232. மனச்சாட்சி

மனச்சாட்சி

னச்சாட்சி ஓசையில் மனிதம் வாழ்கிறது.
தினக்காட்சி விரிகிறது திருநாள் நீள்கிறது.
மானிடத்தின் கருவறை மகோன்னத மனச்சாட்சி.
வானிடத்திற்குயர்த்தும் வழுவாத குணச்சாட்சி.

னிதத்தை ஆள்வது மதியூக மனச்சாட்சி.
மனிதனின் கடிவாளம் அற்புத மனச்சாட்சி.
தாய்போலக் காக்கும், தீயாகச் சுடும்
பொய் பேசினாலும் பிலாக்கணம் பாடும்.

விருப்பில்லா வினை மானுடன் கொண்டால்
நெருப்பினில் வண்டாகும் நல்லோர் மனமே.
கருத்தான வினையை மானுடன் கொண்டால்
களிப்பில் ஆடும் நல்லோர் மனமே.

னச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.
மனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு.
மனச்சாட்சியை மதித்தால் மன்றத்தில் மதிப்பு.
மனச்சாட்சியை மிதித்தால் மதிப்பில் இழப்பு.

ட்டங்கள் தர்மங்கள் நீதியின்றி உலகில்
சங்கோசம் சந்தேகம் ஏதுமின்றிப் பலர்
மனச்சாட்சியை  மதிக்காது உதறி  ஓடுவார்
மன்றத்தில் மதிப்பாய் மகுடம் சூடுவார்.

னச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு
மனிதாபிமானத்தினொரு நந்தா விளக்கு.
மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-9-2002.

Samme heading  another poem :-   https://kovaikkavi.wordpress.com/2011/05/20/251-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

(6-3-2001ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலி கவிதை பாடுவோம் நிகழ்வில் திரு லோகதாஸ், திரு.சுரேந்திரன்(தோழர்) நிகழ்வில் என்னால் வாசிக்கப் பட்டது.
21-9-2002ல் தமிழ் அலை கவிதைச் சோலையில் திரு தீபன் நிகழ்விலும் ஒலிபரப்பாகியது.)

                           

24 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. niranjana
  ஏப் 17, 2012 @ 04:23:06

  வேதாக்கா… எனக்குக் கூட புரியற மாதிரி அழகான தமிழ்ல மனச்சாட்யைப் பத்தி சொல்லியிருக்கீங்க. மனச்சாட்சியுள்ளோனை துணிந்து நேசின்னு முடிச்சிருக்கறது அருமை. அதைவிட கீழ நீங்க வெச்சிருக்கற படம்… Very Beautiful. Thanks for this nice sharing.

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 17, 2012 @ 06:41:19

   நிரூ நன்றியடா….மகிழ்ச்சியும் கூட கருத்திடலிற்கு. காலையில் தமிழ் மணம் ஊடாக உமது இடுகை கண்டு வந்தேன். யு ஆர் லக்கி கணேசன் அண்ணா இருக்கிறார்.
   எனக்கு இப்படி உதவ யாருமே இல்லையே!…
   ஆனால் நம்பிக்கையும், கடவுளும் உண்டு.
   மிக மகிழ்ச்சியடா….
   இறையாசி நிறையட்டும்.

   In Mann Magazine from Germany May to June 2006 This poem Published on page 29
   Thank you Mann Ethal….

   மறுமொழி

 2. Ganesh
  ஏப் 17, 2012 @ 04:28:12

  விருப்பில்லா வினை மானுடன் கொண்டால்
  நெருப்பினில் வண்டாகும் நல்லோர் மனமே.
  எவ்வளவு அருமையான வரிகள். மனச்சாட்சி நமக்குக் கடிவாளம். அந்தக் கடிவாளத்துக்குக் கட்டுப்படாதவன் மனிதனே அல்லன். பிரமாதமான கருத்தைச் சொன்ன கவிதை, நன்று.

  மறுமொழி

 3. பழனிவேல்
  ஏப் 17, 2012 @ 04:49:55

  “மனச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.
  மனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு.
  மனச்சாட்சியை மதித்தால் மன்றத்தில் மதிப்பு.
  மனச்சாட்சியை மிதித்தால் மதிப்பில் இழப்பு.”

  மதித்தால் மதிப்பு
  மிதித்தால் இழப்பு.
  மிக அருமை…

  மறுமொழி

 4. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஏப் 17, 2012 @ 04:53:44

  “மனச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.
  மனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு…”.

  வாழ்த்துக்கள் அம்மா!! இவ்வளவு விடயங்கள் இருக்கின்றதா??? அற்புதம்!

  மறுமொழி

 5. niranjana
  ஏப் 17, 2012 @ 09:24:26

  வேதாக்கா… குழந்தைக்குத்தான் நடை பழக மற்றவர் துணை வேண்டும். நீங்கள் எம்மை வழிநடத்தத் தகுந்தவர் அல்லவா? உங்கள் கவித்திறன் கண்டு எவ்வளவு வியக்கிறேன் தெரியுமா… (என்க்குத் தான் பா எழுத வருகுதில்ல) கடவுளுடன் நானும் உங்கள் பக்கம் உண்டுக்கா… நன்றி.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 18, 2012 @ 19:13:16

   (என்க்குத் தான் பா எழுத வருகுதில்ல)
   அப்படிச் சொல்லக் கூடாது நிரூ. கொஞ்ச நாளுக்கு பாக்களை வாசியுங்கள் அது தன்னால வரும்.
   இறையருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 6. மாலதி
  ஏப் 17, 2012 @ 10:46:58

  மனச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு
  மனிதாபிமானத்தினொரு நந்தா விளக்கு.
  மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
  மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!// ஒரு மனிதனை செதுக்க கூடிய சிறந்த கூறிய ஆயுதம் மனசாட்சி அந்த மனசாட்சியை அழகாக படம் பிடித்தமை அழகோ அழகு பாராட்டுகள் . மாலதி

  மறுமொழி

 7. ரெவெரி
  ஏப் 17, 2012 @ 12:26:51

  மனச்சாட்சியைப் பத்தி சொல்லியிருக்கீங்க…மிக அருமை…

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 17, 2012 @ 17:05:11

  Yashotha Kanth likes this..
  Seetharaman Athimoolam likes this..
  Murugavel Swaminathan:-
  ஓவியமும் புகைப்படமும் நன்று!
  Umah Thevi likes this..

  Umah Thevi :_
  அற்புதம்!

  Yashotha Kanth :-
  அருமை சகோதரி ,,உங்கள் படைப்புகள் அனைத்தும் அற்புதமே
  அன்பு தோழி likes this..
  Arul Mozhi likes this..

  Arul Mozhi:-
  மனச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு
  மனிதாபிமானத்தினொரு நந்தா விளக்கு./// நந்தா விளக்கு ?

  அன்பு தோழி:-
  மனச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு
  மனிதாபிமானத்தினொரு நந்தா விளக்கு.
  மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
  மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!
  அற்புதம்!.
  Vetha ELangathilakam:-
  நன்றியும், மகிழ்ச்சியும் அன்புத் தோழி….கருத்திற்கு. இறையாசி நிறையட்டும்…

  Kiri Santh -Jaffna Hindu College-likes this..

  Vino Pathmanathan -Girls high school pandeteruppu-likes this..

  FriendsPushpalatha Kanthasamy..likes this..

  ..

  மறுமொழி

 9. மகேந்திரன்
  ஏப் 18, 2012 @ 02:02:33

  மனித நேயத்தின் அடையாளம்
  மனசாட்சி…
  மனசாட்சியைத் தொலைத்து பின்னர்
  மனிதத்தை தேடுவது..
  கண்ணிழந்தபின் வெளிச்சம் பார்க்க விழைவது போல்..

  அழகான கவி மூலம் அருமையான கருத்துரைகள் சகோதரி..

  மறுமொழி

 10. sasikala
  ஏப் 18, 2012 @ 09:45:41

  “மனச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.
  மனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு…”.மிக அருமை.

  மறுமொழி

 11. rathnavelnatarajan
  ஏப் 19, 2012 @ 00:27:30

  அருமை.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 12. வே.நடனசபாபதி
  ஏப் 20, 2012 @ 06:32:07

  //மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
  மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!//

  எனக்குப் பிடித்தவரிகள். வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 13. கோவை கவி
  மார்ச் 18, 2018 @ 16:09:01

  Jasmin Kennedy :- மிக அருமை
  Vetha:- mikka nanry sis
  2018- 3-18

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: