230. ஆத்மா

ஆத்மா.

த்மா – ஆன்மா – உள் சக்தி
மகாத்மாவாகிறது நன்னடைத்தையோடு.
இந்திரியங்களிற்கு அப்பாற்பட்டு
உயிர், ஆவி ஊக்கமென்பார்.

நான், எனது, என்னுடையது
என்றவுணர்வு ஆத்மாவின் குணம்.
பெண்ணல்ல, ஆணல்ல, ஆத்மா
கண்ணாற் காணற்றது.

தம் கடந்து, வயதற்று,
ஏழை, பணக்காரனற்று,
நிறமற்ற நித்தியம் ஆனது.
தனித்துவம், சூட்சுமமானது.

டல் இயக்கக் காரணி.
உடைமை, ஊர், பெயர்,
உருவம்,குணம் அற்றது.
ஓரு வரையறையற்றது.

யிரின் தத்துவம் ஆத்மா.
அறிய முடியாதது. எவரும்
அறியப் போதுமில்லை. யோசனை
அறிவென்பார். ஓன்றையும் பற்றாதது.

த்ம பலம் – சிந்தனை
ஆத்ம ஞானம் – நேசம்- திருப்தி
ஆத்மார்த்த உறவென இணைப்பார்.
ஆத்மாவின்றேல் மனிதன் மரித்தான்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
மரமாகிப் பல்விருகமாகிப்
பறவையாய்ப் பாம்பாகி, எல்லாப்
பிறப்பும் பிறப்பதுவோ ஆத்மா!
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-4-2012.

இதே மாதிரியில் எனது இன்னொரு ஆக்கம்.
இணைப்பு இதோ!….https://kovaikkavi.wordpress.com/2015/03/25/367-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/

  

                                       

 

 

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. b.ganesh
  ஏப் 04, 2012 @ 04:11:03

  ஆத்மாவைப் பற்றிப் பகிர்ந்த கவிதை மிக அருமை. அதிகபட்ச மகிழ்வைக் கூட ‘ஆத்ம திருப்தி’ என்றுதான் சொல்வார்கள் இல்லை…?

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 04, 2012 @ 07:15:27

   சகோதரா! உடனே திருப்தியைச் சேர்த்துள்ளேன்.
   இதற்குத் தான் அனுபவஸ்தர்களின் தொடர்பு தேவை என்பது.
   நன்றி…நன்றி…
   தங்கள் கருத்திற்கு மிக நன்றி.
   ஆண்டவன் ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 2. சத்ரியன்
  ஏப் 04, 2012 @ 04:38:23

  //பெண்ணல்ல, ஆணல்ல, ஆத்மா
  கண்ணாற் காணற்றது.//

  ஆன்மா பற்றிய மிக எளிய விளக்கம். அருமையான ஆக்கம்.

  மறுமொழி

 3. கலைநிலா
  ஏப் 04, 2012 @ 05:17:13

  தெளிவான கட்டுரை .வாழ்த்துக்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 04, 2012 @ 18:16:42

   ”……தெளிவான கட்டுரை .வாழ்த்துக்கள்…”’
   கவிதை போலத் தெரியவில்வைலயா? சகோதரா?
   தங்கள் கருத்திற்கு மிக நன்றி.
   இறை ஆசி கிட்டட்டும்.

   மறுமொழி

 4. பழனிவேல்
  ஏப் 04, 2012 @ 09:18:33

  “உடைமை, ஊர், பெயர்,
  உருவம்,குணம் அற்றது.
  ஓரு வரையறையற்றது.”

  ஆத்மா அழகானது

  மறுமொழி

 5. rathnavelnatarajan
  ஏப் 04, 2012 @ 14:14:02

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. ரெவெரி
  ஏப் 04, 2012 @ 18:25:39

  ஆத்மாவைப் பற்றிப் பகிர்ந்த கவிதை அருமை சகோதரி…

  மறுமொழி

 7. Rajarajeswari
  ஏப் 05, 2012 @ 04:43:47

  பெண்ணல்ல, ஆணல்ல, ஆத்மா
  கண்ணாற் காணற்றது.

  ஆத்மா பற்றி ஆத்மார்த்தமாய் ஆற்றிய கவிதைக்கு
  அன்புப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 8. வே.நடனசபாபதி
  ஏப் 05, 2012 @ 06:16:06

  ஆத்மா என்ற பேரொளி வெவ்வேறு உடல்களில் உள்ளதால் பார்ப்பதற்கு மாறுபட்டு இருந்தாலும், உள்ளே இருக்கிற ஒளியில் எந்த பேதமும் இல்லை என்பதை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 9. கோமதிஅரசு
  ஏப் 05, 2012 @ 11:54:54

  புல்லாகிப் பூடாய்ப் புழுவாய்
  மரமாகிப் பல்விருகமாகிப்
  பறவையாய்ப் பாம்பாகி, எல்லாப்
  பிறப்பும் பிறப்பதுவோ ஆத்மா!//

  ஆத்மா எல்லாப் பிறப்புமாய் இருப்பதுவே!
  அருமையான கவிதை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 05, 2012 @ 16:31:49

   மிக்க நன்றியும், மகிழ்ச்சியும் அன்பான சகோதரி தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. Nihmath Mohideen Qatar
  ஏப் 05, 2012 @ 18:30:17

  ஆத்மா பற்றிய மி அருமையாக எழுதியுள்ளீர்.

  மிக்க நன்றி.

  மறுமொழி

 11. ramani
  ஏப் 06, 2012 @ 01:02:22

  ஆத்மா குறித்து அருமையான
  அழகான எளிமையான விளக்கம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  மறுமொழி

 12. sasikala
  ஏப் 06, 2012 @ 15:38:08

  அருமையான விளக்கம்…
  மனம் கவர்ந்த பதிவு

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 07, 2012 @ 16:21:46

  Abul Hasan likes this..
  Hameed Dvk likes this..
  அன்பு தோழி, ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா and Sasi Krish like this..

  ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா:-
  அற்புதமான படைப்பு!! வாழ்த்துக்கள் அம்மா!!Wednesday at 7:00am ·

  அன்பு தோழி:-
  ஆன்மா / ஆத்மா பற்றிய மிக எளிய விளக்கம். அருமை …!

  Vetha:-
  அன்புத் தோழி, சிறீஸ்கந்தராஜா தங்கள் கருத்திடலிற்கு இருவருக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

  மறுமொழி

 14. கோவை கவி
  ஏப் 22, 2015 @ 09:03:36

  ஸ்ரீ சந்திரா :-
  அருமை அருமை சிறப்பாக அமைத்திருக்கின்றீர்கள் வாழ்த்துக்கள்
  22-4-2015

  Velavan Athavan:-
  நற்கருத்து சகோதரி ஆத்மாவின் உருவமற்ற உயர்வு….
  22-4

  Vetha Langathilakam:-
  Mikka makilvudan nanry Chandra and Sujen
  22-4

  மறுமொழி

 15. கோவை கவி
  ஏப் 22, 2015 @ 12:27:43

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: