பின் உயர்வையும் உலகுக்கு எடுத்துக் காட்டுகின்றன , வாழ்த்துக்கள் !

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 31, 2012 @ 18:53:34

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா உங்கள் வருகைக்கும் வாழ்த்துகளிற்கும். நீண்ட நாட்களாகத் தங்களைக் காணவில்லை. ஆண்டவன் ஆசீர்வாதம் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. Kavialagan
  மார்ச் 31, 2012 @ 17:42:35

  Vaalthukkal

  மறுமொழி

 6. மகேந்திரன்
  மார்ச் 31, 2012 @ 23:01:42

  என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரி..

  மறுமொழி

 7. ramani
  ஏப் 01, 2012 @ 06:31:59

  அரங்கேற்றமும் அவரது கலைப் பயணமும்
  தொடர்ந்து சிறந்து விளங்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 01, 2012 @ 07:04:30

   மேகவிக்கு உங்கள் வாழ்த்து – சேரும். மிக மிக மகிழ்வடைந்தேன் தங்களது வாழ்த்தினால். மனம் நிறைந்த நன்றி உரித்தாகுக. தெய்வத் திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 8. சிவ மேனகை
  ஏப் 01, 2012 @ 22:51:16

  நாட்டிய மயிலுக்கும் அவரை பெற்றெடுத்த தாய் தந்தையர்க்கும் நடனத்தை கற்று அறிய வைத்து அரங்கேற்றி அழகாய் ஆடவைத்த குருவுக்கும் ,கவி பாடி வாழ்த்திய கோவை கவிக்கும் எனது நல் வாழ்த்துக்கள் ,,,,,,,,,,
  ,,

  மறுமொழி

 9. பழனிவேல்
  ஏப் 02, 2012 @ 03:19:11

  “கண்ணாலும் பேசும் பரதம்.
  எண்ணங்கள் உணர்வு பொதிந்து
  எண்ணப் பரிமாற்றம் செய்யும்.
  வண்ணக் கதைகளும் கூறும்.
  கதைகூறி சாமியாடி, சடங்கு
  கொண்டாட்டத்தில் வெளியானது நடனம்.”
  வரிகள் மிக அருமை…

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 02, 2012 @ 06:36:42

   மிக நன்றி பழனி சகோதரா,உமது இனிய வருகைக்கும், கருத்துடை வரிகளிற்கும் மிக மகிழ்ந்தேன்,
   நன்றி..நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 10. sasikala
  ஏப் 02, 2012 @ 11:02:39

  எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 02, 2012 @ 16:27:27

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சசிகலா, தங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும்..
   தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 11. ananthu
  ஏப் 02, 2012 @ 13:37:11

  வாழ்த்துக்கள் !

  மறுமொழி

 12. ரெவெரி
  ஏப் 02, 2012 @ 14:02:58

  எனது வாழ்த்துக்கள் சகோதரி…

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 02, 2012 @ 16:28:39

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் சகோரா ரெவெரி தங்கள் வரவிற்கும், வாழ்த்திற்கும்.
   தெய்வத்தின் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 13. மாலதி
  ஏப் 03, 2012 @ 10:46:55

  அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளும் பாராட்டுக்களும் கடல் கடந்து சென்றாலும் நமது பண்பாட்டை மறக்காமல் பரதம் பழகியம் சிறப்பு

  மறுமொழி

 14. கோவை கவி
  ஏப் 08, 2012 @ 14:09:22

  அல்லைப்பிட்டி மக்கள் likes this..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: