25. கைத் தொலைபேசியைப் பூட்டுங்கள்!

 

கைத் தொலைபேசியைப் பூட்டுங்கள்!

 

காலை 8 மணிக்கு ஐந்தரை வயது டானியல் பாலர் நிலையம் வந்தான். காலை உணவையே பாலர் நிலையத்தில் தான் அவன் சாப்பிட்டான்.

 மாலை 4.30 ஆகியும் அவனது பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வரவில்லை. மளமளவென மற்றைய பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஆசை தீர முத்தமிட்டு, அன்பாக வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் போது டானியலின் முகம் வாடுகிறது.

அன்றாடம் நிலையத்தில் பெற்றவருக்காகக் காத்திருக்கும் இறுதிப் பிள்ளையாக இருக்கும் ஏக்கக் கொடுமையைப் பிஞ்சு மனங்களால் தாங்க முடிவதில்லை. அது ஒரு பயங்கர ஏக்க நிலையாகும்.

டானியலுக்காக நான் வாசித்த கதையில் அவன் மனம் செல்லவில்லை. மணி 4.45க்கு தந்தை யோசப் வந்தார். (நிலையம் பூட்டுவது மாலை 5 மணிக்கு.)  அவன் முகம் பூவானது. ”இதோ உன் அப்பா வந்திட்டார்”என்று கூறியாடி வாசிப்பை நிறுத்தி புத்தகத்தை மூடினேன்.

அவன் தந்தையோ ஒரு கரத்தைக் கதவு நிலையில் ஊன்றியபடி மறு கரத்தில் கைத்தொலை பேசியை ஏந்தி, காதோடு கதைத்தபடி, டானியலுக்குத் தலையை மட்டும் ஆட்டியபடி தனது கதையில் மூழ்கியிருந்தார்.

இந்நிலை எனக்கு எரிச்சலைத் தந்தாலும், எனக்கு எதுவும் கூறமுடியாத நிலைமை. டானியல் தந்தையின் சைகையைப் புரிந்து இருவரும் பிள்ளையின் உடை தொங்கும் இடத்தையடைந்து வீடு செல்லத் தயாராக, நானும் யன்னலை மூடி நிலையத்தைப் பூட்டும் முயற்சியில் இறங்கினேன்.

எட்டு மணி நேரமாகப் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைக்குத் தேவை ஒரு அன்பான அணைப்பு, ஆசை வார்த்தைப் பரிமாற்றம், ஒரு அன்பு முத்தமே! இதையறியாத தந்தைக்குக் கைத்தொலை பேசி முதலிடம் வகிக்கிறது.

இவர் போன்று பலர் உளர். எம்மோடு பிள்ளை பற்றிய அன்றாட அசைவுகள், அன்று என்ன நடந்தது, என்ற பல தகவல்களின் பரிமாற்றங்களின்று, தகவற் பலகையில் எழுதிய அறிவிப்புகள், தகவல்களையும் வாசிக்காது பலர் உளர். எது தனக்கு முக்கியம் எனும் நேரத்தில் கைத்தொலை பேசியைப் பூட்டுவது நன்றல்லவா!

குழந்தைகளைக் கையளிப்பதும், எடுப்பதும் கூட பெற்றவருக்கும், நிலையத்தினருக்கும் மிக முக்கிய பொழுதுகளன்றோ!

மாலையில் பெற்றவர் அன்புக்காக ஏங்கும் பிள்ளைகளை அன்பாக அணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும். காலையிலும் அன்பாக அணைத்துக் கூட்டி வருவது மிக அவசியம். அப்போது தாராளமாகக் கைத்தொலை பேசியைப் பூட்டிவிடலாம்.

சக ஊழியர்களின் கலந்துரையாடல் நேரத்தில் இந்தத் தலைப்பை எடுத்து உரையாடினோம்.

எல்லோரும் கூடிப் பேசி எடுத்த முடிவின்படி ”கைத்தொலை பேசி இங்கு தடை” எனும் அட்டைகளை நிலையத்தின் பல இடங்களில் தொங்கவிட்டு இதை எழுதுகிறேன்.

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்!…..

கைத்தொலை பேசி வர முதல் எப்படி இருந்தீர்கள்!……

சொல்லுங்கள்!…..
 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-9-2004.

 

                                     

34 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Rajarajeswari
  ஏப் 07, 2012 @ 05:36:35

  எல்லோரும் கூடிப் பேசி எடுத்த முடிவின்படி ”கைத்தொலை பேசி இங்கு தடை” எனும் அட்டைகளை நிலையத்தின் பல இடங்களில் தொங்கவிட்டு இதை எழுதுகிறேன்.

  முன்மாதிரியாக இயங்கும் தங்களுக்கு என் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளும் , பாராட்டுக்களும் உரித்தாக்குகிறேன் சகோதரி !!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 06:51:48

   மிக்க நன்றி சகோதரி. ஓவ்வோரு விடயங்களும் வாராந்தர ஒன்று கூடல், மததாந்தர ஒன்று கூடலில் கலந்து பேசுவோம்.
   நான் மட்டுமல்ல. நாம் செய்வது என்பதே பொருந்தும் சகோதரி. தங்கள் இனிய வருகையுடனான கருத்திற்கு மிக மகிழ்வும், நன்றியும் உரித்தாகுக.
   இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 2. b.ganesh
  ஏப் 07, 2012 @ 05:43:54

  உண்மைதான்… சாலையைக் கடக்கும் போதும், வாகனம் ஓட்டும் போதும்கூட பலர் பேசுகிற கொடுமையைப் பார்க்கிறேன். விஞ்ஞான வசதிகள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டுமே அன்றி நாம் அதற்கு அடிமைகளாகிவிடக் கூடாது, மனிதத்தை ஒருநாளும் தொலைத்து விடலாகாது. அருமையான முன்னுதாரணத்தை முன்வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சிஸ்டர்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 06:56:08

   அன்பின் சகோதரா சரியாகச் சொன்னீர்கள்
   .”..விஞ்ஞான வசதிகள் நமக்கு அடிமையாக இருக்க வேண்டுமே அன்றி நாம் அதற்கு அடிமைகளாகிவிடக் கூடாது மனிதத்தை ஒருநாளும் தொலைத்து விடலாகாது.”
   மிக்க நன்றி இனிய கருத்திற்கு.
   மிக மகிழ்வடைந்தேன்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 07, 2012 @ 07:18:35

  .

  Vijayalakshmi Viji
  nalla thagaval .pagirndhamaikku nandri thozhi

  Yashotha Kanth:- அருமை…சகோதரி

  கவிதைச் சங்கமம் likes this..(in FB)

  Lingathasan Ramalingam Sornalingam, அந்தி மாலை and Pratheepan Saravanapavan like this..

  Umah Thevi likes this..

  மறுமொழி

 4. Kowsy
  ஏப் 07, 2012 @ 07:34:56

  உலகமே கைத்தொலைபேசிகள் அடிமை. ஒரு குட்டி கணனியே அதற்குள். பைத்தியங்கள் போல் வீதியில் தானாகக் கதைத்துக் கொண்டு போகின்றார்கள் . இந்த நிலையில் நீங்கள் எடுத்த முடிவு சரிதான். கதவைத் தாண்ட மீண்டும் தொடங்கிவிடும்.நாளை டானியலும் இதைத்தான் செய்யப் போகின்றான். உலகைத் திருத்த முடியாது.

  மறுமொழி

 5. ம​கேஷ்
  ஏப் 07, 2012 @ 07:42:19

  நான் நண்பர்க​ளை பார்க்க ​போன பல சந்தர்ப்பங்களில் அவர்க​ளோடு ​தொடர்ந்து உ​ரையாட முடியாமல் அவர்களுக்கு அ​ழைப்புகள் வந்து ​கொண்​டே இருக்கும், நான் ​பொறு​மை இழந்து அவர்களிடம் வீட்டிற்கு ​போய் உங்க​ளை ​தொ​லை​பேசியில் ​தொடர்பு ​கொள்கி​றேன் எனச் ​சொல்லிவிட்டு வி​டை​பெற்றிருக்கி​றேன்,

  குழந்​தைகள் விசயத்தில் இது மிகமிக ஆபத்தானதாக இருக்கிறது, அத்த​கைய நுண்ணிய உணர்வுக​ளை புரிந்து ​கொள்ளும் அளவிற்கு நம் சமூகங்கள் வளர்ச்சிய​டைந்திருக்கிறதா என்பது நம்முன் உள்ள ​பெரிய ​கேள்வி

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 15:35:59

   ”’அத்த​கைய நுண்ணிய உணர்வுக​ளை புரிந்து ​கொள்ளும் அளவிற்கு நம் சமூகங்கள் வளர்ச்சிய​டைந்திருக்கிறதா என்பது நம்முன் உள்ள ​பெரிய ​கேள்வி…”
   சரியாகவே ! சொன்னீர்கள் சகோதரா மகேஷ். அந்த நுண்ணிய உணர்வும் புரிந்துணர்வும் இருந்தால் தான இந்தத் தவறுகள் நடக்காதே.
   முடிந்தளவு கூறத்தான் எம்மால் முடியும். உலகைத் திருத்த முடியாது.
   மிக நன்றி சகோதரா தங்கள் வரவு, கருத்திடலிற்கு.
   தங்கள் வலைத்தளம் பார்த்தேன். மிகக் கனதியான இடுகைகள். ஆனால் ஒரு இடத்தில் (கிருஷ்ணன் யமுனா – கடிதம்-) என்று இருக்கிறது. மகேஷ் என்றும் எழுதியுள்ளீர்கள். ஒன்றும் புரியவில்லை. வலையிலும் தங்களைப்பற்றி அறிய முடியவில்லை. காலையில் இணையத்தள விட்ஜெட்டுகள் பற்றி ஒரு இடுகைக்கு கருத்திட்டேன் கிருஷ்ணன் பிரபு என்று.
   ஒன்றும் புரியவில்லை யாரென. சரி எது எப்படியானாலும் இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. கோமதிஅரசு
  ஏப் 07, 2012 @ 12:24:12

  எட்டு மணி நேரமாகப் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைக்குத் தேவை ஒரு அன்பான அணைப்பு, ஆசை வார்த்தைப் பரிமாற்றம், ஒரு அன்பு முத்தமே! இதையறியாத தந்தைக்குக் கைத்தொலை பேசி முதலிடம் வகிக்கிறது.//

  அன்பு முத்ததிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் பெற்றோர்.
  கைத்தொலைபேசியை அந்த சமயம் பூட்டத்தான் வேண்டும்.

  மாலையில் பெற்றவர் அன்புக்காக ஏங்கும் பிள்ளைகளை அன்பாக அணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும். காலையிலும் அன்பாக அணைத்துக் கூட்டி வருவது மிக அவசியம். அப்போது தாராளமாகக் கைத்தொலை பேசியைப் பூட்டிவிடலாம்.//

  நானும் இதை வழி மொழிகிறேன் சாகோதரி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 14:59:20

   மிக்க மகிழ்ச்சி சகோதரி தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு. மிக்க நன்றியும் உரித்தாகட்டும். ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 7. rathnavelnatarajan
  ஏப் 07, 2012 @ 14:28:12

  அருமையான பதிவு.
  உங்கள் யோசனை சரி தான்.
  நன்றி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 14:57:18

   யாருமே இதைக் கடைப்பிடிப்பதாயில்லையே!
   என்று மனித உணர்வுகளிற்கு மதிப்புக் கொடுப்பார்களோ,
   அன்று தானாகத் திருந்துவார்கள்.
   நன்றி ஐயா தாங்கள் வந்து கருத்திட்டமைக்கு.
   இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 8. Mano Saminathan
  ஏப் 07, 2012 @ 15:45:01

  நல்லதொரு கருத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்! பெரியவர்கள் உபயோகிப்பதையாவது மன்னித்து விடலாம்! பெரியவர்கள் சிறு குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுப்பதையும் அவர்களை கைபேசியை உபயோகிக்கச் சொல்வதையும் எப்படி மன்னிப்பது?

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 07, 2012 @ 16:07:34

   ஆமாம் இது பணக்காரத்தனம் என்றும் கூறலாம்.
   மிக மிகத் தவறு செய்கிறார்கள்.
   கைத்தொலை பேசி இல்லாமல் வாழலாம்.
   சரி! இது முடிக்க முடியாத அலசல்.
   எம்மால் முடிந்ததைச் செய்வோம்.
   மிக நன்றி சகோதரி நீங்கள் வந்து கருத்துத் தந்தமைக்கு. மிக மகிழ்வடைந்தேன்.
   தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 07, 2012 @ 15:51:42

  Arul Mozhi and Hameed Dvk like this..
  Arul Mozhi:-
  ”கைத்தொலை பேசி இங்கு தடை///பாசம் வென்றிடும் இனி

  .Vetha ELangathilakam:_
  பாசம் வெல்ல வேண்டும்….அதற்காகவே செய்தது……மிக்க நன்றி அருள்மொழி வரிகளிட்டமைக்கு. இறை அருள் நிறையட்டும்…

  மறுமொழி

 10. மணிக்கன்னையன்
  ஏப் 07, 2012 @ 16:01:53

  தாங்கள் கூறியிருப்பது இன்றைய நாகரீக உலகில் பரவலாகிப் போனதொன்று, மேலும் கைப்பேசி தேவையின் போது முக்கியமான தகவல் பரிமாற்றம் செய்யதான் பயன் படுத்த வேண்டுமேயல்லாது சிலர் வீணாய் பொழுதுப்போக்கிற்காகப் பயன்படுத்துகின்றனர்.ஓர் அவசரக்காலத்தில் தேவைப்படும்போது அக்கைப்பேசி பயன்பாட்டில் இருப்பதாக அறிவிப்புதான் கிடைக்கப்பெறுவர், நல்லதொரு கருத்தானப் பதிவு.. நன்றி

  மறுமொழி

 11. மகேந்திரன்
  ஏப் 08, 2012 @ 05:30:49

  கை தொலைபேசி பயன்படுத்துவோரில்..
  சிலர் கம்பியில்லா கேட்கும் ஒலிப்பானை
  காதில் மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டே
  இருப்பார்கள்.. அதனால் அவர்களுக்கும் சுற்றி இருப்போருக்கும்
  வரும் இடையூறுகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்..

  மிகக் கொடியது வாகனம் ஓட்டுபவர் பயன்படுத்துவது.
  ஓரமாக நின்று பேசுவதற்கு கூட அவர்களுக்கு நேரமில்லை..
  இருசக்கர வாகனத்தில் செல்வோர். ஒருபுறமாக
  கழுத்தை சாய்த்துக்கொண்டு தொலைபேசிக்கு அடைகொடுத்து
  பேசிக்கொண்டே ஓட்டுவார்கள்..

  விழிப்புணர்வு பெருக வேண்டும்..

  அருமையான ஆக்கம் சகோதரி..

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 09:09:47

   சகோதரா இந்த பிரச்சனை பெரிய பிரச்சனை. ஆனால் எதுவுமில்லாதது போல மக்கள் நடிப்பது தான் அறியாமை.
   தங்கள் நீண்ட கருத்தையிட்டு மகிழ்வடைந்தேன். மிக மிக நன்றி தெரிவிக்கிறேன் வந்து கருத்திட்டமைக்கு.
   இறை அருள் றிறையட்டும்.

   மறுமொழி

 12. SUJATHA
  ஏப் 08, 2012 @ 06:38:07

  ஆக்கபூர்வமான கட்டுரை. எல்லோரையும் சிந்திக்கவைக்கின்றது. இது கூட பெற்றோர்கள் விடும் பிழை. காலம் கடக்க பிள்ளைகளும் இதையே பின்பற்றுவர். கூடி எடுத்த முடிவு எதிர்காலத்திற்கு நல்வழிகாட்டல். வாழ்த்துக்கள்!!!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 09:13:14

   உண்மை தான் பெற்றோரே பிள்ளைகளுக்கு வழி காட்டிகள். அதை உணராத பெற்றோருக்கு நாம் கூறத்தான் முடியும். திருந்துவது அவரவர் பணியாகும்.
   மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் சுஜாதா உமது கருத்திடலிற்கு. ஆண்டவன் அருள் நிறைவதாக.

   மறுமொழி

 13. Dr.M.K.Muruganandan
  ஏப் 08, 2012 @ 10:11:49

  தொலைபேசி பலதடவைகளில்
  தொல்லை பேசியாக மக்கள் மகிழ்ச்சியைப்
  பறித்தெடுப்பது உண்மை.
  ஒரு குழந்தையின் மனநிலை எவ்வாறு பாதிக்கப்படும்
  என்பதை அனுபவ நிகழ்வாக சுவாரஸ்யமாகத் தந்தீர்கள்.

  மறுமொழி

 14. வே.நடனசபாபதி
  ஏப் 08, 2012 @ 12:02:57

  உண்மைதான். தொலைபேசி இல்லாமல் வாழ்ந்த நாம் இன்று தொலை பேசிக்கு அடிமையாகி விட்டோம். தொலைபேசியோடு இப்போது கைப்பேசியும் வந்து விட்டதால்.வீட்டை விட்டு வெளியே வந்தால் கைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் பயணம் செய்வோர் அநேகம். உங்கள் கருத்துக்கும் செயலுக்கும் உடன்படுகின்றேன். வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 12:27:02

   மிக்க மிக்க மகிழ்வடைந்தேன் சகோதரா தங்கள் வருகையும், கருத்திடலிற்கும். நீண்ட கருத்திட்டீர்கள்.
   மிக மிக நன்றி நன்றி.
   தெய்வத்தின் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 15. Guna Thamizh
  ஏப் 08, 2012 @ 16:13:18

  தேவையான பதிவு. நன்றாகச் சொன்னீர்கள்

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 08, 2012 @ 16:25:51

   அன்பின் முனைவரே!
   தங்கள் இனிய வருகையும், கருத்துப் பரிமாற்றமும் மிக மகிழ்வு தந்தது.
   இனிய நன்றி உரித்தாகுக.
   ஆணடுவன் அருள் நிறைவதாக.

   மறுமொழி

 16. கீதமஞ்சரி
  ஏப் 09, 2012 @ 01:26:51

  ஒரு குழந்தையின் அன்பின் எதிர்பார்ப்பை வெறுமையாக்கும் பெற்றோரை என்னவென்று சொல்வது? குழந்தையை எதிர் நோக்கும் அந்த சில நிமிடங்களில் கைபேசியை உபயோகப்படுத்தா விட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடப் போகிறது?

  தங்கள் முயற்சி பெரிதும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. குழந்தைகளை அழைத்துச் செல்ல வரும் பெற்றோரிடத்தில் அது ஒரு மாற்றத்தை உண்டாக்கினால் மிகவும் மகிழ்ச்சியே.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 09, 2012 @ 07:26:30

   சரி சகோதரி கை பேசி அணைக்கப் பட்டால் பெற்றொர் நினைவு பின்னர் குழந்தை மீது தானே விழும் (அந்த நிலையத்தில்). எங்களிற்கு வேறு வழி தெரியவில்லை.
   அதனாலேயே எல்லோரும் staff meeting ல் பேசி அந்த முடிவு எடுத்தது.
   மிக நன்றியும் மகிழ்வும் சகோதரி தங்கள் கருத்திடலிற்கு. இறை அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 17. பழனிவேல்
  ஏப் 09, 2012 @ 03:55:25

  அருமையான பதிவு. தேவையான பதிவும் கூட…
  வாழ்த்துகளும், பாராட்டுக்களும் உரித்தாக்குகிறேன்.
  தங்கள் பணி தொடரட்டும்…

  மறுமொழி

 18. sasikala
  ஏப் 09, 2012 @ 05:42:19

  தாங்கள் செய்தது சரியே சகோ எனினும் தாங்கள் அவர்களின் தவறை உணர்த்தி இருக்கலாம் எனத் தோன்றுகிறது . அருமையான தேவையான பதிவு .

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 09, 2012 @ 07:32:11

   அது எமது நிறுவன முடிவு தானே!. இதில் எனது தனிப்பட்ட செயற்பாடு அங்கு இருக்கக் கூடாது சகோதரி. .
   மிக மகிழ்வும், நன்றியும். சகோதரி தங்கள் கருத்திடுகைக்கு.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 19. seimathi
  ஏப் 11, 2012 @ 06:09:47

  பதிவோடு மட்டும் நின்று விடாது செயல்வடிவம் கொடுத்துள்ளீர்கள்…கைத்தொலைபேசியை நிச்சயமாக சில இடங்களில் பூட்டித்தான் ஆகவேண்டும்
  தங்களின் கருத்து வரவேற்கத்தக்கது

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: