26. ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

 

1.        வெளி நாட்டில் நல்ல கோடையில் சூரியன் உதிக்கும் போது பிள்ளைகளிற்கும், பெரியவர்களிற்கும் குதூகலமாக இருக்கும்.
குறைந்த ஆடைகளுடன் வெளியே போக விரும்புவார்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் வெளியே புறப்படுங்கள்.
அழகான பூக்களை நீண்ட காம்புடன் பிடுங்கி வந்து ஒரு பாரமான புத்தகத்துள், சமையலறைக் கை துடைக்கும் கடதாசியை வைத்து அதன் மேலே பிடுங்கிய பூ வைத் தலை கீழாக ஒவ்வொன்றாகப் புத்தகத்துள் மூடிப் பாரம் வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் செல்ல அவை காய்ந்த பின்பு எடுத்து அழகான வாழ்த்து அட்டைகள், சட்டம் போடக் கூடிய கலையழகுடைய படங்கள் செய்யலாம்.

 

2.       இன்னும் காய்ந்த விதைகள், இறகுகள், கம்பளி நூல், மெல்லிய றிபன் போன்றவைகளையும் இவைகளோடு சேர்த்துக் கலா ரசனையுடன் வித விதமாக ஒட்டிப் பாவிக்கலாம்.

3.       சவர்க்காரக் கரைசலை உறிஞ்சும் குழாய்கள் மூலம் ஊதிக் குமிழிகள் செய்து பறப்பதை ரசிக்கலாம்.  சிறுவர்கள் அதைப் பிடித்தும் விளையாடுவார்கள். இதுவும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

4.       பெரிது படத்திக் காட்டும் கண்ணாடியுடனும் சென்று பூச்சிகளைப் பிடித்துப் போத்தல்களில் இட்டுக் கவனிக்கலாம். இது பெரியவர்களிற்கும் மனமகிழ்வு தரக் கூடியது என்பது எனது அபிப்பிராயம்.

5.       தீயில் இறைச்சி வாட்டி உண்டு மகிழலாம்.

6.      கடற்கரைக்குச் சென்று மகிழலாம்..

 

இப்படிப் பல வகையில் வெயில் நாளை அனுபவித்து மகிழலாம்.

நீங்கள் தயாரா?…..

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-6-2005.

 

                             

25 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Vetha ELangathilakam
  ஏப் 22, 2012 @ 09:22:39

   Swiss – Nalayiny Thamarachselvan like this..
   Hani Maas, Zahira College, Kalmunai likes this.
   Christina Pappu, Sattur Hindu Nadar Ethel Harvey Girls Higher Secondary School- likes this.
   R.p. OM likes this..

   Yashotha Kanth and Sree Dhandapani like this..

   Yashotha Kanth:_
   வெளி நாட்டில் நல்ல கோடையில் சூரியன் உதிக்கும் போது பிள்ளைகளிற்கும், பெரியவர்களிற்கும் குதூகலமாக இருக்கும்.
   குறைந்த ஆடைகளுடன் வெளியே போக விரும்புவார்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் வெளியே புறப்படுங்கள்.
   அழகான பூக்களை நீண்ட காம்புடன் பிடுங்கி… வந்து ஒரு பாரமான புத்தகத்துள், சமையலறைக் கை துடைக்கும் கடதாசியை வைத்து அதன் மேலே பிடுங்கிய பூ வைத் தலை கீழாக ஒவ்வொன்றாகப் புத்தகத்துள் மூடிப் பாரம் வைக்க வேண்டும்.
   இரண்டு நாட்கள் செல்ல அவை காய்ந்த பின்பு எடுத்து அழகான வாழ்த்து அட்டைகள், சட்டம் போடக் கூடிய கலையழகுடைய படங்கள் செய்யலாம்.

   ……..ingum kuwaith lum ip[padithaan kodaiyey kondaadukirarkal …supper sister

   Vetha:-
   விருப்பம் தெரிவித்து அனைவருக்கும் நன்றி. சகோதரி யசோதா காந் மிக்க நன்றி. இறையருள் கிட்டட்டும்.

  மறுமொழி

 2. கலைநிலா
  ஏப் 22, 2012 @ 09:35:43

  கடற்கரைக்குச் சென்று மகிழலாம்..
  நீங்கள் தயாரா?…..

  மறந்த நிலையில் உள்ளவர்களுக்கு உங்கள் வரிகள்
  கோடைக்கு ஏற்ற மழை….

  மறுமொழி

 3. rathnavelnatarajan
  ஏப் 22, 2012 @ 09:37:07

  அருமையான பதிவு.
  உங்கள் தமிழ் அழகு.
  வாழ்த்துகள்.

  மறுமொழி

 4. b.ganesh
  ஏப் 22, 2012 @ 09:51:50

  மகிழ்வுடன் நாளைக் கழிக்க அழகாக வழிமுறைகள் சொல்லியிருக்கிறீர்கள். இதில் உள்ளவை எல்லாமே எனக்கு உவப்பானவையே- இறைச்சி வாட்டி உண்பதைத் தவிர. நன்று!

