1. வாரிசு வந்திட்டார்(17-4-2012 ல்)

 

வாரிசு வந்திட்டார்(17-4-2012)

 

ளியுமிழும் உலகை
விழித்துப் பார்க்கக்
கூசும் கண்கள்
கூசிக்கூசி மூடும்.

தடு எப்போதும்
உங்கு உறிஞ்ச
அங்கும் இங்கும்
ஆவலாய்த் தேடும்.

சின்னக் கையும்
சின்னக் காலும்
மென்மை வழங்க
பொன்னெ மழுங்கும்.

பாரமே இல்லாப்
பஞ்சுப் பொதியாய்
ஒன்றும் தெரியாது
கையுள் நெளிகிறார்.

வ்வுலகை எட்டிட
இருபத்திநான்கு மணியாக
இழுத்தெமைக் கலங்கடித்தார்
இவ்விரத்தினக் குஞ்சு.

ரம்பரை விளங்க
வரம்பிடாது ஒரு
வாரிசு என்ற
பரிசு கிடைத்தது.

”வெற்றி” எம்மகன்
வயிற்றுப் பேரன்.
நெற்றித் திலகமுனக்கு
இலங்காதிலகத்தின் வாரிசே!

ல் வரவுனக்கு!
நலம் சேர்த்தாயெமக்கு!
நிடூழி நலம்பெறுக….
திலீபன்-சாந்தி, வெற்றியுடன்!

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-4-2012.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் 24-4.2012 செவ்வாய்க் கிழமை கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

  

                             

 

 

 

44 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதிஅரசு
  ஏப் 19, 2012 @ 03:49:14

  ”வெற்றி” எம்மகன்
  வயிற்றுப் பேரன்.
  நெற்றித் திலகமுனக்கு
  இலங்காதிலகத்தின் வாரிசே!

  நல் வரவுனக்கு!
  நலம் சேர்த்தாயெமக்கு!
  நிடூழி நலம்பெறுக….
  திலீபன்-சாந்தி, வெற்றியுடன்!

  இலங்காதிலகத்தின் வாரிசுக்கு வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன்
  வாழ்க நலமுடன்.
  திலீபன் ,சாந்தி, வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
  இறைவன் அருளால் குழந்தை எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்தும் பாட்டி கோமதி அரசு.

  மறுமொழி

 2. niranjana
  ஏப் 19, 2012 @ 04:49:26

  ஹை… பாட்டி ஆயிட்டீங்களா,,, இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். நான் கேக் சாப்பிட்டு இங்கயே கொண்டாடிட்டேன் வேதாக்கா. உங்கள் வீட்டில பூத்திருக்கற புதிய பூவுக்கு நல்வரவு

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 19, 2012 @ 16:30:25

   நிரஞ்சனா ஏற்கெனவே 20க்கு மேல பேரப்பிள்ளைகள் உண்டு இவரது சகோதரம், எனது சகோதரங்கள் என்று. இது எமது சொந்த முதலாவது பேரன் .அது தான் விசேடம் இங்கு..
   மிக்க நன்றியடா உமது வாழ்த்திற்கு.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்

   மறுமொழி

 3. ஸ்ரீஸ்கந்தராஜா
  ஏப் 19, 2012 @ 05:15:27

  பரம்பரை விளங்க
  வரம்பிடாது ஒரு
  வாரிசு என்ற
  பரிசு கிடைத்தது.

  குட்டி இளவரசருக்கு எமது உளமார்ந்த நல்வரவும்.. நல் வாழ்த்துக்களும்!!

  மறுமொழி

 4. sasikala
  ஏப் 19, 2012 @ 06:08:13

  எல்லா நலமும், வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் .

  மறுமொழி

 5. Dr.M.K.Muruganandan
  ஏப் 19, 2012 @ 08:08:53

  மகிழ்ச்சியளிக்கும் வரவு.
  புதிய வாரிசிற்கு எனது
  வாழ்த்துக்களும் ஆசிகளும்.

  மறுமொழி

 6. Senthilarasu
  ஏப் 19, 2012 @ 10:15:53

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்…

  மறுமொழி

 7. பழனிவேல்
  ஏப் 19, 2012 @ 10:31:42

  “வெற்றி”
  வரவு நல்-வரவாகட்டும்
  வாழ்க வளமுடன்
  வளர்க நலமுடன்
  வெல்க புகழுடன்

  மறுமொழி

 8. ramani
  ஏப் 19, 2012 @ 12:04:18

  வெற்றித் திருமகன் வரவுக்கு
  மனமார்ந்த வாழ்த்துக்கள்
  எல்லா நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ
  மனமார்ந்த வாழ்த்துக்கள்

  மறுமொழி

 9. ரெவெரி
  ஏப் 19, 2012 @ 12:17:40

  இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் பாட்டி…Sorry வேதாக்கா….-:)

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 19, 2012 @ 18:12:56

   சகோரா மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு. நோ ப்ரபிளம்! ஏற்கெனவே 20க்கு மேல பேரப்பிள்ளைகள் உண்டு. என்ன! இது சொந்தப் பேரன் .அது தான் வித்தியாசம்.
   எப்போதோ பாட்டியாகிட்டேன்.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. b.ganesh
  ஏப் 19, 2012 @ 12:43:47

  புதிதாய் பூமிக்கு வந்திருக்கும் வெற்றி, வாழ்விலும் வெற்றி மேல் வெற்றி பெற்று என்றும் மகிழ்வுடனிருக்க என் உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி!

  மறுமொழி

 11. Angelin
  ஏப் 19, 2012 @ 12:56:17

  வாழ்த்துக்கள் அக்கா .

  மறுமொழி

 12. ஸாதிகா
  ஏப் 19, 2012 @ 14:32:58

  குழந்தை வளமுடன் நலமுடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள்!

  பெற்றோர் திலீபன்-சாந்தி தம்பதியினருக்கும்

  தாத்தா பாட்டி இலங்கா திலகம் – வேதா தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள்.

  பாட்டியம்மா அழகாய் பேரனது வருகையை கவி மழையில் பொழிந்திருப்பது அருமை.

  படப்பகிர்வுக்கு நன்றி

  மறுமொழி

 13. SUJATHA
  ஏப் 19, 2012 @ 19:44:58

  பேரனின் வருகைக்காக காத்திருந்து கவிமழையில் அவனை நனைத்து விட்டு மலர்ந்து சிரிக்கின்ற பாட்டன் பாட்டி. ஒரு வாரிசு பரம்பரை சொத்து. குடும்பம் பெருகுவது பரம்பரைக்கு குதூகலம். கவிதையில் பேரனின் அழகை அழகாய் வர்ணித்த பெருமை…வார்த்தைகளில் வடிக்கமுடியாதளவு உயர்ந்தது. தம்பதினர் வாழ்க வளமுடன்!!!!!!

  மறுமொழி

 14. மணிக்கன்னையன்
  ஏப் 19, 2012 @ 19:55:14

  கவி வரியில் புதுவரவு கண்டு மகிழ்வுடன் வாழ்த்தி வரவேற்க்கின்றேன்

  மறுமொழி

 15. மகேந்திரன்
  ஏப் 20, 2012 @ 01:42:22

  வணக்கம் சகோதரி,
  வாழையடி வாழையாக
  தங்கள் குடும்பம் தழைத்தோங்கட்டும்.
  புதிதாய் இவ்வுலகை தரிசிக்க வந்த
  பூம்பாத குழந்தை
  வாழ்வில் எல்லா நலமும் பெற்று
  இன்புற்று இருக்க இறைவனை
  பிரார்த்திக்கிறேன்.

  மறுமொழி

 16. பிரபுவின்
  ஏப் 20, 2012 @ 05:20:39

  நல்வாழ்த்துக்கள் சகோதரி. என்ன பெயர் வைக்க உத்தேசித்துள்ளீர்கள்? நல்ல தமிழ்ப் பெயரை வைப்பீர்கள் என்று தெரியும்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 21, 2012 @ 14:29:54

   மிக நன்றி பிரபுவின். கவிதையிலேயே வெற்றி என்று குறிப்பிட்டேனே! இது தான் பெயர். பிள்ளைகளே வைத்த பெயர் எனக்கும் மிகச் சந்தோசம் பெயரையிட்டு.
   நாம் அதில் தலையிட மாட்டோம் அது அவர்கள் பிள்ளை . அவர்கள் தான் பெயர் வைக்க வேண்டும். எத்தனை கனவோடு இருந்திருப்பார்கள்.
   கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதும் வீசுவதும் அவர்கள் பாதை. .
   நல்லபடி வளர்த்தோம்.
   இனி அவர்கள் வழி.
   மிக நன்றி பிரபு.
   இறை ஆசி நிறையட்டும்.

   மறுமொழி

 17. வே.நடனசபாபதி
  ஏப் 20, 2012 @ 06:36:11

  புது வரவான இளவரசுக்கும், திலீபன் சாந்தி தம்பதியினருக்கும், தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

  மறுமொழி

 18. Vetha ELangathilakam
  ஏப் 20, 2012 @ 21:24:49

  Umah Thevi likes this..

  Umah Thevi:-
  வாழ்த்துக்கள் சகோதரி!
  Arul Mozhi . பிரேம லதா likes this..
  Carthick Keyan
  National College likes this.
  Inthujan Inthu likes this.
  Nayaki Krishna likes this.
  Shaminy Shundaralingam and Pulendran Kandiah like this..
  Sujatha Anton and கலை நிலா like this..
  Lavi Langa :_
  Beautiful poem ‘Appamma’! xxx
  Anna A Sinnathamby :_
  stort tillykke farmor.
  வசந்தா சந்திரன்:_
  வாழ்த்துக்கள்..))
  Ramanana Ramachandran :-
  congrats thilee anna – Lakshmy Ramana

  மகிழினி காந்தன் வாழ்த்துக்கள் 🙂
  Poet Mu Rajalingam:-
  manankanintha nal vaalthukal
  N.Rathna Vel :_
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 19. Vetha ELangathilakam
  ஏப் 20, 2012 @ 21:40:06

  Lingathasan Ramalingam Sornalingam:_

  பிள்ளைக்கும், அம்மாவுக்கும், அப்பாவுக்கும், தாத்தாவுக்கும், பாட்டிக்கும் வாழ்த்துக்கள்.
  பி.கு:- தாத்தா, பாட்டி என விளித்தது பிடிக்கவில்லை என்றால் ‘அப்பம்மா + அப்பப்பா ‘என்று சேர்த்துக் கொள்ளவும். ·

  Vetha ELangathilakam :-
  தாஸ் ஏற்கெனவே நாங்க தாத்தா பாட்டீ , பெஸ்ரபஃ- மோவ தான். 20க்கு மேல இருக்கினம். எப்படியும் கூப்பிடலாம். மிக்க நன்றி. இறையாசி நிறையட்டும்…
  Navamalar Selladurai:-
  tillykke
  Vino Pathmanathan :_
  Peruntha Pia Ramalingam and Pushpalatha Kanthasamy like this..
  tillykke
  முனைவென்றி நா சுரேஷ்குமார்:-
  தாங்கள் பாட்டியாக பதவி உயர்வு அடைந்ததற்கு என்னுடைய வாழ்த்துகள்.
  Congratulations to your family on the new arrival! I saw the pictures, he is very cute! 🙂 From Vanaja & Thurka :).
  Vetha:-
  Thank you and god bless you all..
  ..

  மறுமொழி

 20. Vetha ELangathilakam
  ஏப் 20, 2012 @ 21:59:01

  Sakthi Sakthithasan likes this..

  Sakthi Sakthithasan :_
  அன்பினிய சகோதரி வேதாவிற்கும், நண்பர் இலங்காவிற்கும் மன்மார்ந்த வாழ்த்துக்கள்.
  தாயொன்று மகிழ்ந்தது
  சேயொன்று மகவை
  தாயாக ஈன்றது கண்டு
  பல்லாண்டு, பல்லாண்டு
  … பல்லாயிரத்தாண்டு
  தாய், சேய், தந்தை
  தாத்தா, பாட்டி
  அனைவரும் வாழ்ந்திட
  வாழ்த்துக்கள்
  அன்புடன்
  சக்தி + குடும்பம்

  Vetha:-
  mikka nanry sakothara.God bless you all.

  மறுமொழி

 21. Vetha ELangathilakam
  ஏப் 21, 2012 @ 06:48:10

  வித்யாசாகர்கவிதையின் சிரிப்பில் சிந்தும் தமிழ் புலமையில் நிறைந்த உணர்வு பெற்று; மண்ணின் பெருமை காக்கும் பேறு பெற்ற நல்வளமும் நலமும் பொருந்திய அரியதொரு குழந்தையாக அறிவும் தெளிவும் நிறைந்து நன்றாக வளரவும் எல்லோரின் அன்பையும் பெற்று சிறந்தோங்கவும் வாழ்த்தும் இறையாசியும் நிறையட்டும் சகோதரி!
  ..
  Vetha.ELangathilakam:-
  mikka nanry sakothara .Erai aasi kiddaddum.
  ..

  மறுமொழி

 22. Rajarajeswari
  ஏப் 21, 2012 @ 14:26:51

  வெற்றி” என்னும் மகன்
  வயிற்றுப் பேரன்.
  நெற்றித் திலகமுனக்கு
  இலங்காதிலகத்தின் வாரிசே!

  மறுமொழி

 23. ஜலீலாகமால்
  ஏப் 22, 2012 @ 12:26:58

  புது வரவுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 24. வேல்முருகன்
  ஏப் 27, 2012 @ 15:30:07

  கூடுதல் இன்பமானது
  குடும்பத்தில் ஓர் உறுப்பினர்
  குதுகலிக்கும் தங்களுக்கும்
  தங்கள் சுற்றத்தாருக்கும்
  வாழ்த்துக்கள்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: