43. வைரமூக்குத்திக் கற்கள்

 

வைரமூக்குத்திக் கற்கள்

மைக்கருமை வானிலே
வைரமூக்குத்திக் கற்களைத்
தைரியமாயிறைத்தது யார்!
வைத்த கண்மூடாது
பைய நடக்கிறேன் அண்ணாத்தபடி.

வைரக்கற்களிடையே நான்..
வரையறையற்று நீண்ட பாதை.
வனிதம்! அற்புதம்! ஆகா!
வானவர் உலகோ! இது!
வாய்விட்டு எண்ணுகிறேன் நட்சத்திரங்களை…

னமும் கண்களுமொன்றி
மந்திரத்தால் முடுக்கிய நிலையில்
மறந்தெனை ஆழ்ந்த ரசிப்பு!
உள்ளேயுள்ளே ஆழ ஆழமோ!
வானக் கடலில் அமிழ்ந்திடுவேனோ!

ருநூற்றைம்பது மீட்டர்
இடைவெளி – ஆச்சியெமது வீடு.
இனிய நட்சத்திர இருட்டில்
கண்ணற்றதாக அண்ணாத்த நடை
கால்களோ பழகிய பாதையில்…

கால் தடுக்கக் குனிந்தேன்.
நூல் அறுந்தது கற்பனையில்.
கால் – என்னிலத்தடி பூமியில்!
வானிலல்ல! சிணுங்கியது சின்ன
மனது! ஏமாந்தேனிப்படியிரு தடவை!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-4-2012.

                    

27 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. SUJATHA
  ஏப் 09, 2012 @ 12:00:33

  விண்ணில் மின்னும் விண்மீன்கள் மண்ணிலிருந்து வைரமூக்குத்திகளாக தோன்றும் அற்புதக்காட்சியன் கவிவரிகள்
  அருமை. அதிலும் புகைப்படமோ இன்னும் ரசிக்கவைக்கின்றது.

  மறுமொழி

 2. மணிக்கன்னையன்
  ஏப் 09, 2012 @ 12:32:32

  கற்பனையும் ஓர் நாள் நடைமுறைக்கு வரும்….

  மறுமொழி

 3. b.ganesh
  ஏப் 09, 2012 @ 12:56:14

  இரு தடவையென்ன… எத்தனை தடவையும் ஏமாறலாம்- இப்படி ஒரு இனிய அனுபவத்திற்காய். கவிதையும், நீங்கள் வைத்த புகைப்படமும் கைகோர்த்து அற்புதமான ரசனையைத் தந்தன. மிக அருமை.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 09, 2012 @ 15:50:39

   நிசமாகவே இப்படி இரு தடவை ஏமாந்தது மனதிற்கு வலியாக இருந்தது. என்ன நிலத்திலேவா இருக்கிறேன்! இவ்வளவும் கற்பனையா! என்று.
   நான் சம நிலைக்கு வர சிறிது நேரமும் எடுத்தது.
   இதை மறக்க முடியவில்லை.
   இன்று எழுதியுள்ளேன்.
   மிக நன்றியும், மகிழ்ச்சியும் சகோதரா தங்கள் வரிகளிற்கு. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 4. கோமதி அரசு
  ஏப் 09, 2012 @ 13:45:41

  கவிதை மிக நன்றாக இருக்கிறது.
  இருளில் வைரமாய் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் மனதை கொள்ளை கொள்கிறது.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 09, 2012 @ 16:03:28

   உங்களை ரசிக்க வைத்ததற்கு மகிழ்வாக உள்ளது.
   உடனுக்குடன் கருத்துத் தரும் உங்களிற்கு மனம் நிறைந்த நன்றி. இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 5. rathnavelnatarajan
  ஏப் 09, 2012 @ 14:13:54

  கால் தடுக்கக் குனிந்தேன்.
  நூல் அறுந்தது கற்பனையில்.

  அழகு வரிகள். வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. ரெவெரி
  ஏப் 09, 2012 @ 14:35:43

  கனவு மெய்ப்பட வேண்டும்…சகோதரி..-:)

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 09, 2012 @ 16:27:18

   (கனவு மெய்ப்பட வேண்டும்…சகோதரி..-:) ஆகா!

   இதென்ன! இந்த வம்பு தானே வேண்டாம் என்பது. மிக்க நன்றி ரெவெரி.
   இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 09, 2012 @ 14:39:16

  Yashotha Kanth and Sham Masud like this..
  Aatika Ashreen Bharadhidasan University like this..
  Pratheepan Saravanapavan likes this..
  Prakash Ash likes this..
  Kiri Santh likes this..( Jal Elakkaiya Kuvijam)
  Arul Mozhi and Sahaya Regy Jesu like this..(from Kavithai sangamam2:0)

  Yashotha Kanth:_
  அழகு சகோ

  Vetha:-
  மிக நன்றியும், மகிழ்ச்சியும் யசோ கருத்திற்கு. ஆணடவன் அருள் நிறையட்டும்.

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 09, 2012 @ 14:40:40

  அன்பு தோழி and அன்புடன் நான் like this..

  அன்புடன் நான்:-
  கால் தடுக்கக் குனிந்தேன்.
  நூல் அறுந்தது கற்பனையில்.//////கற்பனையில் வானம் கூட உங்களிடம் வசப்பட்டு விட்டது என்றே தோணுகிறது…

  Vetha:-
  இது சிறு வயதின் என் நிஜ அனுபவம். அப்போதே கலா நெஞ்சமாக இருந்திருக்குமோ!.. மிக நன்றி சகோதரா வரிகளிற்கு. இறையருள் நிறையட்டும்…

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 09, 2012 @ 15:19:26

  Subi Narendran :-
  வானத்து நட்சத்திரம் வைர மூக்குத்தியாக, வித்தியாசமான கற்பனை. அருமையான கவிதை வாழ்த்துக்கள்
  Vetha ELangathilakam :_
  அன்பின் சுபி நரேந்திரன் தங்கள் பின்னூட்டத்திற்கு மனம் மிக மகிழ்ந்தேன் அன்புடன் நன்றிகள் உரித்தாகுக. இறையருள் நிறையட்டும்…

  மறுமொழி

 10. seimathi
  ஏப் 11, 2012 @ 05:56:32

  வைர மூக்குத்தி கற்களிடையே நடந்த தங்களை
  வையகத்து கற்கள் ஏமாற்றி விட்டனவோஃ
  கால் தடுக்கக் குனிந்தேன்.
  நூல் அறுந்தது கற்பனையில்
  தங்கள் கவியுடன் நானும் நடந்தேன் வைர மூக்குத்தி கற்களிடையே
  சிறிது நேரம்
  அழகான கவிதை

  மறுமொழி

 11. கீதமஞ்சரி
  ஏப் 12, 2012 @ 01:21:21

  அழகான மனப்பகிர்வு. வாசிக்கையிலே கவியோட்டத்தோடு கலந்தாடுகிறது என் எண்ணக் கிடக்கைகளும். பாராட்டுகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2012 @ 17:02:43

   அன்பின் கீதமஞ்சரி தங்கள் வரவால் இணைந்த கருத்திற்கு மனம் மிக மகிழ்ந்தேன்.
   மிக நன்றியைத் தெரிவிக்கிறேன்.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 12. சத்ரியன்
  ஏப் 12, 2012 @ 03:56:51

  சொற்களில் ஜொலித்தன வைரமூக்குத்திக் கற்கள்.

  // இருட்டில் கண்ணற்றதாக அண்ணாத்த நடை
  கால்களோ பழகிய பாதையில்…//

  பொதுவாகவே, நகங்களை “நகக்கண்” என்றே சொல்வார்கள். பழகிய பாதையில் கும்மிருட்டிலும் மேடு,பள்ளம் உணர்ந்துக் கொள்ளும் கால்கள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2012 @ 19:27:28

   சகோதரா நல்ல கருத்திட்டுள்ளீர்கள்
   உங்கள் ரசனை புரிகிறது. மிக மிக மகழ்வும் நன்றியும்.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 13. வே.நடனசபாபதி
  ஏப் 12, 2012 @ 11:06:00

  இரு தடவையென்ன பல தடவை ஏமாறலாம்! இப்படிபட்ட கற்பனை வருமானால்!! அற்புதமான கவிதை சகோதரி. வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 14. Rajarajeswari
  ஏப் 12, 2012 @ 13:09:49

  கால் – என்னிலத்தடி பூமியில்!
  வானிலல்ல! சிணுங்கியது சின்ன
  மனது!

  வைரவரிகள்…

  இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்..

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2012 @ 19:30:42

   சகோதரி ! மிக மிக மகழ்வும் நன்றியும் தங்கள் கருத்திடலிற்கு. இனிய புத்தாண்டு நல் வாழ்த்து தங்களிற்கும் உரித்தாகுக.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 15. Dr.M.K.Muruganandan
  ஏப் 12, 2012 @ 17:05:42

  “..கால் தடுக்கக் குனிந்தேன்.
  நூல் அறுந்தது கற்பனையில்…”
  அற்புதமான வரிகள்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 12, 2012 @ 19:32:07

   மிக மிக மகழ்வும் நன்றியும் ஐயா தங்கள் கருத்திடலிற்கு.
   இனிய புத்தாண்டு நல் வாழ்த்து தங்களிற்கு உரித்தாகுக. ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: