வேதாவின் மொழிகள் 18.

வேதாவின்  மொழிகள் 18.

(சிந்தனைச்சாரல் என்பது பெயர் மாறி வேதாவின் மொழிகளாக.)

தவறுகளைத் தவறென்று கூறாமல்
உறவு வளர்க்க ஆசியிடுதல்
திறவுகோலாகும் தலைப் பாரத்திற்கு.
பிறகு வருந்துதல் தேவையற்றது.

சந்தேகம். (14-6.2006.)
சந்தேகப் புற்றுநோயிற்கு புரிந்துணர்வு
மின்சார சிகிச்சை தான் அத்தியாவசியம்.

அசையாத நம்பிக்கையும், ஆழ்ந்த அன்பும்
இருந்தால் சந்தேகம் வாலாட்ட முடியாது

சந்தேகமென்பது மஞ்சள் நிறக் கண்ணாடி
அணிந்து பார்ப்பது போன்ற நிலை தான்.

சில இடங்களில் புரிந்துணர்வு மின்சார சிகிச்சை கொடுத்தாலும்
சந்தேகப் புற்று நோய் மறுபடி வளர வாய்ப்புண்டு.

ஆதவன். (2-5-2006.)
சூரியக் கடமையுணர்வு விடாமுயற்சி
பாரிய நற்பயன்கள் தரும்.

நோதலற்ற வார்த்தைகள் வாழ்வில் மனிதனுக்கு
ஆதவனாய்ப் பயன் தரும்.

பிரதி பலன் கருதாத கொடை வள்ளல் ஆதவன்.
பிரதியுபகாரம் வேண்டுபவன் மனிதன்.

மறைந்தாலும் பேசப்படுவாய் ஆதவனாய்
நிறைந்த அன்பைக் கொடு.

எறிக்கும் நாற்பது பாகை ஆதவமும்
தெறிக்கும் நாற்றமுடைய வார்த்தையும் சமம்.

நல்லவை ஆதவன் பொற்கதிராகும்
அல்லாதவை கதிர் மறைக்கும் கருமேகம்.

24-8-2008.
ஙொய்!…ஙொய்!…என்று விரட்ட விரட்ட பறந்து உணவில் வந்தமர்ந்து அசிங்கம் சேர்க்கும் இலையானைத் தடுக்க ஒரு கொசு வலையோ ஒரு மூடியோ தேவைப் படுகிறது. அது போல நடக்கும் மனிதனுக்கு, அவன் தானாகத் தேடும் சுயகட்டுப்பாடு தான் ஒரு மூடியாகிறது, ஒரு வலையாகிறது.

தவறுகள் பற்றி:-
அநீதிகள் பற்றி அபிப்பிராயம் கூறுவது பல இடங்களில் அபாயகரமானது. சாதகமான அபிப்பிராயமே எங்கும் கைகளை விரித்து வரவேற்கப் படுகிறது. ஆக ஒரு வகையில் நடிப்பு வரவேற்கப் படுகிறது. இது எத்தனை பேருக்கு உடன்பாடாக உள்ளது!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(இவை இலண்டன் தமிழ் வானொலியிலும், வேறு இடங்களிலும் பாவிக்கப் பட்டவை)

 

                              

2012.

14. இருநிலத்தில் இருப்பளவு சமமாகினால்

 

இரு நிலத்தில் இருப்பளவு சமமாகினால்….

(யெர்மனிய ”மண்” சஞ்சிகை (வ. சிவராஜா) தனது 150வது இதழையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 2006 பெண்கள் தினத்திற்காக எனது கவிதையை அன்று வெளியிட்டது.
அதற்கு அலங்காரம் செய்து இங்கு வலையேற்றியுள்ளேன்.)

 

 

 

                           

24. தரணியில் தமிழ் காத்திடுவோம்.

 

vector_flower_patterns_background_6003

 

தரணியில் தமிழ் காத்திடுவோம்.

காலத்தினை வென்று சுடரான தமிழ்.
ஞாலத்திற்; புகழ்க் கொடியீட்டிய தமிழ்.
ஏலமிட எவராலும் முடியாத தமிழ்.
ஆலம் விழுதாக ஊன்றிய தமிழ்.
பழம் தமிழ்மொழிப் புகழை நாம்
இழந்திடல் என்பது எதற்காக என்கிறோம்!
பழைய காலத்தில் உலகாண்ட மொழியிங்கு
புழங்காது சுலபமாய் இழத்தல் தவறு.

முழுதுமாய் முனைந்து முழு மூச்சாக
உழுது தமிழ்விதை தூவி விட்டால்
விழுதிடத் தமிழ் வேரூன்றித் தழைக்கும்!
எழுதிடத் தேவையில்லைத் தமிழ் அழியுதென்று!
பண்டு புகழுடைத் தமிழ் நங்கை
செண்டுகள் ஏந்தினாள் பழைய ஏட்டிலே.
கண்டிட்டாள் பல தமிழ்ச் சங்கங்கள்.
நொண்டக் கூடாது புலம்பெயர் நாட்டிலே.

தாய்மொழியை வெறுப்போர், பிற மொழியை
வாய் மொழியாக்குவார், வளம் என்பார்.
சேய் மொழி தமிழாய்ப் புழங்கிட நாம்
வாய்மொழி தாய்மொழி ஆக்கிடல் நலம்.
மொழிப் பற்று அனைவரும் கொண்டால்
விழிப்புற்றுத் தமிழ் மொழியை ஊக்குவார்.
களிப்புற்றுக் கலைவழியும் தமிழ் செய்வார்.
விழிப்புணர்வு கொள்ளலாம் தாய் மொழியினால்.  

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-11-2006.

(இக் கவிதை ரி.ஆர்.ரி வானொலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                    

 

Next Newer Entries