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 22, 2012 @ 19:00:59

   சகோதரா நானும் பிறப்பிலேயே சைவ உணவுக்காரி.
   என் பெற்றோரும் உண்பதில்லை.
   வேலையிடங்களில் செய்வதைப் பர்ப்பேன் அதனால் அதைக் கூறினேன்.
   நானும் தொடவும் மாட்டேன்.
   கருத்திற்கு மிக நன்றி.
   தெய்வத்திருவருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 5. ramani
  ஏப் 22, 2012 @ 10:00:13

  வெளி நாடில் வேண்டுமானால்
  கொண்டாட்டமாக இருக்கலாம்
  இங்கு கோடி வெய்யிலும்
  மின்சாரத் தடையும் எங்களை
  வாட்டிவதைகிறது
  ஆயினும் மனத்தளவில்
  சந்தோஷமாகத்தான் இருக்கிறோம்

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 22, 2012 @ 19:05:11

   ரமணி சார் எனக்கும் தெரியும். அதனாற் தான் வெளிநாடு என்று குறிப்பிட்டேன்.
   இலங்கையில் சூரியக் கண்ணாடியும், குடையுடனும் தான் நானும் திரிவதுண்டு. தலையிடிக்காக.
   இங்கு தான் கடவுளைக் கண்டது போலக் குதூகலிப்பார்கள்.
   உங்கள் கருத்திற்கு மிக நன்றி.
   இறையருள் நிறையட்டும்.

   மறுமொழி

 6. விச்சு
  ஏப் 22, 2012 @ 10:28:23

  நிறைய வழிமுறைகள் சொல்லியுள்ளீர்கள்.நன்று.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 22, 2012 @ 19:06:47

   மிக நன்றி சகோதரா விச்சு. உங்கள் வருகை , கருத்து மகிழ்வு தந்தது.
   மிக மிக நன்றி.
   ஆண்டவன் அருள் கிட்டட்டும்.

   மறுமொழி

 7. கோமதி அரசு
  ஏப் 22, 2012 @ 16:06:22

  அன்பு சகோதரி , நீங்கள் சொன்ன மாதிரி குதுகலிக்க நானும் தயார்.
  ஆனால் தீயில் இறைச்சி வாட்டி உண்பது மட்டும் வேண்டாம்.

  நன்றி.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 22, 2012 @ 19:12:26

   ஆமாம் சகோதரி இறைச்சி என்னாலும் உண்ண முடியாது. நானும் சுத்த சைவம்..
   வேலையிடத்தில் நடப்பதால் அதையும் எழுதினேன்..
   நானும் முதலே கூறி, கிழங்கோ அல்லது, இறைச்சிக்குப் பதிலாக வேறு ஏதாவது வாட்டுவோம்.
   கவலைப் படாதீர்கள் அதற்கு நான் பொறுப்பு.
   கருததிடலிற்கு மிக மிக நன்றி.
   ஆண்டவன் அருள் நிறையட்டும்.

   மறுமொழி

 8. Rajarajeswari
  ஏப் 23, 2012 @ 05:53:54

  குதூகலக் கொண்டாட்டம்.. இனிமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  மறுமொழி

 9. Dr.M.K.Muruganandan
  ஏப் 23, 2012 @ 10:26:54

  நல்ல ஆலோசனைகள்.
  ஆனால் எங்களுக்கு எப்பவும் வெயில் காலம்தான்.

  மறுமொழி

  • Vetha ELangathilakam
   ஏப் 23, 2012 @ 18:21:02

   அது தான் தெரிந்து கதையாச்சே….
   இது நமக்குத் தான் சரி வரும்….
   மிக்க நன்றி .
   தெய்வத் திருவருள் நிறையட்டும்.

   மறுமொழி

 10. ரெவெரி
  ஏப் 23, 2012 @ 14:42:02

  இனிமையான கொண்டாட்டம்…ரசித்தேன் சகோதரி…

  மறுமொழி

 11. மகேந்திரன்
  ஏப் 24, 2012 @ 02:12:43

  குதூகலமாக மனதை
  உவப்போடு வைத்திருக்க
  வழிமுறைகள் பகன்றது
  மிக இயல்பு சகோதரி…

  வாழ்வில் இன்பம் நிலைபெற்று இருக்க
  மனதை நிச்சயம் ஒரு குழந்தை போல
  பாதுகாக்க வேண்டும்…

  மறுமொழி

 12. பழனிவேல்
  ஏப் 25, 2012 @ 03:35:49

  அருமையான பதிவு. ஆலோசனையான பதிவு

  மறுமொழி

 13. HOTLINKSIN.COM திரட்டி
  ஏப் 25, 2012 @ 06:18:07

  அய்யோ… வெயிலா… ஆளை விடுங்க சாமீய்ய்….

  மறுமொழி

  • கோவை கவி
   ஏப் 25, 2012 @ 06:50:17

   ஓ!..எனக்குத் தெரியும். இது இங்கு தான் பொருந்தும்.
   அது தவிர காட்டுக்கு பிக்னிக் போவது எவ்வளவு குதூகலம் தெரியுமா இங்கு!
   அங்கு நினைத்துப் பார்க்கவே முடியாது.
   இப்படித் தான் சில மாற்றங்கள்!….
   மிக நன்றி கருத்திடலிற்கு.
   இறையாசி நிறைக!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: