231. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

பார் விளங்கப் புதுப் பெயரேந்திடும்
நேர்த்தியான புது ஆண்டே  வருக!
தீர்வுக்கான நாட்டில் பல பிரச்சனைகள்
தீர்த்திடும் நோக்குடன் வருக! வருக!
தீர்க்கமாய் தீர்மானமாய் வருக! வருக!
ஆர்வமான நல் வரவு வருக!

மனித கர்வச் சிறகுகள் உடைத்து
மனித நேயச் சிநகுகள் விரித்து
மனதில் குத்து விளக்கேற்ற வருக!
தனம் கனகம் என்று எண்ணுவோரில்
தனம் கல்வி என்ற தகுதியேந்தி
சினமழிக்கும் புது நெறியோடு வருக!

மொத்த அறிவிலிகள் வாழும் நாடாக
செத்த உடல்கள் வீழ்கிறது தினமாக.
விலங்கு மனத்தை வசப்படுத்தித் தெளிவாக்கி
துலங்க வைக்க புத்தாண்டே வருக!.
கத்திக்குக் கத்தியெனும் வாழ் நிலைமாறிப்
புத்திக்குப் புத்தியெனும் புது நிலையாகுக!

 

புத்தாண்டே வருக!  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள்!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-4-2012.

 

35 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. ramani
  ஏப் 12, 2012 @ 21:47:10

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  மறுமொழி

 2. b.ganesh
  ஏப் 13, 2012 @ 00:38:27

  விலங்கு மனத்தை வசப்படுத்தி தெளிவாக்கி… ஆம்! இந்தப் புத்தாண்டிலாவது விலங்கு மனங்கள் விலகி நல்லதே நடக்கட்டும்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 13, 2012 @ 18:12:51

   விலங்கு மனம் தானே இல்லாவிடில் இத்தனை அநியாயங்கள் நடக்காதே. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

   மறுமொழி

 3. T.N.MURALIDHARAN
  ஏப் 13, 2012 @ 01:38:52

  இனிய வரவேற்பு

  மறுமொழி

 4. surendran
  ஏப் 13, 2012 @ 01:40:56

  vanakkam thirumadhi vedha ilangathilakam avargalukku. padhivu nandraga ulladhu enakku oru iyyappaadu edhu thamizh puththandu nammavar kondaadinara illaya alladhu thamizhargalin thirunaal illadha deepavaliyai pol idhum ondra

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 13, 2012 @ 18:29:33

   சகோதரா..இதை செந்தமிழிலேயே எழுதியிருக்கலாமே!
   ஐ போனில் ஆங்கிலமா?.
   எனக்குச் சரியாக விளங்கவில்லை தங்கள் கேள்வி.
   தங்கிலிஸ் ஒவ்வொருவர் ஒவ்வோரு மாதிரி எழுதுவார்கள். கேள்வியைச் சரியாக விளங்காமல் பதில் எப்படி எழுதுவது.
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
   (கேள்விகள் எல்லாரும் தான் கேட்டபடி உள்ளனர். புது வருடமும் பிறந்தபடியே உள்ளது.
   தங்கள் வருகை, கருத்திற்கு மிக்க நன்றி.
   இறையாசி கிட்டட்டும்.

   மறுமொழி

 5. பழனிவேல்
  ஏப் 13, 2012 @ 03:59:03

  “பார் விளங்கப் புதுப் பெயரேந்திடும்
  நேர்த்தியான புது ஆண்டே வருக!
  தீர்வுக்கான நாட்டில் பல பிரச்சனைகள்
  தீர்த்திடும் நோக்குடன் வருக! வருக!
  தீர்க்கமாய் தீர்மானமாய் வருக! வருக!
  ஆர்வமான நல் வரவு வருக!”

  ஆம் வரவு நல்வரவாகட்டும்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 13, 2012 @ 19:23:38

   இனிய சகோதரா கருத்திடலிற்கு மிக மிக நன்றி. புத்தாண்டு வாழ்த்துகளும் உரித்தாகுக.
   ஆணடவன் அருளும் நிறையட்டும்.

   மறுமொழி

 6. வே.நடனசபாபதி
  ஏப் 13, 2012 @ 05:59:42

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 7. sasikala
  ஏப் 13, 2012 @ 06:22:30

  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 13, 2012 @ 19:48:10

   மிக்க நன்றி சகோதரி. தங்கள் தளத்தில் வாழ்த்து இட்டுள்ளேன். மிக்க நன்றி.
   இறையாசி நிறையட்டும்.
   வேதா. இலங்காதிலகம்.

   மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 13, 2012 @ 06:44:23

  Naguleswarar Satha Wish you the same!
  வித்யாசாகர் குவைத், Umah Thevi and Chennai Raja like this..
  Thushiyanthan Ganeshamoorthy likes this..
  அன்பு தோழி, Nayaki Krishna and Ravi TL like this..

  அன்பு தோழி:-
  சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்….
  Umah Thevi:- இனிய நந்தன வருட சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  வசந்தா சந்திரன் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..))
  Rajinthiny Raji:_
  same too.
  கேபிள் ராஜா:_
  ‎…♥♥♥♥♥♥♥ — உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு நாள் வாழ்த்துகள். தொடங்கும் இந்த வருடத்தில் எந்த குறையும் இல்லாமல் அனைத்து வளங்களையும் பெற்று வாழ என் பிரார்த்தனைகள் …♥♥♥♥♥♥♥ —

  மறுமொழி

 9. சத்ரியன்
  ஏப் 13, 2012 @ 07:35:05

  புத்தாண்டு வரவேற்புக் கவிதை சிறப்பாக உள்ளது.

  உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 10. Dr.M.K.Muruganandan
  ஏப் 13, 2012 @ 08:56:09

  இனிய சித்திரைப் புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் சுற்றம் சூழல் அனைவருக்கும்.

  மறுமொழி

 11. ரெவெரி
  ஏப் 13, 2012 @ 11:49:20

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்…

  மறுமொழி

 12. கோவை கவி
  ஏப் 13, 2012 @ 17:06:43

  Subas Karan..-/Yashotha Kanth Nurse at Nursing
  ..SentKdnl Thangal, Dammam, Saudi Arabia
  ..Dhanasekaran Jayaraman,Asst. Manager at Power Plant
  ..Sham Masud, Annamalai University
  Arul Mozhi likes this..
  Murali Dharan likes this..
  Chinras Razfunz likes this..

  Yashotha Kanth:-
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….சகோ
  2.Kdnl Thangal:-
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…·
  3.Chandrasegar Gurusamy:-
  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  Thushiyanthan Ganeshamoorthy likes this..

  Thushiyanthan Ganeshamoorthy:-
  அருமையான வரிகள்.
  Vetha ELangathilakam:-
  Mikka Nanry.

  மறுமொழி

 13. கோவை கவி
  ஏப் 13, 2012 @ 20:10:49

  Pushpalatha Kanthasamy..
  அல்லைப்பிட்டி மக்கள்..
  Kawzy Aravinthan
  University of Southern Denmark
  Shanthynee Varatharajan
  Works at தமிழ்
  Lavi Langa..
  Subas Karan likes this.

  மறுமொழி

 14. மகேந்திரன்
  ஏப் 14, 2012 @ 01:47:34

  செறிந்திருக்கும் சொல் வளமாய்
  பொதிந்திருக்கும் பொருள் வளமாய்
  தங்கத் தமிழின் இன்சுவையாய்
  தங்கள் வாழ்வில் இனிமை நிறைந்திருக்கட்டும்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
  தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 15. ஸாதிகா
  ஏப் 14, 2012 @ 04:08:06

  உளம் கனிந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வேதா இலங்கா திலகம்!

  மறுமொழி

 16. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஏப் 14, 2012 @ 07:03:18

  “மொத்த அறிவிலிகள் வாழும் நாடாக
  செத்த உடல்கள் வீழ்கிறது தினமாக.
  விலங்கு மனத்தை வசப்படுத்தித் தெளிவாக்கி
  துலங்க வைக்க புத்தாண்டே வருக!”

  மண்வாசனை வீசும் சித்திரைப் புத்தாண்டே வருக!!.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!!

  மறுமொழி

 17. கலைநிலா
  ஏப் 14, 2012 @ 11:32:19

  வாழ்த்துக்கள் உங்களுக்கும்

  மறுமொழி

 18. rathnavelnatarajan
  ஏப் 14, 2012 @ 14:49:30

  அருமையான கவிதை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 19. கோமதிஅரசு
  ஏப் 16, 2012 @ 10:31:22

  விலங்கு மனத்தை வசப்படுத்தித் தெளிவாக்கி
  துலங்க வைக்க புத்தாண்டே வருக!.//

  புத்தாண்டு கவிதை அருமை.
  உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 20. Vetha ELangathilakam
  ஏப் 21, 2012 @ 14:38:57

  சகோதரி மிக மிக நன்றி.
  ஆண்டவன் ஆசி நிறையட்டும்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: